மறைந்த நடிகர் ஹாஃப்மேன் வீட்டில் 70 பாக்கெட் ஹெராயின்!!

நியூயார்க்: அளவுக்கதிகமான போதையில் மரணமடைந்த ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாஃமேன் வீட்டில் 70 போதைப் பொருள் ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்-3', ‘போகி நைட்ஸ்', ‘பிக் லெபோஸ்கி' உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மறைந்த நடிகர் ஹாஃப்மேன் வீட்டில் 70 பாக்கெட் ஹெராயின்!!

ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். மொத்தம் 51 படங்களில் நடித்துள்ளார்.

இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மன்ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.

நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் மன்ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் ஹாபஃமேன் பிணமாகக் கிடந்தார். அப்போது அவர் வீட்டில் வேறு யாருமில்லை. அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது.

எனவே அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துக் கொண்டதால் மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹாப்மேனின் படுக்கையறையை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஹாப்மேன் மறைத்து வைத்திருந்த 65 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரது உடல் நேற்று பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. கூடுதல் சோதனைகள் மேற்கொண்ட பிறகே அறிவிக்கப்படும் என நியூயார்க் நகர மருத்துவ பரிசோதனை அதிகாரி ஜூலியா போல்சர் அறிவித்துள்ளார்.

'சோன்பப்டி'யோடு வரும் புது இளம் பெண் இயக்குநர் சிவாணி!

'சோன்பப்டி'யோடு வரும் புது இளம் பெண் இயக்குநர் சிவாணி!

சிவாணி... தமிழ் சினிமாவுக்கு புதிதாக வந்திருக்கும் இன்னொரு இளம் பெண் இயக்குநர்.

அதுவும் சினிமாவை ஒரு உதவி இயக்குநராக இருந்தெல்லாம் கற்றுக் கொள்ளாமல், நேரடியாக கேள்வி ஞானம் மூலமே கற்று களமிறங்கியிருக்கிறார் இந்த மதுரைக்காரப் பொண்ணு! எஞ்ஜினியரிங் பட்டதாரி.. கோல்ட் மெடலிஸ்ட்.

படித்த படிப்பை வைத்து வேலை தேடாமல், எப்போதும் பரபரப்பாக ஏதாவது ஒரு பணியை ரசித்து செய்ய வேண்டும் என்று ஆசையாம் சிவாணிக்கு. தாத்தா ஜீவரத்னம் ஒரு சினிமா தயாரிப்பாளர். அம்மாவோ கதாசிரியர்.

பிறகென்ன... சினிமா ரூட்டையே பிடித்துவிட்டார். அம்மா எழுதிய ஒரு கதையை சோன்பப்டி என்ற பெயரில் படமாக்குகிறார் சிவாணி.

'யாரிடமாவது போய்த்தான் சினிமா கற்க வேண்டும் என்றில்லை சார். நான் நேரடியாக பல இயக்குநர்களிடம் பேசியிருக்கிறேன். அந்த அறிவைக் கொண்டே படமும் எடுத்தேன். காட்சிகளைப் பார்த்த என் எடிட்டர் தணிகாசலம்... அட அறிமுக இயக்குநர் மாதிரியே இல்லையேம்மா," என்று ஆச்சர்யப்பட்டார்.

இது போதாதா?" என்கிறார் சிவாணி.

கதை எழுதியதோடு, மகள் இயக்கும் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார் சிவாணியின் அம்மா.

இந்தப் படத்தில் வழக்கு எண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்த ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். நிரஞ்சனா ஹீரோயின்.

கதை என்ன என்று கேட்டால், "படம் மிகவும் சுத்தமான ஒரு குடும்ப பொழுதுபோக்குப் படமாக இருக்கும். அடிதடி, சண்டை.. அட ஒரு கொசுவைக் கொல்லும் அளவுக்குக் கூட வன்முறை இல்லாமல் இருக்கும்ங்க," என்கிறார் சிவாணி.

நல்லது.. வாழ்த்துகள்!

ஜைன துறவிகள் எதிர்ப்பு- அனுஷ்கா நடித்த 'பாஹூபாலி'க்கு சிக்கல்

ஹைதராபாத்: ஜைன மதத் துறவிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அனுஷ்கா நடித்துள்ள பாஹூபலி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனுஷ்கா, பிரபாஸ், ராணா நடித்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் பாஹூபாலி. நான் ஈக்குப் பிறகு எஸ் எஸ் ராஜமவுலி இயக்கும் படம் இது.

‘பாஹூபாலி' படத்தில் வாள் சண்டை, கத்தி சண்டை போட்டு அதிரடி ஆக்ஷனில் நடிக்கிறார்கள் அனுஷ்கா, பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர். ராணா இதில் அதிரடி வில்லனாக வருகிறார்.

ஜைன துறவிகள் எதிர்ப்பு- அனுஷ்கா நடித்த 'பாஹூபாலி'க்கு சிக்கல்

பாஹூபாலி என்பது ஜைன துறவியைக் குறிக்கும் பெயர் என்றும் அமைதியே உருவான அந்த துறவியின் பெயரில் எடுக்கும் படத்தில் வாள் சண்டை போன்ற வன்முறை காட்சிகளை வைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ஜைன துறவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.

படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்கள்.

பாஹூபாலி என்ற துறவிக்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை என்பதால் படத்தின் தலைப்பை மாற்ற யோசித்து வருகிறாராம் இயக்குநர் ராஜமவுலி.

கேரவன் தர மறுத்ததால் இயக்குநரிடம் சண்டை போட்ட நயன்தாரா!

அனாமிகா படத்தின் ஷூட்டிங்கின்போது தனக்கு கேரவன் தர மறுத்ததால் இயக்குநருடன் கடுமையாக சண்டை போட்டாராம் நடிகை நயன்தாரா.

இந்தியில் ஹிட்டான 'கஹானி' படத்தை தமிழ், தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர்.

கஹானியில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்குகிறார்.

மும்பை, ஹைதராபாத் பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

கேரவன் தர மறுத்ததால் இயக்குநரிடம் சண்டை போட்ட நயன்தாரா!

நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என்பதால் பொதுவாக அவருக்கு கேரவன் வசதி உண்டு. ஆனால் 'அனாமிகா' படப்பிடிப்பில் அவருக்கு கேரவன் கிடையாதாம்.

அதுமட்டுமல்ல, சேகர் கம்முலா தனது படங்களில் நடிகர், நடிகைகள் கேரவன்களை பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்.

ஆனால் இயக்குநரின் கொள்கையைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.. கட்டாயம் கேரவன் வேண்டும் என நயன்தாரா வற்புறுத்த, சண்டை மூண்டது.

கேரவன் இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா தன் கடைசி அஸ்திரத்தை வீச, சேகர் கம்முலாவின் கொள்கை காணாமல் போனது. உடனடியாக நயனுக்கு சொகுசு கேரவன் வழங்கப்பட்டது.

செக் மோசடி.. மனோபாலா, நாக்ரவிக்கு பிடிவாரன்ட்!

சென்னை: செக் மோசடி வழக்கில் இயக்குநரும் காமெடி நடிகருமான மனோபாலா, தயாரிப்பாளர் நாக்ரவிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை மெட்ராஸ் சபையர் பிரிண்டர்ஸ் நிறுவன மேலாளர் டோமினிக் சேவியர், சென்னை சைதாப்பேட்டை விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள செக் மோசடி வழக்கில், "சூளைமேடு இன்சைட் எண்டர்டெய்ன்மென்ட் மீடியா லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக நாக்ரவி, மனோபாலா மகாதேவன், பொன்னுசாமி ரவிகணேசன் ஆகியோர் உள்ளனர்.

செக் மோசடி.. மனோபாலா, நாக்ரவிக்கு பிடிவாரன்ட்!

இவர்கள், தயாரித்த சினிமா படத்தின் போஸ்டர்களை எங்கள் நிறுவனம் அச்சடித்து கொடுத்தது. இதற்காக இந்த 3 இயக்குனர்களும் தங்களது நிறுவனத்தின் பெயரில் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை கையெழுத்திட்டு வழங்கினார்கள்.

இந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவர்களது கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி திரும்பி வந்தது.

இதையடுத்து, பணம் கேட்டு நோட்டீசு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. இவர்கள் வேண்டுமென்றே ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிந்தும் எங்களுக்கு காசோலையை வழங்கியுள்ளனர். எனவே இன்சைட் எண்டர்டெய்ன்மென்ட் மீடியா லிமிட்டெட் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் 3 இயக்குனர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

மனோபாலா

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நாக்ரவி உள்பட 3 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கிரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஐ.லட்சுமணா சங்கர் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, எதிர்மனுதாரர் நாக்ரவி, மனோபாலா உள்பட 3 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். நாக்ரவி இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான்- ஒரு சுருக்கமான, ஆனால் முழுமையான அப்டேட்!

நடிகர்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினி (இரண்டு வேடங்கள்), தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஆதி, ஜாக்கி ஷெராப், ருக்மிணி, ஷோபனா, அமரர் நாகேஷ்

இசை: ஏஆர் ரஹ்மான்

பாடல்கள்: வைரமுத்து

ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்

எடிட்டர்: ஆன்டனி

வடிவமைப்பு: நீத்து லுல்லா

தயாரிப்பு : ஈராஸ் மற்றும் மீடியா ஒன்

ஸ்டுடியோக்கள்: லண்டன் பைன்வுட்ஸ் & சென்ட்ராய்ட், பேஸ்வயர் டெக்னாலஜிஸ், கவுன்ட்டர் பஞ்ச் ஸ்டுடியோஸ்- லாஸ் ஏஞ்சல்ஸ், சித்ராஞ்சலி & விஸ்மயாஸ் - கேரளா.

ட உருவாக்கம் கால அளவு: மொத்தம் 800 நாட்கள்.

தெலுங்கில்: விக்ரம சிம்ஹா.

கோச்சடையான்- ஒரு சுருக்கமான, ஆனால் முழுமையான அப்டேட்!

(கோச்சடையான் படங்கள்)

கோச்சடையான் ஆடியோ பிப்ரவரி, 2014.

கோச்சடையான் படம் ரிலீஸ் ஏப்ரல் 11. 2014

கோச்சடையான் வெளியாகும் அரங்குகளின் எண்ணிக்கை 6000 ப்ளஸ் உலகமெங்கும்!

1 மில்லியன் கோச்சடையான் ஸ்பெஷல் மொபைல் போன்களை வெளியிடுகிறது கார்பன், ஆடியோ ரிலீஸ் தினத்தன்று!

தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் கோச்சடையான்!

கோச்சடையான்- ஒரு சுருக்கமான, ஆனால் முழுமையான அப்டேட்!

ஆங்கிலத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது கோச்சடையான்

கோச்சடையான் ஆடியோ சிடி விலை ரூ 100.

3500 அரங்குகள் கொண்ட ஜப்பானில் மட்டும் 1000 அரங்குகளில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

முதல் வாரம் எதிர்ப்பார்க்கப்படும் வசூல் ரூ 500 கோடி!!

ஜாக்கி சானின் புது படத்துக்கு குவியும் வசூல்... சீனாவின் சினிமா வருவாய் 27 சதவீதம் உயர்வு!

பெய்ஜிங்: ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி 6 படத்துக்கு குவியும் வசூல் காரணமாக, சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஜாக்கிசான் நடித்த ‘போலீஸ் ஸ்டோரி' -6 சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில், சீனாவில் மட்டும் இந்த படம் 106 மில்லியன் டாலர்களைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 26 மில்லியன் டாலர்களை ஈட்டியது இந்தப் படம்.

ஜாக்கி சானின் புது படத்துக்கு குவியும் வசூல்... சீனாவின் சினிமா வருவாய் 27 சதவீதம் உயர்வு!

இதனால் சீனாவின் சினிமா துறை வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

18500 திரையரங்குகளைக் கொண்ட சீன நாட்டில், கடந்த ஆண்டு சினிமா துறை வருமானம் 3.6 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் 5077 அரங்குகள் புதிதாகக் கட்டப்பட்டன!

போலீஸ் ஸ்டோரி 6 படத்தில் ஜாக்கிசான் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். ஆட்சியாளர்களை பணிய வைக்க ஜாக்கிசானின் மகள் உள்பட 33 பேர்களை சர்வதேச தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அந்த 33 பேர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து ஜாக்கிசான் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே கதை.

முதன்முதலாக ஜாக்கிசான் சொந்த குரலில், ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் தமிழகத்தில் வெளியிடுகிறார். தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது போலீஸ் ஸ்டோரி 6.

ஏவோனின் அழகுசாதன பொருட்களுக்கு அழகு சேர்க்கப்போகும் அசின்...

டெல்லி:அமெரிக்காவின் பிரபலமான அழகுசாதன தயாரிப்பு நிறுவனமான ஏவோன், தனது தயாரிப்புகளின் இந்தியாவின் முதல் விளம்பரத்தூதுவராக நடிகை அசினை நியமித்துள்ளது.

நேற்று டெல்லியில் ஏவோன் தனது புதிய அழகுசாதன பொருட்களை அறிமுகப்படுத்தியதுடன் பாலிவுட் கதாநாயகி அசினை இந்தியாவிற்கான ஏவோனின் விளம்பர தூதராகவும் அறிவித்தது.

இவ்விழாவில் பேசிய ஏவோனின் இந்திய மேலாளர் உஜ்வால் முக்கோபத்யா "சிறந்த பெண்மணிக்கு எடுத்துக்காட்டாக திகழும் அசினின் அழகானது அவருடைய வெளிப்புற தோற்றத்தில் மட்டுமல்லாமல் மனதிலும் இருப்பதால்தான் அவர் ஏவோனுக்கான சிறந்த தேர்வாக இருக்கிறார்" என்று கூறினார்.

ஏவோனின் அழகுசாதன பொருட்களுக்கு அழகு சேர்க்கப்போகும் அசின்...

இவ்விழாவில் பேசிய அசின் ,ஒரு படத்திற்கான கால அவகாசத்தை விட அதன் தனித்தன்மையையே தான் விரும்புவதாகவும்,மேலும் சிறந்த கதையாக இருந்தால் யாருடனும் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தற்போது அவர் ஆல் இஸ் வெல் என்ற படத்தில் உமேஷ் சுக்லாவுடன் நடித்து வருகிறார்.

படத்திலாவது எனக்கு திருமணம் நடக்குதே: நடிகை ஏக்கம்

சென்னை: நிஜத்தில் நடக்காவிட்டாலும் படத்திலாவது திருமணம் நடக்கிறதே என்று நயன நடிகை கூறுகிறாராம்.

நயன நடிகை முதலில் விரல் வித்தை நடிகரை காதலித்தார். அவர்கள் காதல் இறுதியில் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நடிகை ரப்பர் பாடி வைத்திருக்கும் டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமாக உள்ளவரை காதலித்தார்.

அவர்கள் காதல் கல்யாணம் வரை செல்லவிருந்தது. இதற்காக நடிகை படங்களில் நடிப்பதை கூட நிறுத்திவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் காதல் முறிந்து அவரவர் வழியை பார்த்து சென்றுவிட்டனர். ரப்பர் பாடி மும்பையில் செட்டிலாகி இந்தி படங்களை இயக்கி வருகிறார். நடிகை மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

நடிகைக்கு நிஜத்தில் திருமணமாகாவிட்டாலும் அவர் நடிப்பில் ரிலீஸான ராஜா ராணி, தற்போது நடித்து வரும் இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் அவருக்கு திருமணம் நடப்பது போன்று காட்சிகள் உள்ளன. இதை பார்த்த நடிகை நிஜத்தில் நடக்காதது படங்களிலாவது நடக்கிறதே என்று மனதில் உள்ள ஏக்கத்தை வெளிப்படுத்துகிறாராம்.