மும்பை: இந்தியில் வெளியாகி சக்கைப் போடு போட்ட திரைப்படமான பஜ்ரங்கி பைஜானுக்கு முதன்முதலில் நடிக்க சல்மான்கானுக்கு பதிலாக கேட்கப்பட்டவர் ரஜினிகாந்த் என்ற தகவலை அப்படத்தின் கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் வெளியிட்டது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
ஏற்கனவே வெளியான இத்தகவலை அடுத்து இவ்வீடியோ வைரலாகப் பரவி வருகின்றது. பாகுபலி இயக்குனரான ராஜமெளலியின் தந்தையும், அப்படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத்தின் கதைதான் பஜ்ரங்கி பாய்ஜான் திரைப்படமும்.
கடந்த ஜூலையில் வெளியாகி தியேட்டர்களில் செமையாக ஓடிய இத்திரைப்படங்களின் கதையாசிரியரான இவர் அதுகுறித்த பேட்டியின்போது இத்தகவலை வெளியிட்டார். முதலில் அவர் இக்கதைக்கு ரஜினி காந்த், அமிர் கான், அல்லு அர்ஜூன் ஆகியோரைத்தான் கேட்டாராம்.
"ரஜினிகாந்துடன் கூடவே, புனித் ராஜ்குமார், அல்லு அர்ஜூன் ஆகியோரும் இக்கதைக்காக தேர்வு செய்யப்பட்டனர். எனினும், கடைசியில் சல்மான்கான் உடனடியாக இப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டார்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment