சென்னை: தனி ஒருவன் படம் என்னை மிகவும் கவர்ந்தது குறிப்பாக படம் பார்த்த ரசிகர்களை இருக்கையோடு கட்டிப் போட்டு விட்டீர்கள் என்று படத்தின் இயக்குநர் ராஜாவை மற்றொரு இயக்குனரான கவுதம் மேனன் பாராட்டி இருக்கிறார்.
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.
ஜெயம் ரவியும் அவரது அண்ணன் ராஜாவும் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பின் ஒரு மாபெரும் ஹிட்டைக் கொடுத்திருக்கின்றனர்.
படத்திற்காக இயக்குநர் ராஜா தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் தனி ஒருவன் நன்றாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Thani oruvan.Congratulations Raja.. You stuck to your convictions and you LET the audience sit back and get involved. And not force them.
— Gauthamvasudevmenon (@menongautham) September 5, 2015
மேலும் "தனி ஒருவன் படத்திற்காக வாழ்த்துகள் இயக்குநர் ராஜா, பார்வையாளர்களை நிர்பந்தப்படுத்தாமல் கதையுடன் ஒன்றச் செய்து கட்டிப்போட்டுவிட்டீர்கள்.
உங்கள் பாதையில் நீங்கள் ஒரு படம் கொடுத்திருப்பது சிறப்பு.இதற்காக நான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம் இது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ராஜாவை மனந்திறந்து பாராட்டியிருக்கிறார் கவுதம் மேனன்.
தனி ஒருவன் வெளியாகி 2 வாரங்கள் தாண்டியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் படம் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனி ஒருவன் நினைத்து விட்டால்...
Post a Comment