ஜஸ்பா திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது தனது மேக்கப்மேன் மிக்கியை கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
குழந்தைக்கு தாயானவுடன் சுமார் 4 வருடங்கள் நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய், தற்போது ஜஸ்பா என்ற ஹிந்தித் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக படம் பிடிக்கப்பட்டன. சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தன.
ஒரே குடும்பம் போல ஜஸ்பா படக்குழுவினர் அனைவரும் பழகி வந்தனர். இந்நிலையில் தனது காட்சிகள் முழுவதும் முடிந்து படக்குழுவினரை ஐஸ்வர்யா ராய் பிரிந்தார்.
பிரியும் போது அவரது கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது." இத்தனை நாட்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம், இப்போது உங்கள் அனைவரையும் பிரிவது வருத்தமாக உள்ளது" என்று கூறினார்.
மேலும் படத்தில் தனக்கு மேக்கப்மேனாக பணியாற்றிய மிக்கி என்பவரை கட்டிப்பிடித்து அழுதார், இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர் வந்தது.
ஐஸ்வர்யாராய் உணர்ச்சி வசப்பட்டு அழுததை கண்ட மொத்த படக்குழுவும் கண்கலங்கி நின்றது.
Post a Comment