பிரான்மலை படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் பிரான்மலை படத்தில் ஆதவா பாண்டியன் அறிமுக நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இளம்நாயகி நேகா கதாநாயகியாகவும், மதயானை கூட்டம், கொம்பன் படத்தில் நடித்த எழுத்தாளர் வேலராமமூர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சிறிய இடைவெளிக்கு பின்பு கஞ்சா கருப்பு பிரான்மலை படத்தில் நடிக்கிறார். கமெடிக்கு ப்ளாக் பாண்டி,முத்துகாளை இருவரும் நடிக்கின்றனர். பிரான்மலை தலைப்பிற்கு ஏற்ப கதையின் நம்பகதன்மையை மேம்படுத்த அப்பகுதி மக்களுக்கே நடிப்பு பயிற்சி அளித்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
பிரான்மலை படத்தின் கதை அம்சத்தை அறிந்து கவிப்பேரரசு வைரமுத்துவே அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். மேலும் வைரமுத்து இப்படத்தின் அறிமுக இசை அமைப்பாளர் பாரதி விஸ்காரிடம் "நீண்ட இடைவெளிக்கு பின் அருமையான இசையை அனுபவித்ததாக" மனமகிழ்ந்து பாராட்டி இருக்கிறார் வைரமுத்து.
அறிமுக இயக்குநர் அகரம்காமுரா இப்படத்தை இயக்க, "வளரி கலைக்கூடம்" - R.P.பாண்டியன் தயாரிப்பில் பிரான்மலை திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது.
இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக பிரான்மலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment