சென்னை: கமல் நடிப்பில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் தூங்கா வனம் திரைப்படத்தின் டிரெய்லர் செப்டெம்பர் 4 ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
‘பாபநாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் கமல் நடித்திருக்கும் படம் ‘தூங்காவனம்', இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.
மேலும் ஆஷா சரத், பிரகாஷ் ராஜ், கிஷோர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கமலின் உதவியாளர் ராஜேஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
சமீபத்தில் கமலின் மேன்லி லுக்கில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது, இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை செப்டம்பர் 4ம் தேதி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, செப்டெம்பர் 17 விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று முதலில் கூறியிருந்தனர்.
தற்போது அந்த தேதியை மாற்றி வரும் வெள்ளியன்று டிரெய்லரை வெளியிட இருக்கின்றனர் தூங்காவனம் படக்குழுவினர், எது எப்படியோ கமலின் இந்த முடிவால் அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.
Post a Comment