குனிஞ்சா குட்டுவாங்க.. எதிர்த்தா ஒடிடுவாங்க..! - அஞ்சலி

|

சினிமாவில் குனிய குனிய குட்டுவாங்க... எதிர்த்து நின்னா ஓடிடுவாங்க என்று தன் அனுபவத்தை விவரித்துள்ளார் நடிகை அஞ்சலி.

பல்வேறு குடும்பப் பிரச்சினைகளைச் சந்தித்தவர் அஞ்சலி. சில ஆண்டுகள் அவரால் சென்னைப் பக்கமே வரமுடியவில்லை.

இப்போதுதான் அனைத்திலிமிருந்து மீண்டு முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Anjali denies her marriage again

ஜெயம் ரவியுடன், ‘சகலகலா வல்லவன்' படத்தில் நடித்தார். தற்போது ‘மாப்ள சிங்கம், தரமணி, இறைவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் மூன்று படங்களில் நடிக்கிறார்.

பிரச்சினைகளிலிருந்து அவர் விடுபட்டாலும், கிசுகிசுக்கள் அவரை விடாமல் துரத்துகின்றன.

அவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை கூட இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றன.

இதுகுறித்து அஞ்சலி அளித்துள்ள விளக்கத்தில், "வதந்திகள் எனக்குப் புதிதில்லை. எனக்குத் திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர். திருமணம் உடனடியாக செய்து கொள்ளமாட்டேன். என் முழு கவனமும் இப்போது சினிமாவில்தான்.

சினிமாவில் நான் நிறைய கத்துக்கிட்டேன். இங்கு குனிய குனிய குட்டுவார்கள். எதிர்த்து நின்றால் ஓடிப்போய்விடுவார்கள். என்னை சுற்றி அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் என் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது," என்றார்.

 

Post a Comment