லோ'ரியல் விளம்பர தூதராக கத்ரினா கைப் நியமனம்!

மும்பை: பிரபல அழகு சாதனை பொருள் உற்பத்தி நிறுவனமான லோரியலின் (L'oreal) புதிய விளம்பரத் தூதராக கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் லோரியல் பாரீஸ் அழகு சாதன நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக சோனம் கபூர், பிரிடோ பிண்டோ ஆகியோர் இருந்துள்ளனர். 4-வதாக காத்ரீனா கயூப் நியமிக்கபட்டு உள்ளார்.

லோ'ரியல் விளம்பர தூதராக கத்ரினா கைப் நியமனம்!

இது குறித்து காத்ரினா கயூப் கூறுகையில், "இந்த வரிசையில் நானும் இனைந்தது நம்பமுடியாததாக உள்ளது. இது எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. லோரியல் எப்போதும் கவர்ச்சி மற்றும் சக்திவாய்ந்த பெண்களின் அழகு பொருட்களாக இருந்து உள்ளது. நீங்கள் மதிப்புள்ளவர்களாக இருந்தால் பெண்கள வலுவாக்குவதற்கு மேலும் தூண்டுதலாக இருக்கும்," என்றார்.

12 வருடங்கள் இந்நிறுவனத்தின் விளமபர தூதராக இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கத்ரீனாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 'லோரியல் பாரீஸ் குடும்பத்தில் இணையும் கத்ரினாவுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்," என்றார்.

 

இன்று சந்தானத்துக்கு 34 வது பிறந்த நாள்!

தமிழ் சினிமாவின் இன்றைய அத்யாவசியத் தேவைகளுள் ஒன்றாகிவிட்ட சந்தானத்துக்கு இன்று பிறந்த நாள்.

ஆனால் வெளியில் எந்த பகட்டும் காட்டாமல் அமைதியாக இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சந்தானம்.

சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் சந்தானம். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. தொலைக்காட்சி நடிகராக கேரியரைத் தொடங்கிய சந்தானத்துக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு வழங்கியவர் சிம்பு.

இன்று சந்தானத்துக்கு 34 வது பிறந்த நாள்!

அவர் ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை மற்றும் வெற்றிப் படமான மன்மதன் போன்றவற்றில் சந்தானத்துக்கு முக்கிய வேடம் கொடுத்தார்.

கவுண்டமணி பாணியை இம்மியளவும் பிசகாமல் அப்படியே பின்பற்றி காமெடி செய்து புகழ்பெற்றார். இவரது காமெடி இன்றைக்கு எடுபட முக்கிய காரணம், கவுண்டமணியின் நகைச்சுவைக்கு இப்போதும் மக்கள் மத்தியில் கிடைக்கும் பெரும் வரவேற்புதான்.

அரசியல் காரணமாக வடிவேலு கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்பட, அந்த இடம் சந்தானத்துக்குக் கிடைத்தது. ரஜினி உள்ளிட்ட பெரும் நடிகர்களுடன் நடித்துவிட்டார். இப்போது அவர் இல்லாத படங்களே இல்லை எனலாம். இன்னொரு பக்கம் அவ்வப்போது ஹீரோவாக நடித்து தன் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் சந்தானத்துக்கு சற்று சோதனைக் காலம். அவரை நோக்கி ஏகப்பட்ட கண்டனக் கணைகள்.

ஆனால் அவை அனைத்தும் இந்த ஆண்டு தொடக்கத்தில் காணாமல் போய், மீண்டும் பழைய மவுசு அவருக்குக் கிடைத்துவிட்டது. அவர் நடித்த என்றென்றும் புன்னகை மற்றும் வீரம் ஆகிய படங்களின் வெற்றி சந்தானத்துக்கு மீண்டும் அவரது நாற்காலியைத் திரும்பத் தந்துவிட்டது.

இன்று 34வது பிறந்த நாள் காணும் சந்தானத்துக்கு அவரது நண்பர்களும் சக நடிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஊரையே சிரிக்க வைக்கும் பெரும் பணி செய்யும் சந்தானத்தை நாமும் வாழ்த்துவோம்!

 

மூத்த நடிகர் எஸ்எஸ்ஆருக்கு உடல்நலக் குறைவு- மருத்துவமனையில் அனுமதி

மூத்த நடிகர் எஸ்எஸ்ஆருக்கு உடல்நலக் குறைவு- மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மூத்த நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் திரையுலகில் 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

எம்ஜிஆர் - சிவாஜியுடன்

பராசக்தி, மனோகரா, ரத்த கண்ணீர், சிவகங்கை சீமை, தெய்வபிறவி, குமுதம், ஆலயமணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் கதாநாயகனாக நடித்து வந்தார்.

உடல் நலக் கோளாறு

86 வயதான எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது. வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரால் சாப்பிட முடியவில்லை. திரவ உணவு செலுத்தப்பட்டது.

திடீர் மயக்கம்

நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து டிரஸ்ட்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரத்குமார்

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகை ராதிகா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்தனர். டாக்டர்களிடம் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

 

விஜய்யுடன் முதல் முறை ஜோடி சேரும் சமந்தா!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் நடிகை சமந்தா.

துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படம் வரும் பிப்ரவரியில் தொடங்குகிறது. பெரும் வெற்றி பெற்றுள்ள ஜில்லாவுக்கு அடுத்து வெளியாகும் படம் இது.

விஜய்யுடன் முதல் முறை ஜோடி சேரும் சமந்தா!

இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என்று செய்தி பரவியது. ஆனால் இப்போது ப்ரியங்கா சோப்ரா இல்லை.

அவருக்குப் பதில் சமந்தா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

விஜய்யுடன் ஏற்கெனவே ஜோடி சேரவிருந்தவர் சமந்தா. ஆனால் அப்போது அவருக்கு சரும நோய் பிரச்சினை இருந்ததால், அவருக்குப் பதில் அமலா பாலை தலைவாவில் ஜோடியாக்கிக் கொண்டார் விஜய்.

அப்போது தவற விட்ட வாய்ப்பை இப்போது மீண்டும் பெற்றுள்ளார் சமந்தா.

 

புத்தக திருவிழாவில் ஒரு புதுமை... பென் ட்ரைவில் பாடல் வெளியீடு!

அறிவுத் திருவிழாவான புத்தக திருவிழாவில் அன்றாடம் ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் நேற்று நடந்த நிகழ்வு முற்றிலும் வித்தியாசமானது.

இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் ஒரு பாடலை பென் டிரைவில் வெளியிட்டார்கள் அவரது அபிமானிகள். ‘பூவுலகின் நண்பர்கள்' ஸ்டாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடல் அடங்கிய பென் டிரைவை சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் வெளியிட, மயன் ரமேஷ் பெற்றுக் கொண்டார்.

புத்தக திருவிழாவில் ஒரு புதுமை... பென் ட்ரைவில் பாடல் வெளியீடு!

பாடலுக்கு இசையமைத்த தாஜ்நூர் அந்த பாடல் உருவான விதத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"பொதுவாகவே தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களை எங்காவது கவிதையாக படிக்க நேர்ந்தாலோ, காதில் கேட்க நேர்ந்தாலோ அதை உடனே பாடலாக வடிவமைப்பது என்னுடைய வழக்கங்களில் ஒன்று. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. அவரது மறைவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்தான் சேலத்தை சேர்ந்த என் நண்பரான ஈசன் இளங்கோ மருத்துவர் சசியுடன் இணைந்து எழுதிய இந்த பாடல் வரிகளை எனக்கு செல்போனில் அனுப்பி வைத்தார். அதை படித்தவுடன் நான் பரவசமானேன். அதற்கு ட்யூன் போட்டு பாடலாக்கிவிட வேண்டும் என்று தோன்றியது. உடனடியாக வேலைகளை துவங்கினேன்.

பாடகர் வேல்முருகனை வரவழைத்து பாட வைத்தேன். அவரது கணீர் குரலில் பாடல் இன்னும் மெருகு பெற்றது. அந்த பாடலை பொங்கல் தினத்தன்று சேலம் வீதிகளில் ஒலிபரப்பி கொண்டாடிவிட்டார்கள் ஈசன் இளங்கோவும் அவரது நண்பர்கள் குழுவினரும்.

நம்மாழ்வார் போல வேடமணிந்த ஒருவர் கைநிறைய இனிப்புகளை அள்ளி மக்களுக்கு வழங்கியபடி வீதிய வீதியாக சென்றார். அப்போது இந்த பாடலை ஒலிபெருக்கி மக்களை சந்தோஷ வெள்ளத்தில் மிதக்க வைத்தார்கள் ஈசன் சுற்றுசூழல் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள். மதங்களையெல்லாம் தாண்டி எப்படி கிறிஸ்துமஸ் தாத்தாவை ரசிக்கிறோமோ, குழுந்தைகளுக்கும் பிடித்த தாத்தாவாக அவர் இருக்கிறாரோ, அதுபோல உழவன் தாத்தவாக கொண்டாடப்பட வேண்டியவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். இனி ஒவ்வொரு பொங்கலுக்கும் இந்த பாடல் தெருவெங்கும் ஒலிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்," என்றார்.

விழாவுக்கு வந்த பாடகர் வேல்முருகன்,

அறிவை வாங்கி பரிமாறு
அழிவை எதிர்த்து போராடு
திடமான உடலோடு
இயற்கை உரமோடு...

என்று தன் கணீர் குரலில் அங்கேயே நின்று பாட, புத்தக திருவிழாவே சிலிர்த்துப் போனது. நிகழ்ச்சியில் ஏராளமான பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டார்கள். தமிழகத்திலேயே முதன் முறையாக பென் டிரைவில் வெளியிடப்பட்ட பாடல் வெளியீட்டு விழா இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சிரித்துப் பேசினால் சிம்புவுடன் காதலா: நயன்தாரா நர நர

சென்னை: பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே எங்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாக தகவல் பரப்பிவிடுவதா என்று சிரித்துப் பேசினால் சிம்புவுடன் காதலா: நயன்தாரா நர நர  

முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்து பாண்டிராஜ் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பில் நயனும், சிம்புவும் சிரித்துப் பேசிக் கொண்டார்களாம். அவர்கள் பழகும் விதத்தை பார்த்து படக்குழுவினர் அவர்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி வருகிறார்களாம்.

இந்நிலையில் சிம்புவும், நயனும் படப்பிடிப்பில் சிரித்துப் பேசும் போட்டோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே காதலா, இப்படித் தான் போட்டோவை இணையதளத்தில் போட்டு தகவல் பரப்புவதா என்று நயன் காட்டத்தில் உள்ளாராம்.

நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடன் சேர்ந்து பெங்களூரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோச்சடையான், விஸ்வரூபம்-2, அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது?

சென்னை: இனி தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வரி விலக்கு ததருவதில்லை என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே வெளியான ஜில்லா, வீரம் படங்களுக்கே கடைசி நேரம் வரை வரிவிலக்கு தராமல் இருந்தது தமிழக அரசு.

காரணம், பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் எப்படி இருந்தாலும் போட்ட பணத்தை விட அதிகமாகவே வசூல் செய்துவிடுகின்றன. காரணம், அந்தப் படங்களுக்கு கிடைக்கும் ஒரு வார கால ஓபனிங்.

கோச்சடையான், விஸ்வரூபம்-2, அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது?

அதுபோதாது என்று அரசாங்கம் கொடுக்கும் 30 சதவீத வரிவிலக்கும் அவர்களுக்கு கூடுதல் லாபமாகக் கிடைத்துவிடுகிறது.

இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, இனி சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுக்கலாமா? என அரசு யோசனை செய்து வருகிறதாம்.

இனி வெளிவரவிருக்கும் 'கோச்சடையான்', 'விஸ்வரூபம்-2', 'ஐ', அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு இனி வரிச்சலுகை தருவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 

அந்த நடிகர் வேண்டாம் வேற யாரையாவது நடிக்க வைங்க: இயக்குனர் பரிந்துரை

சென்னை: தன்னை வெட்ட வெட்ட வளர்வேன் என்று இரண்டு எழுத்து நடிகர் தெரிவித்து வருகிறாராம்.

இசை குடும்பத்தில் இருந்து வந்துள்ள அந்த இரண்டு எழுத்து நடிகர் கன் இயக்குனர் தயாரித்த படத்தில் நடித்தபோது அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று நினைத்தாராம். இதனால் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இதையடுத்து தான் கலந்து கொள்ளும் சினிமா விழாக்களில் கன் இயக்குனர் இரண்டு எழுத்து நடிகரை சாடை மாடையாக தாக்கிப் பேசி வருகிறார். மேலும் அந்த நடிகரை வைத்து யாராவது படம் எடுப்பதாக கேள்விப்பட்டால் உடனே அவர்களை அணுகி அவர் வேண்டாம் வேறு யாராவது நல்ல நடிகரை நடிக்க வையுங்கள் என்கிறாராம்.

இதனால் இசை குடும்ப வாரிசுக்கு சில பட வாய்ப்புகள் கை நழுவியுள்ளதாம். மேடைதோறும் அந்த இயக்குனர் தன்னை தான் வசை பாடுகிறார் என்பதை தெரிந்து கொண்ட நடிகர் திரையுலகில் யாருடைய வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது என்கிறாராம். மேலும் தன்னை வெட்ட வெட்ட வளர்வேன் என்று கூறுகிறாராம்.