இது ஆர்வக் கோளாறா... திட்டமிட்ட சதியா?

|

பெரிய பட்ஜெட் படங்கள் அல்லது பெரிய ஹீரோக்களின் படங்களை இணையவாசிகளிடமிருந்து காப்பாற்றுவதே இன்றைக்குப் பெரும் பாடாகிவிட்டது.

இந்தப் படங்களின் ரகசியம் என்று எதையும் காத்து வைத்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தர வழியே இல்லாமல் போய்விட்டது. விஞ்ஞான வளர்ச்சி இது என்பதை அனைவருமே ஒப்புக் கொண்டாலும், அதையும் தாண்டி இந்தப் படங்களின் காட்சிகள் வெளியாகாமல் தடுக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் குழுவினரும்.

Social Media turns big head ache for big budget producers

சமீபத்தில் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின இரு வீடியோக்கள்.

ஒன்று, முதல் நிலை நடிகரான ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படத்தின் முக்கியமான படக்காட்சி படமாக்கப்பட்ட போதே, செல்போனில் துல்லியமாகப் படம்பிடித்து அதை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துவிட்டனர்.

மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ரஜினி வருவது போன்ற காட்சி அது. இயக்குநர் அந்தக் காட்சியை ஓகே செய்யும் தருணமாகப் பார்த்து பதிவு செய்துள்ளனர். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

விமான நிலையத்துக்குள் இருந்த ரசிகர் ஒருவர்தான் இப்படிச் செய்துவிட்டார் என்று தெரிய வந்ததும், இதுபோல இனி பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்து, அஜீத்தின் வேதாளம் படக் காட்சி ஒன்றும் நேற்று வெளியானது.

இதற்கு முன்பு விஜய் நடித்த புலி படத்தின் டீசர், ட்ரைலர், ஸ்டில்கள் இப்படி வெளியாகி, அது போலீஸ் வழக்கு வரை போனது நினைவிருக்கலாம்.

ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், சிலர் இதை வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் செய்கிறார்களோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளது கோலிவுட்!

 

Post a Comment