"அடங்காதவன்".. அஜீத் படத்துக்கு இந்தப் பெயர் நல்லாருக்குமா?

|

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது, ஆனால் இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

படத்தில் அஜீத் - சுருதிஹாசன் இடையிலான சில பாடல் காட்சிகளை மட்டும் படம் பிடித்தால் படம் ஒட்டுமொத்தமாக முடிந்து விடும் என்று கூறுகிறார்கள்.


படத்தின் முக்கியமான ஆக்க்ஷன் காட்சிகளை சமீபத்தில் படம் பிடித்து முடித்திருக்கின்றனர், படத்தின் வில்லன்களில் ஒருவரான ராகுல் தேவ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தெரிவித்திருக்கிறார்.

மொத்த படப்பிடிப்புமே இன்னும் சில தினங்களில் முடிவடையவிருக்கிறது. எனினும் இன்னும் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

Ajith Next Movie Title Confirmed?

தொடக்கத்தில் இந்தப்படத்துக்கு வரம் என்றொரு பெயர் சொல்லப்பட்டது.அதன்பின் வெட்டிவிலாஸ் என்றொரு பெயர் சொல்லப்பட்டது. ஆனால் அது பற்றிய எந்த அறிவிப்பும் வரவில்லை.

படப்பிடிப்புக்கு நடுவே படத்துக்குப் பெயர் தேடும் வேலையும் சத்தமில்லாமல் நடந்து கொண்டு இருக்கின்றது, இந்நிலையில் தற்போது படத்திற்கு அடங்காதவன் என்றொரு பெயர் சொல்லப்படுகிறது.

இப்போது இந்தப்பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள், இதையாவது அறிவிப்பார்களா? அல்லது இதிலும் மாற்றம் இருக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் இரண்டையுமே படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடங்காதவனா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில்....தெரிந்துவிடும்.

 

Post a Comment