மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட்…

மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட்…

மும்பை: புத்தாண்டு நடன நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆன வழக்கில் மல்லிகா ஷெராவத்துக்கு வதேதரா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் மல்லிகா ஷெராவத். இதற்காக அவருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நடனமாடாமல் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளர் மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். கடந்த 7 ஆண்டுகளாக வதேதரா நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் இந்த வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் மல்லிகா ஷெராவத். இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் அவ்வாறு ஆஜராகத் தவறினால் இந்திய தண்டனைச் சட்டம் 294ல் கீழ் கைது செய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

 

உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிராத்தனை

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார்தாம் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பூஜை நடைபெற்றது.

சங்கரா டிவி, சங்கரா பவுண்டேஷன் சார்பில் உத்தர்கண்ட் வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின்ஆன்ம சாந்திக்கும், அங்கு பரிதவிக்கும் மக்களின் நலனுக்காகவும், அங்கு நிவாரணபணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களின்நலனுக்காகவும், அடையாறு அனந்த பத்மநாபஸ்வாமி கோவிலில், ஜூலை 7 ஆம்தேதி அன்று, பல வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஒரு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிராத்தனை

இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்பூஜையில், மோட்ச தீபம் ஏற்றி, வேத விற்பன்னர்களின் வழிகாட்டுதலின்படி சிவ ஸஹஸ்ரநாமாவளிக்கு கோடி வில்வ அர்ச்சனையும், விஷ்ணு சஹஸ்ரநாமாவளிக்கு கோடி துளசி அர்ச்சனையும்செய்து பக்தர்கள்பிரார்த்தனை செய்தனர்.

இப்பூஜையில் கலந்து கொண்டவர்கள்சமூக நலனுக்குகாகவும், ஆன்மீக எழுச்சிக்காகவும் செயலாற்றும் ஸ்ரீ சங்கரா டிவியின் செயல்பாட்டினை மனதார பாராட்டினர். இந்நிகழ்ச்சியை சங்கரா டிவி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ் குமார் பொறுப்பேற்று நடத்தினார் .

 

சுள்ளானுக்காக காத்திருந்து ‘நொந்த’ ராஜ் இயக்குநர்

குழந்தைகளை வைத்து தன் முதல் படத்தையே வெற்றிப் படமாக்கிய அந்த பாண்டிய மன்ன இயக்குநர், தனது புதுப்படத்தில் நடிக்க சுள்ளானிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருந்தார். இயக்குநரின் முன்னாள் படங்கள் மூன்றும் பட்டையைக் கிளப்பி ஓடியதால் சுள்ளானும் ஓகே சொல்லி இருந்தார்.

இந்நிலையில் தான் சுள்ளானின் சூப்பர் படமொன்று தமிழிலும், ஹிந்தியிலும் ஹிட்டடிக்க, ஹீரோவின் கண்கள் வடக்குப் பக்கமே பார்த்த வண்ணம் உள்ளதாம். பற்றாக்குறைக்கு சோப்பு, சீப்பு விளம்பரங்கள் வேறு...

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போன இயக்குநர், தனது ‘பழைய' ஹீரோவிடமே போய் விட்டாராம். வரும் நவம்பரில் புதுப்பட அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

விஜய் சேதுபதிக்குப் போன ஜீவாவின் வாய்ப்பு!

பேராண்மை இயக்குநர் ஜனநாதன் இயக்கும் புதிய படத்தில் ஜீவாவிற்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கியவர் ஜனநாதன். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதிக்குப் போன ஜீவாவின் வாய்ப்பு!

'ஈ' படத்தில் ஜீவாவையும், 'பேராண்மை' படத்தில் 'ஜெயம்' ரவியையும் இயக்கி இருந்தார் ஜனநாதன். தற்போது இருவரையும் ஒன்றாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். படத்துக்கு 'தூக்கு தண்டனை' என்ற பெயரைத் தேர்வு செய்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், ஜீவா அடுத்தடுத்து சில படங்களில் புக்காகி இருப்பதால், ஜனநாதன் இயக்கும் படத்துக்கு கால்சீட் ஒதுக்க முடியாமல் போய்விட்டது.எனவே, ஜீவாவுக்குப் பதில் விஜய் சேதுபதியை வைத்து இயக்கலாம் என்ற முடிவுக்கு ஜனநாதன் வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதிக்குப் போன ஜீவாவின் வாய்ப்பு!

பீட்ஷா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும் போன்ற படங்களின் நடித்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இப்போது ஜனநாதன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தூக்கு தண்டனை என்ற படத்தின் பெயரையும் 'புறம்போக்கு' என்று மாற்றிவிட்டார்களாம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் 'ஜெயம்' ரவி இந்தப் படத்தில் நடிப்பாரா என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.

 

இயக்குனர் ராசு மதுரவன் புற்றுநோயால் மரணம்

இயக்குனர் ராசு மதுரவன் புற்றுநோயால் மரணம்

மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் முத்துக்குமுத்தாக உள்ளிட்ட பல படங்களை இயக்கிய , பிரபல சினிமா இயக்குனர் ராசு மதுரவன் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராசு மதுரவன், மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர். பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த இவரின் மாயாண்டி குடும்பத்தார் படம் இவரை பிரபலப் படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மதுரையையும், திண்டுக்கல் மாவட்டத்தையும் பின்னணியாகக் கொண்ட திரைப்படங்களையே ராசு மதுரவன் இயக்கினார். கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் உள்ளிட்டவை இவரது இயக்கத்தில் உருவான வேறு சில வெற்றிப் படங்கள்.

சமீபத்தில், இவருக்கு நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் கேன்சர் நோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 11 மணியளவில் ராசுமதுரவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நடிகை லீனா மரியாவின் காதலன் மீண்டும் மோசடி வழக்கில் கைது

நடிகை லீனா மரியாவின் காதலன் மீண்டும் மோசடி வழக்கில் கைது

சென்னை: தொழிலதிபர் ஒருவரிடம் 75 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக நடிகை லீனா மரியா பால் காதலனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

மெட்ராஸ் கபே, ரெட் சில்லிஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்த லீனா மரியா பாலின் காதலன் சுகாஷ் சந்திரசேகர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து, சென்னை, அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில், போலி ஆவணம் தயாரித்து, 19 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் பதுங்கியிருந்த லீனா பால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிடிப்பட்டார். காதலன் சுகாஷ் தப்பினார். லீனா மரியா பாலை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த சுகாஷை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், மோசடி வழக்கு ஒன்றில், டெல்லி போலீசாரும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த சுகாஷை டெல்லி போலீசார் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.

இந்த நிலையில், சுகாஷ், சேலையூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 75 லட்சம் மோசடி செய்த வழக்கில் அவரை மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

சென்னை தொழிலபதிகளிடம் 20 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார் சுகார். எனவே டெல்லியில் இருந்து சுகாஷை சென்னை அழைத்து வர காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை மூலம் அவரை சென்னை கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

வழக்கு எண் 18/9, சாட்டை படங்களுக்கு தமுஎச விருது

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9, எம்.அன்பழகன் இயக்கிய சாட்டை, சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 2012ம் ஆண்டிற்கான திரைப்பட விருது விழா வரும் 25ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி பங்கேற்று பேசுகிறார். கவிஞர் நந்தலாலா, கவிஞர் சைதை ஜெ. இயக்குநர் எஸ். கருணா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

Vazhakku En 18/9

வழக்கு எண் 18/9, நீர்ப்பறவை, சாட்டை போன்ற படங்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மதுபானக்கடை படத்திற்கு புதிய முயற்சிக்கான விருது வழங்கப்பட உள்ளது. மௌனமொழி என்ற குறும்படத்திற்கு பா.ராமச்சந்திரன் நினைவு விருது வழங்கப்பட உள்ளது.

Saattai Movie Still

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ச.தமிழ்செல்வன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நாடகக்கலைஞர் கி.அன்பரசன், நாடகக்கலைஞர் ஜெ. ஜேசுதாஸ், மாநிலப் பொதுச்செயளாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

'அட்டகத்தி' தினேஷ்-மாளவிகா நாயரின் 'குக்கூ'!

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் ‘குக்கூ' படத்தின் பூஜை ஜூலை 7ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லிங்குசாமி, இயக்கநர் பாலா உள்ளிட்ட பிரபல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் பங்கேற்று படத்தின் இயக்குநர் ராஜுமுருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளியான 'வட்டியிலும் முதலும்' பகுதியை எழுதியர் ராஜு முருகன். இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் இப்போது இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘குக்கூ'.

'அட்டகத்தி' தினேஷ்-மாளவிகா நாயரின் 'குக்கூ'!

'குக்கூ' படத்தின் நாயகனாக 'அட்டகத்தி' தினேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாளவிகா நாயர். இவர் 'வழக்கு எண் 18/9' படத்தின் மலையாள ரீமேக்கான 'Black Butterflies' படத்தில் நாயகியாக நடித்தவர்.

ஞாயிறன்று இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த விழாவில் இயக்கநர் லிங்குசாமி, இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். திங்கட்கிழமை முதல் தொடர் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

'அட்டகத்தி' தினேஷ்-மாளவிகா நாயரின் 'குக்கூ'!

இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களைத் தயாரித்து வந்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், 'குக்கூ' படத்தின் படத்தின் மூலம் நேரடியாக தமிழில் தயாரிப்பு களத்தில் இறங்குகிறது. இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இவர் 'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' போன்ற படங்களில் இசையமைத்தவர். ஒளிப்பதிவாளராக பிரேம்நாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

சிங்கம் III எடுப்பார்களா?

சிங்கம் III எடுப்பார்களா?

சிங்கம் 2 படத்தைப் பார்த்துவிட்டு அப்பா பாராட்டினார், அது எனக்கு சந்தோசமாக இருந்தது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியையொட்டி சென்னை தி.நகரில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா,

இயக்குநர் ஹரியுடன் இது எனக்கு 4 வது படம். ''இந்த வெற்றி நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெற்றி. சரியான சமயத்தில் இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஹரிதான். எனது தந்தை படத்தை பார்த்துவிட்டு உன்னை நினைத்தால் கவுரவமாக இருக்கிறது என ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது'' இந்தபடத்தை 'ஜோ' பார்த்துவிட்டு கைத்தட்டி பாராட்டினார் என்றார் நடிகர் சூர்யா.

இயக்குனர் ஹரி பேசுகையில், சிங்கம் 2 என்னுடைய 12 வது படம் சூர்யா உடன் 4 வது படம். சூர்யா கொடுத்த தைரியத்தில்தான் சிங்கம் 2 செய்தேன். நான்கு படங்கள் சூர்யாவுடன் இணைந்து வேலை செய்துள்ளேன். இதனால் இவர் எனக்கு சகோதரர் போல் ஆகிவிட்டார். ''சிங்கம் முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கும் இருந்தது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை குழுவாக சேர்ந்து உருவாக்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

அதன்பின் பத்திரிகையாளர் கேள்வியின்போது, நான்கு படங்கள் சூர்யாவுடன் இணைந்து வேலை செய்யததால் சகோதரர் என்கிறீர்கள். அனுஷ்காவுடன் இணைந்து இரண்டு படங்கள் செய்திருக்கிறீர்கள். அவரை என்ன என்று சொல்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு ஹரி, ''இந்த படத்தில் வேலை செய்த அனைவரும் ஒரு குடும்பம் போல்தான் பணிபுரிந்தோம். எனவே அனுஷ்கா எனக்கு சகோதரிதான் என்று சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்தார்.

சிங்கம் III எடுப்பீர்களா என்ற கேள்விக்கு, அதற்குண்டான கதை இப்போது இல்லை என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தின் இயக்குநர் ஹரி, சூர்யா, ரகுமான், நாசர், விஜயகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்து கொண்டனர்.