பர்மா படத்துக்கு 1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசளித்த பிஎம்டபுள்யூ நிறுவனம்

சென்னை: பர்மா என்ற த்ரில்லர் படத்தைப் பாராட்டி ரூ 1.5 கோடி மதிப்பிலான புதிய காரை பரிசளித்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்ஷன் வெம்புட்டி தயாரிக்கும் புதியபடம் ‘பர்மா'.

பர்மா படத்துக்கு 1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசளித்த பிஎம்டபுள்யூ நிறுவனம்

இதில் நாயகனாக மைக்கேல், நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார்கள். மேலும் 'சரோஜா' சம்பத் மற்றும் அதுல் குல்கர்னி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை தரணிதரன் எழுதி இயக்கியுள்ளார். யுவா ஒளிப்பதிவை கவனிக்கிறார். சுதர்சன் எம் குமார் இசையமைக்கிறார்.

பர்மா படத்துக்கு 1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசளித்த பிஎம்டபுள்யூ நிறுவனம்

பர்மா திரைப்படம் கிரைம் மற்றும் திரில்லர் வகையில் டெக்னிக்கல்லாக மிரட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாம். பீட்சா, சூது கவ்வும், வருதபடாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றிப் படங்களில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இறுதிகட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுவுள்ளனர்.

பர்மா படத்தின் கதையை கேட்ட பிம்டபிள்யூ நிறுவனம், 1.5 கோடி மதிப்புள்ள காரை முழு படத்திற்கும் பயன்படுத்த வழங்கியுள்ளது.

 

அழுக்கு உடையுடன் பைவ் ஸ்டார் ஹோட்டலில் சசிகுமார்... விரட்டிய பணியாளர்கள்!

தனது ஒவ்வொரு படத்தில் நடிப்பவர்களையும் புது கெட்டப் போட்டு அந்த கெட்டப்பிலேயே கொஞ்ச நாள் சுற்றவைத்து வேஷப் பொருத்தம் பார்ப்பது இயக்குநர் பாலாவின் வழக்கம்.

பிதாமகனில் விக்ரமுக்கு மகா அழுக்கான வெட்டியான் வேடம் போட்டு செங்கல்பட்டு பக்கம் சுற்றவிட்டார்.

அழுக்கு உடையுடன் பைவ் ஸ்டார் ஹோட்டலில் சசிகுமார்... விரட்டிய பணியாளர்கள்!

நான் கடவுளுக்காக முதலில் ஹீரோயினாக தேர்வான கார்த்திகா என்ற நடிகைக்கு பிச்சைக்காரி வேஷம் போட்டவர், அவரை அப்படி தேனிப் பக்கம் பிச்சையெடுக்க வைத்தார். ஒரு நாள் பூரா பிச்சையெடுத்து 160 ரூபாய் சம்பாதித்தாராம் அவர். அவருக்குப் பின் அந்த வேடத்தில் நடிக்க வந்த பூஜாவுக்கும் அதே பிச்சைக்காரி ட்ரெயினிங்.

பரதேசி படத்துக்காக அதர்வா மண்டையை பாதியாக மழித்து கோணிப்பை உடுத்தி ட்ரையல் பார்த்தார்.

இப்போது அவரது சிஷ்யன் சசிகுமார். பாலா இப்போது இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் ஹீரோவாக நடிக்கும் சசிகுமாருக்கு இப்போது வேஷப் பொருத்தம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

தாடி மீசையை மழித்துவிட்டு, பென்சிலில் சின்ன மீசை வரைந்து, சுருட்டை முடியோடு பர்மா பஜாரில் கடை கடையாக சசிகுமாரை ஏறி இறங்க வைத்திருக்கிறார் பாலா.

அதற்குப் பிறகு நடந்ததுதான் ஹைலைட்!

அதே கெட்டப்போடு கிரீன்பார்க் ஓட்டலுக்குப் போயிருக்கிறார் சசிகுமார். அந்த ஓட்டலில் கதை விவாதத்திலிருந்த தன் நண்பர் சமுத்திரக் கனியைப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தபோது, வாசலில் மிரட்டலாக நின்ற செக்யூரிட்டிகள் சசிகுமாரை விடவே இல்லை. நான் சாப்பிடணும் உள்ள விடுய்யா-ன்னு சொன்ன சசியிடம், நீ சாப்பிடற சாப்பாடு இங்க இல்ல, கெளம்பு என்றார்களாம். கடைசி வரை அவரை ஓட்டலுக்குள் விடவே இல்லையாம்.

பின்னர் கார் நிறுத்துமிடத்துக்கு வந்தவர் சமுத்திரக்கனிக்கு போன் செய்தாராம். அவர் ரூமிலிருந்து வந்து சசிகுமாரை அழைத்துக் கொண்டு போய் செக்யூரிட்டிகளிடம் விஷயத்தைச் சொன்னதும் ஆடிப் போனார்கள்.

"சார்.. சார் தப்பா எடுத்துக்காதீங்க, மன்னிச்சிடுங்க' என கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் சசிகுமாரோ அவர்களுக்கு நன்றி சொன்னதோடு, 'என் வேஷம் சரியா இருந்தது என ஒரு வகையில் நீங்க சர்டிபிகேட்டே கொடுத்திட்டீங்க' என்று கூறிவிட்டு வந்தாராம்.

இன்னும் நாதஸ்வரப் பயிற்சி இருக்கிறது சசிகுமாருக்கு. ஏதாவது கச்சேரி அல்லது கல்யாணத்துக்கு வாசிக்க அனுப்பிடுவாரோ பாலா!

 

தயாரிப்பாளர், இயக்குநர் மீது ஆபாசப் புகார் கூறியதால் விளம்பரப்படத்திலிருந்து நடிகை நீக்கம்

தயாரிப்பாளர், இயக்குநர் மீது ஆபாசப் புகார் கூறியதால் விளம்பரப்படத்திலிருந்து நடிகை நீக்கம்

சென்னை: இயக்குநர் மீது ஆபாசப் புகார் கூறியதால் விளம்பரப்படத்திலிருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார்.

சினிமாவில் துணை நடிகையான பாக்யஸ்ரீ உயிருக்கு உயிராக, நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில தினங்களுக்கு முன் நடித்தார்.

இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

தாம்பத்திய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் அனுப்புவது போல் ஆபாசமாக காட்சிகளை எடுத்ததாகவும் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டார்.

இதனை தயாரிப்பாளர் ரவிதேவன் மறுத்தார். ஆபாச காட்சிகளை படமாக்கவில்லை என்றும் மும்பை நிறுவனம் ஒன்றுக்காக இந்த படத்தை எடுத்ததாகவும் படுக்கை அறைக்கு டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவனம் தயாரித்த மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். அந்த மாத்திரையின் அட்டையைப் பார்த்து ஆபாசம் என்று புகார் தந்திருப்பதாக விளக்கினார். போலீசாரிடமும் இந்தப் படத்தை திரையிட்டு காட்டினார்.

இந்த நிலையில் விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். அவர் நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டன. பாக்யஸ்ரீக்கு பதில் வேறு நடிகையை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக ரவிதேவன் அறிவித்துள்ளார்.

 

ஹைதராபாதில் ஸ்ருதிஹாஸனின் ஆபாச போஸ்டர்கள் கிழிப்பு

சென்னை: ஸ்ருதிஹாஸன் நடித்த தெலுங்குப் பட போஸ்டர்கள் படு ஆபாசமாக இருப்பதாகக் கூறி ஹைதராபாதில் கிழித்தெறிந்தனர்.

நடிகை ஸ்ருதிஹாசன் அல்லு அர்ஜூனுடன் நடித்துள்ள படம் ரேஸ்குர்ரம் (ரேஸ் குதிரை).

இந்தப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ஸ்ருதிஹாஸன். விரைவில் படம் வெளியாக உள்ளது.

ஹைதராபாதில் ஸ்ருதிஹாஸனின் ஆபாச போஸ்டர்கள் கிழிப்பு

படத்தின் விளம்பரத்திற்காக ஹைதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இவற்றில் ஸ்ருதிஹாஸனின் கவர்ச்சியான ஸ்டில்கள் இருந்தன.

இதனால் வானங்களை நிறுத்திவிட்டு அல்லது வேகத்தைக் குறைத்து இந்த போஸ்டர்களை வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்துள்ளனர்.

ஹைதராபாதில் ஸ்ருதிஹாஸனின் ஆபாச போஸ்டர்கள் கிழிப்பு

இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர்.

போலீசாரும் அவர்களுடன் இணைந்து போஸ்டர்களைக் கிழித்து எறிந்தனர். மேலும் இது போன்ற போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று அந்த படநிறுவனத்திற்கு போலீஸார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற கவர்ச்சி காட்சிகளில் நடித்த ஸ்ருதிஹாஸனுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பினர் போராட்டக்காரர்கள்.

 

கோச்சடையானுக்கு முடிந்தது சென்சார்... எந்த கட்டுமில்லாமல் யு சான்று!

கோச்சடையானுக்கு முடிந்தது சென்சார்... எந்த கட்டுமில்லாமல் யு சான்று!  

இந்தப் படத்தை ஏப்ரல் மாதமே வெளியிட்டு விடும் முயற்சியில் உள்ளனர்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், இதன் தமிழ்ப் பதிப்பை சென்சாருக்குப் போட்டுக் காட்டினார் சவுந்தர்யா. படம் பார்த்த சென்சார் குழுவினர் பிரமித்துப் போய்விட்டார்களாம்.

படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்ற யு சான்று அளித்துள்ளனர்.

தெலுங்கு, இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களை அந்தந்த பிராந்திய சென்சாருக்குப் போட்டிக் காட்டி சான்றிதழ் பெறும் முயற்சியில் உள்ளார் சவுந்தர்யா.

 

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை: 'பிபிசி' தமிழோசையின் புதிய தொடர்

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை: 'பிபிசி' தமிழோசையின் புதிய தொடர்

சென்னை: பிபிசி தமிழோசை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை குறித்து ஆராயும் ஒரு புதிய 15 பகுதித் தொடரைத் துவங்கவிருக்கிறது.

மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலிபரப்பாகவிருக்கும் "தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையின் வரலாறு" என்ற இத்தொடர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை, ஒரு குணாம்சமான பிரிவாக தோன்றி வளர்ந்த கதையைச் சொல்கிறது.

தென்னிந்திய மாநகரான சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்த் திரைத்துறை, மும்பையில் இருந்து இயங்கும் பாலிவுட் திரைத்துறையைப் போல, ஒரு பெரிய வெகுஜன கலாச்சார நிறுவனம் ஆகும்.

தமிழ்ப் படங்கள், அவைகளின் தொடக்க காலத்திலிருந்தே ஒரு சுயமான, வளமான நகைச்சுவைப் பாரம்பரியத்தைக் கொண்டு வளர்ந்திருக்கின்றன. என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, நாகேஷ் போன்ற நடிகர்களும், மனோரமா போன்ற நடிகைகளும் வெள்ளித்திரையின் ஆரம்ப நாட்களில் ஆதிக்கம் செலுத்தினர்.

இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து, பிந்தைய ஆண்டுகளில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, விவேக், வடிவேல் தற்போது சந்தானம் என்று நீடித்துள்ளது.

"தமிழ்த்திரையுலகில் நகைச்சுவையின் வரலாறு" என்ற இந்தத் தொடர் பிபிசி தமிழோசையின் முன்னாள் ஆசிரியர் சம்பத் குமாரால் தயாரித்து வழங்கப்படுகிறது. "இந்தத் தொடரில் நடிகர்கள், திரை இயக்குநர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரை விமர்சகர்கள் என்று எல்லோரும் இணைந்து தங்களது அனுபவங்களையும், நினைவுகளையும், கருத்துக்களையும் என்னிடம் பகிர்ந்து கொண்டு ஒரு நல்ல தொடரை உருவாக்க உதவியிருக்கின்றனர்" என்கிறார் சம்பத் குமார். "பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நகைச்சுவை உணர்வையும் தந்த இந்த ஒரு கலைப்பிரிவை ஆராய்ச்சி செய்து இந்த இந்த வானொலித் தொடரைத் தயாரித்தது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்" என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசை கடந்த காலங்களில் திரைப்படத்துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்த தொடர்களை வழங்கியிருக்கிறது. அரசியலில் திரைத்துறையின் தாக்கம், தமிழ்த் திரைப்பாடல்களின் வரலாறு, தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் என்ற பல தொடர்கள் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாகியிருக்கின்றன.

"தமிழ்த் திரைத்துறை, அதன் சுமார் 100 ஆண்டுகால வரலாற்றில், தனக்கென்று ஒரு பிரத்யேகமான நகைச்சுவை பாரம்பர்யத்தை வளர்த்தெடுத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற விஷயம் , தமிழ் மரபுகளைப் பெரும்பாலும் பிரதிபலித்திருக்கிறது என்பதை தமிழோசையின் இந்தத் தொடர் காட்டுகிறது. மேலும், அவ்வப்போது , ஹிந்தி மற்றும் மேலைநாட்டு ஸ்லாப்ஸ்டிக் போன்ற பிற மொழி,பிற கலாசாரக் கூறுகளையும் அது உள்வாங்கியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. எங்கள் நேயர்கள் வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒலிபரப்பாகவுள்ள இந்த்த் தொடரைக் கேட்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்" என்கிறார் பிபிசி தமிழோசையின் ஆசிரியர் திருமலை மணிவண்ணன்

இத்தொடர் , பிபிசி தமிழோசை ஒலிபரப்பாகும் நேரமான ஜிஎம்டி நேரம் 1545 மணியில் ( இந்திய இலங்கை நேரப்படி இரவு 9.15 மணி) வாரந்தோறும் ஒலிபரப்பாகும். இது தவிர பிபிசி தமிழோசையின் இணைய தளமான bbctamil.com (பிபிசிதமிழ்.காம்) என்ற முகவரியிலும், போட்காஸ்ட் வடிவிலும், இதை நேயர்கள் கேட்கலாம்.

பிபிசி தமிழ் சேவையின் ஒலிபரப்பை நேயர்கள் சிற்றலை வரிசைகள் 31 (9500 கிலோஹெர்ட்ஸ்), 22 மீட்டர்கள் (13830), மற்றும் 19 மீட்டர்கள் (15470 கிலோஹெர்ட்ஸ்) மூலம் கேட்கலாம். இது தவிர பிபிசிதமிழ்.காம் என்ற இணைய தளம் மூலமும் , ஒலிபரப்பாகும் அதே நேரத்திலும், ஒலிபரப்பாகி ஒருவாரம் வரையும் நிகழ்ச்சிகளை ஒலி வடிவில் கேட்கமுடியும். நிகழ்ச்சியை பேஸ்புக் மூலமும் நேயர்கள் கேட்கலாம். மொபைல் தொலைபேசி வடிவிலும் இந்த இணைய தளம் செயல்படுகிறது.

 

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - கடும் டயட்டில் ஹீரோ சந்தானம்!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்... இது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படம்.

தற்போது கொஞ்சம் 'அன்ஷேப்பில்' இருப்பதாக 'ஃபீல்' பண்ணும் சந்தானம், தன் தோற்றத்தை மொத்தமாக மாற்றி ஸ்லிம்மாக முயற்சித்து வருகிறார்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - கடும் டயட்டில் ஹீரோ சந்தானம்!

அதற்காக அவர் கடும் உணவுக்கட்டுப்பாட்டுக்கு மாறியிருக்கிறாராம்.

பிவிபி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து படத்தைத் தயாரிப்பவரும் சந்தானம்தான். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வெளியான மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது. ஸ்ரீநாத் இயக்குகிறார்.

இது குறித்து சந்தானம் கூறுகையில், "இதுக்கு முன்ன நடிச்ச மாதிரி ரெண்டு மூணு ஹீரோக்களோட நடிக்கிற படமில்லை. ஸ்ட்ரெயிட் ஹீரோவா நான் நடிக்கிறேன். இப்ப இருக்கிற இளம் ஹீரோக்கள் மாதிரி தெரியணும் இல்லையா.. அதனால சாப்பாட்டு விஷயத்துல கேர்புல்லா இருக்கணும். கடுமையான டயட்டை பாலோ பண்ணிக்கிட்டிருக்கேன்," என்றார்.

 

எலியும், பூனையுமாக இருந்த சுள்ளான், விரல் நடிகர் திடீர் பாசத்திற்கு இது தான் காரணமா!

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரை கடுப்பேற்றவே சுள்ளான் விரல் வித்தை நடிகருடன் நெருக்கமாக உள்ளாராம்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். அவரை மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று புகழும் அளவுக்கு ஆகிவிட்டார்.

அவருக்கு அண்ணனாகவும், நண்பராகவும் ஏன் காட்பாதராகவும் இருந்தவர் சுள்ளான் நடிகர் தான். தற்போது சங்க தலைவரின் வளர்ச்சியை பார்த்து நாம வளர்த்து விட்ட பையன் நம்ம மார்க்கெட்டையே காலியாக்கிவிடுவார் போல என்று நினைத்த சுள்ளான் அவருடன் ஓவராக பேசுவதை குறைத்துவிட்டாராம். இயக்குனர் ஒருவர் சங்க தலைவரிடம் சென்று சுள்ளானுக்காக ஒரு கதை எழுதினேன், இது உங்களுக்கும் பொருந்தும், தற்போது உங்களுடைய படத்திற்கு தான் கிராக்கி உள்ளது என்றாராம்.

இது காற்று வாக்கில் சுள்ளான் காதில் விழுந்ததாம். இதையடுத்து சங்க தலைவரிடம் இருந்து சற்று விலகியே இருக்க முடிவு செய்துள்ளாராம் சுள்ளான். அவரை வெறுப்பேற்றவே சுள்ளான் விரல் வித்தை நடிகருடன் நெருக்கமாக உள்ளாராம்.