அஜீத்திற்கு "வேதாளத்தை" விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

|

சென்னை: என்னது அஜீத் படத்தோட பேரு வேதாளமா? அந்தளவு ஒண்ணும் மாஸான பேர் இல்லையே என்று அஜீத் ரசிகர்கள் ஒருபக்கம் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்தப் பெயரையும் கூட கடைசி நேரத்தில் வேறு ஒருவரிடமிருந்து வாங்கித்தான் படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கின்றனர். என்று புதியதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய நேர்ந்த தருணத்தில் கூட பெயரை வைக்கத் திணறிக் கொண்டிருந்தனர் வேதாளம் படக்குழுவினர்.

Ajith Movie Title Vedhalam Given by Raghavaa Lawrence?

படத்தின் தலைப்பு "வி" என்னும் ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அஜீத் உறுதியாக இருந்ததால் வெட்டி விலாஸ், வரம் போன்ற பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

ஆனால் சற்று எதிர்பாராதவிதமாக படத்திற்கு "வேதாளம்" என்று பெயர் வைத்திருக்கின்றனர். சிறுத்தை சிவா உள்ளிட்ட படக்குழுவினர் பல பெயர்களைப் பரிசீலித்துவிட்டு கடைசியில் "வேதாளம்" என்று முடிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் வழக்கம்போல் அந்தப்பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.பதிவு செய்து வைத்திருந்தவர் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப்படத்தில்தான் அவர் நடிப்பதாக இருந்ததாம். சூரி எனும் புதியவர் படத்தின் கதையை எழுதி இயக்கவிருந்தாராம்.

ஆனால் அதற்குள் வேந்தர் மூவிஸ் நிறுவனம் முந்திக்கொண்டு விட்டது. எனவே வேந்தர்மூவிஸ் நிறுவனத்துக்கு இரண்டுபடங்கள் செய்துவிடலாம் என்று லாரன்ஸ் முடிவுசெய்துவிட்டதால் இந்தப்படத்தைத் தள்ளி வைத்திருந்தார்களாம்.

இந்நிலையில் அஜித் படத்துக்கு இந்தப்பெயர் வேண்டும் என்று கேட்டவுடன் இயக்குநரும், லாரன்ஸும் வேதாளம் பெயரைத் தர ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர் வேதாளத்தை இறுதி செய்து நேற்று ஒருவழியாக பெயரை வெளியிட்டிருக்கின்றனர்.

 

Post a Comment