ஜில்லா படத்துக்கு தெலுங்கு தேசத்தில் கிடைத்த வெற்றியைப் பார்த்த விஜய் அன்ட் கோ, தங்களின் இப்போதைய படமான புலியையும் அங்கு பெரிய அளவில் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழில் செய்ததைப் போலவே தெலுங்கிலும் பிரமாண்டமாக ஆடியோ ரிலீசை நடத்தப் போகிறார்களாம்.
சிம்புதேவன் இயக்கதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாக நடித்துள்ள புலி அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். படத்தின் டிரெய்லர் தென்னிந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் டீஸராக மாறியுள்ளது. இப்போது ‘புலி' படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது.
'ஜில்லா' படம் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழை விட தெலுங்கில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர் என்பதால் இந்த இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக முன்னணி நட்சத்திரங்களை வைத்து நடத்தப் போகிறார்களாம்.
Post a Comment