மும்பை: கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனுக்கு இன்று 27 வயது பிறக்கிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா. பிரபல பாட்மின்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள். ஓம் ஷாந்தி ஓம் படம் மூலம் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் ஷாரூக்கான்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் கோச்சடையான்.
தனது 27வது பிறந்த நாளையொட்டி சென்னை வந்திருந்தார் தீபிகா. யமஹா நிறுவனத்தின் லேடி பைக்கை நட்சத்திர ஹோட்டலில் வைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
தீபிகாவின் பிறந்த நாள் பரிசாக, வெள்ளை நிற பைக் ஒன்றை யமஹா நிறுவனம் பரி்சளித்தது. அந்த பைக்கில் ஏறி ஒரு போஸ் கொடுத்த தீபிகா, சென்னைக்கு வந்தது மிகுந்த சந்தோஷத்தைத் தருவதாகத் தெரிவித்தார். தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளுடன் சென்னை தொடர்புள்ளதாகத் தெரிவித்தார்.
தீபிகா - ஷாரூக்கான் நடித்துள்ள புதிய படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்' வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் நடித்தது, சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெளியாவது போன்றவற்றை மனதில் வைத்தே இப்படி அவர் கூறினார்.