தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜீத்தின் மச்சினி நடிகை ஷாம்லி.
தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதன்முதலாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதும், ஒரு வேடத்துக்கு லட்சுமி மேனன் ஜோடி என்பதும் தெரிந்த செய்தி.
இன்னொரு நாயகியை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அந்த வேடத்துக்கு அஜித்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான நடிகை ஷாம்லி ஒப்பந்தமாகியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களில் டித்துள்ளார். தெலுங்கில் ஹீரோயினாக ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை.
இப்போது தமிழில் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க வருகிறார். தனுஷ் நடிக்கும் படம் தவிர, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வீரசிவாஜி' படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷாம்லி ஒப்பந்தமாகியுள்ளார்.
தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
Post a Comment