விஜய்க்காக ஹாலிவுட் நடிகையைத் தேடும் கௌதம் மேனன்?

Vijay Romance Hollywood Actress

கௌதம் மேனன் எடுக்கும் யோஹான்: அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படம் யோஹான்: அத்தியாயம் ஒன்று. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் யோஹானில் நான் நடிக்கவில்லை என்று ஸ்ருதியும், ஸ்ருதியை கேட்கவேயில்லை என்று கௌதம் மேனனும் தெரிவி்த்துவிட்டனர்.

சரி பட அறிவிப்பு வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியும் கதாநாயகி யார் என்றே கௌதம் கூறவில்லையே என்று பலரும் முணுமுணுத்தனர். இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் அல்ல ஹாலிவுட்டில் இருந்து நடிகையை அழைத்து வர முயற்சி நடந்து வருகிறதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் படத்திற்கு யோஹான் என்று பெயரிட்டுள்ளாராம் இயக்குனர்.

கோலிவுட்டுக்கு ஹாலிவுட் நடிகையை அழைத்து வரும் பணியில் கௌதம் மேனன் ஈடுபட்டுள்ளாராம். ஒரு பக்கம் கமல் ஹாலிவுட்டுக்கு போகிறார். மறுபக்கம் ஹாலிவுட் நடிகை கோலிவுட்டுக்கு வரப் போகிறார். இதன் மூலம் ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையேயான உறவு வலுப்பட்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்.

 

மனித கழிவை மனிதன் அள்ளும் அவலத்தை நீக்குங்கள் - பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய அமீர்கான்

Aamir Khan Meets Pm Welfare Minist

டெல்லி: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை நிறுத்துமாறு பிரதமரைச் சந்தித்து கேட்டுக் கொண்டார் நடிகர் அமீர்கான்.

சத்யமேவ ஜெயதே என்ற பெயரில் சமூகப் பிரச்சினைகளை அலசி வருகிறார் அமீர்கான்.

அந்த வகையில் கடந்த வாரம் சாதிய கொடுமைகள் குறித்து அவர் விவாதம் நடத்தினார். ஆனால் "இந்த எபிசோடில் அவர் அந்தக் கொடுமைகளை முழுவதுமாகக் காட்டவில்லை. இந்த கொடுமைக்கு என்ன தீர்வு என்று கூட காட்டவில்லை. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடிய அண்ணல் டாக்டர் அம்பேத்கரைக் கூட அவர் முதன்மைப் படுத்தவில்லை," என்ற விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், பேச்சோடு நிறுத்தாமல் செயலிலும் இறங்கினார் அமீர்கான்.

டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அமீர் கான், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அமீர் கான் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதி அளித்ததாவும் கான் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக்கைச் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார் அமீர்கான்.

 

வாழ்க்கையில் கேட்காததுகூட கிடைக்க என்ன செய்யணும் தெரியுமா? - சந்தானம் சொல்கிறார் கேளுங்க!

Santhanam S Spiritual Speech

வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை மட்டும் இருக்கக் கூடாது. அதேபோல பணம் மட்டுமே பிரதானமா இருக்கக் கூடாது. இது ரெண்டையும் கடைபிடிச்சா, வாழ்க்கையில் கேட்காததுகூட கிடைக்கும், என்கிறார் சந்தானம்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்தாலும், கடவுள் விஷயத்தில் மட்டும் ரொம்பவே நெஞ்சைத் தொட்டு விடுகிறார்கள்.

சந்தானமும் அதற்கு விலக்கல்ல. கல்கி, நித்யானந்தா என தன் ஆன்மீகத்தைத் தேடிக் கொண்டிருந்த சந்தானம், இப்போது யோகாசனங்கள், தியானம் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

யோகமும் மனித மாண்பும் என்ற தலைப்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சந்தானம் பேசுகையில், "ஆடியோ வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா போன்ற மேடைகளில் ஏறிய எனக்கு இது ஒரு புதுமையான அனுபவம். படிப்பு சரியாக வராத காரணத்தால் நான் சினிமாவுக்கு வந்தேன்.

இங்க வந்த பிறகு கத்துக்கிட்டது 'தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது' என்பதுதான். நம்மைப் பற்றி நமக்கே நம்பிக்கை இருந்தால், எல்லாம் நன்றாக நடக்கும், சந்தோஷமாக நடக்கும் என நினைக்க வேண்டும்.

என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்பதையே சிந்தித்து கவனத்தை திசை திருப்பி வருகிறோம். இதற்கும் அப்பால் இறைநிலையோடு இருந்தால் வாழ்க்கையில் கேட்பது மட்டுமின்றி கேட்காததும் கிடைக்கும்," என்றார்.

'என்ன பண்றது சந்தானம்.... நீங்க சம்பாதிச்சிட்டீங்க... இறை நிலை பத்தி பேசறீங்க... சம்பாதிக்க வாய்ப்பு குறைவா இருக்கிறவன் சம்பளத்தை மட்டும்தானே சிந்திக்க முடியும்!!'

 

சம்பவம் இப்போ தகராறு!

Sambavam Changes As Thagararu

அருள் நிதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு தகராறு என்று மாற்றப்பட்டுள்ளது.

வம்சம் படத்தில் அறிமுகமாகி, உதயன், மவுன குரு ஆகிய படங்களில் நடித்தவர் அருள் நிதி. திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்.

மவுனகுருவின் அசத்தல் வெற்றி, இவரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை கதாநாயகனாக மாற்றியுள்ளது.

அருள்நிதி அடுத்து நடிக்கும் படத்துக்கு சம்பவம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. புதிய இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கும் இந்தப் படத்துக்கு ரகுநாத் இசையமைக்கிறார்.

பூர்ணா ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது, துரை தயாநிதியின் க்ளவுட் நைன் மூவீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தொடங்கப்பட்ட நிலையில், இப்போது தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

அதுதான் இந்த 'தகராறு'!

 

ஆடி மாசம் வருது... போடு பூஜையை!

4 New Film Poojas On Sunday Due Aad   

ஆடி மாதம் இன்று தொடங்கிவிட்டது. தமிழ் சினிமா ஸ்டுடியோக்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு காற்று வாங்கும்!

காரணம், ஆடியை ராசியில்லாத மாதம் என்று கருதும் தமிழ் சினிமா படைப்பாளிகள், இந்த மாதத்தில் எந்தப் படத்தையும் தொடங்கமாட்டார்கள்

எனவே ஆடி பிறப்பதற்குள் அத்தனை படங்களுக்கும் பெயருக்காவது ஒரு பூஜையைப் போட்டு வைப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த வாரம் முழுக்க கோடம்பாக்கத்தில் எங்கும் பூஜை மயம். ஸ்டுடியோக்களில் இடம் கிடைக்காதவர்கள், சின்னதாக தங்கள் அலுவலகங்களிலேயே போட்டுக் கொண்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4 புதிய பட பூஜைகள் நடந்தன. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி நடிக்கும் ஐ படத்துக்கு நேற்றுதான் பூஜை நடந்தது.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி - ரிச்சா நடிக்கும் பிரியாணிக்கும் நேற்றுதான் பூஜை.

மலையாள இயக்குநர் வினயன் தமிழ் - மலையாளத்தில் இயக்கும் 3 டி படமான டிராகுலா மற்றும் நான்காம் பிறை, சௌந்தர் இயக்கும் தேடினேன் போன்ற படங்களுக்கும் நேற்று பூஜை போடப்பட்டது.

கோயில்களில் அம்மனுக்கு அமர்க்கள பூஜை நடப்பதே இந்த ஆடி மாசத்தில்தான் என்று கோடம்பாக்கவாசிகளுக்கு யாராவது உரக்கச் சொல்லுங்கப்பா!

 

ரஜினி, கமல் தேதிக்காக காத்திருக்கும் பிரபு சாலமன்

பிரபு மகன் விக்ரம் பிரபு நடித்துள்ள கும்கி படத்தின் ஆடியோ விரைவில் வெளியாக உள்ளது.

லிங்குசாமி தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம்தான் விக்ரமுக்கு முதல் படம்.

தனது திரைப்பிரவேசத்துக்கு ஆசி வழங்கக் கோரி ஏற்கெனவே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்ததும், ரஜினி அவரை வாழ்த்தியதை தனி வீடியோவாகவே பதிவு செய்திருப்பதும் நாம் ஏற்கெனவே அறிவித்த ஒன்றுதான்.

இப்போது படத்தின் இசை வெளியீட்டுக்கு சிறப்பு விருந்திராக சூப்பர் ஸ்டார் ரஜினியையும் உலக நாயகன் கமலையும் அழைக்க வேண்டும் என பிரபு ஆசைப்படுகிறாராம்.

பெரிய அளவில் விளம்பரத்துக்கும் ஓபனிங்குக்கும் இது உதவக் கூடும் என்பது பிரபுவின் எண்ணம்.

இதை உடனே செயல்படுத்த களமிறங்கிய இயக்குநர் பிரபு சாலமன், ரஜினி, கமல் இருவரிடமும் தேதி கேட்டு தகவல் அனுப்பியுள்ளாராம்.

ரஜினி, கமல் இருவருமே சிவாஜி குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால், கட்டாயம் இருவரும் விழாவில் தோன்றுவார்கள் என்கிறார்கள்.

 

மாற்றான்... சுட்ட படமா, சுடாத படமா...?

Surya S Maatran Inspired Film Or Original One   

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அதை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.

அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.

அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.

ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.

அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்...!

மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.

இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.

.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.

ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.

மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.

ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!

 

கத்ரீனாவுக்கு வயசு 28: இந்த ஆண்டு காதலர் கிடைப்பாராம்!

Katrina Kaif Turns 28 Today   

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் இன்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் கடந்த 1984ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி பிறந்தார். கடக ராசிக்காரரான அவருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் பவிக் சங்க்வி கூறுகையில்,

இந்த ஆண்டு கத்ரீனாவுக்கு சொந்த விஷயத்திலும் சரி, தொழில் விஷயத்திலும் சரி அமோகமாக இருக்கும். அவரது படங்கள் ஏக் தா டைகர் மற்றும் யஷ் சோப்ராவின் பெயரிடப்படாத படமும் பெரிய ஹிட்டாகும். இந்த ஆண்டு அவர் தனது மனதுக்கு நெருக்கமாகப் போகும் ஒருவரை சந்திப்பார். அந்த நபருடன் தனது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைப்பார்.

கத்ரீனா மரகதம் மற்றும் முத்துக்கள் பதித்த வெள்ளி சங்கிலி அணிந்தால் அவருக்கு மன அமைதி கிடைக்கும். மேலும் தேவையில்லாமல் காலதாமதமாகும் விஷயங்களும் நல்லபடியாக நடக்கும் என்றார்.

கத்ரீனா கைப் தற்போது சல்மான் கானுடன் சேர்ந்து ஏக் தா டைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கத்ரீனா...

 

லட்சுமி ராமகிருஷ்ணனை 'ஷாக்'கடிக்க வைத்த தலைமைச் செயலக அதிகாரிகள்!

Lakshmi Ramakrishnan Unforgettable Experience

வில்லங்கமாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இது அந்த ஷாக் அல்ல... இன்ப ஷாக்!

ஆரோகணம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப் படத்துக்கு வரிவிலக்கு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த லட்சுமிக்கு, சான்றிதழ் கிடைக்க லேட்டானதால், தாமே களத்தில் இறங்கி விசாரித்தாராம்.

அந்த அனுபவத்தை அவர் இப்படிப் பகிர்ந்து கொண்டார்:

"என் படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் என்னை ரொம்ப பாராட்டிட்டாங்க. தரமான படம்னு சான்றிதழ் கொடுத்திருக்காங்க.

அந்த மனநிறைவோடு நான், வரிவிலக்குச் சான்றிதழை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். 3 வாரங்கள் ஆகியும் அரசுத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராமல் போகவே, என்னைக் கவலை அரிக்க ஆரம்பித்தது. அந்த அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டுமானால், அவர்களைக் ‘கவனித்தால்'தான் வேலை நடக்கும் என்பது போன்ற வதந்திகளும் எச்சரிக்கைகளும் என் கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்தன.

ஏற்கெனவே பார்த்துப் பார்த்து சிக்கனமாய் நான் போட்டிருந்த பட்ஜெட்டில், காரணமே இல்லாமல் ஒரு பைசா செலவழிப்பதைக் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை..!

என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்த நான், எனது வழியிலேயே சென்று விஷயங்களைக் கையாள்வது என்று முடிவெடுத்தேன். லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் சிலருடன் தொடர்புகொண்டபோது, அந்த லஞ்ச லாவண்ய அதிகாரிகளை நான் எப்படியெல்லாம் தந்திரமாகக் கையாளவேண்டும் என்ற அறிவுரைகளை அள்ளி வழங்கினார்கள். ஆனால் நானே களத்தில் இறங்கிப் பார்த்துவிடத் தீர்மானித்தேன்.

ஒரு நாள் காலையில் கிளம்பி, எழிலகத்தில் இருக்கும் வணிகவரித் துறை அலுவலகத்துக்குச் சென்றேன். (‘இந்தியன்' படத்தின் ஏதோ ஒரு காட்சியில் நடிப்பது போன்ற உணர்வு எனக்கு!).

ஆனால், அங்கே நடந்ததே வேறு! மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் எனக்கு அன்பான வரவேற்பு கிடைத்ததுடன், வரிவிலக்கு சான்றிதழுக்காக வந்த ‘ஆரோகணம்' கோப்பு, அந்த வணிகவரித் துறை அலுவலகத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் தங்கவில்லை என்றும், உடனேயே கையெழுத்தாகி, அடுத்த நடவடிக்கைக்காக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும் தகவல் சொல்லப்பட்டது.

‘அப்பாடா.. இனிமேல் கவலைப்பட வேண்டாம்!'‘ என்ற நிம்மதிப் பெருமூச்சு என்னிடம். ஆனால் அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை.

‘செகரட்டரியேட்லதான் கண்டிப்பா வாங்குவாங்க..'

‘ஒரு சூட்கேஸைக் கொண்டு போய்க் காட்டும் வரையில் உங்க ஃபைல் அங்கேயிருந்து மாதக்கணக்கில் நகரவே நகராது', ‘அங்கே உள்ளே என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது'.. இப்படியான ஏளனமான பயமுறுத்தல்கள் மீண்டும் வர ஆரம்பித்தன.

‘இதை விடக் கூடாது.. என்னதான் ஆகுதுன்னு பார்த்துடனும்' என்ற உறுதியோடு, நான் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்தேன். அங்கிருந்த பணியாள் ஒருவர், எனக்கு இணைச்செயலரின் அறையைக் காண்பித்தார். அவரைப் பார்க்கும்போதே நல்ல மனிதராகத் தெரிந்தது. நான் வந்த விஷயத்தைச் சொன்னதும், சிறிது குழப்பமாகப் பார்த்தார் இணைச் செயலர்.

நான் இன்னும் விளக்கமாக, ‘‘இங்கே இன்னின்ன படத்துக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்படவேண்டும்'' என்று நான் கேள்விப்பட்ட கணக்கு விவரத்தைக் கூறியதும், அவர் ‘சட்'டெனத் தூக்கிவாரிப் போட்டவராக நிமிர்ந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளை அவசரமாக மறுத்த அவர், என்னை செயலரின் அறைக்கு அழைத்துச் சென்றார். செயலரின் உதவியாளர், மிகவும் சிநேகிதமான தோற்றம் கொண்ட நடு வயதுப் பெண்மணி. எனக்கு வாழ்த்துச் சொன்ன அவர், என்னைப் பற்றிய விவரங்களை செயலரிடம் தருவதற்காக ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு கோரினார்.

மிகவும் களைத்துப் போயிருந்த நான், ‘‘லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை, திரைப்பட இயக்குநர் மற்றும் இல்லத்தரசி'' என்று ஒரு சீட்டில் அவசரமாகக் கிறுக்கி அவரிடம் கொடுத்து செயலரிடம் தரச் சொன்னேன்.

அடுத்த நிமிடத்தில் அழைப்பு வந்தது. செயலரின் அறைக்குள் நுழைந்தேன்.. அங்கே நாற்காலியில் கண்ணியமான தோற்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். பண்புள்ள, மரியாதையான அவருடைய தோற்றத்தைப் பார்த்ததுமே எனக்கு பயமின்றி அவரிடம் எல்லாம் சொல்லலாம் என்று தோன்றியது. அவரிடம் சகஜமாக என்னால் பேச முடிந்ததால், நடந்த எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொன்னேன்.

நான் சொல்லி முடித்த உடனே, முகத்தில் எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தனது துறைக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் திட்டவட்டமாக மறுத்தார் அவர். என்னுடைய ஃபைல் அங்கே வந்ததிலிருந்து, அதற்கு அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இப்போதைய அதன் நிலைமை.. என்று அனைத்து விவரங்களையும் தயாராக வைத்திருந்தார்.

அந்த ஃபைல் தற்போது அமைச்சரிடம் இருப்பதாகவும், அதைப்பற்றி அமைச்சரிடம் தான் நினைவு படுத்துவதாகவும் உறுதிபடக் கூறினார். மேலும், ‘ஆரோகணம்' திரைப்படம், ‘யு' சர்டிஃபிகேட் மற்றும் தமிழ் தலைப்பு போன்ற வரிவிலக்கு பெறுவதற்கான எல்லாவிதமான தகுதிகளையும் பெற்றிருப்பதால், வரிவிலக்குக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் உறுதியளித்தார்.

அடுத்து அவர் பேசும்போது, தங்களுடைய துறை லஞ்சம் அற்றது என்றும், அங்கே பணிபுரியும் ஒவ்வொருவரும் சுத்தமான கரங்களுடன் பணிபுரிவதாகவும் கூறினார். அவர் பேசுவதையே கேட்ட நான், சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.. அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஓர் அரசு அதிகாரி எவ்வளவு ஆணித்தரமான நம்பிக்கையோடு தன் துறையைப் பற்றிப் பேசுகிறார்! நான் வாயடைத்துப்போனேன்," என்றார்.

ம்ம்...நீங்க நடிகை... பிரபலமானவர். போன உடனே கூப்பிட்டு மரியாதையெல்லாம் ஜோரா நடக்குது. சாமானிய மனுஷனை உள்ளயே விடமாட்டாங்களே!

 

இசைத் தொகுப்பாக உருவெடுக்கும் கமல்ஹாசனின் பாடல்கள்!

Voice Kamal Hassan Become Record

கமல்ஹாசன் இதுவரை திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் தொகுத்து தனி இசைக் கோர்வையாக உருவாக்கும் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாம்.

நடிப்பு உள்ளிட்ட வேலைகளோடு அவ்வப்போது பாடவும் செய்வார் கமல். அந்தரங்கம் படத்திலிருந்துதான் கமல்ஹாசன் பாட ஆரம்பித்தார். 1975ம் ஆண்டு வெளியான படம் அந்தரங்கம். ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்று தொடங்கும் அந்தப் பாடல் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பின்னர் அவ்வப்போது தொடர்ச்சியாக பாடி வந்த கமல்ஹாசன் வாய்ப்பு கிடைக்கும்போது குரல் கொடுக்கத் தவறியதில்லை.

பன்னீர் புஷ்பங்களே, நினைவோ ஒரு பறவை, கடவுள் அமைத்து வைத்த மேடை, இஞ்சி இடுப்பழகி,சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே, தென் பாண்டிச் சீமையிலே, கடவுள் பாதி மிருகம் பாதி, கொம்புல பூவ சுத்தி, ஆழ்வார்ப்பேட்டை ஆளுடா, காசு மேல காசு வந்து, கலக்கப் போவது யாரு, இஞ்சிரங்கோ இஞ்சிரங்கோ, ஒன்னவிட இந்த உலகத்துல உசந்தது யாருமில்லை உள்ளிட்டவை அவர் பாடிய ஹிட் பாடல்களில் சில.

உல்லாசம் படத்தில் அவர் அஜீத்துக்காக ஒரு பின்னணிப் பாடல் பாடியிருந்தார். முத்தே முத்தம்மா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தவர் கார்த்திக் ராஜா. அதேபோல தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடியுள்ளார்.

கடைசியாக அவரது குரலில் வந்த பாடல் மன்மதன் அம்பு படத்தில் இடம் பெற்ற நீலவானம்...நீயும் நானும்..

இப்படி கமல்ஹாசனின் குரலில் வெளியான பாடல்களின் எண்ணிக்கை 77 ஆகும். இந்தப் பாடல்களையெல்லாம் தொகுத்து ஒரு தனி இசைக் கோர்வையாக உருவாக்கும் முயற்சி ஒன்று தொடங்கியுள்ளதாம். அனைத்துப் பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகூட்டி, புத்தும் புதுப் பொலிவுடன் வெளியிடப் போகிறார்களாம்.

 

புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பு: இயக்குநர் வசந்த், லிங்குசாமி அறிவிப்பு

Lingusamy Vasanth Give Chance The Winners Of Raj Tv

ராஜ் டிவியில் நடைபெற்ற ‘புதியதோர் கவிஞன் செய்வோம்' ‘தமிழகத்தின் தங்கக் குரலோன்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற கவிஞர்கள், பாடகர்களுக்கு தங்களின் அடுத்த திரைப்படங்களில் வாய்ப்பு வழங்கப்படும் என்று இயக்குநர் வசந்த், இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளனர்.

ராஜ் டி.வியில் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "புதியதோர் கவிஞன் செய்வோம் நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிசுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் கவிதைகளுக்கு எங்கேயும் காதல் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்தார். பல்வேறு சுற்றுக்களையும் வெற்றிகரமாக கடந்து இறுதிச்சுற்றில் நுழைந்த கவிஞர்கள் பலரும் தங்களின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்க இயக்குநர் லிங்குசாமியும், இயக்குநர் கரு. பழனியப்பனும் இணைந்து புதிய கவிஞராக சுந்தரராமனை வெற்றியாளராக அறிவித்தனர். அவருக்கு சிறந்த கவிஞருக்கான பரிசினை கவிஞர் அறிவுமதி வழங்கினார்.

அதேபோல் தமிழ்நாட்டில் தங்கக்குரலோனாக ஜிதேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கான பரிசினை இயக்குநரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரன், இயக்குநர் வசந்த் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய இயக்குநர்கள் வசந்த், லிங்குசாமி ஆகியோர் சிறப்பு வாய்ந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்களின் அடுத்த படத்தில் பாடல்கள் எழுதவும், பாடல் பாடவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்த உடன் பார்வையாளர்களிடம் இருந்து மகிழ்ச்சியான கரகோஷம் கிளம்பியது.

 

ஆடிமாதத்தில் அம்மன் படங்கள்: ராஜ்டிவியில் பக்தி மழை

Raj Tv Telecase Amman Movies On Aadi Month

ஆடிமாதம் என்றாலே அம்மன்கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். கூழ் ஊற்றுவது, பூக்குழி இறங்குவது என பக்தியில் திளைத்திருப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு ஆன்மீக ரசிகர்களை கவரும் வகையில் களம் இறங்கியிருக்கிறது ராஜ் டிவி.

ஆடிமாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ராஜ் டிவியில் பிற்பகல் 1.30 மணிக்கு பக்தித் திரைப்படங்களாக உலாவரப்போகின்றன. ஆடி முதல்நாளான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ரம்யா கிருஷ்ணன், வடிவேலு நடித்த ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

அம்மன் திரைப்படங்களுக்கு என்று குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பொட்டு அம்மன், ராஜகாளியம்மன், ஆடிவெள்ளி, அம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உள்ளிட்ட திரைப்படங்கள் அந்த சீசனுக்கு தகுந்து வெற்றியை தேடித்தந்தவை. அது போன்ற பல அம்மன் திரைப்படங்களை ஆடி மாதம் முழுவதும் பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் கண்டு ரசிக்கலாம்.

 

சீரியல் மூலம்தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது: 'தென்றல்' துளசி

Tendran Serial Tulasi Is My Charact

பாவடை தாவாணியில் எளிமையாய் வந்து அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் தென்றல் நாயகி துளசி. ஸ்ருதி என்பதைவிட துளசி என்ற பெயர்தான் அனைவரின் நினைவிலும் நிற்கிறது. சினிமாவில் தொடங்கிய அவரின் பயணம் சின்னத்திரையில் வெற்றிகரமானதாக நீடிக்கின்றது. தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கைப் பற்றி துளசியிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.

அப்பா ராஜன் நாயர் ஒரு மிலிட்​டரி எக்ஸ்​சர்​வீஸ்​மேன்,​​ அம்மா ​சுலோச்​சனா ராஜன்,​​ நான்.​ இதை தவிர்த்துப் பெரிய பேக் ரவுண்​டெல்​லாம் எது​வு​மில்லை.​ என் தாய்​மொழி மலை​யா​ளம்.​ சின்ன வய​தில் டான்ஸ் கொஞ்​சம் கத்​துக்​கிட்டு இருக்​கேன் அவ்​வ​ள​வு​தான்.​

நான் நடிக்க வேண்​டும் என்று ஆசைப்​பட்​டது எல்​லாம் கிடை​யாது.​ சின்ன வய​தில் பள்ளி நாட​கங்​க​ளில் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அப்​படி எட்​டாம் வகுப்பு படிக்​கும் பொழுது ஒரு நாட​கத்​தில் நடித்​தேன்.​ அப்​போது நிகழ்ச்​சி​யில் எடுத்த போட்​டோவைப் பார்த்​து​விட்டு நடிக்​கக் கூப்​பிட்​டார்​கள்.​ ஆனால் பத்​தா​வது படிக்​கும் போது​தான் நடிக்க வந்​தேன்.​ மலை​யா​ளப் படத்​தில் அறி​மு​க​மா​னேன்.​ அதன்​பி​ற​கு​தான் தமி​ழுக்கு வந்​தேன்.​ இந்த நான்கு வரு​டப் போராட்​டத்​திற்குப் பிறகு இப்​பொ​ழு​து​தான் நல்ல வாய்ப்பு கிடைத்​தி​ருக்​கி​றது.​

"ஜெர்ரி' படம் ரீலி​ஸிற்​குப் பிறகு நல்ல கதா​பாத்​தி​ர​மாக இருக்​க​வேண்​டும் என்று எதிர்​பார்த்து காத்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் சன் டிவி​யில் விக​டன் டெலி​வி​ஷன் தயா​ரிப்​பில் தென்​றல் தொட​ருக்கு நடிக்​கிற வாய்ப்பு வந்​தது.​ ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது அத​னால் உடனே ஒப்​புக்​கொண்​டேன்.​டைரக்​டர் கும​ரன் வந்து கதை​யைச் சொன்​னார்.​ "பாவாடை தாவணி போட்​டு​கிட்டு நீங்க சாதா​ர​ண​மாக எப்​ப​வும் வீட்​டில் இருப்​பது போல ஒரே ஒரு பொட்டு மட்​டும் வெச்​சுக்​கிட்டு வாங்க ஒரு டெஸ்ட் செய்து பார்த்​தி​ட​லாம்' என்று சொன்​னார்.​ பிறகு டய​லாக் கொடுத்து பேசச் சொன்​னார்​கள் அதில் ஓ.கே.​ ஆகி​விட்​டேன்.​

துளசி கதாபாத்திரத்திற்கு இந்​த​ள​விற்கு வர​வேற்பு இருக்​கும் என்று நினைக்​கலை.​ ஒரு நல்ல பிரா​ஜக்ட் ஒத்​துக்​கிட்டு செய்​வது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ திரை​யு​லகைச் சார்ந்​த​வர்​க​ளும் நிறைய பேர் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்​டி​னார்​கள்.​ அதைக் கேட்​கும் பொழுது என் கேரக்​டர் மீது இன்​னும் ஆர்​வம் அதி​கம் ஆகி​றது.​ துளசி கேரக்​ட​ரில் வரும் மேன​ரி​ஸம்,​​ உச்​ச​ரிப்பு,​நடிப்பு எல்​லாமே டைரக்​டர் சொல்லி கொடுப்​பதை அப்​ப​டியே செய்​கி​றேன்.​ அவர் சொன்​னதை அப்​ப​டியே என்​னு​டைய கதா​பாத்​தி​ரத்​தில் பிர​திப​லிக்​கி​றேன்.​

சினி​மாவை விட தென்றல் தொடர் பெரி​ய​ள​வில் ​ அங்​கீ​கா​ரத்தை உண்டு பண்​ணி​யி​ருக்கு.​ மலை​யா​ளத்​தில் "தோஸ்த்' என்ற படம் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அது​தான் என்​மு​தல் பட​மும் கூட.​ "காதல் டாட் காம்',​ "ஜெர்ரி',​ "மந்​தி​ரம்' என மூன்று தமிழ் படங்​க​ளில் நடித்​தேன்.​ தெலுங்​கில் இரண்டு,​​ மூன்று படங்​கள் நடித்​தி​ருக்​கி​றேன்.​ இத்​தனை படம் நடித்​தி​ருந்​தா​லும் எனக்கு இந்​தத் தொட​ரும்,​​ துளசி கேரக்​ட​ரும்​தான் பெரி​ய​ள​வில் பெயர் வாங்கி கொடுத்​தி​ருக்​கி​றது.​ இது,​​ தென்​றல் தந்த அங்​கீ​கா​ரம்​தான்.​ பெரி​யத்​தி​ரை​யில் எதிர்​பார்த்​தது சின்​னத்​தி​ரை​யில் கிடைத்​தி​ருக்​கி​றது என்று சொல்லிவிட்டு புன்னகையோடு விடைகொடுத்தார் ஸ்ருதி.

 

பரங்கிமலை தர்காவில் சந்தனக் குடம் எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Ar Rahman Attended Special Prayer At St Thomas Mount

சென்னை: பரங்கிமலை தர்காவில் நடந்த உரூஸ் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பிரார்த்தனை நடத்தி சந்தன குடம் எடுத்தார்.

சென்னை பரங்கிமலை ராணுவ அலுவலர் பயிற்சி மையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ஹஸரத் சையத் ஷா அலி மஸ்தான் ஷமன் ஷா அலி தர்கா. மிகவும் புகழ்பெற்ற இந்த தர்காவில் 128-ம் ஆண்டு சந்தன முபாரக் உரூஸ் திருவிழா நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நேற்று முன்தினம் மாலை சந்தன குடம் ஊர்வலம் நடைபெற்றது.

ஆலந்தூரின் முக்கிய வீதிகளில் இந்த சந்தன குடம் ஊர்வலமாக சென்று வந்தது. சந்தன குடம் ஊர்வலம் தர்காவிற்கு வந்ததும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

 

பில்லா 2 - என்ன சொல்றாங்க ஜனங்க...?

Billa 2 Public Opinion

அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு அவரது ரசிகர்கள், பொதுவான மக்கள் மத்தியிலிருந்து கலவையான கருத்துகள் வெளியாகிவருகின்றன.

அஜீத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை மங்காத்தாவை விட சூப்பராக இருக்கு என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட, சாதாரண ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார்கள்.

படம் வெளியான இரு தினங்களுக்குள் பத்திரிகை, ஊடக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. 99 சதவீதம் எதிர்மறையாகத்தான் வந்திருக்கின்றன.

அதேநேரம், படத்துக்கு முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஓபனிங்குக்கு குறைச்சலில்லை. நாளை மாலைக்குப் பிறகுதான் பில்லா 2 -படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரியவரும்.

சரி, படத்தைப் பற்றி பார்க்க வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஃபேம் சினிமாஸ்...

இயக்குநர் சரவணன் (எங்கேயும் எப்போதும்)

நல்ல ஸ்டைலிஷ் மேக்கிங். அஜீத்துக்கு பக்காவாகப் பொருந்துகிறது அந்த டான் வேடம். டெக்னிக்கலாக நல்ல உழைப்பு தெரிகிறது. வேறென்ன சொல்ல!

கவுதம்

"படத்தின் தரம், லாஜிக் என்று சில குறைகள் இருந்தாலும், படம் எனக்குப் பிடித்திருக்கிறது. அஜீத்தை நான் ரசித்தேன். ஆனால் இன்னும் கவனமெடுத்துச் செய்திருந்தால், மங்காத்தாவை மிஞ்சியிருக்கும்."

காசி தியேட்டர்...

பிரசன்னா

"நான் அதிகாலை முதல் ஷோவுக்கு ரூ 650 கொடுத்து டிக்கெட் வாங்கினேன். மங்காத்தா மாதிரி த்ரில், ஆக்ஷன், கலக்கலான சீன்களை எதிர்ப்பார்த்தேன். அந்த திருப்தி கிடைக்கவில்லை என்பது உண்மைதான். தல, அடுத்த வாட்டி கேர்புல்லா இருங்க!"

ஜோதிகுமார்

இன்னும் நல்லா எடுத்திருக்கலாங்க. ஏன் இப்படி சொதப்பினாங்கன்னு தெரியல. நான் காலைக் காட்சிக்கு ரூ 500 கொடுத்து டிக்கெட் வாங்கினேன். என் காசு தண்டம்தான். அஜீத்துக்கு டான் வேஷம் பொருத்தமா இருந்தாலும், அவர் நடிக்கவே இல்லை. சும்மா கோட்டு போட்டுக்கிட்டு நடந்து வர்றாரு, போறாரு. ஏன்.. ஒரு டானுக்கு நகைச்சுவையே, காதல் உணர்ச்சியோ கூட இருக்காதா?

சத்யம் சினிமாஸ்..

ஆறுபேர் கொண்ட ஒரு இளைஞர் கூட்டம் வெளியில் நின்றபடி படத்துக்கு வருவோரை கலாய்த்துக் கொண்டிருந்தது. நின்று விசாரித்ததில், "ஜாலியா சினிமா பார்க்க வந்தா, இங்க ஒரு மூன்றாம் தர படத்தைப் பார்த்து 'கான்டாகிட்டோம்'. ஏன் சார் இப்படி சொதப்புறாங்க... ஆனா ஒண்ணு, இந்தப் படம் மூலம் டான்னா இந்தில அமிதாப், தமிழ்ல ரஜினிதாங்கிறதை மீண்டும் நிரூபிச்சிருக்காங்க! அடுத்து விஷ்ணுவர்தன் கூட சேர்ந்திருக்கார் அஜீத். அந்தப் படம் நல்லா வர வாழ்த்தறோம். ஆனா, கோட்டும் துப்பாக்கியும் வேணாம் தல... (நிறைய பேர் பேசி வச்சமாதிரி இப்படித்தான் சொல்றாங்க!)

 

ஒரு போதும் நடிகையாக மாட்டேன்... தீபிகா உறுதி

Deepika Pallikal Not Ready Cinema

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் ஒருபோதும் நடிகையாக மாட்டேன், சத்தியமாக நடிக்க வர மாட்டேன் என்று படு உறுதியாக கூறியுள்ளார் இளம் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பள்ளிகல்.

சென்னையைச் சேர்ந்த அழகுப் பெண்தான் தீபிகா. ஸ்குவாஷ் விளையாட்டில் ஜொலிக்கும் நட்சத்திரம். பூர்வீகம் கேரளா. இதனாலோ என்னவோ தீபிகாவைத் தேடி சினிமாக்காரர்கள் லைன் கட்டி நிற்க ஆரம்பித்துள்ளனராம். எப்படியாவது தீபிகாவை சினிமாவுக்குள் இழுத்து அவரையும் நடிக்க வைத்து விட வேண்டும் என்று ஏராளமான பேர் எப்படியெல்லாமோ முயல்கின்றனராம்.

இப்படித்தான் சானியா மிர்ஸா ஹாட்டாக விளையாடிக் கொண்டிருந்தபோது அவரையும் சினிமாவுக்குள் இழுத்து விட சகலரும் முயன்றனர். நம்ம சிம்பு கூட முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. அனைவருக்கும் பெப்பே காட்டி விட்டார் சானியா.

இப்போது தீபிகாவை இழுக்க ஒரு கூட்டமே அலை மோதுகிறதாம். ஆனால் அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார் தீபிகா. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் சினிமாவுக்கு ஒருபோதும் வர மாட்டேன், சத்தியமாக மாட்டேன் என்று தெளிவாக பேசுகிறார் தீபிகா.

சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனைகள் வரிசையில் 14வது இடத்தில் இருக்கும் தீபிகா, இதுகுறித்துக் கூறுகையில், நான் விளையாடும்போது சத்தம் போட்டுக் கொண்டபடிதான் விளையாடுவேன். இது அனைவரையும் கவர்ந்து விட்டது. என் பால் மற்றவர்களுக்கு ஈர்ப்பு வர இந்த சத்தம்தான் காரணம். விளையாட்டின் மூலம்தான் நான் பேசப்படுகிறேன் என்று நினைக்கிறேன்.

என்னைத் தேடி சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தன, கோலிவுட்டிலிருந்துதான். ஆனால் நான் தான் முடியாது என்று கூறி விட்டேன். என்னால் நடிகையாக முடியாது. வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிலையிலும் கூட நடிகையாக மாட்டேன் என்கிறார் தெளிவாக.

சரி பாய் பிரண்ட் உள்ளனரா என்று கேட்டால், எங்கங்க, எனக்கு விளையாடவே நேரம் போதவில்லை. பெரும்பாலான நேரத்தில் நான் போட்டிகளுக்கான டூரிலேயே இருக்கிறேன். பிறகெப்படி அதற்கெல்லாம் நேரம் இருக்க முடியும். ஒரு வேளை இப்படிப்பட்ட பிசியான வாழ்க்கை இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் பாய் பிரண்ட் இருந்திருக்கலாம் என்கிறார் வெளிப்படையாக.

இப்படியே உறுதியா இருங்க...

 

மறந்துடாதீங்க, புதன்கிழமை சன் டிவியில் கரகாட்டக்காரன் போடுறாங்க!

It S Goundamani Senthil Vaaram Su

சன் டிவியின் வார வரிசையில் இந்த வாரம் கவுண்டமணி - செந்தில் வாரம். அசத்தலான ஐந்து படங்கள் மூலம் தங்களது கோடானுகோடி ரசிகர்களை கலக்க வருகிறார்கள் தமிழ் திரையுலகின் லாரல் -ஹார்டி என போற்றப்படும் கவுண்டமணியும், செந்திலும்.

காதல் செவ்வாய், காவிய புதன், சூப்பர் ஹிட் வெள்ளி என்று அட்டகாசமான அடைமொழிகளுடன் திரைப்படங்களை ஒளிபரப்புவதில் புதுமை படைத்த சன் டிவியில் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைக்கும் வாரம் ஒதுக்கியும் படங்களை ஒளிபரப்பி வந்தனர் முன்பு. இப்போது அந்த வார வரிசை மறுபடியும் வந்துள்ளது.

இப்போது காமெடி வரிசைக்கு வந்துள்ளனர். அதாவது கவுண்டமணி- செந்தில் வாரத்திற்கு வந்துள்ளனர். இந்த வாரம், அதாவது இன்று முதல் வருகிற வெள்ளிக்கிழமை முதல் கவுண்டமணி-செந்திலின் சூப்பர் ஹிட் காமெடி காட்சிகள் அடங்கிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.

இன்று காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் சூப்பர் ஹிட் படமான வைதேகி காத்திருந்தாள் படம் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இப்படத்தின் மூலம் தமிழகத்தில் பலருக்கும் கோமுட்டித் தலையன் என்ற அழகான அடைமொழி கிடைக்கக் காரணமாக இருந்தார் கவுண்டமணி. கவுண்டமணி, செந்தில் இணையில் வந்த முதல் சூப்பர் ஹிட் படம் இதுதான் என்பதும் இப்படத்திற்கு உள்ள சிறப்பம்சமமாகும்.

நாளை சரத்குமார், மீனா நடித்த நாடோடி மன்னன் ஒளிபரப்பாகிறது. இப்படத்திலும் கவுண்டமணி, செந்திலின் காமெடி ஓஹோவென பேசப்பட்டது.

புதன்கிழமைதான் இந்த வாரத்தின் ஹைலைட் படம் ஒளிபரப்பாகிறது. அதாவது கரகாட்டக்காரன் போடுகிறார்கள். இப்படத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எத்தனை முறை பார்த்தாலும், எந்த நேரத்தில் பார்த்தாலும், எப்படிப்பட்ட மன நிலையில் பார்த்தாலும் சிரித்து ரசிக்காமல் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட கரகாட்டக்காரன் புதன்கிழமை ஒளிபரப்பாகிறது. சாப்பிட்டு முடித்து விட்டு கையில் ரெண்டு வாழைப்பழத்தோடு உட்கார்ந்து படத்தைப் பாருங்க...

வியாழக்கிழமை கார்த்திக் நடிக்க லக்கிமேன் ஒளிபரப்பாகிறது. இதில் கவுண்டமணிதான் எமன், செந்தில்தான் சித்திரகுப்தன். இவர்கள் இருவரும் பூமிக்கு வந்து அடிக்கும் லூட்டிகள் செம கலக்கல் காட்சிகள்.

முத்திரையாக, வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவின் டிரென்ட் செட் படமான சின்னக் கவுண்டர் ஒளிபரப்பாகிறது. இதில் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியோடு, வடிவேலுவும் இணைந்து அசத்தியிருப்பார். வடிவேலு எப்படி ஒல்லியாக, குச்சி போல காணப்பட்டார் என்பதைப் பார்க்க ஆசையாக இருந்தால் இந்தப் படத்தை மறக்காமல் பாருங்கள்.