கணவர் இறந்த இரண்டே மாதத்தில் நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

கணவர் இறந்த இரண்டே மாதத்தில் நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

சென்னை: கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார்.

இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். செங்கமலத்தால் கணவர் திடீர் என்று இறந்த அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவர் மகனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். செங்கமலத்தின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் செங்கமலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

சென்னை: நீங்கள் அனுமதிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கிறோம். இன்று அல்லது நாளை இதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டுகிறோம், என இயக்குநர் விஜய், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தலைவா படம் வெளியாக வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது.

நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

மனு

இதுகுறித்து இன்று சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஜய் ஆகியோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:

கடந்த 9-ம் தேதி உலகெங்கும் வெளியான தலைவா தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. மொட்டைக் கடிதங்கள், தொலைபேசி மிரட்டல்கள் காரணமாக படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் மட்டும் வெளிவராத நிலை ஏற்பட்டு தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

திருட்டு டிவிடி

தமிழகத்தில் மட்டும் படம் வெளிவராததால், படத்தை அனுமதியின்றி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். புற்றீசல் போல திருட்டு டிவிடி வெளியாகி வருகிறது.

விஜய் உண்ணாவிரதம்

தமிழகத்தில் தலைவா படத்தை வெளியிட பலவகையில் முயற்சித்தும் திரையரங்க உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால், படத்தில் நடித்த நடிகர் விஜய், அமலா பால் மற்றும் இதர நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடல் ஆசிரியர் நா முத்துகுமார் மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெறப் போகிறார்கள்.

நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

நீங்க சொல்ற இடத்துல...

தலைவா திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாகக் கோரி இன்று 16 அல்லது 17-ம் தேதி அரசு அனுமதிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு தாங்கள் அனுமதி அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்," என்று எழுதியுள்ளார்.

கைவிரித்த சூர்யா, ஹரி: கைகொடுத்த விஜய்

சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு விஜய் உதவி செய்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்த படம் சிங்கம் 2. சிங்கம் படத்திலேயே சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுத்தார். சிங்கம் 2 படத்திலும் சண்டைக் காட்சிகளில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுக்கும் காட்சிகளுக்கு குறைவில்லை.

கைவிரித்த சூர்யா, ஹரி: கைகொடுத்த விஜய்

சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் கடலில் நிற்கும் கப்பலில் இருந்து வில்லனை சூர்யா தூக்கி வீச வேண்டும். இந்த காட்சியில் ரஞ்சன் என்பவர் நடித்திருந்தார். அவர் ஹரியின் பல படங்களில் அடியாளாக நடித்தவர்.

ரஞ்சனுக்கு காயம்

சண்டை காட்சியில் சூர்யா ரஞ்சனை அடித்து நொறுக்க, ரஞ்சன் எகிறி குதித்து கடலில் விழுகிறார். அப்போது அவர் தடுமாறி பாறையின் மீது விழுகிறார். இந்த காட்சியில் ரஞ்சனின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இனி நடக்கவே முடியாது

ரஞ்சனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரால் இனி நடக்கவே முடியாது என்று தெரிவித்தனர். சூர்யா ரஞ்சனை மருத்துவமனைக்கு வந்து ஒரு முறை பார்த்துள்ளார். அதன் பிறகு படக்குழுவினர் யாரும் அவரை கண்டுகொள்ளவே இல்லையாம்.

இன்ஸ்பெக்டர்

சிங்கம் 2 படப்பிடிப்பிற்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரஞ்சனின் மருத்துவ செலவை ஏற்றிருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் சென்னைக்கு சென்று ஹரியையும், சூர்யாவையும் சந்தித்து ரஞ்சனின் பரிதாப நிலையை எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனால், ஹரியும், சூர்யாவும் கையைவிரிக்க அந்த இன்ஸ்பெக்டருக்கு சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பது குறித்து தெரிய வந்துள்ளது. உடனே அவர் படப்பிடிப்புக்கு சென்று விஜய்யை சந்தித்து விவரத்தை தெரிவித்துள்ளார். உடனே விஜய் ரூ.40,000 ரொக்கம் மற்றும் 2 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை தனது உதவியாளர் மூலம் ரஞ்சன் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம்.

ரசிகர்கள் உண்ணாவிரதத்துக்கும் தலைவா படத்துக்கும் சம்பந்தமில்லை!- போலீசிடம் தயாரிப்பாளர்

சென்னை: மாவட்டங்களில் உண்ணாவிரதமிருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தலைவா படத்துக்கும் சம்பந்தமில்லை என்ரு படத்தின் தயாரிப்பாளர் போலீசில் தெரிவித்துள்ளார்.

தலைவா படம் தமிழகத்தில் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் தமிழகமெங்கும் கொந்தளித்து வருகின்றனர். திருட்டு டிவிடி விற்பவர்களுடன் சண்டைபோட்டு, டிவிடிகளை அழித்து வருகின்றனர்.

ரசிகர்கள் உண்ணாவிரதத்துக்கும் தலைவா படத்துக்கும் சம்பந்தமில்லை!- போலீசிடம் தயாரிப்பாளர்

சேலம், நாமக்கல், விழுப்புரம் போன்ற பகுதிகளில் விஜய் ரசிகர்கள் தலைவா படத்தை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் சென்னையிலும் தலைவா படக்குழுவினர் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை சந்திரபிரகாஷ் ஜெயின், டைரக்டர் ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் திடீரென போலீஸ் கமிஷனரை சந்திக்க கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

என்ன காரணமோ தெரியவில்லை. அவர்கள் கமிஷனரை சந்திக்கவில்லை. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் வெளியில் வந்த அவர்கள், 'தலைவா படத்திற்கு பாதுகாப்பு கேட்டு வந்திருக்கிறோம். திருட்டு சிடி வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசிடம் மனு கொடுத்துள்ளோம்', என்றனர்.

அப்போது, தமிழகத்தில் சில இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரதம் அறிவித்து உட்கார்ந்து விட்டிக்கிறார்களே, என்று கேட்டனர் போலீசார்.

அதற்கு விஜய் தரப்பில், "ரசிகர்கள் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. விஜய்க்கு இதில் உடன்பாடில்லை. படத்தை உரிய நேரத்தில் வெளியிடாமல் இருந்தால் நஷ்டம் ஏற்படும். அதேவேளையில் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் திருட்டு சிடியில் பார்த்துவிட்டால், படம் வெளியானாலும் பெரும் நஷ்டம் ஏற்படும். இதிலிருந்து தங்களை காப்பாற்றி கைதூக்கிவிட்டால் போதும்," என்றனர்.

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

சென்னை: தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி நடக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.

எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர்.

அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது.

வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது.

இந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் விஜய். அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய். எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.

பிறந்தநாளில் உடல் உறுப்புதானம் செய்தார் பாடகி சுசித்ரா

பிரபல பாடகி சுசித்ரா தனது பிறந்தநாளை ஒட்டி உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

தற்போது பிரபல பாடகியாக உள்ள சுசித்ரா எப்.எம் ரேடியோவில் ரேடியோவில் பணியாற்றிவர். இதனைத் தொடர்ந்து ‘காக்க காக்க‘ படத்தில் ‘உயிரின் உயிரே.'., ‘மன்மதன்‘ படத்தில் ‘என் ஆசை மன்மதனே', ‘போக்கிரி படத்தில், ‘என் செல்லப்பேரு ஆப்பிள்' உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியுள்ளார்.

இவர் ஹீரோயின்கள் சிலருக்கு டப்பிங் பேசியிருப்பதுடன், சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 14ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய சுசித்ரா தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார்.

பிறந்தநாளில் உடல் உறுப்புதானம் செய்தார் பாடகி சுசித்ரா

இதுபற்றி சுசித்ரா கூறும்போது, சென்னையில் உள்ள ‘நேஷனல் நெட்ஒர்க் ஃபார் ஆர்கன் ஷேரிங்' அமைப்பிடம் இதற்கான விண்ணப்பம் தந்தோம். எனது பிறந்த தினத்தின்போது சேவை நோக்கோடு உதவும்போது அதை வெளியில் சொல்வதில்லை. ஆனால் இதுபோன்ற செயல்களை வெளியில் சொல்ல வேண்டும். அப்போதுதான் இதைப்பார்த்து மேலும் பலர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருவார்கள்என்றார்.

உறவினர்கள் மகிழ்ச்சி

உடல்உறுப்பு தானம் செய்ய உள்ளதாக எனது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆதரவு சொன்னதுடன் என்னுடன் சேர்ந்து அவர்களும் தானம் செய்ய முன்வந்தனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சுசித்ரா.

வீடு தேடி வந்த ரூ.1 கோடியை வாசலில் நிற்க வைத்த நயன்தாரா

வீடு தேடி வந்த ரூ.1 கோடியை வாசலில் நிற்க வைத்த நயன்தாரா

சென்னை: நயன்தாரா ரூ.1 கோடி வாய்ப்பை ஏற்கத் தயங்கியது தான் கோடம்பாகத்தை ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது.

நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் தவிர்த்து விளம்பர பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. என்ன தான் அதிக சம்பளம் கொடுத்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறார்.

இந்நிலையில் பிரபல புடவை நிறுவனம் ஒன்று நயனை அணுகி எங்கள் விளம்பர தூதராக இருங்கள், உங்களுக்கு ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் என்று தெரிவித்துள்ளது. கோடியைக் கேட்டதும் நயன் உடனே ஒப்புக் கொள்ளவில்லையாம். யோசித்து கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டாராம்.

இப்படி வாசல் தேடி வந்த கோடியை நயன் ஏற்க தயங்குகிறாரே என்று கோடம்பாக்கத்தினர் ஆச்சியப்படுகிறார்களாம்.