கார் விபத்து வழக்கு: தீர்ப்புக்கு முன்பு சல்மானை சந்தித்து ஆறுதல் சொன்ன ஷாருக்

மும்பை: கார் விபத்து வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சல்மான்கானை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தீர்ப்புக்கு முன்னதாக நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

மும்பை பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் நடிகர் சல்மான்கானின் வீடு, தீர்ப்பு காரணமாக இன்று காலையில் இருந்தே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. சல்மான்கானின் உறவினர்கள் அனைவரும் பதற்றத்துடன் இருந்தனர். அவர்கள் சல்மான்கானை பார்க்கும் போதெல்லாம், "நல்லதே நடக்கும்" என்று கூறினார்கள்.

Shah Rukh Khan went to visit Salman Khan before verdict

எனினும் கனத்த இதயத்துடனேயே அவர் நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது அவரை காண வீட்டுக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

ஷாருக்கான் சந்திப்பு

இதனிடையே நேற்றைய தினம் நடிகர் ஷாருக்கான், சல்மான்கான் தங்கியுள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சில மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தார். இதேபோல நடிகர் சோஹா அலிகான், இயக்குநர் டேவிட் தவான் ஆகியோரும் சல்மான் கானை சந்தித்து பேசியதாக தெரிகிறது.

ப்ரீத்தி ஜித்தா, சோனாக்ஷி

இந்த நிலையில் சல்மான்கான் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் பாலிவுட் திரை உலக நட்சத்திரங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ஏராளமோனோர் சல்மான்கான் வீட்டிற்குக் சென்றனர். நடிகை சங்கீதா பிஜ்லானி, சோனாக்ஷி சின்கா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் சல்மான்கான் வீட்டிற்குக் சென்றனர்.

 

தமிழ் சினிமா இயக்குநர்களின் பிள்ளைகளுக்கு தனியார் கல்லூரிகளில் 90 இலவச இடங்கள்!

தமிழ் சினிமா இயக்குநர்களின் பிள்ளைகளுக்காக தங்கள் கல்லூரிகளில் 30 இடங்களை இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளனர் ஜெகத்ரட்சகன், ஏசி சண்முகம் மற்றும் ஐசரி கணேசன்.

90 free seats in private colleges for film director's children

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.

90 free seats in private colleges for film director's children

விழாவில் கல்வியாளர்களான ஜெகத்ரட்சகன், ஏசி சண்முகம், ஐசரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கல்லூரிகளில் படிக்க இயக்குனர் சங்க உறுபினர்களின் பிள்ளைகள் படிக்க இன்ஜினியரிங் கல்லூரியில் மூவரும் இணைந்து தலா 30 இடங்களை இலவசமாக அளித்துள்ளனர்.

90 free seats in private colleges for film director's children

கலை அறிவியல் கல்லூரியில் படிக்க ஜெகத்ரட்சகன் 20 சீட்டுகள், ஏசி சண்முகம் 20 சீட்டுகள், ஐசரிகணேசன் 20 சீட்டுகள் என்று மொத்தம் அறுபது சீட்டுகள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.

90 free seats in private colleges for film director's children

மற்றும் விழாவில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் தனது உடலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

90 free seats in private colleges for film director's children

விழாவில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர்,எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார்,பாலா, , சித்ராலட்சுமணன், ராமதாஸ், ரமேஷ்கண்ணா, ரவிமரியா, விஜய், தயாரிப்பாளர் கலைபுலி.எஸ்.தாணு, கே.ஆர், பொன்வண்ணன், ஆர்.கண்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

அட சிவ சிவா அப்படியாப்பா?

'எல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில விழுமாம் துள்ளி' என்கிற கதையாக... அந்த நட்சத்திர சேனலில் அறிமுகமாக தத்துப்பிள்ளை, பெத்த பிள்ளை செல்லப்பிள்ளை என்று வளர்த்து விடப்பட்டவர் சிவமான நடிகர். மெரீனா கடற்கரையோரம் ஒதுங்கியவருக்கு சரியான திரையில் காற்று வீச தமிழ் சினிமாவில் உச்ச நடிகரின் பெயரில் படம் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

நடிகராக உயர்ந்த பின்னும் அந்த நட்சத்திர டிவி சேனலின் விருது விழாவை சில ஆண்டுகள் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு அவருக்கே விருது கொடுத்து அவர் அழுததை ப்ரோமோ போட்டே ஓட்டி எடுத்தார்கள்.

இதை நினைத்துக்கொண்டே இருந்திருப்பார் போல, இந்த ஆண்டு விருது விழாவில் மேடை ஏறிய சிவமானவரின் பேச்சுதான் ஹைலைட். அதாகப்பட்டது தவிச்ச வாய்க்கு தண்ணி தரமாட்டாங்க. விடிய விடிய நிகழ்ச்சி நடக்கும் புளி சோறு, கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வந்திருங்க என்று பேசினார்.

இதை டிவி தரப்பினர் ரசிக்கவில்லையாம். எனவே கூப்பிட்டுவிட்ட ரெய்டில் சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகிவிட்டாராம் சிவமானவர்.

வில்லத்தனக்கு மாறிய வித்யமான நடிகை

தமிழ் சீரியல்களில் இப்போதெல்லாம் ஹீரோயின்களை விட வில்லி கதாபாத்திரங்களில் நடிக்கவே நடிகைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கண்களை உருட்டி மிரட்டி, சிரித்துக்கொண்டே மைன்ட் வாய்ஸ்சில் பேசும் சீன்கள்தான் அதிக அளவில் சீரியல்களில் இடம் பெறுகின்றன.

ஹீரோயின்களை விட வில்லிகளுக்கே ரசிகைகள் அதிகம் என்பதால் ஏராளமானோர் வில்லத்தனத்துக்கு மாறி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பு குடும்பபாங்கினி தோற்றத்தில் அமைதிப்புறாவாக நடித்த வித்யமான நடிகைக்கூட இப்போது வில்லித்தனம் செய்ய வந்துவிட்டார்.

சூரியடிவியில் தென்றலான தொடரில் புயலாய் வந்து கலக்கினார். அதில் கிடைத்த வரவேற்பை பார்த்து தற்போது ஊஞ்சல் தொடரிலும், இலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராசியான தொடரிலும் வில்லத்தனம் செய்யப்போகிறாராம் வித்யமான நாயகி...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்கிறாராம் வித்யமானவரின் கணவர்.

 

சல்மான் கான் ஜெயிலுக்குப் போயிட்டா, இந்த 200 கோடி ரூபாய் முதலீட்டின் கதி என்ன?

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் சல்மான் கான் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள நிலையில், அவரை நம்பி ரூ 200 கோடியை இரண்டு படங்களில் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

தற்போது நடிகர் சல்மான்கான் ‘பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற படத்தில் நடிகை கரீனா கபூருடனும். ‘பிரேம் ரத்தன் தான் பாயோ' என்ற படத்தில் சோனம் கபூருடனும் நடித்து வந்தார்.

Over Rs 200 crore at stake as court convicts Salman Khan

இந்த இரு படங்களிலும் ரூ. 200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. தண்டனை வழங்கப்பட்டதால் இந்த 2 படங்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே பஜ்ரங்கி பாய்ஜான் படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனப் பங்குகள் விலை இன்றைய தீர்ப்புக்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. சல்மான் ஜெயிலுக்குப் போய்விட்டால், இந்த இரு படங்களையுமே முடித்துக் கொடுக்க முடியாமல் போய்விடும்.

 

சல்மான் கான் மீது நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கு!

மும்பை: சல்மான் கான் மீது மேலும் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. அது மான் வேட்டையாடிய வழக்காகும். அது ராஜஸ்தான் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதம் பதுக்கியதாகவும், ஆயுதம் பதுக்கலுக்கு இடம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றார். அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது பரோலில் வந்து நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்.

Salman Khan, the second big hero goes to Jail

தற்போது நடிகர் சல்மான் கான் கார் விபத்து வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.

இதுதவிர நடிகர் சல்மான்கான் மீது ராஜஸ்தானில் மான் வேட்டையாடிய வழக்கு ஒன்றும் உள்ளது. இதில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தண்டனையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ராஜஸ்தான் அரசு அப்பீல் செய்துள்ளது. அங்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

நடிகர் சல்மான்கான் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார். அவருக்கு வயது 49. இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய், சகோதரர், சகோதரியுடன் மும்பையில் வசித்து வந்தார்.

கட்டான உடலமைப்பு கொண்ட இவர் 1989-ல் மைனோ பியார் கியா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஹெலன் இவரது வளர்ப்பு தாய் ஆவார். ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி என இவரது முன்னாள் தோழிகள் பட்டியல் பெரிது.

 

இரண்டாவது முறையாக மாரடைப்பு: இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி:பிரபல இயக்குநர் மணிரத்னம் நெஞ்சு வலி காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

59 வயதாகும் மணிரத்னத்துக்கு இன்று அதிகாலை லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Mani Ratnam suffers cardiac attack second time

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், மணிரத்னத்திற்கு ஏற்பட்டது லேசான நெஞ்சுலிதான் என்றும், சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தன.

இப்போது ஓய்வெடுத்து வருகிறார் மணிரத்னம்.

மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் அவர் குரு, ராவணன், கடல் போன்ற படங்களைத் தந்தார்.

 

மணிரத்னம் நலம்.. நாளை சென்னை திரும்புகிறார் - சுஹாசினி தகவல்

டெல்லி: பிரபல இயக்குநர் மணிரத்னம் நெஞ்சு வலி காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வரும் அவர் நாளை சென்னை திரும்புகிறார்.

இத்தகவலை அவர் மனைவி நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

59 வயதாகும் மணிரத்னத்துக்கு இன்று அதிகாலை லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Mani Ratnam is fine and return Chennai tomorrow

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், மணிரத்னத்திற்கு ஏற்பட்டது லேசான நெஞ்சுலிதான் என்றும், சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தன.

இப்போது ஓய்வெடுத்து வருகிறார் மணிரத்னம்.

மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் அவர் குரு, ராவணன், கடல் போன்ற படங்களைத் தந்தார்.

சமீபத்தில் ஓ காதல் கண்மணி படத்தை இயக்கி வெளியிட்டார். அடுத்து தனுஷை வைத்து இந்திப் படம் இயக்கவுள்ள நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

 

தேதி இல்ல... சிவகார்த்திக்கு நோ சொன்ன சமந்தா!

அடுத்த ஆண்டு வரை தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக இருப்பதால், சிவகார்த்திகேயன் படத்துக்கு தேதி தர முடியவில்லை என நடிகை சமந்தா கூறிவிட்டாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது இப்படத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டாராம்.

Samantha says no to Sivakarthikeyan

இதுகுறித்து விசாரிக்கையில், இப்போது சமந்தாவிடம் 4 படங்களில் நடித்து வருகிறாராம். அவற்றில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ள 10 என்றதுக்குள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதே போல் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்துவரும் படத்தில் முதல் ஷெட்யூல் முடிந்திருக்கிறது.

அடுத்து வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாகவும், அட்லீ இயக்கத்தில் விஜய் ஜோடியாகவும் நடிக்கவிருக்கிறார்.

எனவே அடுத்த ஆண்டு இறுதி வரை சமந்தா பிஸியாக இருப்பதால், தேதி தர இயலவில்லை என்று கூறிவிட்டாராம்.

 

காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களின் படிப்புச் செலவை ஏற்றார் தனுஷ்!

காக்கா முட்டை படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரு சிறுவர்களின் முழு படிப்புச் செலவையும் ஏற்றார் நடிகர் தனுஷ்.

காக்கா முட்டை படம் தொடர்ந்து தேசிய விருதுகள் உள்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

Dhanush to bear all the education cost of Kakka Muttai boys

இப்போது படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கதையைக் கேட்டபோதே, இந்தப் படத்தை முதலில் வெளியிடாமல், விழாக்களுக்கு அனுப்பி விருதுகளைக் குவிக்க வேண்டும் என்றுதான் தயாரிப்பாளர்கள் தனுஷும் வெற்றிமாறனும் முடிவு செய்தார்களாம்.

திட்டமிட்டபடி விருதுகளைக் குவித்துவிட்டதால், இப்போது ரிலீஸ் செய்கிறார்கள்.

சென்னையில் உள்ள குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கைதான் கதை. அந்தக் கதையில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரு சிறுவர்களின் படிப்புச் செலவையும் தனுஷே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

 

‘சல்மான் கான் குற்றவாளியா?’... சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி!

மும்பை: சல்மான் கான் கார் விபத்து வழக்கி்ல் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் நடித்த தபாங் படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.

Salman is a good man : Sonakshi sinha

தபாங் படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து இந்தியில் பிரபலமானார் சோனாக்ஷி. தமிழிலும் கூட அவர் லிங்கா படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சல்மான் கான் வழக்கு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சோனாக்ஷி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

"மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. சல்மான் கானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சல்மான் கான் நல்ல மனிதர். அந்த குணத்தை அவரிடமிருந்து யாரும் எடுக்க முடியாது" என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

 

கடைசில பார்த்தா உண்மைக் கதையும் "மசாலா படம்" தானாம்!

சென்னை: பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் மசாலா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கேமராமேன் லக்‌ஷ்மண் எழுதி இயக்கும் முதல் படம், மசாலா படம். இப்படத்தில் பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா, புதுமுகம் கௌரவ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். நில் கவனி செல்லாதே படத்தின் நாயகி லக்ஷ்மி தேவி ஹீரோயின்.

Bobby Simha's Masala Padam

படத்தின் கதை இது தான். அதாவது, தமிழ்ப் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிடும் ஒருவரை அழைத்து, சரி, நீ சொல்ற மாதிரி மசாலா இல்லாத ஒரு படத்தை எடு, நான் பணம் தர்றேன் என்கிறாராம் ஒருவர்.

அந்த விமர்சகரும் மூன்று பேருடைய வாழ்க்கையை ஃபாலோ செய்து ஒரு கதையை ரெடி செய்கிறார். கடைசியில் பார்த்தால், அந்த உண்மைக் கதையும் வழக்கமான தமிழ் மசாலா படம் போலவே இருக்கிறதாம். இதுதான் மசாலா படத்தின் அவுட் லைன்.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆட்களை அடித்து நொறுக்கும் ரவுடியாக பாபி சிம்ஹா தோன்றுகிறார். இரண்டு கையிலும் ஒவ்வொரு துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு பீச்சில் பலூன் சுடும் தோரணையில் போஸ் கொடுக்கிறார் சிவா. புதுமுகம் கௌரவ், ஒரு பெண்ணிடம் மலர் கொடுத்து காதலைச் சொல்லும் போஸில் நிற்கிறார்.

இவற்றைப் பார்க்கும் போது ஆக்‌ஷன் மற்றும் காதல் கலந்த காமெடிப் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.

 

‘இதயமே நொறுங்கியது போல உள்ளது...’ சல்மான் தண்டனை குறித்து ஹன்சிகா!

சென்னை: நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிந்து இதயமே நொறுங்கியது போல உணர்கிறேன் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார்.

நடிகர் சல்மான் கான் வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது, தண்டனை விதிக்கப்பட்டது பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல நடிகர்,. நடிகையர் சல்மான் கானின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Heartbreaking #SalmanVerdict . Speechless : Hansika

அதேபோல டிவிட்டரிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஹன்சிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இதயமே நொறுங்கியது போல உள்ளது. பேச வார்த்தை இல்லை. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

Heartbreaking #SalmanVerdict . Speechless ! immense respect for @BeingSalmanKhan . Prayers and strength to the family

Posted by Hansika Motwani on Wednesday, May 6, 2015

நடிகர் ரிஷி கபூர் வெளியிட்டுள்ள டிவிட்டில், ‘இந்த கடினமான நேரத்தில் கான்களுடன் கபூர் குடும்பம் இருக்கிறது. காலம்தான் மிகச் சிறந்த நிவாரணி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று கூறியுள்ளார்.

 

இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தனது குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Mani Ratnam hospitalised

இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் தகவல்கள் தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

"ராவணன்' படத்தின் படப்பின் போது மணிரத்னத்துக்கு லேசான நெஞ்சுவலி எற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் மணிரத்தினத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது நான்காவது முறையாகும்.

 

”மைனா” ஹீரோக்கு ரூட் க்ளியர் – பழனியில் நடந்த நடிகர் விதார்த் நிச்சயதார்த்தம்

பழனி: கோலிவுட்டின் மைனா பட ஹீரோவான விதார்த்துக்கு பழனியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வீரம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விதார்த். இவருக்கும், பழனி மில் ரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞரான சிவானந்தம் என்பவரின் மகள் காயத்திரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

Actor vidharth’s betrothal held in Palani

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று மாலை நடந்தது.

ஜூன் மாதம் 11 ஆம் தேதி இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.

 

20 கோடி பேர் பார்த்த “ஸ்டார் வார்ஸ்” டிரெய்லர் – மகிழ்ச்சியில் டிஸ்னி

நியூயார்க்: டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள ஸ்டார் வார்ஸ் திரைப்பட 7வது பாகத்தின் டிரெய்லர் யூடியூபில் சக்கைப் போடு போட்டு வருகின்றது.

1980 களில் ஹாலிவுட்டையே புரட்டிப் போட்ட திரைப்படம் ஸ்டார் வார்ஸ். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைப் பெற்றுள்ள ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் 6 பாகங்கள் இது வரை வெளியாகியுள்ளன.

தற்போது "ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ்" என்ற பெயரில் 7வது பாகம் தயாராகி வருகிறது. ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

Disney's 'Force Awakens' trailer passes 200M views

வேற்று கிரகம் என்ற ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாகத்திலும் ஸ்டார் வார்ஸ் போகும் உயரம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

"அவெஞ்சர்ஸ்" படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சண்டைகள் ஓய்ந்த நிலையில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தனது "ஸ்டார் வார்ஸ்" படத்தினை போகஸ் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார் வார்ஸ் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளது.

இது குறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர் கூறுகையில் "ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ் படத்தின் 2வது டீசரை இதுவரை 20 கோடி பேர் பார்த்துள்ளனர்.

சமீபத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரெய்லரை வெளியான 24 மணி நேரத்திற்குள் 88 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ரசிகர்களின் அமோகமான ஆதரவுக்கு நன்றி" என்றார்.

ஹாலிவுட்டில் வெளியாக உள்ள ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசையின் 7வது பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதன் டிரெய்லரை இதுவரையில் 20 கோடி பேர் பார்த்துள்ளனராம்.