எனது ரகசியப் புத்தகம் அவன்.. தம்பி குறித்து சிலாகிக்கும் ஹன்சிகா

|

சென்னை: தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா, இடைவிடாத படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் மும்பை பறந்து சென்று தனது அன்பு சகோதரனுடன் ரக்க்ஷா பந்தனை கொண்டாடியிருக்கிறார்.

உலகம் முழுவதும் சகோதரத்துவ தினத்தை (ரக்க்ஷா பந்தன்) இனிதே கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நடிகை ஹன்சிகாவும் இந்த இனிய தினத்தை தனது சகோதரர் பிரஷாந்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்,

தனது சகோதரர் குறித்து ஹன்சிகா கூறுகையில் "எனது மிகப்பெரிய பலமே எனது சகோதரன்தான். எனது பலம், பலவீனம் என்று என்னைப் பற்றிய முழுவதுமே அவனுக்குத் தெரியும்.

சுருக்கமாக சொன்னால் எனது ரகசிய புத்தகம் என்றும் அவனைக் கூறலாம், மேலும் என்மீது அன்பு செலுத்துவதிலும் என்னைப் போற்றி பாதுகாப்பதிலும் அவனுக்கு நிகர் அவனேதான்" என்று தனது சகோதரனின் அன்பு குறித்து நெகிழ்ந்திருக்கிறார் ஹன்சிகா.

மேலும் தனது சகோதரன் பிரஷாந்துடன் ரக்க்ஷா பந்தனை கொண்டாடிய புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ஹன்சிகா.

பாசமலரே அண்ணன் ஒரு நேசமலரே...

 

Post a Comment