பேருந்து நிலையங்களில் மக்கள் முன்னிலையில் ஜன்னல் ஓரம் இசை வெளியீடு!

சென்னை: சென்னையின் பேருந்து நிலையங்களில் ஜன்னல் ஓரம் படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

‘பார்த்திபன் கனவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். இவர் தொடர்ந்து ‘பிரிவோம் சந்திப்போம்', ‘மந்திரப் புன்னகை' ஆகிய படங்களை இயக்கினார்.

பேருந்து நிலையங்களில் மக்கள் முன்னிலையில் ஜன்னல் ஓரம் இசை வெளியீடு!

தற்போது பார்த்திபன், விமல் நடிப்பில் ‘ஜன்னல் ஓரம் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான ‘ஆர்டினரி' என்ற படத்தின் ரீமேக்தான். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஒரு பேருந்து மற்றும் அதன் டிரைவர் மற்றும் கண்டக்டர், அதில் பயணிக்கும் பயணிகளுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீடு வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

படத்தின் கதைக்கேற்ப வித்தியாசமாக படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதற்காக, சென்னையின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் பொதுமக்கள் முன்னிலையில் இசை வெளியீடு நடக்கிறது.

பேருந்து நிலையங்களில் மக்கள் முன்னிலையில் ஜன்னல் ஓரம் இசை வெளியீடு!

காலை 8 மணிக்கு வடபழனி பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கிறது ஜன்னல் ஓரம் இசை வெளியீடு விழா. படத்தின் நட்சத்திரங்கள், இயக்குநர் உள்பட அனைவரும் ஒரு சிறப்புப் பேருந்தில் கிளம்பி, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற பேருந்து நிலையங்களில் மக்கள் மத்தியில் இசையை வெளியிட்டுவிட்டு, மாலை மீண்டும் வடபழனி கமலா தியேட்டருக்கு திரும்புகிறது.

அங்கு வைத்து, நடிகர் சூர்யா படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிடுகிறார்.

 

மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சி- நய்யாண்டி மீதும் பாஜவினர் புகார்

மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சி- நய்யாண்டி மீதும் பாஜவினர் புகார்

சென்னை: நய்யாண்டி படத்தில் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை, மாத்தூரை சேர்ந்தவர் முத்து ஆர்.வெங்கட்ராமன். திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "தனுஷ் நடித்துள்ள ‘நய்யாண்டி' என்ற படம் டி.வி. சேனல்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த விளம்பர காட்சியில், தனுஷ் மற்றும் 2 நடிகர்கள் ஜாதகம் போல் ஒன்றை வைத்துக்கொண்டு, எனக்கு இந்த பெண் வேண்டாம் என்று பேசும் வசனம் வருகிறது.

அந்த ஜாதகம் போன்ற அட்டையில் இந்து மதத்தினர் பெரிதும் நம்பிக்கையுடன் வழிப்படும் பெண் தெய்வம் லட்சுமியின் படம் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாடும் நேரத்தில், இப்படி இந்து மதத்தையும், இந்து கடவுளையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காட்சியை எடுத்துள்ளார்கள்.

எனவே, அந்த சர்ச்சைக்குரிய காட்சியை ‘நய்யாண்டி' படத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை வாங்கி வைத்துக் கொண்டு வெங்கட்ராமனை அனுப்பி வைத்தது போலீஸ்.

 

படத்தின் விளம்பரங்களில் பங்கேற்காத நடிகைகளுக்கு சம்பளம் கட்- தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சென்னை: தமிழ்ப் படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களில் பங்கேற்காவிட்டால் இனி நடிகைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்துக் கொள்ள தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல கோடி செலவில் உருவாகும் படங்களை விளம்பரபடுத்த நடிகர், நடிகைகளை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் வெளியீட்டு விழா, தியேட்டர் விசிட் போன்றவற்றை நடத்துவது வழக்கம்.

ஆனால் இவற்றில் நடிகர்கள் மட்டும்தான் பங்கேற்கின்றனர். நடிகைகள் பெரும்பாலும் வருவதே இல்லை.

படத்தின் விளம்பரங்களில் பங்கேற்காத நடிகைகளுக்கு சம்பளம் கட்- தயாரிப்பாளர் சங்கம் முடிவு

பொதுவாக நடிகைகள் டப்பிங் பேசி முடித்த பிறகுதான் சம்பளம் முழுவதையும் பெறுவார்கள். ஆனால் பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழே தகராறு என்பதால், படப்பிடிப்பின் இறுதி நாளில் மொத்தத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதன் பிறகு அந்தப் படத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்து கொள்கிறார்களாம். விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் வராமல், இசை வெளியீட்டு விழாக்களுக்கும் வராமல் இழுத்தடிக்கிறார்களாம்.

அப்படிப்பட்ட நடிகைகளுக்கு சம்பளத்தை முன் கூட்டியே கொடுக்காமல் சுமார் 20 சதவீதம் வரை பிடித்தம் செய்து வைத்துக் கொள்வது என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளது.

இந்த நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, டாப்சி, லட்சுமி மேனன், நஸ்ரியா என பல நடிகைகள் உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று மாலை சங்க அலுவலகத்தில் நடக்கிறது.

சங்க தலைவர் கேயார் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது குறித்து அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

 

சம்பளம் படியாததால் உதயநிதிக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்!!

சம்பளம் படியாததால் உதயநிதிக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்!!

சென்னை: கேட்ட சம்பளத்தைத் தரத் தயங்கிய உதயநிதி ஸ்டாலின் படத்தை வேண்டாம் என சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் யார் நிலை எப்போது எப்படி மாறும் என்றே தெரியாது. சில மாதங்களுக்கு முன்புவரை, ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று காத்திருந்த சிவகார்த்திதேயன் இப்போது பரபரப்பான நட்சத்திரமாக மாறியுள்ளார்.

கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்த சிவகார்த்திகேயனின் சம்பளம் இப்போது ரூ 5 கோடி என்கிறார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயனோ, கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்.. ரேட் பேசுவதெல்லாம் கிடையாது என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில், தனக்காக ஒரு படம் நடித்துத் தருமாறு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம். சரி என்று கூறி சம்பளம் பேசியுள்ளார் சிவகார்த்தி.

2 கோடி வரை தருவதாகக் கூறினாராம் உதயநிதி. ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாத சிவகார்த்திகேயன், நான்கு கோடிக்கு வேண்டுமானால் சம்மதிக்கிறேன். இல்லாவிட்டால் நடிக்க முடியாது, என கறாராகக் கூறி வாய்ப்பை உதறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

 

நடிச்சது போதும்... இந்த வருஷமே திருமணம்! - பாவனா

சென்னை: தமிழ் - தெலுங்கில் சுத்தமாக படங்களே இல்லாமல் போய்விட்ட நடிகை பாவனா, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

27 வயதாகும் பாவனாவின் சினிமா கேரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

தனது திருமணம் குறித்து பாவனா கூறுகையில், "திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பது உண்மைதான்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். திருமணத் தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.

நடிச்சது போதும்... இந்த வருஷமே திருமணம்! - பாவனா

திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வ. அதனால்தான் அதை நிதானமாக அறிவிக்கிறேன்.

என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்திப் படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது, அங்கெல்லாம் என்னிடம் யாரும் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டது இல்லை. என் வயதுள்ள பலர் அங்கு முன்னணி நடிகைகளாக உள்ளனர். 30 வயதுள்ள நடிகைகள் கூட அங்கு திருமணம் பற்றி சிந்திப்பது இல்லை.

ஆனால் இதையெல்லாம் இங்கு எதிர்ப்பார்க்க முடியாது. 30 வயதானாலே ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இது திருமணம் செய்ய சரியான நேரம் என்பதைப் புரிந்து கொண்டேன்," என்றார்.

 

சிம்புவுக்கு அக்காவாக களமிறங்கும் ரம்பா

சென்னை: ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் தொடையழகி ரம்பா. பின்னர் தொழிலதிபர் ஒருவரை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

சிம்புவுக்கு அக்காவாக களமிறங்கும் ரம்பா

தற்போது இரண்டரை வயதில் குழந்தை உள்ளது ரம்பாவிற்கு. இந்நிலையில் தனது அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடியாகி விட்டாராம் ரம்பா. சிம்புவின் அக்காவாக தமிழ் எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

இனி, அக்கா, அண்ணி போன்ற நல்லா கதாபாத்திரங்கள் மட்டுமே இவரது பெஸ்ட் சாய்ஸாக இருக்குமாம். தமிழ் போலவே தெலுங்கிலும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளாராம் ரம்பா. கணவரைப் பிரிந்ததே ரம்பாவின் திரைஉலக மறு பிரவேசத்திற்கு காரணம் என சொல்லப் படுகிறது.

 

இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினரானார் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்

இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினரானார் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்

சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினராகியுள்ளார் முன்னணி தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்.

2006-ம் ஆண்டு வெளியான ‘திருட்டு பயலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால்பதித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். இதன் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம்.

தொடர்ந்து ‘சந்தோஷ் சுப்பிரமணியம்', ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்', ‘மதராச பட்டணம்', ‘எங்கேயும் காதல்', ‘யுத்தம் செய்', ‘அவன் இவன்', ‘மாற்றான்' உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பு மட்டுமின்றி ‘கந்தக்கோட்டை', ‘மைனா', ‘பயணம்' உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஈடுபாடு காட்டி வந்த கல்பாத்தி அகோரம் சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டியின் உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ள பெரிய மரியாதையாக இது பார்க்கப்படுகிறது.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தற்போது ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

தங்க மீன்கள்... இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம்!

சென்னை: கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது ராம் இயக்கிய தங்க மீன்கள்.

‘கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனராகத் திகழும் ராம், சமீபத்தில் நடித்து, இயக்கி வெளிவந்த படம் ‘தங்க மீன்கள்'. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

தங்க மீன்கள்... இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம்!

விமர்சனங்கள் இருந்தாலும், ராமின் மாறுபட்ட முயற்சிக்காக பாராட்டுகளும், நல்ல வசூலும் கிடைத்தது.

இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ஒரே ஒரு தமிழ்ப் படம் ‘தங்க மீன்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க மீன்கள்... இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம்!

மேலும், 18-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்' படத்தை 'குழந்தைகள் உலகம்' என்ற பிரிவில் மற்ற உலகப் படங்களோடு திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘தங்க மீன்கள்' படம் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டத்தில் இயக்குனர் ராம், வெளியீட்டாளர் ஜே.சதிஷ்குமார் மற்றும் இந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.