பாலிவுட் நடிகை கஜோல் 18 வருடங்கள் கழித்து தனது தாயார் தனுஜாவுடன் சேர்ந்து நடிக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘டூன்புர் கா சூப்பர் ஹீரோ’.
பழம்பெரும் நடிகையான தனுஜாவின் மகளான கஜோல், கடந்த 1992ம் வெளிவந்த பேகுதி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அதற்குப் பிறகு தற்போது 18 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை தயாரித்து, நடிக்கிறார் கஜாலின் கணவரான அஜய் தேவ்கன். பேகுதி போன்று டூன்புர் கா சூப்பர்ஹீரோ படத்திலும் கஜோலின் தாயாக நடிக்கிறார் தனுஜா.
இதில் அவர் கௌரவ வேடத்தில் வந்தாலும் அது முக்கியமான கதாபாத்திரமாம். இந்த படம் கிறிஸ்துமஸிற்கு வெளியாகும்.
யூ மி அவுர் ஹம் படத்திற்கு பிறகு அஜய் தேவ்கனும், கஜோலும் இதில் ஒன்று சேர்கின்றனர். இருவரும் ஹல்சல், குண்டராஜ், பியார் தோ ஹோனா ஹி தா, தில் கியா கரே, ராஜூ சாசா ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.