"மன்மோகன் சிங்" வைத்த பொளேர் கொட்டு.. இனியாவது திருந்துவாரா ராம் கோபால் வர்மா?

|

ஷோலே படத்தை அனுமதியின்றி ரீமேக் செய்த ராம்கோபால் வர்மாவுக்கு ரூ 10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்தப் படத்தை அவர் தெரிந்தே, வேண்டுமென்றே ரீமேக் செய்து சிதைத்ததாக கண்டித்துள்ளது.

1975-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ஷோலே. தர்மேந்திரா, அமிதாப்பச்சன், அம்ஜத்கான், ஹேமமாலினி. ஜெயாபச்சன் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்திய சினிமாவின் உன்னதமான திரைக்காவியங்களுள் ஒன்றாகக் கொண்டாடப்படும் இந்தப் படத்தை, ராம்கோபால் வர்மா கி ஷோலே என்ற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

Delhi HC slaps on RGV for Sholay remake

ஷோலே படத்தின் தயாரிப்பாளரான ஜி.பி.சிப்பியின் பேரன் சாஷா சிப்பி இந்தப் படத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

"ஷோலே படத்தின் பிரத்யேக உரிமை எங்களிடம் இருக்கிறது. எங்களிடம் அனுமதி பெறாமல் அதை மீண்டும் தயாரித்தது விதிமுறை மீறலாகும்," என்று தனது மனுவில் சாஷா சிப்பி குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி மன்மோகன்சிங் விசாரித்தார். ராம்கோபால் வர்மா தெரிந்தே இந்த தவறைச் செய்ததாகக் குறிப்பிட்டார். மேலும் வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை ரீமேக் செய்து கெடுத்ததாகக் கண்டித்தார் நீதிபதி.

ராம்கோபால் வர்மா எடுத்த ஷோலே ரீமேக் படு மோசமான தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment