இந்தியாவில் முதல்முறையாக சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி!- கமல் முயற்சி

|

திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.

இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான ஜி.சிவாவின் முயற்சியினாலும், ஃபிக்கி அமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபையின் தலைவர் கமல்ஹாசனின் வழிகாட்டுதலின்படியும், 3 நாள் அடிப்படை பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Skilled training for cinema employees

கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ள இதில், திரைத் துறையை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிபுணர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயிற்சி பட்டறைக்காக, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.

Skilled training for cinema employees

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபை, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஓர் அங்கமாகும். இதன் மூலம் 2022-ஆம் ஆண்டுக்குள் 11.24 லட்சம் தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ளனர். மேலும் இந்த சபை பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் யோஜ்னா திட்டத்தில் பங்கேற்று இந்தியா முழுவதிலும் 5000 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளது.

 

Post a Comment