நீச்சலுடைக்கு 'நோ' சொல்லும் காஜல் அகர்வால்!

Tags:


நீச்சலுடைக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

பழனி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். பொம்மலாட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இவர். இப்போது பாலிவுட்டுக்கும் போய்விட்டார்.

பாலிவுட் படங்களில் நடிப்பதால், காஜல் அகர்வால் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாகவும், நீச்சல் உடைக்கு இறங்கி வந்திருப்பதாகவும் தெலுங்கு படஉலகில் கிசுகிசுக்கள் பரவின.

இதுபற்றி காஜல் அகர்வாலிடம் கேட்டபோது, "நீச்சல் உடையில் நடிப்பதுதான் கவர்ச்சி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாடர்ன் டிரெஸ்சும் கூட கவர்ச்சியாக தெரியலாம். எனக்கு நீச்சல் உடையில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் ஏற்கமாட்டேன். மறுத்து விடுவேன்.

தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறோம். இந்தியிலும் நடிக்கிறேன். என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. அவற்றில் உண்மை இல்லை. விரைவில் ஹைதராபாத்திலேயே வீடு பார்த்து தங்க முடிவு செய்துள்ளேன்," என்றார்.
 

அர்ஜுன் நடிப்பில் மூன்று மொழிகளில் 'காட்டுப்புலி'!

Tags:


அர்ஜுன் நடிப்பில் டினு வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படம் காட்டுப்புலி.

இயக்குநர் டினு வர்மா, இந்தியில் சண்டைப் பயிற்சி இயக்குநராக இருப்பவர். கத்தார், பார்டர், வீர், குதா கவா உள்ளிட்ட 50 படங்களுக்குமேல் ஆக்ஷனில் கலக்கியவர் டினு வர்மா. அதற்காக 7 பிலிம்பேர் விருதுகளையும் அள்ளியவர்.

இப்போது முதல் முறையாக அர்ஜுனுடன் இணைந்து காட்டுப் புலியில் அனல் பறக்க வைக்கப் போகிறார்களாம்.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில்தான் முதல் முறையாக அர்ஜுனை சந்தித்துள்ளார் டினு வர்மா. அர்ஜுனின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போக அவரையே தனது படத்தின் நாயனாக்க முயற்சித்து வெற்றியும் பெற்றார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அசத்தல் ஜங்கிள் த்ரில்லர் என்று 'காட்டுப் புலி'யைச் சொல்லலாம். அத்தனை அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படம் முழுவதும். படம் பார்ப்பவர்கள் காட்டுக்குள் மாட்டிக் கொண்ட உணர்வு நிச்சயம் இந்தப் படத்தில் கிடைக்கும்.

ரஜினீஷ் - சாயாலி பகத், அமீத் - ஹனாயா, ஜஹான்-ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் ஒரு ட்ரிப் போகிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போது அர்ஜூன் - பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். அவர்களை நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி காப்பாற்றிக் கொண்டுவருகிறார் என்பது கதை.

தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து படமாக்கியிருக்கிறார்கள் இந்தப் படத்தை. அனைத்து நட்சத்திரங்களுமே இங்கே கேம்ப் அடித்திருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் என காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர்.

இந்தப் படத்தில் 50 குதிரைகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க ஏராளமான காவலர்களை நியமித்து குதிரைகளைப் பார்த்துக் கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.

பிரியங்கா தேசாய் இதில் டாக்டராக, அர்ஜுனின் மனைவியாக, மகளுக்காக மருத்துவத் தொழிலையே தியாகம் செய்யும் தாயாக நடித்துள்ளார்.

முன்னாள் மிஸ் இந்தியா சாயாலி பகத்தும் முன்னாள் மிஸ்டர் இந்தியா ரஜ்னீஷும் இதில் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னொரு நாயகியான ஹனாயா மிஸ் அஸாம் பட்டம் வென்றவர். .

அர்ஜூனின் ஆக்ஷன் வேட்கைக்கு செம தீனியாக அமைந்துள்ளதாம் இந்தப் படம். பொதுவாகவே காட்டுப் பகுதியில் ஆக்ஷன் காட்சிகள் அமையும் வகையில் வந்த அர்ஜுன் படங்கள் அனைத்துமே பெரும் வெற்றி பெற்றவை. உதாரணம் ஜெய்ஹிந்த். அந்த செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் தொடரும் என நம்புகிறார் அர்ஜூன்.

காட்டுப் புலிக்காக அண்டர்வாட்டர் பயர், குதிரை மற்றும் கார் துரத்தல் காட்சிகளில் மயிர்க்கூச்செரியும் சாகஸங்களை செய்துள்ளார் அர்ஜூன்.

"ஆக்ஷன் பட பிரியர்களுக்கு காட்டுப் புலி நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை", என்கிறார் இயக்குநர் டினு வர்மா.
 

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Tags:


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை ஜூன் 3ம் தேதி சென்னையில் திமுகவினர் கொண்டாடவுள்ளனர். இதில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு போன்றவர்கள் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

ஆட்சியை இழந்தது, கனிமொழி கைதாகி திஹார் சிறையில் இருப்பது போன்ற பெரும் சோகப் பின்னணியில் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதைக் கொண்டாடுவது நமது கடமை என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிக்கை மூலம் கூறியிருந்தார்.

இதையடுத்து திமுகசார்பில் கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2ம் தேதி மாலை 5 மணிக்கு காமராசர் அரங்கில் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. இதில் பழம்பெரும் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி கலந்து கொண்டு வாழ்த்துப் பாடலைப் பாடுகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் கவிஞர் வைரமுத்து, அப்துல் காதர், சுப.வீரபாண்டியன், பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, சினிமா நடிகை குஷ்பு ஆகியோர் பேசுகிறார்கள்.

சென்னை நகர மேயர் மா.சுப்பிரமணியம் விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.
 

மறுபடியும் மேகா நாயர்!

Tags:


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேகா நாயரை தரிசிக்கும் பாக்கியம் தமிழ்த் திரையுலக ரசிகப் பெருமக்களுக்குக் கிடைக்கப் போகிறது.

காதலிச்சி பார் என்ற படத்தின் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ளார் மேகா நாயர். கேரளாவிலிருந்து வந்த இந்த நெடு நெடு அழகி, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பெரிய ரவுண்டுக்கு வர முடியாத அளவுக்கு அவரது நேரம் அமைந்து போனது.

இதனால் தமிழில் காணாமல் போனோர் பட்டியலில் இணைந்தார் மேகா. பசுபதி ராசக்காபாளையம் படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து கவர்ச்சிகரமான ரோல்களே தேடி வந்ததால் அப்செட்டாகிப் போனார் மேகா. இருந்தாலும் லேசுபாசான கவர்ச்சிக்கும் அவர் தயாராகவே இருந்தார். இருந்தாலும் வாய்ப்புகள்தான் சரிவர இல்லை.

இந்தநிலையில் தற்போது விகாஸ் என்ற புதுமுக நாயகனுக்கு ஜோடியாக காதலிச்சி பார் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மேகா.

இந்தப் படத்தில் முத்துக்காளை, காதல் சுகுமார் ஆகியோருக்கு முக்கியப் பாத்திரங்களாம். அப்படியானால் படம் எந்த அளவுக்கு வெயிட்டானது என்பதை உணரலாம். விஜயபாலன் என்பவர் இயக்குகிறார்.

படத்தின் கதை என்ன என்று விசாரித்தபோது, லட்சியத்தை நோக்கி செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் காதல் குறுக்கிடுகிறது. கடைசியில் எது வெல்கிறது என்று பதில் கிடைத்தது.

இதே டயலாக்கை ரொம்பவாட்டி கேட்டது போல இருக்கிறதல்லவா. இருந்தாலும் வித்தியாசமாக தர முயற்சித்திருக்கிறாராம் இயக்குநர்.

அப்புறம் இன்னொரு விஷயம், வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் புகழ் கானா உலகநாதனும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் பாடியுள்ளாராம்.
 

ராதாரவி மகன் திருமணம்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராதாரவி மகன் திருமணம்!

5/25/2011 12:57:08 PM

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரனும், நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி-பாக்யலஷ்மி தம்பதியின் மகனுமான ஹரி ராதாரவிக்கும், பெங்களூரைச் சேர்ந்த மோகன்-சாந்தி தம்பதியர் மகள் திவ்யா என்கிற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. தமிழில் 'திருமந்திரம்' படத்தில், வில்லனாக அறிமுகமாகிறார் ஹரி.
இவர்கள் திருமணம், ஜூன் 5-ம் தேதி காலை 9 மணியளவில், வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 4-ம் தேதி மாலை 6.30 மணியளவில், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திரையுலகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்துகின்றனர்.

 

சூர்யா ஜோடியானார் காஜல் அகர்வால்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சூர்யா ஜோடியானார் காஜல் அகர்வால்!

5/25/2011 12:58:42 PM

'மாற்றான்' படத்தில் சூர்யா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 'கோ' பட ஹிட்டுக்குப் பிறகு 'மாற்றான்' படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதில் சூர்யா ஜோடியாக நடிக்க பல்வேறு ஹீரோயின்களிடம் படக்குழு பேசி வந்தது. இப்போது காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபற்றி காஜல் கூறும்போது, 'ஆமாம். சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். அவருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வழக்கமாக, கே.வி.ஆனந்த் படத்தில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். சும்மா கிளாமருக்காக வந்து போவது போல் இருக்காது. இந்தப் படத்தில் எனது கேரக்டர் வித்தியாசமானது. தற்போது 'சிங்கம்' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறேன். இதையடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிசினஸ்மேன்' என்ற படத்தில் நடிக்கிறேன்' என்றார்.

 

கை கொடுத்தது மலையாளம்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கை கொடுத்தது மலையாளம்!

5/25/2011 12:55:07 PM

வாய்ப்பில்லாமல் தவித்தபோது மலையாளம்தான் கைகொடுத்து உதவியது என்று சுனிதா வர்மா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பெரிய எதிர்பார்ப்புகளோடு தமிழில் அறிமுகமானேன். ஆனால் ஏமாற்றமாக இருந்தது. வாய்ப்புகள் இல்லாமல் தவித்தபோது மலையாள திரையுலகின் கதவு திறந்தது. அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கடைசியாக வெளியான 'சீனியர்ஸ்' படமும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். ஆனாலும் தமிழில் நினைத்த இடத்தை பிடிக்கும் ஆசையில் இருக்கிறேன். தற்போது நடித்து வரும் 'கருங்காலி' ரீ என்ட்ரியை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.




 

காவல்துறை ஆனது மலையாள மெட்ரோ!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காவல்துறை ஆனது மலையாள மெட்ரோ!

5/25/2011 12:53:29 PM

மலையாளத்தில் சரத்குமார் நடித்து ஹிட்டான 'தி மெட்ரோ' படம், தமிழில் 'காவல்துறை' என்ற பெயரில் டப் ஆகிறது. இந்தப் படத்தை மலையாள நடிகர் திலீப், தனது கிராண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இதில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மற்றும் பாவனா, நிவின் பாலி, சுரேஷ் கிருஷ்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். ஷான் ரகுமான் இசை. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மூன்று வெவ்வேறு கதைகள் கிளைமாக்ஸில் ஒன்று சேர்வது போலான படம் இது.




 

தம்பி வெட்டோத்தி சுந்தரம் ரிலீஸ் எப்போது?

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தம்பி வெட்டோத்தி சுந்தரம் ரிலீஸ் எப்போது?

5/25/2011 12:38:44 PM

கரண், அஞ்சலி, சரவணன், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ள படம், 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். ஜே.எஸ்.24 பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் ஜே. செந்தில்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை வடிவுடையான் இயக்குகிறார். கன்னியாகுமரி மாவட்ட வழக்கில் வரும் இந்தப் படம் நிஜத்தில் வாழ்ந்த ஒருவரை பற்றியது. பட வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி வடிவுடையானிடம் கேட்டபோது, 'போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் இப்போதுதான் முடிந்தது. அடுத்த மாதம் ஆரம்பத்தில் பாடல் வெளியீடு இருக்கும். மாத இறுதியில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம். படத்தை பார்த்த தயாரிப்பாளர் செந்தில்குமார், கவிஞர் வைரமுத்து உட்பட அனைவரும் பாராட்டினர்' என்றார்.

 

தமிழில் தொடர்ந்து நடிக்க ஜாக்கி ஷெராப் ஆர்வம்

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில் தொடர்ந்து நடிக்க ஜாக்கி ஷெராப் ஆர்வம்

5/25/2011 12:40:45 PM

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் கூறினார். எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள படம், 'ஆரண்ய காண்டம்'. இதில் ஜாக்கி ஷெராப் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது. இதையொட்டி ஜாக்கி ஷெராப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு மிகவும் பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தயாரிப்பு என்பதாலும் படத்தின் கதை பிடித்திருந்ததாலும் இதில் நடிக்கிறேன். தமிழ் சினிமா தொழில்நுட்பத்திலும், கதையை கையாள்வதிலும் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதையும் கேரக்டரும் அமைந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன். இந்தப் படத்தில் சென்னை தாதாவாக நடித்திருக்கிறேன். இது புதுமையான கதை. இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏன் சான்றிதழ் தர மறுத்தனர் என்பது ஆச்சரியமாக உள்ளது.

இந்திப் படங்களில் அதிக வாய்ப்பு இல்லாதால்தான் பிற மொழி படங்களில் நடிப்பதாக கூறுவது தவறு. 170 படங்களில் சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறேன். 100 இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். நான் நடித்த படங்களில் சிலவற்றை தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள். இதற்குமேல் என்ன சாதனை செய்ய வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது, தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, நடிகர் சம்பத், நடிகை யாஸ்மின் உடனிருந்தனர்.

 

சயின்டிஸ்ட் ஆகிறார் ஸ்ருதி!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சயின்டிஸ்ட் ஆகிறார் ஸ்ருதி!

5/25/2011 12:35:37 PM

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் '7ஆம் அறிவு' படத்தில் சயின்டிஸ்ட் ஆக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில், '7ஆம் அறிவு', தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக, 'ஓ மை பிரண்ட்', ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஒரு படம் என நடித்து வருகிறேன். '7 ஆம் அறிவு' தமிழில் எனக்கு சிறப்பான அறிமுகத்தைக் கொடுக்கும். இதில் சயின்டிஸ்டாக நடிக்கிறேனா என்பது பற்றி இப்போதே சொல்ல விரும்பவில்லை. இதில் சூர்யாவுடன் நடித்ததை மறக்க முடியாது. அவருடன் நடிக்கிறேன் என்றதுமே என் தோழிகள் குஷியாகிவிட்டனர். சூர்யாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சித்தார்த்தை காதலிக்கிறீர்களாமே என்கிறார்கள். இதுபற்றி நான் அதிகமுறை சொல்லிவிட்டேன். என் வேலையை பற்றி பேசுவதையே விரும்புகிறேன். அதைவிட்டுவிட்டு என் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

 

உதயன் ஆக்ஷன் கதையா?

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உதயன் ஆக்ஷன் கதையா?

5/25/2011 12:26:49 PM

'உதயன்' படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார் அருள்நிதி. முத்தமிழ் படைப்பகம் சார்பில் பிரபாகரன் தயாரிக்கும் படம் 'உதயன்'. இதில் அருள்நிதி, ப்ரணிதா நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் சாப்ளின் கூறியதாவது: 'வம்சம்' படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்த அருள்நிதி, இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வங்கி மனேஜராக இருக்கும் அவர் எதையும் வெளிப்படையாகச் செய்பவர். காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்வதற்கு முன்பே கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்பவர். அப்படிப்பட்டவரின் காதலுக்கு வில்லன்கள் முளைக்கிறார்கள். இவரும் ஆக்ஷன் அவதாரம் எடுத்து காதலியை எப்படி கைபிடிக்கிறார் என்பது கதை. சண்டைக் காட்சிகளில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். வைஸ்கேம் என்ற கேமராவை பயன்படுத்தி சண்டைக் காட்சிகளை எடுத்திருக்கிறோம். இது நொடிக்கு 2 ஆயிரம் பிரேம்வரை எடுக்கக் கூடியது. கன்னடம், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ப்ரணிதாவை தமிழில் அறிமுகப்படுத்துகிறோம். மணிகாந்த் கத்ரி இசை அமைக்கிறார். படத்தில் 6 பாடல்கள். ஸ்ருதி கமல் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

 

தமிழ் பேச வரும் மோகன்லால் - சமீரா படம்

Tags:


மலையாளத்தில் படுதோல்வியைத் தழுவிய 'ஒரு நாள் வரும்' படம் தமிழில் டப் ஆகி வருகிறது.

மோகன்லால் - சமீரா ரெட்டி நடிப்பில் வெளியான படம் ஒரு நாள் வரும். சொந்தமாக வீடுகட்ட நினைக்கும் சாதாரண மனிதன், இந்த நாட்டில் நிலவும் லஞ்சம், அதிகாரிகளின் மோசமான கெடுபிடிகளில் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டியுள்ளது என்பதை மையமாகக் கொண்டு எடுத்த படம் இது.

நடிகர் சீனிவாசன் எழுதிய கதை இது. ராஜீவ் குமார் இயக்கியுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் வெளியான இந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனால் ஹீரோயின் சமீரா ரெட்டி மற்றும் ஹீரோ மோகன்லால் ஆகியோருக்கு தமிழில் உள்ள ரசிகர்களைக் கருத்தில் கொண்டு இந்தப் படத்தை தமிழில் டப் செய்துள்ளனர்.

சீனிவாசனும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 

சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி

Tags:


சென்னை: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.

இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.

சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
 

அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்

Tags:


நடிப்பு: அப்புக்குட்டி, பிரபாகரன், சரண்யா மோகன், அத்வைதா, அழகன் தமிழ்மணி, தேவராஜ்

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

இசை: இளையராஜா

கதை வசனம்: பாஸ்கர் சக்தி

திரைக்கதை - இயக்கம்: சுசீந்திரன்

தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்

பிஆர்ஓ: நிகில்

நல்ல சினிமா வேண்டும் வித்தியாசமான படம் வேண்டும் என ஓயாமல் புலம்பிக் கொண்டிருப்பவர்கள், அப்படியொரு படம் வரும்போது கண்டு கொள்ளாமல் போவதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

சமீபத்தில் அப்படி வந்திருக்கிற நல்ல சினிமா அழகர்சாமியின் குதிரை. ஒரு மிக எளிய கிராமியக் கதையை எண்பதுகளின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

நீண்ட காலமாக மழையின்றி, விவசாயம் பாதிக்கப்பட்டதால் கிராமக் கடவுள் அழகர்சாமிக்கு திருவிழா எடுக்க முடிவு செய்கின்றனர் மல்லையாபுரம் கிராமவாசிகள். அடுத்த நாளே திருடு போகிறது அழகர்சாமி ஊர்வலத்துக்காக தயார் செய்யப்பட்ட குதிரை வாகனம்.

காணாமல் போன குதிரையைக் கண்டுபிடிக்க போலீஸில் புகார் செய்கிறார்கள் கிராமத்தினர்.

இந்தக் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் வசிப்பவன் அழகர்சாமி (அப்புக்குட்டி). குதிரையில் பொதியேற்றிப் பிழைப்பு நடத்தும் அவனுக்கும் பக்கத்து ஊர் சரண்யா மோகனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அந்த நேரம் பார்த்து காணாமல் போனகிறது அவனது நிஜ குதிரை. குதிரை இல்லாததால் அவனது திருமணம் கேள்விக்குறியாகிறது.

இந்த இரு குதிரைகளும் கிடைத்தனவா, அழகர்சாமி ஊர்வலமும், அழகர்சாமியின் திருமணமும் நடந்ததா என்பது மீதிக் கதை. இந்தக் கதைக்குள் மேல்சாதி இளைஞனுக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்குமிடையிலான ஒரு மெல்லிய காதலையும் காட்டியிருக்கிறார்கள்.

எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை. ஆனால் அந்த காலகட்டத்தை எங்கும் வலிந்து சொல்லாமல், முதல்வர் எம்ஜிஆர் காலண்டர், பாண்டியன் பேருந்து என சில அடையாளங்கள் மூலமே புரிய வைத்திருக்கிறார் சுசீந்திரன்.

காணாமல் போன கடவுளின் குதிரை வாகனத்தைக் கண்டுபிடிக்க மலையாள மாநிதிரீகனை வரச் சொல்வதும், அந்த மாந்திரீகன் மக்களின் அறியாமையைக் காசாக்குவதையும் காட்டியிருக்கும் விதத்தையும் விலாவாரியாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

படத்துக்கு பெரும் பலமாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. மனதை நெகிழ வைக்கும் டைட்டில் இசையுடன் தொடங்கும் அவர் ராஜாங்கம் க்ளைமாக்ஸில் விஸ்வரூபம் எடுக்கிறது.

அப்புக்குட்டி அறிமுகமாகும் காட்சிக்கு அவர் பிரயோகித்திருக்கும் இசை... வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. அதேபோல, அந்த சண்டைக் காட்சியின் ஆரம்பத்தில் மவுனத்தையும், போகப் போக இசையால் அந்தக் காட்சியின் உக்கிரத்தை உணர வைப்பதும் இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்.

மூன்றே பாடல்கள். அவற்றில் 'பூவக் கேளு...' மிக அழகான மெலடி. 'குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி...' ராஜா ஸ்பெஷல். துள்ள வைக்கிறது.

கதையின் நாயகனாக வரும் அப்புக்குட்டி மிக தேர்ந்த நடிகராக தன்னைக் காட்டியுள்ளார். காணாமல் போன குதிரை கிடைத்த சந்தோஷத்தை அவர் காட்டும் விதமும், குதிரையைக் கொடுக்க கிராமத்தினர் மறுக்கும்போது சட்டென்று அவர் காட்டும் அழுகை கலந்த கோபமும்... ஒரு வெள்ளந்தியான மனிதனை கண்முன் நிறுத்துகிறது.

பிரபா - அத்வைதா காதல் ஒரு மெல்லிய தென்றல் மாதிரி வந்துபோகிறது. க்ளைமாக்ஸில் இந்தக் காதலுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒரு கவிதை.

சரண்யா மோகன் பாத்திரத்தை இன்னும் இயல்பாகக் காட்டியிருக்கலாம். அவரது தந்தையாக வரும் தேவராஜ் நான்கு காட்சிகள் என்றாலும் நிறைவாகச் செய்துள்ளார்.

அழகன் தமிழ்மணிக்கு இதுகுறிப்பிடத்தக்க படம். அப்படியே கிராம பஞ்சாயத்து தலைவரைப் பார்க்கும் உணர்வைத் தருகிறார்.

படத்தின் கதையே இயல்பான நகைச்சுவைதான் என்பதால், கூடுதலாக நகைச்சுவைக் காட்சிகளை இயக்குநர் சேர்க்கவில்லை போலிருக்கிறது. வசனங்களில் பளிச்சிடும் ஆர்ப்பாட்டமில்லாத நாத்திகம், பக்திமான்களையும் கூட ரசிக்க வைக்கும்!

மிக இயல்பான, கதையை மீறாத ஒளிப்பதிவு தந்த தேனி ஈஸ்வரைப் பாராட்ட வேண்டும் (இது அவரது முதல்படம்!)

இந்த அழகர்சாமியின் குதிரையில் சுகமான ஒரு ப்ளாஷ்பேக் சவாரி போக வைத்த சுசீந்திரன், நம்பிக்கை தரும் புதிய படைப்பாளிகள் வரிசையில் முதலிடம் பெறுகிறார்!

வாழ்த்துக்கள்!
 

ரஜினி நலம் பெற பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த ரசிகர்கள்!

Tags:


பண்ணாரி: உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினி நலம் பெற வேண்டி, புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர் ரசிகர்கள்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் பூரண குணம் அடைய வேண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ரசிகர்கள் பண்ணாரி அம்மன் கோவிலில் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அதன் பிறகு 51 பேர் கோவிலில் தங்க ரதம் செல்லும் பாதையில் அங்க பிரதட்சணம் செய்து வலம் வந்தனர். சில ரசிகர்கள் மொட்டை போட்டு முடிகாணிக்கை செலுத்தினார்கள்.

இந்த நிலையில் பவானிசாகர் ஒன்றிய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாலை 5 மணி அளவில் பண்ணாரி அம்மன் கோவிலில் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரசிகர்கள் கோவிலில் தங்கத்தேரை இழுத்து வலம் வந்தனர்.

ஈரோடு மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் தங்க தேரை இழுத்து தொடங்கி வைக்கப்பட்டது. பவானிசாகர் ஒன்றிய செயலாளர் எஸ்.செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் பிரபு, லட்சுமணன் ஆகியோர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினார்கள்.

வீரபாண்டி கோயிலில் அங்கப்பிரதட்சணம்

தேனி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ரஜினி காந்த் விரைவில் குணம் அடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

முன்னதாக ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். மேலும் ஆதரவற்றகுழந்தைகள் சார்பாக சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜை நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
 

பால் தாக்கரே மருமகள் தயாரிக்கும் 'பாபர் மசூதி' சினிமா!

Tags:


பாபர் மசூதி இடிப்பை பின்னணியாகக் கொண்டு, பாலிவுட்டில் படம் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தை பால் தாக்கரேயின் மருமகள் ஸ்மிதா தாக்கரே தயாரிக்கிறார்.

சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேயின் இரண்டாவது மகன் ஜெய்தேவ் தாக்கரே. இவரைக் காதலித்து மணந்தவர் ஸ்மிதா தாக்கரே. தற்போது இந்தத் தம்பதியர் பிரிந்து விட்டனர்.

ஸ்மிதா தாக்கரே, இந்திப்பட தயாரிப்பாளராக உள்ளார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்ட பாபர் மசூதி பற்றி ஒரு இந்தித் திரைப்படம் தயாரிக்கிறார் ஸ்மிதா.

அமீர்கான் உதவியுடன்...

இந்தப் படம் குறித்து ஸ்மிதா கூறுகையில், "பாபர் மசூதி இடிப்பினை அடிப்படையாகக் கொண்டு ஒரு இந்திப் படம் தயாரிக்கிறேன். இந்தப் படத்தின் திரைக்கதை தொடர்பாக நடிகர் அமீர்கானை 5, 6 முறை சந்தித்துப் பேசினேன். படத்தின் திரைக்கதை அமைப்பில் அவர் சில யோசனைகளைச் சொன்னார்.

தற்போது பல படங்களில் நடித்து வருகிற நிலையில், அமீர்கான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. நான் எந்த நோக்கத்தில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்பதை அறிந்து, அவர் என்னைப் பாராட்டினார். நடிகர் அஜய் தேவ்கன் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

அரசியல் கிடையாது..

இந்தப் படத்தில் அரசியல் கிடையாது. அரசியல் கோணத்தில் நான் இந்தப் படத்தை தயாரிக்க வில்லை. சாமானிய மக்களின் கருத்துப் பின்னணியில்தான் இந்தப் படம் அமையும்.

படப்பிடிப்பு 3 மாதங்களில் தொடங்கும். ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிந்து விடும். பாபர் மசூதி வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன் இந்தப் படத்தை திரையிட முடிவு செய்துள்ளேன்," என்றார்.

படத்துக்கு 'பாப்ரி' என தலைப்பிட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு சம்பத்தில் சதியாளர்களில் ஒருவராக சிவசேனதைத் தலைவர் பால் தாக்கரே சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிலை உச்சநீதிமன்றம் கேட்டுள்ள நிலையில் இந்தப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணம் காய்க்கும் மரமாக இருக்கும் வரை மதவாதம் ஏதாவது ஒரு உருவில் தொடரும் போலிருக்கிறது!