புதுமுகம் ராஜேஷ்-ஸ்வாதி இணையும் 'அரசு விடுமுறை'!

Actress Swathi New Comer Rajesh Ara   

காதலுக்கு மரணமில்லை படத்தை இயக்கிய சி.பாலசுப்பிரமணியம் இயக்கும் அடுத்த படம் அரசு விடுமுறை.

படத்தை இயக்குவதோடு அவரே தயாரிக்கும் அரசு விடுமுறையில் ஹீரோவாக நடிக்கிறார் புதுமுகம் ராஜேஷ். ஹீரோயினாக கேரளத்தைச் சேர்ந்த ஸ்வாதி நடிக்கிறார். இவர் ராட்டினம் படம் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகமானவர்.

அரசு விடுமுறை படத்தின் பூஜை நாளை (ஜூலை 13) ஏவிஎம் ஸ்டுடியோவில் நடக்கிறது. மத்திய செய்தித் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் படப்பிடிப்பைத் துவக்கி வைக்கிறார்.

இந் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கவியரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, கலைப்புலி் எஸ்.தாணு இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், சுப்பிரமணிய சிவா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

சிபிஎஸ் இண்டர்நேஷனல் பேனரின் கீழ் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். விடி விஜயன் எடிட் செய்யும் இந்தப் படத்தில் கூல் ஜெயந்த் நடன இயக்குனராவார்.

சண்டைக் காட்சிகளை மிரட்டல் செல்வம் கையாள, தாமஸ் ரத்தினம் இசையமைக்கிறார். கேமராவைக் கையாளப் போவது அன்பரசன். ஆர்ட் டைரக்ஷன் ராஜா. நடன இயக்குனர் கூல் ஜெயந்த்.

ஆல் த பெஸ்ட்!

 

அஜீத் படத்துக்கு உதவி இயக்குனர் நயன்தாரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத் நடிக்கும் புதிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார் நயன்தாரா. நடிகையாக முன்னணி பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நயன்தாராவுக்கு இயக்குனராகும் ஆசை வந்திருக்கிறது. அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த கனவு நிறைவேறி இருக்கிறது. புதிய படமொன்றில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத்குமார் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் நடிக்கும் நேரம்போக உதவி இயக்குனராக பணியாற்ற முடிவு செய்தார். தன்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளும்படி விஷ்ணுவர்த்தனிடம் கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். தனது உதவி இயக்குனர்கள் பட்டியலில் அவரையும் சேர்த்துக்கொண்டிருப்பதுடன் சில விதிமுறைகளையும் சொல்லி இருக்கிறார். அதன்படி நயன்தாரா நடிக்கும் காட்சிகள் அவர் நடித்து முடித்த பின் உதவி இயக்குனருக்கான வேலைகளை பார்க்கும்படியும், பட டிஸ்கஷன் போன்றவற்றிலும் பங்கேற்க கேட்டுக்கொண்டிருக்கிறார். கிளாப் அடிப்பது முதல் ஷூட்டிங்கில் எடுக்க வேண்டிய குறிப்புகளையும் உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து அவர் எடுக்கிறார். இது பற்றி இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் கேட்டபோது, Ô'நயன்தாராவை உதவி இயக்குனர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பது நிஜம்தான்ÕÕ என்றார். இதன் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மும்பையில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது நயன்தாரா தனக்கு காட்சிகள் இல்லாத நேரத்திலும் ஷூட்டிங்கில் முழுநேர உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.


 

1854ல் நடந்த உண்மை சம்பவம் "மாற்றான்"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
1854ம் ஆண்டில் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்களின் நிஜ கதையில் சூர்யா நடித்திருக்கிறார் என்றார் கே.வி.ஆனந்த். 'அயன் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் 'மாற்றான் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் நேற்று கூறியதாவது: கனா கண்டேன் படத்தை முடித்துவிட்டு விமானத்தில் வந்தேன். அதே விமானத்தில் 'சிவாஜி படத்தை முடித்துவிட்டு ஷங்கர் வந்தார். அப்போது வெளிநாட்டில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தாய்லாந்தை சேர்ந்த ஈஞ்ச்,சாங் இரட்டையர்கள் ஒட்டிப்பிறந்தவர்கள். பின்னர் அமெரிக்காவில் வாழ்ந்தனர். இவர்கள் இரட்டை சகோதரி களை கல்யாணம் செய்துகொண்டனர். தனித்தனி வீடு எடுத்து வாழ்ந்தனர். ஒருவருக்கு 7 குழந்தை பிறந்தது, இன்னொருவருக்கு 8 குழந்தை பிறந்தது. சகோதரர்களில் ஒருவர் 58 வயதில் இறந்தார். இன்னொருவர் 60 வயதில் இறந்துவிடுகிறார். இது 1854ம் ஆண்டு நடந்த கதை. ஆனால் ஒட்டிபிறந்த சகோதரர்கள் என்ற கருவை மட்டும் எடுத்துக்கொண்டு 'மாற்றான் ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறேன். நிஜகதை அடிப்படை என்றாலும் சம்பவங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் சூர்யா இரண்டுமுறை நடித்தார். சண்டை காட்சிகள் எடுப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. எல்லாமே இப்போதுள்ள நவீன தொழில்நுட்ப கிராபிக்ஸால் சாத்திய மாகி இருக்கிறது.


 

தமிழகமெங்கும் ‘தல’ மேனியா: நாளை பில்லா 2 ரிலீஸ்

Billa 2 Will Be Released On July

தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களிடையே இப்பொழுது பில்லா 2 ரிலீஸ் பற்றிய பேச்சுதான். 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கவுண்டவுன் புதன்கிழமை முதலே தொடங்கிவிட்டது.

முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே ஒருவாரத்திற்கு முன்பிருந்தே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு கட் அவுட் வைப்பதும், கொடி, தோரணம் கட்டுவதும், களை கட்டும். இப்பொழுது அதே போன்ற காட்சிகள் அஜீத் நடிப்பில் வெளிவர உள்ள பில்லா 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு பார்க்க முடிகின்றன. கடந்த இருதினங்களுக்கு முன்பிருந்தே பல அடி உயர அஜீத் கட் அவுட்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன.

படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. கொடிகளும், தோரணங்களுமாய் கட்டி ரசிகக்கண்மணிகள் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அன்றைய தினம் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம், காவடி, என எடுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.

ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள பில்லா-2 படத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடித்துள்ளனர். சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.

சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்த நிலையில் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இந்த நிலையில் ஜூலை இறுதியில் பில்லா வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஏற்கனவே 13ம் தேதி வெள்ளிக்கிழமை ராசி இல்லாத நாள் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் இவ்வளவு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஜூலை 13 ம் தேதி வெள்ளிக்கிழமை பில்லா 2 ரிலீஸ் தேதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வெற்றிவாகை சூடுவாரா பில்லா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

 

மகத் -மனோஜ் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பஞ்சாயத்தில் குதித்தார் சிம்பு !

Simbu Mediate Between Mahat Manoj M

மங்காத்தா நடிகர் மகத்துக்கும், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜுக்கும் இடையே ஏற்பட்டு அடிதடி ரகளை, கட்டிப்புரண்டு சண்டையால் நடிகர் சிம்பு டென்ஷனாகியுள்ளாராம். இருவருமே இவருக்கு நெருங்கிய நண்பர்களாம். இதனால் இருவருக்கும் இடையே பஞ்சாயத்துப் பேசி அமைதிப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறாராம்.

மங்காத்தாத படத்தில் நடிகர்களோடு நடிகராக நடித்த ஒருவர் மகத். இவரது பெயரும், முகமும் தமிழக மக்களில் எத்தனை பேருக்கு சரியாக நினைவருக்கும் என்பதே தெரியவில்லை. அதற்குள் தண்ணிப் பார்ட்டி, காதல், கலாட்டா, கட்டிப்புரண்டு சண்டை என்று பெரிய ரேஞ்சுக்குப் போய் விட்டார் இந்த சின்ன நடிகர்.

அதேபோல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு. இவரது பெயர் கலாட்டாவுக்குப் பின்னர்தான் தமிழக மக்களுக்கேத் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மோகன்பாபுவின் மகன் என்பதும் கூட இப்போதுதான் பலருக்கும் புரிந்திருக்கிறது. இப்படிப்பட்ட இந்த இரு நடிகர்களும் சேர்ந்து குடித்து விட்டு போட்ட ஒரு காதல் சண்டையால் கோலிவுட்டே நாறிப் போய்க் கிடக்கிறது.

சினிமாக்காரர்கள் ஒரு இடத்தில் கூடினாலே தண்ணிதான், சண்டைதான், காதல்தான், கலாட்டாதான் என்ற நிலையை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மகத்துக்கும், மனோஜுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர நடிகர் சிம்பும் களம் இறங்கியுள்ளாராம். இருவருக்கும் அவர் நெருங்கிய நண்பராம். இதனால் இருவரிடமும் தொடர்ந்து பேசி வருகிறாராம். இவரது பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைக்குப் பலன் ஏதும் கிடைத்ததா என்பது குறித்துத் தகவல் இல்லை.

 

மகத்தை மோகன்பாபு மகன் அடித்ததற்கு திரிஷா, லட்சுமி ராயே சாட்சி?

Trisha Lakshmi Rai Witnessed The Beating Of Mahat

நடிகைகள் திரிஷா, லட்சுமி ராய் கண் முன்பாகவே மகத்தை, தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவும் அவரது நண்பர்களும் சரமாரியாகத் தாக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்த இரு நடிகைகளையும் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

மகத் - மனோஜ் மஞ்சு அடிதடி விவகாரத்தில் பெரும் பெரும் புள்ளிகள் தலையிட்டு மனோஜ் மஞ்சுவைக் காப்பாற்ற கடுமையாக முயன்று வருகின்றனராம். இதனால் போலீஸாரின் விசாரணைக்குப் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் விடாமல் போலீஸ் தரப்பில் மனோஜைப் பிடித்துக் கைது செய்ய மும்முரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகைகள் திரிஷா, லட்சுமி ராய் ஆகியோர் முன்னிலையில்தான் மகத்தை மனோஜும், அவரது நண்பர்களும் சகட்டுமேனிக்குத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை திரிஷாவும், லட்சுமி ராயும் நேரில் பார்த்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த இரு நடிகைகளும் தாக்குதலை நேரில் பார்த்தது உண்மையாக இருந்தால் அவர்களையும் பிடித்து விசாரிக்க போலீஸ் தரப்பு மும்முரமாக உள்ளதாம்.

 

சூர்யாவின் 'மாற்றான்' ரிலீஸ் ஒத்திவைப்பு?

Maatraan Teaser Be Released Tonight   

மாற்றான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் தாமதமாகி வருவதால் ஆகஸ்ட் 15ல் வெளியாவதாக இருந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.வி.ஆனந்த் டைரக்டு செய்து, ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள படம் `மாற்றான்'. இந்த படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். மாற்றான் திரைப் படத்தைப்பற்றி நடிகர் சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் புதன்கிழமை இரவு கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் நடிக்க வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. `மாற்றான்' படத்தில் நடித்தபோது தினமும் புது அனுபவமாக இருந்தது. இந்த படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

2009-ம் ஆண்டிலேயே இந்த படத்தை தொடங்குவதாக இருந்தோம். சில காரணங்களால் கொஞ்சம் காலதாமதமாக ஆரம்பித்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் ஒரு சவால். ஒவ்வொரு படத்திலும் நடிக்கும்போதும், ரசிகர்களை திருப்திப்படுத்த முடியுமா? என்ற பயம் வரும். கே.வி.ஆனந்துக்கு, நான் நன்றி சொல்லவேண்டும். இந்த படத்தில் அவருடைய உழைப்பை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.வி. ஆனந்த், மாற்றான் படத்தில் ஊனமுற்றவர்களை அவமானப்படுத்துவதுபோல ஒரு காட்சி கூட வைக்கவில்லை. இதில் இரண்டு சூர்யாக்களையும் தெய்வ பிறவிகளாக காட்டியிருக்கிறோம் என்றார். மேலும் மாற்றான்' படமும், பிரியாமணி நடித்த `சாருலதா' என்ற படமும் ஒரே கதையா? என்று என்னிடம் கேட்கிறார்கள். அந்த படத்துக்கும், இந்த படத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. அது வேறு கதை. இது வேறு கதை என்றும் கே.வி. ஆனந்த் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஏ.ஜி.எஸ். நிறுவனத்தை சேர்ந்த ரங்கராஜன் படஅதிபர் கல்பாத்தி அகோரம், ஸ்டண்டு மாஸ்டர் பீட்டர் கெய்ன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே மாற்றான் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

துபாயில் செட்டிலாக திட்டமிட்டதால் கொலை செய்யப்பட்ட லைலா கான், குடும்பத்தார்

Plan Migrate Dubai Cost Laila Khan Kin Their Lives

பொறாமை மற்றும் பேராசையால் தான் பர்வேஸ் தக் பாலிவுட் நடிகை லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தாரை கொடூரமாகக் கொன்றது தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே இகத்புரியில் உள்ள மாயமான பாலிவுட் நடிகை லைலா கானின் பண்ணை வீட்டில் இருந்து நேற்று முன்தினம் 6 எழும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. அவை கொல்லப்பட்ட லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் பணம், சொத்து, பொறாமை, பேராசை மற்றும் லைலா கான் குடும்பம் துபாயில் செட்டிலாக முடிவு செய்தவையால் தான் லைலா கானின் தாய் ஷெலீனாவின் 3வது கணவர் பர்வேஸ் தக் அவர்களை கொலை செய்துள்ளார் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில்,

லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக ஓஷிவாராவில் உள்ள வீடு, கடை, மீரா ரோட்டில் உள்ள வீடு, இகத்புரியில் உள்ள பண்ணை வீடு, நகை மற்றும் பணத்தை சுருட்டுவதில் தான் தக் குறியாக இருந்துள்ளார். லைலா கான் குடும்பத்தார் இந்தியாவில் உள்ள சொத்துக்களை விற்றுவி்ட்டு துபாயில் செட்டிலாக முடிவு செய்தது தக்கிற்கு பிடிக்கவில்லை. அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவர் துபாய்க்கு செல்ல முடியாது. மேலும் தக்கிற்கு ஷெலீனாவின் இரண்டாவது கணவர் ஆசிப் மீது லைலா அதீத நம்பிக்கை வைத்தது எரிச்சலை ஏற்படுத்தியது என்றனர்.

லைலா கானின் பண்ணை வீட்டில் இருந்த காவலாளியை விரட்டுவிட்டு தக் தனக்கு நம்பகமான ஷகீர் ஹுசைனை காவலாளியாக வைத்துள்ளார். அவருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

லிங்குசாமியின் அடுத்த நாயகி சமந்தாவா? பரினீதி சோப்ராவா?

Lingusamy S Next Heroine Samantha Or Parineeti Chopra    | பரினீதி சோப்ரா  

மாற்றான், சிங்கம் 2 படத்திற்குப் பின்னர் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி யார் என்பதில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லிங்குசாமி இயக்கும் அந்த திரைப்படத்தில் சமந்தா அல்லது பரினீதி சோப்ரா நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கும் கடல், ஷங்கர் இயக்கும் ஐ திரைப்படங்களில் இருந்து திடீரென விலகினார் நடிகை சமந்தா. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட தோல் அலர்ஜிதான் என்று கூறப்பட்டது. இந் நிலையில் லிங்குசாமி இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றுக்கு நாயகி செலெக்‌ஷன் லிஸ்டில் முதலாவதாக சமந்தா இருப்பதாக தகவல் வெளியாகியுல்ளது.

மாற்றான் படத்தை முடித்துவிட்ட முடித்துவிட்ட சூர்யா அடுத்து சிங்கம் 2 படத்தில் பிஸியாகிவிட்டார். இந்த இரண்டு படத்திற்குப் பின்னர் இயக்குனர் லிங்குசாமி இயக்கப்போகும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான நாயகி தேர்வு நடைபெற்றுவருகிறது. இதில் சூர்யாவுடன் சமந்தாவை நடிக்க வைக்கவேண்டும் என்று ஆவலாக உள்ளார் லிங்குசாமி.

அவருக்கு சரும அலர்ஜி நீங்கவில்லை எனில் பிரியங்கா சோப்ராவின் உறவினரான பரினீதி சோப்ரா நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. வேட்டை படத்தின் தோல்விக்கு இந்த திரைப்படம் லிங்குசாமிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

பாலிவுட் நடிகர் தாரா சிங் மாரடைப்பால் மரணம்

Veteran Actor Dara Singh Dies At 84

பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று காலை 7.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மல்யுத்த வீரராக இருந்து பாலிவுட் நடிகரானவர் தாரா சிங்(84). கடந்த 7ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதுடன், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் உடல் நிலை தேறுவது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததையுடுத்து நேற்று மாலை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.

தாரா சிங் மரண செய்தி கேட்டு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அவர் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த ஜப் வி மெட் படத்தில் கரீனா கபூரின் தாத்தாவாக நடித்தது தான் அவருடைய கடைசி படம். ராமாயணம் தொடரில் ஹனுமானாக நடித்து புகழ் பெற்றவர் தாரா சிங். அவர் கடந்த 1928ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அமிர்தசரசில் உள்ள தர்மூசக் கிராமத்தில் பிறந்தார். அவர் காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்தி வாசிப்பாளருடன் காதல்! சன் நியூஸ் நிருபர் மீது இரண்டு மனைவிகள் புகார்!!

Complaint Against Sun Tv Reporter

சென்னை: தங்களை ஏமாற்றிவிட்டு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ள பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சி செய்வதாக தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது அவரது முதல் இரண்டு மனைவிகள் புகார் கூறியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வருபவர் ராஜராஜராஜன். இவர் சன் நியூசில் அவுட்புட் எடிட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சாருமதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஒராண்டுக்குக்குப் பின்னர் இவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்குக் காரணம் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக உள்ள மைதிலி என்பவருக்கும் ராஜராஜராஜனுக்கும் ஏற்பட்ட தொடர்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மைதிலியை ராஜராஜராஜன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவரது இரண்டு மனைவிகளும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து ராஜராஜனின் இரண்டாவது மனைவி சாருமதி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது,

என் கணவர் ராஜராஜராஜன், சன் "டிவி'யில் அவுட்புட் எடிட்டராக வேலை செய்கிறார். "தமிழ் மேட்ரிமோனி' மூலம் அவரது அறிமுகம் கிடைத்தது. பி.காம்., படித்த அவர், மாதம், 54,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிவித்தார். அவருக்கும், எனக்கும், கடந்தாண்டு பிப்ரவரியில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

என் தாய் லலிதா, வரதட்சணையாக, 25 சவரன் அளித்திருந்தார். எங்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, சன் "டிவி'யில் செய்திவாசிப்பாளராக வேலை பார்க்கும் மைதிலியுடன் என் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

அந்தப் பெண் என் கணவரின் மொபைல் போனுக்கு அடிக்கடி பேசினார். நள்ளிரவில் கூட, மணிக்கணக்கில் என் கணவரின் மொபைல் போனுக்கு அந்த பெண் பேச ஆரம்பித்தார். அவளுடன் பேசுவதை நான் தட்டிக் கேட்டேன். அதற்கு என்னை அடித்து துன்புறுத்தினார். என் மாமியார் ஜானகியும் இதற்கு உடந்தையாக செயல்பட்டார்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராஜராஜராஜன் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. அவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, கண்ணமங்கலம், கொங்காரபட்டு கிராமத்தை சேர்ந்த சிவசக்தி என்ற பெண்ணை, கடந்த 2002ம் ஆண்டே திருமணம் செய்து கொண்டதாக, தகவல் கிடைத்தது. அவர்களுக்கு, 10 வயதில் பெண் குழந்தை உள்ளதும் தெரிய வந்தது. முதல் மனைவியை ஏமாற்றி கையெழுத்து வாங்கி, அவரிடம் இருந்து ராஜராஜராஜன் விவாகரத்து பெற்றுள்ளார்; இதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

முதல் திருமணத்தை மறைத்து, என்னை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர், விருகம்பாக்கத்தில் உள்ள, சின்மயா வித்யாலயா பள்ளியில், 10ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிற தகவல் கிடைத்தது. திருமணம் ஆனவுடன், ஒரு ஆண்டுக்கு பிறகே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என, கண்டிஷன் போட்டார். ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி உள்ளார். இது போன்ற நபர்கள் சமுதாயத்தில் வாழவே கூடாது; அவரை தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மனைவி சிவசக்தி, "ராஜராஜராஜன் எனது மாமா மகன். எங்களுக்கு, 2002ம் ஆண்டு, திருமணம் நடந்தது. என்னுடன் ஒரு ஆண்டு கூட அவர் வாழவில்லை. இதற்கிடையே, நான் கர்ப்பமானேன். எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை கூட அவர் பார்க்கவில்லை. அவளுக்கு 10 வயது ஆகி விட்டது.

அந்தக் குழந்தை எனக்கு பிறக்கவில்லை என, கூறி வருகிறார். நான் அவருக்கு தான் அந்த குழந்தையை பெற்றேன் என நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அவர், "டி.என்.ஏ' சோதனைக்கு தயாரா? என்று கேட்டார். ராஜராஜராஜனின் மோசடி குறித்து, வேலூர் போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். என்னை ஏமாற்றி, கையெழுத்து வாங்கியவர், கோர்ட்டில் "எக்ஸ் பார்ட்டியாக' விவாகரத்து பெற்றுள்ளார்.

என்னை அவர் விவகாரத்து செய்த விவரமே எனக்குத் தெரியாது. இரண்டாவது மனைவி சாருமதி, என்னை சந்தித்து, விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை என்னிடம் காண்பித்தார். மாமா மகன் என்பதால், அவர் மீது, போலீசில் புகார் கொடுத்ததோடு நின்று கொண்டேன். அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் எண்ணம் இல்லை. அவர், என்னைப் போன்று, பல பெண்களை ஏமாற்ற துணிந்து விட்டார். அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கையை, போலீசார் எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்த மனுவில் உள்ள விவரங்களின் உண்மை தன்மை குறித்து விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்க, அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல் இரண்டு மனைவிகளின் புகார் குறித்து ராஜராஜனிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:

மேட்ரிமோனியல் மூலம் சாருமதியின் தகவல் கிடைத்தது. ஊரறியதான் திருமணம் செய்து கொண்டோம். எந்த சிக்கல் இல்லாமல் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. திடீரென சாருமதியின் குடும்பத்தினர் பத்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அந்தப் பணத்தை கொடுக்க நான் மறுத்துவிட்டேன். இதனை கருத்தில் கொண்டு என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இருவரும் சேர்ந்து என்மீது பொய்யான புகார் கொடுத்துள்ளனர் என்றார்.

 

சரியும் டிஆர்பி ரேட்டிங்!.. முடிவுக்கு வரும் 'கோடி' நிகழ்ச்சிகள்!!!

Neengalum Vellalam Oru Kodi Final Episode Week

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 27,2012 அன்று ஆரம்பித்த விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது .

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கேள்விகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது

டி.ஆர்.பி ரேட்டிங் சரிய தொடங்கியதும் நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என நிகழ்ச்சியை ஒரு வழியாக ஓட்டி வந்தனர். இந்த நிகழ்ச்சியில் இதுவரை அதிகபட்சம் ரூ. 12,50,000 பரிசுத் தொகை பெறப்பட்டிருக்கிறது. இரட்டையர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் போடப்பட்டது. தற்போது விண்ணப்பித்தவர்கள் பங்கேற்காமல் நிகழ்ச்சியை முடிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை 'கோன் பனேகா குரோர்பதியை' டப்பிங் செய்து போடப் போகிறார்களோ என்னவோ!.

நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் நடிகர் ரகுமான், நடிகை நதியா, நடிகை சுஹாசினி, நடிகர் மோகன் ஆகிய பழைய நடிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நட்சத்திரங்கள் பங்கு பெற்ற தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றி பெற தொகையை வழங்கும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் ரூ.6,40,000 பெற்றவுடன் நிகழ்ச்சிக்கான நேரம் முடிந்தது என சூர்யா சொல்லியதைக் காண முடிந்தது.

விஜய் டிவி பாணியில் சன் டிவியும் தனது சீரியல் நாயகிகளை வைத்து சன் குடும்பம் நட்சத்திரங்கள் என 'கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி' என நிகழ்ச்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. டிஆர்பி ரேட்டிங் சரிவதாலும் ரசிகர்களிடையே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு குறைந்து வருவதாலும் விரைவில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சியும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.