சென்னை: விரல் நடிகர் கீழே விழுந்தாலும் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லை என்று ஓவர் சேட்டை செய்கிறாராம்.
விரல் நடிகரின் படம் இரண்டு எழுத்து பெயர் கொண்ட படம் படாதபாடு பட்டு ஒரு வகையாக அண்மையில் ரிலீஸானது. படம் சூப்பர் என்று ரசிகர்கள்
தெரிவித்துள்ளனர். சிலரோ படத்தில் ஹீரோயினின் உடல்வாகு சில காட்சிகளில் குண்டாக இருந்ததையும், சில காட்சிகளில் ஒல்லியாக இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நடிகர் படம் ரிலீஸான அன்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.
அந்த படம் லீடரின் தலையீட்டால் பிரச்சனை தீர்ந்து வெளியானது. இதனால் விரல் நடிகரின் தந்தை லீடரை கண்டமேனிக்கு புகழ்ந்து தள்ளிவிட்டார். லீடரின் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விரல் நடிகரின் தந்தை லீடரை புகழ்ந்து தள்ளியதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
படம் பல பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸானபோதிலும் நடிகரின் கெத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லையாம். படத்தின் வெற்றி சந்திப்பிற்கு நடிகர் இரண்டரை மணிநேரம் தாமதமாக வந்தாராம். நடிகரின் வரவை எதிர்பார்த்து பத்திரிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து எரிச்சல் அடைந்தது தான் மிச்சமாம்.
Post a Comment