சன்டிவியில் ஒளிபரப்பாகும் ‘வம்சம்' டிவி சீரியலை நிறுத்தச் சொல்லி நூற்றுக்கணக்கான கண்டனக்குரல்கள் கேட்டாலும் அந்த சீரியலில் நடிக்கும் சில கதாபாத்திரங்களை யாராலும் மறுக்க முடியாது.
அதில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணனை விட வெகுளித்தனமாய் நடித்து வில்லத்தனம் செய்யும் ரமாமணி... மாமா, மாமா என்று சுற்றி வரும் அருக்காணி... மச்சான் மச்சான் என்று உருகும் பூமிகா... குட்டிப்பெண் சங்கரி என சில கதாபாத்திரங்கள் வம்சம் சீரியலுக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன.
அருக்காணி
அருக்காணிக்கு இல்லத்தரசிகளிடையே தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அருக்காணி சின்னத்திரையில் நடிப்பது இதுதான் முதல் சீரியல். சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குரூப் டான்சராக பணியாற்றியுள்ளாராம்.
வடசென்னைப் பெண்
எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்துள்ள அருக்காணியின் உண்மையான பெயர் சிந்துக்கிருஷ்ணன். கணவர் ஹரி கிருஷ்ணனுடன் இணைந்து நடனப்பள்ளி நடத்துகிறார்.
பிரபல நடன இயக்குநர்களிடம்
காயத்ரி ரகுராம், ஸ்ரீதரன், சுஜாதா, லாரன்ஸ் என பலரிடமும் உதவியாளராக பணிபுரிந்துள்ளாராம் அருக்காணி. ‘டான்ஸா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாடல் டான்ஸ்' என்கிற நடனப் பள்ளியை நடத்தி வருகிறாராம்.
காமெடி நடிகையாக நடிக்கணும்
‘வத்திக்குச்சி' படத்தில் அஞ்சலிக்கு தோழி, ‘ஆலமரம்' படத்தில் போலீஸ் என தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வரும் அருக்காணிக்கு நல்ல காமெடி நடிகையாக சினிமாவில் நிலைக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.