டிசம்பர் 6ம் தேதி தமிழ் ’3 இடியட்ஸ்’ சென்னையில் துவக்கம்!

Shankar and Vijay
விஜய் நடிக்க, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் துவங்குகிறது.
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நாயகர்களாக நடிக்கின்றனர்.
இலியானா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இலியானாவின் தந்தை வேடத்தை அவர் செய்கிறார் என்று முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தின் கதை விவாதம் முடிந்து, நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக சமீபத்தில் சென்னை வந்த இலியானாவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ரூ 1.5 கோடி தர தயாரிப்பாளர்கள் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
3 இடியட்ஸ் தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார்.
 

சபரிமலையில் ஐயப்பன் சிலையைத் தொட்ட வழக்கு-நடிகை ஜெயமாலா மீது குற்றப்பத்திரிக்கை

Jayamala
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று, ஐயப்பன் சிலையைத் தொட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கன்னட நடிகை ஜெயமாலா உள்ளிட்ட 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளளது.
கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் சபரிமலையில் சுவாமி ஐயப்பன் சன்னதியில் `தேவ பிரசன்னம்’ என்று கூறப்படும் ஜோதிடம் பார்க்கப்பட்டது. பிரசன்னம் பார்த்த ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், ஐயப்பனுக்கு பூஜைகளும், சடங்குகளும் உரிய புனிதத்தன்மையுடன் நடத்தப்படவில்லை. ஒரு பெண் சுவாமியின் விக்ரகத்தை தொட்டு வணங்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுவாமி கோபத்தில் இருக்கிறார் என்றார்.
இவர் இப்படிக் கூறிய சில நாட்களிலேயே ஜெயமாலா, சபரிமலை தேவஸ்தானத்துக்கு ஒரு கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதில், தான் 18 வயதாக இருக்கும்போது சபரிமலைக்கு வந்ததாகவும், சுவாமி அய்யப்பனை தொட்டு வணங்கியதாகவும், அதற்கு பிராயச் சித்தம் செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்தது. ஆனால் ஜெயமாலாவின் கூற்றை சபரிமலை தேவஸ்தானமும், மேல் சாந்தி உள்ளிட்ட பூசாரிகளும் இதை திட்டவட்டமாக மறுத்தனர். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் பம்பை நதியை தாண்டி சபரிமலை ஏறவோ, சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்றும், கோவிலின் புகழுக்கு களங்கம் உண்டாக்க நடிகையும், உன்னிகிருஷ்ணனும் சதி செய்து இவ்வாறு கதை கட்டி விடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றப் பிரிவு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. அவர்கள் பெங்களூர் சென்று ஜெயமாலாவிடம் விசாரணை நடத்தினர்.
ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ஜெயமாலாவும், உன்னிகிருஷ்ணனும் திட்டமிட்டு, சபரிமலை கோவிலுக்கு இழுக்கு உண்டாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தவும், தீய எண்ணம் கொண்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலில் சுவாமியை தொட்டு வணங்கியதாக, உண்மைக்கு புறம்பாக, பொருத்தமில்லாத, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, தகவலை வெளியிட்டதாக தெரியவந்தது.
மேலும் தனது பிரசன்னம் உண்மையானது என்று அனைவரையும் நம்ப வைக்கும் வகையில் உண்ணிகிருஷ்ணன் ஆடிய நாடகத்திற்கு ஜெயமாலாவும், ரகுபதியும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ராண்ணி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
 

இரட்டை வேடத்தில் ஆர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


காதல் பயண அனுபவங்களை சொல்லும் படமாக, 'சிக்கு புக்கு' உருவாகியுள்ளது என்று அதன் இயக்குனர் மணிகண்டன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆர்யா நிறைய படங்களில் நடித்துவிட்டார். இந்தப் படத்தில்தான் ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.  மேலும் படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் ஆர்யா வருவதாக மணிகண்டன் கூறினார்.


Source: Dinakaran
 

‘உத்தம புத்திரன்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் : தனுஷ் வருத்தம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


நடிகர் தனுஷ், ஜெனிலியா இணைந்து நடித்த ‘உத்தம புத்திரன்’ தீபாவளி அன்று வெளியானது. படத்தில் நடிகர் விவேக், கவுண்டர் சமூகத்தினர் குறித்து பேசிய வசனத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து தங்களது சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கவுண்டர் சமுதாயத்தினர் கொதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக இன்று பேட்டி அளித்த தனுஷ் தங்களை அறியாமல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றுவிட்டதாக கூறினார். மேலும் படத்திலிருந்து அந்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என தனுஷ் கூறினார். போராட்டத்தைக் கைவிட்டு, படத்தை திரையரங்குகளில் ஒட ரசிகர்களும், கொங்கு சமூகத்தினரும் ஒத்துழைக்க வேண்டும் என தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Source: Dinakaran
 

நடிகர் விஜயகுமார் மீது மகள் வனிதா திடீர் புகார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


நடிகர் விஜயகுமார் மீது அவரது மகளும் நடிகையுமான வனிதா, போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. 'மாணிக்கம்', 'சந்திரலேகா' உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். டிவி நடிகர் ஆகாஷை காதலித்து மணந்தார். கருத்து வேறுபாடால் இவர்கள் பிரிந்தனர். கோர்ட்டிலும் விவாகரத்து பெற்றனர். தனது 2 குழந்தைகளுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார்.
தீபாவளிக்காக குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் புறப்பட வனிதா தயாரானார். ஆனால் குழந்தைகளை அனுப்ப விஜயகுமார் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வனிதா, விஜயகுமார் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகுமார் மீது மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் குழந்தைகளை அனுப்பி வைக்க விஜயகுமார் சம்மதித்தார். இதையடுத்து குழந்தைகளை வனிதா அழைத்துச் சென்றார். தொழிலதிபர் ஒருவரை வனிதா காதலிப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமாருடன் தகராறு ஏற்பட இதுவும் காரணம¢ என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Source: Dinakaran
 

இயக்குநர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் விக்ரமன்!

Director Vikraman
சென்னை: திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் இயக்குநர் விக்ரமன்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், 1,200-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா இருந்து வருகிறார். துணைத் தலைவராக விக்ரமன் இருந்தார்.
செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக எழிலும் இருக்கிறார்கள்.
இயக்குநர்கள் சங்கத்துக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் விக்ரமன் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அவர், செயலாளர் ஆர்.கே.செல்வமணிக்கு அனுப்பி இருக்கிறார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த வேலை காரணமாகவும் தன் பதவியை ராஜினாமா செய்வதாக, விக்ரமன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே சங்கத்தின் பொருளாளராக இருந்த இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனும் இதே போல திடீரென்று பதவி விலகியது நினைவிருக்கலாம்.
இயக்குநர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய விழா தொடர்பான கருத்து மோதல்களும் இந்த ராஜினாமாக்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

உதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசி மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!!

Mysskin
உதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசிய இயக்குநர் மிஷ்கின், அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.
திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்த மிஷ்கின், சமீப காலமாக தனது பேட்டிகளில் அனைவரையும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார். தனது நந்தலாலா படம் மட்டுமே தமிழின் சிறந்த படம் என்று கூறியுள்ள அவர், இதற்கு முன் இயக்கிய படங்களான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களை கீழ்த்தரமான படங்கள் என்றும், இந்த மாதிரி கீழ்த்தரமான படங்களைத்தான் ரசிக்கிறார்கள் மக்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டியொன்றில் உதவி இயக்குநர்களை தரக்குறைவாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உதவி இயக்குநர்கள் சுமார் 50 பேர் நேற்று திரண்டு வந்து சென்னையில் உள்ள இயக்குநர் சங்கத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
உதவி டைரக்டர்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி அளித்த மிஷ்கின் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக மிஷ்கின், இயக்குநர்கள் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், அதில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது. ஆனாலும் மிஷ்கின் நேரடியாக மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றும் உதவி இயக்குநர்கள் எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.
 

மைனா படத்தில் நடிக்காமல் போய்விட்டேனே :ரஜினி வருத்தம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


தனது முதல் படங்கள் மூலம் ரசிகர்களிடம், வித்தியாசமான இயக்குநர் என பெயர் வாங்கியிருந்தாலும், மைனா படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராகவும் உருவெடுத்துள்ளார் பிரபு சாலமன். இந்த ஆண்டு வெளியான அருமையான படம் என பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே கமல்ஹாசனும், இயக்குநர் பாலாவும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். இப்போது திரையுலகினர் அணிவகுத்துப் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனராம்.
எந்த நல்ல விஷயத்தையும் முதலில், தாமாகவே முன்வந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரான ஒருவரை தேடினாலும் பார்க்க முடியாது. சில நாட்கள் முன்பு ‘மைனா’ படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்து வெளியே வந்தவுடன் மைனாவின் இயக்குநர் பிரபு சாலமனை அழைத்து ஆதரவாக அணைத்து கன்னத்தில் முத்தமிட, ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார் பிரபு சாலமன்.
படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, ‘இந்த காவிய படத்துல நான் ஒரு சிறிய பாத்திரத்திலாவது நடிக்காமப் போய்ட்டேனே’ என்றும் கூறினார். மேலும் மைனா மாதிரி படம், உண்மையான திராவிடர்களின் படம். எப்போதோ பூக்கும் குறிஞ்சிப் பூ இது என்று கூறிய சூப்பர் ஸ்டார், படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ், கல்பாத்தி எஸ் அகோரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பாராட்டு கடிதம் ஒன்றை ரஜினி எழுதியுள்ளார். அதில்,
எனக்கு ஒரு சின்ன வருத்தம்: இந்த காவிய படத்துல ரஜினிகாந்த் ஒரு சின்ன பாத்திரத்திலாவது நடிச்சிருக்கலாமேன்னு…!
ஜெய்ஹிந்த்… வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு!
இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
ரஜினியின் பாராட்டு குறித்து இயக்குநர் பிரபு சாலமன் கூறுகையில், ‘என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாத விருது, ரஜினி சார் எனக்குத் தந்த முத்தமும், பாராட்டுக் கடிதமும்’ என்றார், கண்கள் கலங்க.
மைனாவின் முக்கியப் பாத்திரத்தில் நடித்த இயக்குநர் தம்பி ராமையா கூறுகையில், “யாருக்கு சார் இந்த மனசு வரும்… ரஜினி சாரின் இந்தப் பாராட்டு நடிகராக எனக்கு கிடைச்ச மிகப் பெரிய அங்கீகாரம்… இதுபோதும்” என்றார்.


Source: Dinakaran