வெதர் சரியில்ல... அதான்...! - விஸ்வரூபம் விழா தள்ளிப் போன காரணம்!!

பருவ நிலை சரியில்லாத காரணத்தால்தான் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துவிட்டதாக கமல் தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது (நக்கலா.. நிஜ காரணமா?)

மதுரை, கோவை, சென்னையில் நவம்பர் 7-ம் தேதி ஒரே நாளில் இசை குறுந்தகட்டை வெளியிடத் திட்டமிட்டிருந்தார் கமல்ஹாஸன். இதற்காக தனி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்திருந்தாராம்.

ஆனால் திடீரென நேற்று விழாவை ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். காரணத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், விழா தள்ளிப் போனது ஏன் என்று கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விழா நடக்கும் நாளன்று இடி மின்னல் மழை என வானிலை மோசமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து தகவல் வெளியாகியிருப்பதால் விழாவை வேறு தேதிக்கு வைத்ததாக கமல் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் உண்மையான காரணம்?

படத்தின் ஆடியோ உரிமை இன்னும் விலை போகவில்லையாம். படத்தின் பல ஏரியா உரிமையை கமல் சொல்லும் விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லையாம்.

இருந்தாலும், ரமணனை நம்பி ஒரு விழாவை தள்ளிப் போடுகிறார்கள் என்றால்... அடடா!

 

சுடுகாட்டுச் சூழலில் காதல் பாட்டு எழுதிய அனுபவம்... - வைரமுத்து

Vairamuthu Writes Love Song With Backdrop Burial Ground

யமுனா படத்தில் சுடுகாட்டுச் சூழலில் காதல் பாட்டு எழுதியது புதிய அனுபவமாக இருந்ததாக கவிஞர் வைரமுத்து கூறினார்.

ரீஹரி பாலாஜி மூவிஸ் தயாரிக்கும் படம் ‘யமுனா'. இப்படத்தில் நாயகனாக சத்யா, நாயகியாக ஸ்ரீரம்யா ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வசனம் எழுதி இயக்குகிறார் இ.வி.கணேஷ் பாபு. இலக்கியன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

யமுனா படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இவ்விழாவுக்கு கவிஞர் வைரமுத்து தலைமையேற்றார்.

நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இப்படத்தில் பாடல் எழுதிய தருணம் குறித்து கவிஞர் வைரமுத்து பேசும்போது, "இப்படத்தில் நாயகனும், நாயகியும் ஊருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடுவார்கள். அவர்களது உறவினர்களோ அவர்களை துரத்துவார்கள்.

அப்போது, இருவரும் தப்பிப்பதற்காக சுடுகாட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள். அப்போது, நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஏற்படும் ரொம்ப ஆழமான காதலை பாடலாக வடிக்கச் சொன்னார்கள். பிணம் எரிந்து கொண்டிருக்கும் பின்னணியில் இவர்களுக்குள் ஏற்படும் காதலாக எழுதியது எனக்கு புதிதாக இருந்தது," என்றார்.

 

மதூர் பண்டார்க்கர் மீது நடிகை ப்ரீத்தி தொடர்ந்த கற்பழிப்பு வழக்கு ரத்து!

Sc Quashes Rape Charges Against Madhur Bhandarkar

புது டெல்லி: பாலிவுட் இயக்குநர் மதூர் பண்டார்க்கர் மீதான கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

1999-ம் ஆண்டு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜெயினை கற்பழித்ததாக மதூர் பண்டார்க்கர் மீது புகார் சுமத்தப்பட்டது. 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தன்னை 16 முறை கற்பழித்ததாக அவர் புகார் செய்தார்.

தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக் கூறி அவர் இவ்வாறு உடலுறவு கொண்டதாகவும், பின்னர் ஏமாற்றியதாகவும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கு பொய்யானது என்றும், ரத்து செய்யுமாறும் உச்சநீதிமன்றத்தில் மதுர் பண்டார்க்கர் மனு செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

 

துப்பாக்கி படத்துக்கு யு சான்று... தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே ரிலீஸ்!

U Certificate Tuppakki   

விஜய் - காஜல் நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு.

ரசிகர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பார்ப்பை வசூலாக்கும் விதத்தில், படத்தை நான்கு தினங்களுக்கு முன்பே இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பல வகையிலும் ஹாலிவுட் படங்களின் பாதிப்புதான் என்பதை இயக்குநர் முருகதாஸே ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் பார்த்து ‘துப்பாக்கி' படத்துக்கு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற 9-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்தப் படத்துடன் போடா போடி, கள்ளத்துப்பாக்கி போன்றவை மோதுகின்றன.

 

மூன்… ஹனிமூன்… வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்லும் சுவாரஸ்ய தகவல்

Lunacy The Full Moon Sun Tv Surya Vanakkam

பவுர்ணமி நாளில் பைத்தியம் பிடிக்கும்னு சொல்றாங்க... அது உண்மையா? ஏன் அப்படி சொல்றாங்க? மூன்... ஹனிமூன்... என்ன தொடர்பு என்று பல சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

சன் டிவியில் தினமும் காலை ஒளிபரப்பாகும் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தினமும் ஒரு சுவாரஸ்யமான தகவல்களை கூறி காலை நேரத்தில் உற்சாகப்படுத்துகிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

புதிதாக திருமணமான தம்பதிகள் ஏன் ஹனிமூன் போறாங்க என்று ஆரம்பித்து பவுர்ணமி நாளில் சிலருக்கு ஏன் மூளையில் பிரச்சினை ஏற்படுகிறது என்பது வரை சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார்.

ஹனிமூன்தான் மொழி மாற்றத்தில் தேன் நிலவாக மாறிவிட்டது. திருமணமான புதிய தம்பதிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மலைவாசஸ்தலங்களுக்கு செல்வதை பண்டைய காலத்தில் இருந்தே கடைபிடித்து வந்தனராம்.

நிலவுக்கும் நீருக்கும் தொடர்பு இருப்பதனால்தான் முழுநிலவு நாளில் கடல் அலைகள் மேல் எழும்புகின்றன. ஆறு, அருவி, ஏரிகளில் நீர் நிலைகளில் மாற்றம் ஏற்படுகின்றன என்றும் கூறினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

பவுர்ணமி நாளில் சிலர் பித்துப் பிடித்தது போல் இருப்பார்கள். இதற்கு காரணம் முழுநிலவு நாளில் ஏற்படும் மாற்றம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனை லுனாசி என்று கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். ரோமானியர்கள் சந்திரனை கடவுளாக வணங்கினார்கள். லூனார் என்ற வார்த்தையில் இருந்துதான் லுனாசி தோன்றியது. மனித உடலில் நீர் காணப்படுவதால் சந்திரனில் ஏற்படும் மாற்றம் மனித மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் அரிஸ்டாட்டில் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் பவுர்ணமி நாளில் பித்துப் பிடிப்பது குறித்து எந்த அறிவியல் அறிஞர்களும் நிரூபிக்கவில்லை. இது மனரீதியான பிரச்சினைதான் என்றும் கூறி தகவலை நிறைவு செய்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

எனவே பவுர்ணமி நாளில் நமக்குப் பைத்தியம் பிடிக்கும், பித்துப் பிடிக்கும் என்று யாரும் தேவையில்லாமல் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல், அந்த நாட்களில் மனதை இயல்பாக வைத்து, வழக்கம்போல செயல்பட முயற்சிக்க வேண்டும். மேலும் அந்த நாளைப் பற்றிக் கவலையே படாமல் மனதை திசை திருப்பும் வகையில், கூடுதல் உற்சாகத்துடன் செயல்பட முயற்சித்தாலே போதும்... எல்லாமே ஓடிப் போய் விடும். கீப் கூல்...

 

அன்னாபிஷேகமும் 'செஃப்' ஜேக்கப்பின் கப்பரிசியும்..!

Chef Jacob S Last Programme

சமையல் நிகழ்ச்சி என்றாலே ஸ்டுடியோவுக்குள் மட்டும்தான் என்ற நிலையை மாற்றி அமைத்தவர் செஃக் ஜேக்கப். சன் டிவியில் சனிக்கிழமை ஒரு மணி ஆகிவிட்டாலே போதும் ‘ஆகா என்ன ருசி' நிகழ்ச்சியைக் காண டிவி முன்பாக கூடிவிடுவார்கள் இல்லத்தரசிகள். ஜேக்கப் செய்யும் சமையலுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்தவாரம் சனிக்கிழமை வாணியம்பாடி கோவிலில் சிவனுக்கு காப்பரிசி செய்து படைத்தார் ஜேக்கப். பவுர்ணமி தினத்தன்று அந்த கோவிலில் அன்னாபிஷேகம் செய்தார்கள். சிவனுக்கு தன் கைகளால் அபிசேகம் செய்து சுவையான நைவேத்தியம் செய்து படைத்தார் ஜேக்கப்.

இதனையடுத்து உடலுக்குச் சத்தான முட்டைக்கோஸ் சாதம் செய்து காண்பித்தார். முட்டைக்கோஸ் குறித்து டாக்டரின் ஆலோசனை வேறு இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

இதயநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவற்றை முட்டைக்கோஸ் கட்டுப்படுத்துவதாக கூறினார். இது உடல்பருமனை குறைக்கும் என்றும் டாக்டர் கூறினார்.

சமையல் நிகழ்ச்சியில் முதன் முதலாக குழந்தைகளையும் ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்தவர் ஜேக்கப். சமையல் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றியதில் ஜேக்கப்பிற்கு தனி பங்குண்டு. சூப்பர் செஃப் ஜூனியர் பகுதியில் குழந்தைகளின் ரசனைகளை வெளிக்கொணர்ந்து அறியச் செய்தவர்.

சமையல் பற்றி பல்வேறு நூல்களை எழுதியுள்ள ஜேக்கப் சகாயகுமார் ஞாயிறன்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்பதை சமையல் நிகழ்ச்சி ரசிகர்களாலும், சுவைஞர்களாலும் நம்பத்தான் முடியவில்லை.

நிகழ்ச்சியின் முடிவில் அடுத்தவாரம் தீபாவளி ஸ்பெசல் எபிசோட் என்று கூறினார் ஜேக்கப். நாங்கல்லாம் பார்ப்போம், நீங்க எங்க இருப்பீங்க ஜேக்கப்? ஜேக்கப்பிற்குத் தெரியுமா என்ன இதுதான் தன்னுடைய கடைசி நிகழ்ச்சி என்று?.

ஜேக்கப் நேற்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 38. மிகவும் இளம் வயதிலேயே பிரபலமான சமையல் கலைஞராக உருவெடுத்த அவர் கின்னஸ் சாதனையும் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காதல் இல்லாத கதையில் 5 ஹீரோ, 1 ஹீரோயின்

In an Unlove story 5 heros and 1 heroine பாலாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஆச்சார்யா ரவி. இவர் 'என்னதான் பேசுவதோ என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: பீகாரிலிருந்து தப்பி வரும் ஒரு பெண்ணிடம் 5 மாணவர்கள் நட்பாக பழகுகின்றனர். திடீரென்று ஒரு கும்பல் அவளை இழுத்துச் செல்கிறது. அவளது பின்னணி தெரிந்து மாணவர்கள் அதிர்ச்சி அடைக்கிறார்கள்.

அந்த பெண்ணை மாணவர்கள் காப்பாற்றுகிறார்களா என்பது கதை. விஜய் ராம், தாஸ், ரோஷன், சின்னசாமி, மாஸ்டர் விக்னேஷ் ஹீரோக்கள். தக்ஷா ஹீரோயின். இப்படத்தில் காதல் கிடையாது. இசை டி.இமான். பீகாரில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. மேலும் குற்றாலம், தென்காசி, செங்கோட்டையில் ஷூட்டிங் நடக்கிறது. இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் நானே ஏற்றிருப்பதால் சுமை கூடுதலாகி இருக்கிறது.
 

விஜய் நோ சொன்ன கதை மகேஷ்பாபு ஓகே செய்தார் : கவுதம் மேனன் குஷி

Mahesh babu accept the story which is rejected by Vijay கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த 'யோவான் அத்தியாயம் ஒன்று படத்தில் தற்போது மகேஷ்பாபு நடிக்கிறார். 'துப்பாக்கி படத்தையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் 'யோவான் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் முற்றிலுமாக மேற்கத்திய பாணியில் இருந்ததால் அதை திருப்பாச்சி, சிவகாசி பட பாணிக்கு பொருந்துமாறு மாற்றவும் அதில் குத்து பாடல்களை சேர்க்கவும் விஜய் கேட்டிருந்தார். இதில் கவுதம் மேனனுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து விஜய் அப்படத்தி லிருந்து விலகி கொண்டார். இந்நிலை யில் அதே ஸ்கிரிப்ட்டை டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபுவிடம் கவுதம் மேனன் கூறினார்.

அவருக்கு பிடித்திருந்ததால் அப்படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். இதுபற்றி கவுதம் மேனன் கூறியதாவது: யோவான் படத்தின் ஸ்கிரிப்ட்டை மகேஷ்பாபுவிடம் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. இதையடுத்து இருவரும் அப்படத்தில் பணியாற்ற முடிவு செய்தோம். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகும். ஏற்கனவே மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அது நடக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. தற்போது இருவரும் பணியாற்றிவரும் பட பணிகள் முடிந்ததும் எங்கள் படத்தின் வேலை தொடங்குவோம். ஸ்கிரிப்ட்டிலும் சிறிய மாற்றம் இருக்கும். இப்படத்தின் தலைப்பும் மாற்றப்படுகிறது. தலைப்பு முடிவானதும் அது பற்றி தெரிவிப்பேன்.
 

இயக்குனருக்கு செருப்படி : கவர்ச்சி நடிகை கைது கன்னட சினிமாவில் பரபரப்பு

Slipper beating for a director : actress arrested ரூ.8 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறி இயக்குனரை கன்னட நடிகை நயன கிருஷ்ணாவின் குடும்பமே செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னட இயக்குனர் ரிஷி. இவர் உப்பார்பேட்டை போலீசில் சமீபத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் ,'கன்னட நடிகை நயன கிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் என்னை செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார்கள் என்று கூறி இருந்தார். இதைடுத்து நயன கிருஷ்ணா மற்றும் மகளிர் சேவை அமைப்பாளர் அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி ரிஷி கூறும்போது, 'சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சில இளைஞர்கள் சேர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்தனர். அதில் நடிகை நயன கிருஷ்ணாவும் ஒருவர். நாங்கள் எல்லோரும் இப்படத்தை உருவாக்க பங்களித்தோம். நயனா 8 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் படத்தின் உரிமை என் பெயரில்தான் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பிருந்து தன்னுடைய பணத்தை தரும்படி அவர் கேட்க ஆரம்பித்தார். இல்லையென்றால் மும்பை, கர்நாடகா, மங்களூர், பெல்லாரி மற்றும் குல்பர்கா ஆகிய ஏரியாக்களின் வினியோக உரிமையை தரும்படி கேட்டார்.

அவர் கேட்ட வினியோக உரிமையின் மதிப்பு ரூ.1 கோடி. அதை தரமறுத்தேன். மேலும் 8 லட்சம் பணத்தை படம் ரிலீஸ் ஆனவுடன் திருப்பி தருவதாக கூறினேன். ஆனால் அவர் கெட்ட வார்த்தைகளால் திட்டினார். அதற்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை என்றார். பத்திரிகை யாளர் சந்திப்பின்போது இந்த பிரச்னை மீண்டும் எழுந்தது. அப்போது ஏற்பட்ட மோதலின்போது ரிஷியை நயன கிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் செருப்பால் அடித்தனர். கைது செய்யப்பட்ட நயன கிருஷ்ணா, பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

கிசு கிசு - டிஸ்க் கேட்கும் ஹீரோ

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

பாலிவுட் புகழ் தீபமான பெண் இயக்கத்தின் ஆங்கில படத்தில் மழை ஹீரோயின் நடிச்சிருக்காராம்... இருக்காராம்... ஏற்கனவே கிக்கா காஸ்டியூம் அணியும் நடிகைய இந்த படத்தில் படு கிளாமரா காட்டியிருக்காராம் இயக்கம். இந்த படத்துல நடிச்ச துணிச்சலாலதான் சமீபத்தில் டாப் லெஸ் போஸும் நடிகை கொடுத்தாராம். ஏற்கனவே கவர்ச்சி படங்கள தணிக்கை கத்தரி துண்டாடுது. இந்த நேரத்துல வெளியாக இருக்கிற மழை நடிகையின் காட்சிகள் கத்தரிலேருந்து தப்பிக்குமான்னு திரையுலகினர் கேள்வி எழுப்புறாங்களாம்... எழுப்புறாங்களாம்...

செவன்த் சென்ஸ் ஹீரோ டபுள் வேஷத்துல நடிச்ச படம் சமீபத்துல ரிலீஸ் ஆச்சு. இந்த படத்துக்காக டபுள் ரோல்ல ஹீரோ நடிச்ச பலவிதமான காட்சியை தொழில்நுட்ப ரீதியா படம் பிடிச்சி வச்சிருக்காங்களாம். இந்த காட்சிகளை வச்சி ஹீரோ இல்லாமலே படம் எடுக்கலாம்னு ஒரு மேடைல ஆனந்த இயக்கம் சொன்னாராம். இதை கேட்டு அதிர்ச்சியான ஹீரோ, குறிப்பிட்ட டெக்னிக்கல் ஷாட்களோட ஒரிஜனல் டிஸ்க்கை தன்கிட்ட தரச்சொல்லி இயக்கத்துக்கிட்ட கேட்டிருக்காராம்... கேட்டிருக்காராம்...

கட்டிபுடிடா கவர்ச்சி நடிகை
கன்னா பின்னான்னு குண்டாயிட்டே போறாராம். நெருங்கிய ஹீரோக்கள்கிட்ட சான்ஸ் கேட்டும் பட வாய்ப்பு கிடைக்காததால நடிகை ரொம்பவே அப்செட்டாம். துணை நடிகை வாய்ப்புகூட தரமாட்டேங்கிறாங்களேன்னு புலம்புறாராம். அவரை படத்துல யூஸ் பண்ணலாம்னு பாத்த சில இயக்குனருங்க அவரோட தோற்றத்தை பாத்துட்டு சைலன்ட் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்...
 

கமலின் விஸ்வரூபம் பட இசை வெளியீடு திடீர் ரத்து!

Kamal S Vishwaroopam Audio Launch Cancelled   

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.

கமல்ஹாஸன் கதை எழுதி, இணை தயாரிப்பு, இயக்குனர் மற்றும் கதாநாயகனாகவும் நடிக்கும் ‘விஸ்வரூபம்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிவிட்டது.

இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளில் நடக்கும் என்றும், மதுரை, கோவை, சென்னை என மூன்று நகரங்களில் ஒரே நாளில் இந்த விழா நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக தனி ஹெலிகாப்டரை கமல்ஹாஸன் அமர்த்தியிருப்பதாக செய்தி வந்தது.

இந்நிலையில், விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதாக நேற்று தகவல் வந்தது. இந் நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இன்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் வேறொரு நாளில் இந்நிகழ்ச்சி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட ஜூன் மாதத்திலேயே படத்தின் முதல் பிரதி தயாராகி, கேன்ஸ் பட விழாவுக்குக் கூட அனுப்பப்பட்டது. அதன் பிறகு 6 மாதங்கள் இந்தப் படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்துதான் பேரி ஆஸ்போர்ன் கமலுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல சமையல் கலை நிபுணர் 'செஃப்' ஜேக்கப் திடீர் மரணம்

Chef Jacob Dies Heart Attack

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா என்ன ருசி என்ற சமையல் கலை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வந்த பிரபல சமையல் கலை நிபுணர் ஜேக்கப் என்கிற ஜேக்கப் சகாயகுமார் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மறைந்த ஜேக்கப்புக்கு வயது 38தான் ஆகிறது. சன் டிவி மூலம் பிரபலமடைந்தவர் ஜேக்கப். இவரது சமையல் கலை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக இருந்ததால் குறுகிய காலத்திலேயே பிரபலமானது. சமையல் செய்வதை கிச்சனோடு நிறுத்தாமல் வெளியிடங்களுக்கும் கொண்டு சென்று ஏரிக்கரையில் சமைப்பது, குளத்தின் நடுவே சமைப்பது, அருவிக்குக் கீழே சமைப்பது என வித்தியாசப்படுத்தினார் ஜேக்கப்.

2010ம் ஆண்டு இவர் தொடர்ந்து 24 மணி நேரம் 485 விதமான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் சாதனையும் படைத்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து போனார் ஜேக்கப்.

ஜேக்கப்புக்கு இன்னும் திருமணமாகவில்லை.

 

கள்ளத்துப்பாக்கியில் 'தப்பிய' பிரபாகரன்!

Prabhakaran Kalla Thuppaakki   

கள்ளத்துப்பாக்கி படத்தில் கொடூரமான காட்சிகள் ஏராளமாக இருப்பதாகக் கூறி 35 இடங்களில் கத்தரி வைத்திருக்கிறது தணிக்கைக் குழு.

ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெறும் காட்சி மட்டும் தப்பித்திருக்கிறது.

தமிழ் ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன் போன்ற வார்த்தைகள் இடம்பெற்றாலே, அதை வெட்டி எறியச் சொல்வதில் ரொம்ப கறாராக இருப்பார்கள் சென்சார் குழுவினர்.

ஆனால் கள்ளத்துப்பாக்கியில் இலங்கை வரைபடத்தின் பின்னணியில் பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ளது.

"இது, à®'ரு கூலிப்படையின் கதை. வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. அந்த துப்பாக்கி அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பதே கதை. மறுதணிக்கைக்கு அனுப்பிதான் ஏ சான்றிதழ் பெற்றோம். விடுதலைப் போராட்டத் தலைவர்கள் என்ற வகையில் பிரபாகரன் படத்தை வைத்தோம்," என்றார் தயாரிப்பாளர் ரவிதேவன்.

 

இயக்குநரை செருப்பால் அடித்த பிரபல நடிகை கைது

Kannada Actor Nayana Hits Director With Footwear

பெங்களூரு: பெங்களூருவில் கன்னட திரைப்பட இயக்குநரை செருப்பால் அடித்த நடிகை நயானாவை போலீசார் கைது செய்தனர்.

கன்னட சினிமா இயக்குனர் ரிஷி. இவர், "கொட்டலாலோ பூ காய்" என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி வந்தார். இதன் கதாநாயகியாக, நயானா கிருஷ்ணா நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததால், திரைப்படம் வெளியீடு சம்பந்தமாக, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலுள்ள ஓட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு இதில், திரைப்படம் தொடர்பானவர்கள் உட்பட, பலரும் கலந்து கொண்டனர்.

மோசடி புகார்

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை நயானா இயக்குநர் ரிஷி மீது திடீரென குற்றம் சாட்டினார். "கொட்டலாலோ பூ காய் திரைப்படத்துக்காக, இயக்குனர் ரிஷி, என்னிடம், எட்டு லட்சம் ரூபாய் வாங்கியிருந்தார். இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை. எனக்கு திரைப்பட வினியோக உரிமையை தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தார்; அதுவும் தரவில்லை. என்னை அவர் மோசடி செய்து விட்டார், என கூறவே இயக்குனர் ரிஷி அதிர்ச்சியடைந்தார்.

செருப்பால் அடித்த நடிகை

நயானா கூறுவதை ரிஷி மறுத்தார். இதனையடுத்து நயானாவுடன் வந்தவர்களுக்கும், ரிஷிக்கும் இடையே கைகலப்பு நடந்தது. முதலில் நடிகையின் உதவியாளர், ரிஷியை தாக்கினார். ஆத்திரமடைந்த நயானா, தன் செருப்பை கழற்றி, ரிஷியை மாறி மாறி அடித்தார். இதை எதிர்பாராத ரிஷி, அறையிலிருந்து ஓட்டம் பிடித்தார். பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த ஓட்டல் அறையில், ஒரே களேபரமானது. இந்த ரகளையால், பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது.

கைது செய்த போலீஸ்

நடிகை கும்பலிடமிருந்து தப்பித்த ரிஷி, ஓட்டலின் வெளியே நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறினார். அந்த நேரத்திலும், நடிகையும், அவருடன் வந்தவர்களும் ரிஷியை தாக்கினர். இதற்கிடையில், உப்பார்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆட்டோவில் இருந்த இயக்குனரை மீட்டு, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து உப்பார்பேட்டை போலீசார் விசாரனை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நடிகை நயானாவையும், உறவினர்களையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

ஏற்கனவே தகராறு

நடிகை நயானாவுக்கும், இயக்குநர் ரிஷிக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இயக்குநர் பலமுறை நயானாவை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 

அண்ணாச்சி கடைகள் அழிஞ்சி போயிரும்… நீயா நானாவில் அஞ்சிய வியாபாரிகள்!

Neeya Naana Discussion About Fdi Retail Sector

படிக்கலைன்னாலும் பத்தாயிரும் ரூபா இருந்தா போதும் பொட்டிக்கடை வச்சுப் பொழைச்சுக்குவேன். ஆனா வெளிநாட்டுக்காரனை உள்ள விட்டா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு பொழைப்பு போயிரும்....

இது விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு வியாபாரிகளின் அச்சம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. இதற்கு கூட்டணி கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதைப்பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இல்லை என்பதே உண்மை.

பக்கத்து கடைகளில் அரிசியும், பருப்பும் வாங்கியவர்கள் இன்றைக்கு மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் பர்ச்சேஸ் செய்வதை பெருமையாக கருதுகின்றனர். என்னதால் பெரிய கடைகள் வந்தாலும் சிறு சிறு மளிகைக்கடைகள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் போது இந்தியா முழுவதும் உள்ள 7 கோடி சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது எப்.டி.ஐ யை எதிர்ப்பவர்களின் அச்சம். வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் பணபலம். சிறுவியாபாரிகளை நசிவுக்கு உள்ளாக்கிவிடும் என்றும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

பெரிய நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிவிடுவார்கள். அதனால் சிறுவியாபாரிகள் உற்பத்தியாளர்களிடம், விவசாயிகளிடம் இருந்து வாங்க முடியாது. à®'ரு கட்டத்திற்கு மேல் அதிக விலை வைத்து விற்பார்கள் என்பதும் அவர்களின் அச்சம்.

அதே சமயம் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிப்பவர்கள், சிறுவணிகம் கொடுக்கக் கூடிய பொருள் தரமற்றவை என்றனர். தரமான பொருள் கொடுப்பவர்களிடம் வாங்குவது என்ன தவறு என்று கேட்ட அவர்கள் எனக்கு பிடித்த பொருளை நானே நேரடியாக பார்த்து வாங்குவதில் à®'ரு தனி சுகம் இருக்கிறது என்றனர்.

சிறு உற்பத்தியாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் சிறு வியாபாரிகள் உறவுப் பாலமாக இருக்கின்றனர் என்பது எப்டிஐ எதிர்ப்பாளர்களின் கருத்து. பிராண்ட் உள்ள பொருட்களைத்தான் இன்றைக்கு மக்கள் வாங்குகின்றனர். இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாதாரண உற்பத்தியாளர்களின் பொருள் அழிந்து போய்விடும் என்பது சிறு வியாபாரிகளின் அச்சம்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இளங்கோ கல்லானை, வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீனிவாசன், சமூக ஆர்வலர் ராஜகோபாலன், நிதி ஆலோசகர் நாகப்பன் ஆகியோர் பங்கேற்று சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். திட்டக்கமிஷன்துறை முன்னாள் உறுப்பினர் ஸ்ரீனிவாசனும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் கூறினார்.

அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாக பேசிய சிலர் சிறு வியாபாரிகளை வட்டிக்கடை என்று கூறினர், முறைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் பெரிய கடைகளில் காலாவதியாக சரக்குகளை பாலீசாக விற்கின்றனர், கிரெடிட் கார்டு என்ற மிகப்பெரிய கந்து வட்டி இருக்கிறது என்பதை உணரத்தவறிவிட்டனர் என்றே கூறலாம்.

இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினையான எப்டிஐ பற்றி பேச நீயா? நானா? மட்டுமே சரியான தளம் என்று நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் அடிக்கடி கூறிக்கொண்டார். ஆங்கிலச் சேனல்களில் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும், விவாதிக்க முடியும் என்ற கருத்து இருந்தது. அதை உடைத்து நீயா நானாவில் இதுபோன்ற அறிவு சார்ந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது என்று பெருமைப் பட்டுக்கொண்டார் கோபிநாத்.

எதுக்கு இந்த விளம்பரம் கோபிநாத்?

 

யானை தந்த வழக்கு: மோகன்லாலைக் காப்பாற்ற அமைச்சர் முயற்சி!

Minister Trying Save Mohan Lal Pil

யானைத் தந்த வழக்கில் மோகன்லாலைக் காப்பாற்ற ஒரு கேரள அமைச்சரே முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கேரள சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள 2 யானை தந்தங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த யானை தந்தங்கள் வரவேற்பு அறையில் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த யானை தந்தம் எப்படி வந்தது? என அதிகாரிகள் கேட்டதற்கு சரியான பதிலை மோகன்லால் கூறவில்லையாம்.

இந்நிலையில் மோகன்லாலுக்கு ஆதரவாக கேரள மாநில வன இலாகா அமைச்சர் கணேஷ்குமார் (இவரும் ஒரு நடிகராக இருந்தவர்) அறிக்கை விட்டார்.

மோகன்லாலை காப்பாற்ற அமைச்சர் முயற்சிக்கிறார் என கேரளாவில் குற்றச்சாட்டு எழுந்தது.

கோட்டயம் செப்பு பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் மோகன்லால் வீட்டுக்கு யானை தந்தம் எப்படி வந்தது? என விசாரிக்க வேண்டும் என்று கோரி திருச்சூர் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இந்த மனுவில் அமைச்சர் மோகன்லாலை காப்பாற்ற முயற்சி செய்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த தீர்ப்பு 14-ந் தேதி கூறப்படும் என விஜிலன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மேனன் தெரிவித்தார்.

 

நந்தனம் பாடல் வெளியீடு

சென்னை : சிவாஜிதேவ், மித்ரா குரியன், ரிஷி உட்பட பலர் நடித்துள்ள படம், 'நந்தனம்'.   என்.சி.ஷியாமளன் இயக்குகிறார். கோபிசந்தர் இசை. இதன் பாடலை அமீர் வெளியிட, தொழிலதிபர் ஏ.சி.சண்முகம், ஜெயமுருகன் பெற்றுக் கொண்டனர். தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், ஞானவேல் ராஜா, டி.சிவா, இயக்குனர் பிரபுசாலமன், பாடலாசிரியர் விவேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி இயக்குனர் என்.வி.ஷியாமளன் கூறும்போது, '7 நாட்களில் நடக்கும் காதல் கதை. காதலின் மூன்று வகைகளை மூன்று ஜோடிகளை வைத்து சொல்கிறோம். பாடல்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 'ஏதோ ஏதோ உயிரிலே...' என்ற பாடலை உதடுகள் ஒட்டாத வார்த்தைகளை கொண்டு விவேகா எழுதியுள்ளார். 'இது என்ன வலியோ...' என்ற பாடலை பாடமுடியாமல் சின்மயி அழுதுவிட்டார்' என்றார்.
 

உன் வருகைக்காக,லாலி

சென்னை : நார்த் ஈஸ்ட் பிலிம் பேக்டரி, ரங்கீலா என்டர்பிரைசஸ் சார்பில் கே.சி.ரவிதேவன், ஜி.மதன், ஐ.பிரசாத் தயாரிக்கும் படம், 'உன் வருகைக்காக,லாலி'. மவுரியா, சோனியா சூரி, ஜெய்லானி நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம்: பி.சித்திரைச்செல்வன். ஒளிப்பதிவு, நிர்மல்ராஜா. இசை: பி.சி.சிவன், ஸ்ரீராகவ். பாடல்கள்: வைரமுத்து, தாமரை. இயக்கம், ரெங்கராஜன். படம் பற்றி அவர் கூறும்போது, 'போலி விசா மூலம் வெளிநாடுகளுக்கு ஆள் கடத்தும் கும்பலை தேடிப்பிடித்து பழிவாங்கும் இளைஞனின் கதை' என்றார்.

 

ஈகோ ஆங்கில தலைப்பா? இயக்குனர் விளக்கம்

சென்னை : வி.பி.ஸ்டில் சார்பில் பெரியசாமி ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'ஈகோ'. வேலு, அனஸ்வரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சக்திவேல் இயக்குகிறார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. பின்னர் படம் பற்றி சக்திவேல் கூறியதாவது: 'ஈகோ'வை ஆங்கில தலைப்பு என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாயகன் பெயர் ஈஸ்வர், நாயகி பெயர் கோமதி. இரண்டின் முதல் எழுத்தைக் கொண்டு 'ஈகோ'வாக்கி இருக்கிறோம்.

இருவருக்கும் இடையில் அடிக்கடி ஈகோ பிரச்னை வருவதாலும் இந்த தலைப்பு பொருத்தமானதாக வைக்கப்பட்டுள்ளது. நாயகன் பிரச்னையில் நாயகியும், நாயகி பிரச்னையில் நாயகனும் சிக்கி கொண்டு எப்படி வெளியே வருகிறார்கள் என்பது படத்தின் கதை. நான் இயக்கிய 'கந்தகோட்டை' ஆக்ஷன் படமாக இருந்ததால் இதை காமெடி படமாக இயக்கி உள்ளேன். என்னைத் தவிர அனைவரும் புதுமுகங்கள். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
 

டாஸ்மாக்கில் வேலை செய்பவர்களின் கதை

சென்னை : ஹாஜி சினி கிரியேஷன் சார்பில் பல்கீஷ் அலாவுதீன், என்.பாபு தயாரிக்கும் படம் 'சத்திரம் பேருந்து நிலையம்'. ரோஷன், ட்விங்கிள் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரவிப்ரியன் இயக்கியுள்ளார். ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி வெளியிட, நளினி பெற்றுக் கொண்டார். பின்னர் படம் பற்றி இயக்குனர் ரவிப்ரியன் கூறியதாவது:

 திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மதுக்கடை பாரில் வேலை பார்த்த ஒருவனின் உண்மை கதைதான் படம். சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பார் செட் போட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். படத்தில் இரு பார் பாடல்களும் இருக்கிறது. பாரில் வேலை செய்பவர்களும் மனிதர்கள்தான், என்பதை உணர்த்துகிறோம்.
 

விஜய் ஜோடியாக அமலா பால்

சென்னை : விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள படம், 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தை, 'ரிக்ஷா மாமா', 'பாட்டுக்கு நான் அடிமை', 'ஒரு வசந்த கீதம்' படங்களை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயின், மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக அமலா பால் ஒப்பந்தமாகி உள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். ஒளிப்பதிவு, நீரவ் ஷா. இசை, ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்கள், நா.முத்துக்குமார். இம்மாதம் வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 

அத்வைதா திருமணம்

சென்னை : 'அழகர்சாமியின் குதிரை', 'சகாக்கள்', 'கொண்டான் கொடுத்தான்' படங்களில் நடித்தவர் அத்வைதா. இவரும் கன்னட பட இசை அமைப்பாளர் அனு சீலினும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து கடந்த மாதம் பெங்களூரில்  திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி அத்வைதா கூறும்போது, 'சினிமா வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்பதால் என் திருமணத்துக்கு சினிமா தொடர்பானவர்களை அழைக்கவில்லை. திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன்' என்றார்.
 

கள்ளத்துப்பாக்கிக்கு 35 கட்

சென்னை : தமிழ்ச்செல்வன், குட்டி ஆனந்த், ஷாவந்திகா நடித்துள்ள படம், 'கள்ளத்துப்பாக்கி'.  லோகியாஸ் இயக்கி உள்ளார். இதில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று சென்சார் சர்டிபிகேட் தர மறுத்துவிட்டது. இதையடுத்து மறு ஆய்வுக்குழுவுக்கு படத்தை அனுப்பினர். படத்தை பார்த்த மறு ஆய்வு குழுவினர், 35 இடங்களில் கட் கொடுத்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி தயாரிப்பாளர் ரவிதேவன் கூறும்போது, 'கூலிப்படை கும்பல் சிறுவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை படமாக உருவாக்கி உள்ளோம். இதில் கூலிப்படைகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து காட்சிகளை அமைத்துள்ளோம். இதில் வன்முறை இருப்பதாக சொல்லி தணிக்கை சான்றிதழ் தர மறுத்தனர். மறு ஆய்வுக்குழு பார்த்து விட்டு 35 இடத்தில் வெட்டச் சொன்னார்கள். கதை பாதிக்காதவாறு அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கி படத்தை முடித்து விட்டோம். தீபாவளிக்கு வெளியாகிறது' என்றார்.
 

கோவிலுக்காக படம் இயக்கிய இயக்குனர்

சென்னை : செல்வா திரைக்கூடம் சார்பில் ராஜசூரியன் தயாரித்து, இயக்கி, பாடல்கள் எழுதியுள்ள படம், 'நேசம் நெசப்படுதே'. வேந்தன், அரசி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். விஜய் மந்த்ரா இசை. சாய்சிவன் ஒளிப்பதிவு. படம் பற்றி ராஜசூரியன் கூறியதாவது: சினிமாவில் பாடல் எழுதுவதற்காக வந்தேன். கசப்பான அனுபவம் காரணமாக திரும்பி விட்டேன். நான் ஒரு கோவில் கட்டுவதாக கனவு கண்டேன்.

அந்த கனவில் வந்த கோவிலைப் போலவே, ஸ்ரீ விஷ்ணு துர்கா கோவிலை, பொன் முச்சந்தி கிராமத்தில் கட்டினேன். அன்று முதல் கடந்த 82 மாதங்களாக அன்னதானம் செய்கிறேன். எனது கோவிலை பிரபலப்படுத்தவும், சினிமா லட்சியத்தை நிறைவேற்றவும் இந்தப் படத்தை தயாரித்து இயக்கினேன். நாயகனும் நாயகியும் எந்த காட்சியிலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள். கவர்ச்சியும், விரசமும் இல்லாத கிராமத்து காதல் கதை. அடுத்த மாதம் வெளிவருகிறது.
 

ஆங்கில படத்தில் தமிழ் கலாச்சாரம்

சென்னை : 'சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி', 'குரோச்சிங் டைகர், ஹிடன் டிராகன்', 'புரோக்பேக் மவுன்டன்' உட்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கியவர் ஆங் லீ. ஆஸ்கர் விருது பெற்ற இவர், இப்போது, 'லைஃப் ஆஃப் பை' என்ற படத்தை இயக்கி உள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இதில், இந்தி நடிகர் இர்பான் கான், தபு, சுராஜ் ஷர்மா நடித்துள்ளனர்.

மிருகக்காட்சி சாலை நடத்தும் ஒருவர், குடும்பத்துடனும், மிருகங்களுடனும் கப்பலில் பயணம் செய்கிறார். திடீரென கப்பல் கவிழ்கிறது. சிறு படகில் அவரது மகனும், புலியும் மட்டும் தப்பிக்கிறார்கள். நடுக்கடலில் புலிக்கும், இளைஞனுக்கும் இடையே நடக்கும் வாழ்க்கை போராட்டம்தான் கதை.  ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழியில் 23,ம் தேதி வெளியாகும் இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது.

இயக்குனர் ஆங் லீ நிருபர்களிடம் கூறியதாவது: கனடா எழுத்தாளர் யேன் மார்ட்டல் எழுதிய நாவல்தான், 'லைஃப் ஆஃப் பை'. கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பை நடத்தினேன். மூவாயிரம் இளைஞர்களை ஆடியோ வீடியோ டெஸ்ட் எடுத்து அதிலிருந்து சுராஜ் ஷர்மாவை தேர்வு செய்தேன். புலியிடம் தனியாக மாட்டிக் கொண்ட ஒருவனின் செயல்கள் எப்படி இருக்குமோ அதை அப்படியே பிரதிபலித்துள்ளார். இதன் கதை, நாவலில் உள்ளதைப் போல பாண்டிச்சேரியில் தொடங்குகிறது. இதற்காக தமிழ்நாட்டுக்கும், பாண்டிச்சேரிக்கும் வந்து சென்றேன்.

தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னதமான கலாசாரங்களில் ஒன்று என்பதை உணர்ந்தேன். தமிழர்களின் விருந்தோம்பலையும், விருந்தினர்களை மதிக்கும் குணத்தையும் கண்டு வியந்தேன். அவர்களின் கலை மற்றும் மெல்லிய உணர்வுகளை இந்த கதையில் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படம் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சுராஜ் ஷர்மா, இர்பான் கான், தபு உடன் இருந்தனர்.
 

அமீர் கண்டிப்பான இயக்குனர்: நீது சந்திரா

சென்னை : 'அமீர் கண்டிப்பு மிக்க இயக்குனர். அவருடன் பணியாற்றியதில் அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது' என்று நீது சந்திரா கூறினார்.
அன்பு பிக்சர்சுக்காக ஜெ.அன்பழகன் தயாரிக்கும் படம், 'ஆதிபகவன்'. அமீர் இயக்குகிறார். ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடி. படம் பற்றி நிருபர்களிடம் நீது சந்திரா கூறியதாவது:

'யுத்தம் செய்' படத்தில் அமீருடன் ஒரு பாடலுக்கு ஆடினேன். அப்போது, 'அவர் ரொம்ப கோபக்காரர்' என்றார்கள். ஷூட்டிங்கில் என் வேலையை செய்யப்போகிறேன். பிறகு என்ன பயம் என்று, அமீருடன் ஆடினேன். அப்போது ஒருமுறை அவர் என் தோளை தொட்டு ஆட வேண்டும். இரண்டு, மூன்று டேக்குகள் ஆகியும் என்னை தொடவில்லை. கூச்சப்பட்டார். பிறகு நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. ஆதிபகவன் படம் எனக்கு திருப்புமுனையாக அமையும். அமீர் கண்டிப்பு மிக்க இயக்குனர்தான். ஆனால் அவருடன் பணியாற்றியதில் அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது.
இவ்வாறு நீது சந்திரா கூறினார்.
 

துள்ளி விளையாடுக்காக பிரகாஷ் ராஜ் டான்ஸ்

சென்னை : ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க வின்சென்ட் செல்வா இயக்கும் படம், 'துள்ளி விளையாடு'. யுவராஜ், தீப்தி, பிரகாஷ் ராஜ், ஜெயப்பிரகாஷ், சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். காமெடி கலந்த த்ரில்லர் கதையான இதில் பிரகாஷ் ராஜ் வித்தியாசமான வில்லனாக நடித்துள்ளார். தனக்கு சாதகமான தகவல் வந்தால் மகிழும் அவர், அதை தனது குழுவினருடன் கொண்டாடுவது போல ஒரு பாடல் இதில் இடம்பெற்றுள்ளது. 'சண்டிக் குதிர சண்டிக் குதிர  வண்டிகுள்ள சிக்காத ஒண்டிக்குதிர' எனத் தொடங்கும் அந்த வேகமான பாடலுக்கு பிரகாஷ் ராஜ் ஆடியுள்ளார். அவருடன் மும்பை மாடல் அங்கீதாவும் ஆடியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
 

ஷிவா நடிக்கும் யா யா

சென்னை : அம்மன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கும் படம், 'யா யா'. இதில் ஷிவா ஹீரோ. ரம்யா நம்பீசன் ஹீரோயின். சந்தானம், இளவரசு, மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜேஷிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஐ.ராஜசேகர் எழுதி இயக்குகிறார். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசை, விஜய் எபினேசர், பாடல்கள், விவேகா. இம்மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது.