சென்னை: வெனிஸ் திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் விருதை வென்று சாதனை படைத்திருக்கிறது. 72 வருட கால வெனிஸ் திரைப்பட வரலாற்றில் ஒரு தமிழ்த் திரைப்படம் விருதை வெல்வது இதுவே முதல்முறை.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, சரவண சுப்பையா, கிஷோர், மற்றும் முருகதாஸ் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விசாரணை.
இப்படம் சமீபத்தில் நடைபெற்ற 72-வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி ‘மனித உரிமைகள் பற்றிய சினிமா' என்ற பிரிவில் ‘விசாரணை' படம் விருது வென்றுள்ளது.
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தை தனுஷ் கிராஸ் ரூட் பிலிமுடன் இணைந்து தனது வுண்டர்பார் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரித்து இருக்கிறார்.
சமீபத்தில் தனுஷிடம் இருந்து இப்படத்தை கைப்பற்றிய லைக்கா நிறுவனம் "விசாரணை"யை உலகமெங்கும் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி வெளியிடவிருக்கிறது.
விசாரணை விருதைக் குவித்தால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் "விசாரணை" படக்குழுவினர். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் சார்.
Post a Comment