நடிகர் சுதீப் இன்று தனது பிறந்த நாளை முடிஞ்சா இவன புடி படத்தின் ஷூட்டிங்கில் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவருக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழில் வெளிவந்த ‘நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் சுதீப். கன்னடத்தில் மிகப்பெரிய ஸ்டாரான சுதீப், தமிழுக்கு இந்த படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் தமிழில் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி' படத்தில் நடித்துள்ளார். மேலும், ‘பாகுபலி' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படங்களை தொடர்ந்து தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ‘முடிஞ்சா இவன புடி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் காணும் சுதீப், தனது பிறந்தநாளை ‘முடிஞ்சா இவன புடி' படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை நித்யா மேனன் ஆகியோர் கேக் ஊட்டி, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நடிகை திவ்யா ஸ்பாந்தனா (குத்து ரம்யா), தயாரிப்பாளர் ராம்பாபு உள்ளிட்டோரும் சுதீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Post a Comment