டோலிவுட் நடிகை அடா சர்மாவின் "கிளிக்கி" டப்ஸ்மாஷ்

|

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகையான அடா சர்மா பாகுபலி படத்தில் இடம்பெறும் கிளிக்கி மொழியை, டப்ஸ்மாஷ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாகுபலி படத்தின் வசூல் மற்றும் காட்சிகளை விட ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது மதன் கார்க்கி உருவாக்கிய கிளிக்கி மொழி, படத்தில் ஆதிவாசி மக்கள் பேசுகின்ற மொழியாக இதனைப் பயன்படுத்தி இருந்தனர்.

படம் வெளிவந்த புதிதில் ரசிகர்களின் ஆராவாரத்தையும் தாண்டி ஒரு சிலரின் எதிர்ப்புகளையும் பெற்றது இந்த மொழி, தற்போது இந்த மொழியை டப்ஸ்மாஷ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அடா சர்மா.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டப்ஸ் மாஷை வெளியிட்டு இருக்கும் அடா சர்மா பாகுபலி 3 படத்தில் லேடி காலகேயா (ஆதிவாசி தலைவன்) கதாபாத்திரத்திற்கு விண்ணப்பிக்கவே இந்த டப்ஸ்மாஷ் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஹிந்தியில் 1920 என்னும் திகில் படத்தின் மூலமாக அறிமுகமான அடா சர்மா அடுத்து நடித்த ஹார்ட் அட்டாக்(தெலுங்கு) திரைப்படம் மூலமாக ரசிகர்களிடையே புகழடைந்தவர்.

தற்போது சுப்பிரமணியம் பார்சேல் மற்றும் கரம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், இதில் சுப்பிரமணியம் பார்சேல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தற்போது ரசிகர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது அடா சர்மாவின் கிளிக்கி டப்ஸ்மாஷ்.

பாகுபலி 3 என்னமா இப்படிப் பண்றீங்களேமா..

 

Post a Comment