ஓமைகாட்: இந்த பர்ஃபிக்கு செல்ஃபியே பிடிக்காதாம்!

|

சென்னை: ஊர், உலகம் எல்லாம் செல்ஃபி மோகம் பிடித்து திரிகையில் நடிகை இலியானாவுக்கு செல்ஃபி என்றாலே பிடிக்காதாம்.

டோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார் இலியானா. கோடிகளில் சம்பளம் வாங்கிய அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்தது. பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நேரம் அவருக்கு டோலிவுட் திரும்ப விருப்பம் இல்லை.

Ileana is not fond of selfie

இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு சென்று மும்பையில் செட்டில் ஆனார். அவரது நடிப்பை அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் பாராட்டியபோதிலும் புதுப்பட வாய்ப்புகள் இல்லை. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று நினைத்த இலி மீண்டும் டோலிவுட் திரும்ப முடிவு செய்துள்ளார்.

சரி நாம் மேட்டருக்கு வருவோம். ஊர், உலகம் எல்லாம் செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் செல்ஃபி எடுத்து தள்ளுகிறார்கள்.

இந்நிலையில் இலியானாவுக்கு செல்ஃபி எடுக்க பிடிக்காதாம். ரசிகர்கள், ரசிகைகள் கேட்டுக் கொண்டால் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபிக்கு போஸ் கொடுப்பாராம். மற்றபடி தானாக விரும்பி செல்ஃபி எடுக்கும் பழக்கம் இல்லையாம்.

 

Post a Comment