நடிகர் ஜெய்க்கு வந்த சிக்கல்... அறிக்கைக்கு புதிய விளக்கம்!


ஒரு நடிகையை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று நடிகர் ஜெய் அறிவித்தது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

நடிகை என்றால் அவ்வளவு கேவலமா என்று திரையுலகில் கண்டனக் குரல் ஒலித்ததால் தனது அறிக்கைக்கு புதிய விளக்கம் தந்துள்ளார்.

அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்ற செய்தி பரவியதால், இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என அஞ்சலியும், அஞ்சலியை நான் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணவும் மாட்டேன் என்று ஜெய்யும் மாறி மாறி அறிக்கை விட்டனர். ஜெய் ஒரு படி மேலே போய், வாழ்க்கையில் ஒரு நடிகையை திருமணம் செய்வதாக இல்லை என்று கூறிவிட்டார். இது சக நடிகைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் நடிகைகள் பற்றி அவதூறாக பேசுவதா? என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது. ஜெய்யுடன் நேரில் பேசியும் கண்டித்தனர்.

இதையடுத்து தனது அறிக்கைக்கு ஜெய் அளித்துள்ள விளக்கம்:

நடிகை பற்றி நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டுள்ளனர். நான் சொல்ல வந்த அர்த்தம் வேறு.

நான் நடிகன் என்பதால் உள்ளூர்-வெளியூர் என்று படப்பிடிப்பில் இருப்பேன். என் மனைவியும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமாக இருக்குமா? என்ற அர்த்தத்தில்தான் நடிகையை திருமணம் செய்ய கொள்ள மாட்டேன் என்றேன். மற்றபடி நடத்தை பற்றியோ ஒழுக்கம் பற்றியோ நான் எதுவும் பேசவில்லை," என விளக்கம் அளித்துள்ளார்.
 

நடிகைகளின் தற்கொலைகளை மையமாகக் கொண்ட ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’


தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் உள்ளிட்ட நடிகைகளின் தற்கொலைகளை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள படம்தான் சோனியா அகர்வால் நாயகியாக நடித்துள்ள “ஒரு நடிகையின் வாக்குமூலம்”. இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளாக இருந்த “பசி” ஷோபா, சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, மோனல், திவ்யாபாரதி, உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனர். பிரதீஷா கொலை செய்யப்பட்டார். இதன் உண்மைக் காரணங்களை மையமாக வைத்து ஒரு நடிகையின் கதை என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகைகளுக்கு சமர்ப்பணம்

இத்திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறியதாவது:

நடிகைகளுக்கு அன்பு, குடும்ப பாசங்கள் கிடைப்பது இல்லை. எனவே காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். சிலர் மது பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். ஏக்கம், விரக்தி போன்றவற்றால் தற்கொலை செய்து கொண்ட நடிகைகளுக்கு இப்படத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்றார்.

இத்திரைப்படத்தில் இயக்குநர்கள் விக்ரமன், ஏ. வெங்கடேஷ், ராசு மதுரவன், செல்வபாரதி, சுராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவே நடித்துள்ளனர். சதன், நிக்கோல், ஜோதிலட்சுமி, மனோபாலா, கஞ்சா கருப்பு, கோவை சரளா, யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

புன்னகைப் பூ கீதா தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கி உள்ளார். விரைவில் வெளிவர உள்ள இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நடத்தையில் சந்தேகம்... கன்னட நடிகை சவுமியாவை 13 முறை கத்தியால் குத்திய காதலன்!


பிரபல கன்னட நடிகை சவுமியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன் அனில்குமார் அவரை 13 முறை உடல் முழுக்க கத்தியால் குத்தினார். சவுமியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. பெங்களூரைச் சேர்ந்த அனில் குமாரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அனில்குமார் ஏற்கெனவே ரஜனி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

ரஜனியை விவாகரத்து பெற முயற்சித்து வருகிறார். இந்த விவாகரத்துக்கான வழக்குச் செலவைக்கூட சவுமியாதான் கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில் சவுமியா நடத்தையில் அனில்குமாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. சினிமா உலகில் வேறு சிலருடன் சவுமியா தொடர்பு வைத்து இருப்பதாக கருதினார். இதனால் அவரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தார். சவுமியா சில இளைஞர்களுடன் நெருக்கமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பாய்ந்து சென்று சவுமியாவை கத்தியால் குத்தினார்.

கழுத்து, வயிறு, வலதுகை போன்ற பகுதிகளில் பலமுறை சர மாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சவுமியாவை யலஹங்காவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தகவல் அறிந்ததும் போலீசார் அனில்குமார் வீட்டுக்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அனில்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சில தினங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மனைவியைக் குத்திக் கொல்ல முயன்றது நினைவிருக்கலாம்.
 

தருண் சத்ரியாவின் தயக்கமும் ஷிகா தந்த தைரியமும்!


இன்றைய வளரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் தருண் சத்ரியா. காளை படத்தில் சிம்புவுக்கு வில்லனாக தருண் கோபியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இன்று தனி கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

சொந்த ஊர் வேலூருக்குப் பக்கத்தில் ஆம்பூர். இந்த மாவட்ட மக்களைப் பொறுத்தவரை தலைநகரம் பெங்களூர்தான். சென்னையை விட மிக அருகிலிருப்பது ஒன்று, அதிக வேலை வாய்ப்புகள் கிடைப்பது இன்னொரு முக்கியமான காரணம் என்பதால் தருண் சத்ரியாவும் பெங்களூருக்குப் போய்விட்டார்.

இவர் தந்தை கன்னடத்தில் பல படங்களைத் தயாரித்துள்ளார். முதல் பட வாய்ப்பு தந்த இயக்குநர் தருண் கோபிதான், சுலீல் குமார் என்ற இவரது பெயரை தருண் சத்ரியாவாக மாற்றிவிட்டார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் நடித்த குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் அவருக்கு தனித்த அடையாளத்தைத் தந்தது. இந்தப் படத்தில் இவர் மெயின் வில்லன். பார்த்த அத்தனை பேரும் பாராட்டினர்.

அடுத்து தருண் நடித்தது ஆண்மை தவறேல். தொடர்ந்து சுந்தர் சியின் நகரம் படத்திலும் மெயின் வில்லன் வேடம். ஸ்டன்ட் மாஸ்டர் விஜயனின் சொந்தப் படம் மார்கண்டேயன் உள்பட அரை டஜன் படங்களைச் செய்த பின்னர், படம் பார்த்து கதை சொல் படத்தில் தருணுக்கு தனி நாயகன் வேடம் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஷிகா என்ற கன்னட நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் எதுவும் அவரிடம் இல்லை. விளைவு இப்போது அவர் கைவசம் ஐந்து படங்கள். மயங்கினேன் தயங்கினேன். கண்டுபிடி கண்டுபிடி, பகல் கொள்ளை, முப்பொழுதும் உன் கற்பனைகள், படம் பார்த்து கதை சொல் போன்ற படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

தருண் சத்ரியாவைச் சந்தித்தோம்...

அவர் அளித்த பேட்டி:

எந்தப் பின்னணியில் சினிமாவுக்கு வந்திருக்கிறீர்கள்?

எனக்கு எந்தப் பின்னணியும் இல்லை. வேலூர் மாவட்டத்தில் பொதுவாக கூத்து, நாடகம் என கலைகள் அதிகம். ஆனால் சினிமாவில் இந்த மாவட்டத்துக் கலைஞர்கள் அதிகமாக இல்லை. கடவுள் அருளால் எனக்கு இப்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது. என் தந்தை கன்னடத்தில் படம் எடுத்துள்ளார். ஆனால் அவர் உதவி எதுவும் எனக்குக் கிடையாது.

பெங்களூரில் மியூசிக் ஷாப் வைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் நமக்கு சினிமாதான் சரியாக வரும் என்று தெரிந்தது. அப்படியே ஒரு வருடம் நடிப்புப் பயிற்சி எடுத்தேன். தேவையான அளவு நடனம், ஸ்டன்ட் கத்துக்கிட்டேன். சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடியபோது, நண்பர்கள் மூலம் தருண் கோபி அறிமுகம் கிடைத்தது. நடிகனாகிவிட்டேன்.

வில்லனாக இருந்து ஹீரோவாகிவிட்டீர்கள்... டூயட்டெல்லாம் பாட வேண்டியிருக்குமே.. எப்படி உணர்கிறீர்கள்?

அதாங்க ரொம்ப கஷ்டம். வில்லனா சண்டை போடறது, சவால் விட்டுப் பேசறதெல்லாம் கூட ஓகே. ஆனா டூயட் பாடறது கஷ்டம்தான். டான்ஸ் போடணும், அப்படியே ஜோடியா நடிக்கிறவங்க உணர்ச்சியை கவனிக்கணும், அவங்க பாடி லாங்வேஜுக்கு ஏத்த மாதிரி மாறணும். இதெல்லாம் பெரிய சவால்தான்.

ஹீரோயின் ஷிகாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளதாக செய்திகள் வந்ததே...

அதெல்லாம் இல்லீங்க. இயக்குநர் சொன்னபடி நடித்தேன். உண்மையில் அந்தசக் காட்சிகளில் நடிக்க எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது. டூயட் பாடும்போதுகூட கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது. ஆனா ஷிகா ஏற்கெனவே கன்னடத்துல நடிச்சவங்க. அதனால என் தயக்கத்தைப் போக்கும் வகையில் நடந்துக்கிட்டாங்க.

உங்கள் நடிப்பைப் பார்த்து சக நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள் பாராட்டியிருக்காங்களா...

வெளியில நண்பர்கள்தான் பாராட்டியிருக்காங்க. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் நடிச்சப்போ தயாரிப்பாளர் எஸ்பிபி சரண், 'இயற்கையா நடிக்கிறே... நீ பெரிய இடத்துக்கு வருவே..." என்று பாராட்டினார். இயக்குநர்கள் தருண் கோபி, சுந்தர் சி ஆகியோரும் பாராட்டியுள்ளனர். ஆனா சக நடிகர்கள் யாரும் பாராட்டவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

ஒரு படத்தை ஒப்புக் கொள்ளும் முன் கதை கேட்பீர்களா?

இல்லை. என் ரோல் என்ன என்று மட்டும்தான் கேட்பேன். இன்னும் நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்பது ஒரு காரண்ம். வளர்ந்த பிறகும் கூட, அவசியமென்றால் கதை கேட்பேன். மற்றபடி இயக்குநர்கள் சொன்னதைக் கேட்பேன்.

நடிச்சா இனி ஹீரோதான் என்று ஏதாவது கொள்கை வைத்திருக்கிறீர்களா?

இல்லையில்லை... ஹீரோவோ குணச்சித்திரமோ வில்லனோ... நல்ல வாய்ப்பாக, கதைக்கு தேவையான முக்கிய பாத்திரமாக இருந்தாலும் போதும். ஒவ்வொரு படியாக ஏறி, இந்த சினிமாவில் எனக்கும் ஒரு இடம் இருப்பதை உறுதி செய்துள்ளேன். இதுவே என்னைப் பொறுத்தவரை பெரிய சாதனை. நல்ல வாய்ப்புகளை தேடிப் போய் பயன்படுத்திக் கொள்ளவும் நான் தயார்.

இன்றைய இளம் நடிகர்களில் உங்கள் நண்பர்கள் யார்?

நடிகர்களை விட இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்களில்தான் எனக்கு அதிக நண்பர்கள் உள்ளனர். காரணம், ஆரம்பத்திலிருந்தே நான் அவர்களுடனே இருப்பதால் கூட இருக்கலாம். உண்மையில், காளை முடித்த பிறகு நான் உதவி இயக்குநராக ஏ எம் ரத்னம் தயாரித்த நீ ஓட நான் துரத்த படத்தில் வேலை பார்த்தேன். இதை இயக்கியவரும் தருண் கோபிதான். பின்னர் இந்தப் படம் கைவிடப்பட்டுவிட்டது. எனக்கும் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் வாய்ப்பு வந்தது.

கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என்றார்களே... என்ன நடந்தது?

பத்திரிகைகளில் வந்தது போல அல்ல. அதைவிட மிக சிக்கலான காட்சி. மயங்கினேன் தயங்கினேன் படத்துக்காக கம்பம் பக்கத்தில் ஒரு கிணற்றுத் தண்ணீருக்குள் நான்கு பேருடன் நான் சண்டை போடுவது போல காட்சி. தண்ணீருக்குள் சண்டை போடும்போது, என்னுடன் நடித்தவர்கள் பயத்தில் என் கை, கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இதனால் என்னால் மேலே வந்து கையை ஆட்டி உதவி கேட்கக் கூட முடியவில்லை. நிறைய தண்ணீர் குடித்து மயங்கிவிட்டன். உயிர் போய்விடுமோ என்ற ஆபத்தான கட்டத்தில் ஒரு எம்பு எம்பி தண்ணீருக்கு மேல் கையை ஆட்ட, உடனே என்னைக் கட்டியிருந்த கயிறைப் பிடித்திழுத்தனர். 2 மணி நேரம் மூச்சுப் பேச்சின்றி கிடந்து பின்னர் பிழைத்தேன். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்," என்றார்.
 

நசிருதீன் ஷாவுடன் நடித்தது சவுகரியமாகவே இருந்தது-வித்யா பாலன்


சில்க் ஸ்மிதாவின் கதையாக கூறப்படும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்துள்ள வித்யா பாலன், அதிக வயதான நசிருதீன் ஷாவுடன் இணைந்து நடித்தது எந்த சங்கடத்தையும் தனக்கு ஏற்படுத்தவில்லை என்றும், மிகவும் சவுகரியமாகவே தான் உணர்ந்ததாக கூறியுள்ளார்.

இருவரும் இணைந்து நடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்துள்ளார் வித்யா என்கிறார்கள். எனவே நசிருதீன் ஷாவுடன் இணைந்து நடித்தபோது வித்தியாசமாக இருந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குத்தான் மேற்கண்டவாறு பதிலளித்தார் வித்யா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் ஷூட்டிங்கின்போது தெரியவில்லை. அதுகுறித்து நான் கவலைப்படவும் இல்லை. மேலும் இது ஒன்றும் ஆபாசப் படம் அல்ல. அருமையான கதையுடன் கூடிய படம்தான்.

நசிருதீன் ஷா போன்ற பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கும்போது நமக்கு நடிப்பு எளிதாகி விடுகிறது. அவர் மிகச் சிறந்த நடிகர். முன்பும் கூட அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். எனவே எனக்கு எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. அவருடன் நடிப்பது மிகவும் சவுகரியமான ஒன்றாகவே இருக்கிறது என்றார் வித்யா.

ஏற்கனவே இருவரும் இணைந்து இஷ்கியா படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

டர்ட்டி பிக்சர்ஸ் படம் டிசம்பர் 2ம் தேதி திரைக்கு வருகிறது. அன்றுதான் சில்க் ஸ்மிதான் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள்வியும் கமலின் அதிரடி பதிலும்


ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு அது. நடிகர் கமல்ஹாசன்தான் இதன் தலைவர் என்பதால், அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், இணையதளங்கள் திரைப்படத்துறைக்கு எந்த அளவு உறுதுணையாக உள்ளன என்பதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதிலளித்த கமல், எல்லா மேடைகளிலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவரும் என்னிடம் எதற்கு இந்த கேள்வி. நானே விரைவில் இணையதளப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நான் உங்கள் கட்சி, என்றார்.

அடுத்து ஒரு நிருபர், ரஜினி, நீங்க, பாலிவுட்ல அமிதாப் பச்சன் போன்றவர்கள் எல்லாம் ஓய்வு பெறலாமே, என்றார்.

சற்றும் தயங்காமல் கமல் அளித்த பதில்:

ஏன்...நீங்கள் எதற்காக வருகிறீர்கள்.. வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே!, என்று பதிலளிக்க அத்தோடு நிருபர் அமைதியாகிவிட்டார்!
 

கோலிவுட்டில் மீண்டும் களமிறங்க ஆசை : பிரியங்கா சோப்ரா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். பாலிவுட்டில் அசத்தி வரும் பிரியங்கா முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது தமிழில் தான். இளைய தளபதி விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா, பாலிவுட் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி தவிர எந்த ஒரு மொழி படத்தையும் அவர் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. இதனையடுத்து, இந்தி பட ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்த பிரியங்கா, மீண்டும் தமிழ் படத்தில் ஆசையாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சரியான கதை தமிழில் அமைந்தால் நான் மீண்டும் தமிழில் நடிப்பேன் என்று அவர் கூறினார்.


 

"3" படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கெஸ்ட் ரோல் கிடையாது?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. '3' படத்தின் 'why this kolaveri di' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வருவதா, படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சியில் உள்ளது. எல்லா தகவலை விட தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல் தான் ரொம் எத்£பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில்  தனது அப்பாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா முயிற்சி எடுத்து வருகிறார் என செய்திகள் வெளியாகின. சமீபத்தில் இந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ரா 1' படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் தன் மகள் கேட்டுக்கொண்டால் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் '3' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கமாட்டார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இதனால் '3' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கெஸ்ட் ரோலில் நடிப்பது வதந்தி என தெரியவந்துள்ளது.


 

மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு சிறை


லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான மருத்துவர் கான்ராட் முர்ரேவிற்கு நான்காண்டு சிறை தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவர் மீது ஜாக்சன் வைத்திருந்த நம்பிக்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பாப் உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். வலி நிவாரணி மருந்தை அவரின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகமாக எடுத்து கொண்டதே மரணத்துக்கு காரணமாக கூறப்பட்டது. அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனை பரிசோதித்த மருத்துவர்கள் வலிநிவாரணி மருந்தை அதிகம் உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என கூறினர்.

இதற்கு அவரது குடும்ப மருத்துவரான முர்ரே கொடுத்த ஆலோசனை தான் என கூறப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடந்த 7ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறி தீர்ப்பு வழங்கியது. முர்ரேவின் கவனக்குறைவாலேயே மைக்கேல் ஜாக்சன் மரணமடைய நேரிட்டது என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு ஆண்டு தண்டனை

இதைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையன்று தண்டனையை அறிவித்த நீதிபதி முர்ரே தனது ஐ போனில் மைக்கேல் ஜாக்சனுடன் பேசிய உரையாடலை 6 வாரங்கள் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த பதிவில் ஜாக்சனுக்கு அளவுக்கதிகமான மருந்துகளை மருத்துவர் அளித்தது தெளிவாகியுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த உரையாடல் பதிவை ஊடகங்களுக்கு அளித்து அதன் மூலம் முர்ரே பணம் சம்பாதிக்க நினைத்திருந்தது நிரூபணமாகிறது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

முர்ரே செய்த தவறுக்காக அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. மேலும் நூறு மில்லியம் டாலர் அபராதமாக அவர்களின் மூன்று குழந்தைகளுக்கு வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் அவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.

அதிகபட்ச தண்டனை தேவை

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்சனின் தாயார் காத்ரீனா, நான்காண்டு தண்டனை மட்டும் போதாது என்று கூறியுள்ளார். இந்த தண்டனை தனது மகனை மீண்டும் உயிர்பிழைக்க வைக்காது என்று கூறிய அவர், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்களுக்கு இந்த தீர்ப்பு சற்றே ஆறுதல் அளிக்கும் என்று நம்பலாம்.
 

காந்தம் பட இசை வெளியீடு


காந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.

காந்தம் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாக நடிக்கிறார் தேஜ். இவர் ஏற்கெனவே கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் நாயகனாக நடித்தவர். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் ரஷ்மி.

அன்பால் அனைவரையும் ஈர்க்க முடியும்... அன்பே அத்தனைப் பிரச்சினைக்கும் சரியான தீர்வு என்பதை இந்தப் படம் சொல்கிறது என்கிறார் இயக்குநர் ஷரவணா. இவருக்கும் இது முதல் படம்.

இந்தப் படத்தில் மலேஷியாவைச் சேர்ந்த நடிகை பூவேஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரேம் சங்கர் ஒளிப்பதிவு செய்ய, பிரதாப் இசையமைத்துள்ளார்.

இதே படம் அயஸ் காந்தம் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது.

காந்தம் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை அபிராமி மெகா மாலில் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினர்.
 

நடிகர் ரவீந்தர் தலைமையில் கோவாவில் மலையாள பத்திரிக்கையாளர்கள் அடாவடி- தமிழகத்தினர் பதிலடி


சென்னை: கோவாவில் நடந்து வரும் 42வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் நடித்துப் பிரபலமான கேரளாவைச் சேர்ந்த நடிகர் ரவீந்தர் தலைமையில் கேரளத்து பத்திரிக்கையாளர்கள் சிலர் கூடி ஊர்வலமாகப் போய் முல்லைப் பெரியாறு அணை இடியப் போகிறது என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்து கொந்தளித்து விழாவுக்கு வந்திருந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்ற கோஷத்துடன் பதிலடி ஊர்வலம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென 50க்கும் மேற்பட்ட தமி்ழ் மாணவர்கள் கூடியதால், மலையாளத்துப் பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பனாஜியில் 42வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் டேம் 999 படத்தைத் திரையிட கேரளாவைச் சேர்ந்த சிலர் முயற்சித்தனர். ஆனால் அதை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முறியடித்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் 30 பேர் கூடி ஊர்வலமாக சென்றனர். முல்லைப் பெரியாறு அணை இடியப் போகிறது. அதை இடிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இந்த திடீர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் நடிகர் ரவீந்தர்.

இவர் வேறு யாருமல்ல, ஒரு தலைராகம், சகலகலாவல்லவன், தங்கமகன் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் அந்தக் காலத்தில் வில்லனாக நடித்தவர். தமிழ் சினிமாவில் நடிக்கப் போய்த்தான் இவர் பிரபல நடிகராக மாறினார். அடிப்படையில் இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்தத் திடீர் போராட்டத்தைப் பார்த்து வெகுண்டனர், விழாவுக்கு வந்திருந்த பல்வேறு பகுதி திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். அதிரடியாக 50க்கும் மேற்பட்டோர் கூடி, அவர்களும் ஒரு ஊர்வலத்தை நடத்தினர்.

8 ஆயிரம் ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும், அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும், அன்பிற்குரிய கேரள மக்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க வேண்டும், அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி? என்று அவர்கள் கோஷமிட்டதால் கேரள போராட்டக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் போராட்டங்களால் விழா நடந்த இடத்தில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது.

அத்தோடு நிற்காத தமிழ் மாணவர்கள், அங்கு கூடியிருந்த சர்வதேச பத்திரிக்கையாளர்கள் இந்திய பத்திரி்ககையாளர்களை திரட்டி அவர்களிடம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உண்ணை நிலவரத்தை விளக்கிக் கூறினர்.

இதற்கிடையே போலீஸார் விரைந்து வந்து தமிழ் மாணவர்களைக் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் முதலில் கேரள குழுவினரை கலைந்து போகச் சொல்லுங்கள். அவர்கள் போனால்தான் நாங்கள் போவோம். அவர்கள் போராட்டம் நடத்தினால் நாங்களும் நடத்துவோம் என்று உறுதிபடக் கூறி விட்டனர். இதையடுத்து கேரளக் குழுவினர் கலைந்து போனார்கள். அதன் பிறகே தமிழ் மாணவர்களும் கலைந்து சென்றனர்.

கேரளக் குழுவினரின் திடீர் போராட்டத்தால் நிலை குலைந்து போகாமல் டக்கென திரண்டு தமிழ் மாணவர்கள் நடத்திய பதிலடி போராட்டத்தால் அங்கிருந்தவர்கள் வியப்பில் மூழ்கினர்.
 

தமிழ் சினிமா ரொம்ப மாறிடுச்சி! - தேவயானி


தமிழ் சினிமா ரொம்பவே மாறிடுச்சி.. இனி நல்ல வாய்ப்பு வந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன். இல்லாவிட்டால் டிவியே போதும், எனகிறார் நடிகை தேவயானி.

கும்பகோணத்தில் படப்பிடிப்புக்காக வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், "சினிமாவில் முன்பு பிஸியாக இருந்தேன். தற்போது 'திருமதி தமிழ்' என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தற்கால சமுதாய நடப்புகளை வெளிப்படுத்தும் கதை இது.

மேலும் பல தமிழ்படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால் நான் தமிழ்ப் படங்களை ஒப்புக் கொள்வதில்லை.

தமிழ் சினிமா முன்ன மாதிரி இல்லை. ரொம்பவே மாறிடுச்சி. புதிய படங்களின் தயாரிப்பு மற்றும் கதையம்சம் இப்படி மாறிப்போகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

ஏதாவது நல்ல கதையம்சங்களுடன் உள்ள படங்கள் வந்தால் நான் நிச்சயம் ஒப்புக் கொள்வேன்.

திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும் இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ் ரசிகர்களை மறக்க முடியாது.

நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு கடமைப்பட்டவள். சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தக் காரணம், இதில் உள்ள வசதி. எக்கச்சக்க ரசிகர்கள். சினிமாவில் சொல்ல முடியாத பல விஷயங்களை சின்னத் திரையில் சொல்ல முடிகிறது," என்றார்.
 

பிசியாக இருக்கும் அஞ்சலி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கண்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், 'கரிகாலன்'. சரித்திரப் பின்னணி கதை கொண்ட இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இதில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் அஞ்சலி. 'தற்போது வசந்தபாலனின் 'அரவான்', விமலுடன் 'மசாலா கபே' படங்களில் நடித்து வருகிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் நான்தான் ஹீரோயின். 'கரிகாலன்' படத்தில் ஏற்றுள்ள கேரக்டருக்காக, குதிரை சவாரி, வாள் வீசும் பயிற்சி பெற்று வருகிறேன். டிசம்பர் 10ம் தேதி முதல், ஐதராபாத்தில் விக்ரமுடன் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாகிறது' என்றார் அஞ்சலி.


 

சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு வைத்து 'வடசென்னை' என்ற படத்தை இயக்குகிறார். இயக்குனர் வெற்றிமாறன் 'ஆடுகளம்' ஹிட்டுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால், இப்போதிருந்தே 'வடசென்னை' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கிறார். இதற்கிடையில் சிம்புக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்து வரும் ஆ‌ண்ட்‌ரியா, வடசென்னை படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.


 

அந்துருண்டை கண்ணழகி

 

டுவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் நான் இல்லை : நயன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நயன்தாரா பெய‌ரில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி போலியாக செய்திகள் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைமில் புகார் தந்துள்ளார் நயன்தாரா.
டுவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் நயன்தாரா இல்லை. ஆனால் சில விஷமிகள் நயன்தாரா பெய‌ரில் அக்கவுண்ட் ஓபன் செய்து அவர் பெய‌ரில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இது நடிகை நயன்தாராதான் என்று நினைத்து ரசிகர்களும் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் டேம் 999 படத்துக்கு நயன்தாரா ஆதரவு அளித்தது போல் அதில் செய்தி வெளியிட்டுள்ளனர். விஷயம் விப‌‌ரீதமாவதை அறிந்த நயன்தாரா தனது பெய‌ரில் இணையத்தில் இயங்கி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைமில் புகார்



 

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகா தேர்வு!

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, ராணா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படத்தில் சிம்புவுடன், தெலுங்கு நடிகர் ராணா நடிக்கிறார். தனுஷ், டாப்ஸி நடித்த 'ஆடுகளம்' படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம், 'வடசென்னை'. இதில் சிம்பு, தெலுங்கில் 'லீடர்' படத்தில் நடித்த ராணா நடிக்கிறார்கள். ஹீரோயின்களாக திவ்யா, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம், இதுவரை பார்க்காத வடசென்னையின் இன்னொரு முகத்தை காட்டும் என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.


 

பாலிவுட்டுக்கு போகும் "அக்னி நட்சத்திரம்"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 1988ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, சூப்பர் ஹிட் படமான ''அக்னி நட்சத்திரம்' பாலிவுட்டுக்கு செல்கிறது. இந்தி நடிகர் அஜய் தேவகன் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவரே படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு-கார்த்திக் நடித்த இந்த படம், இருதாய் வயிற்றில் பிறந்த சகோதர்களின் மோதல் அழகாக காட்டினார் மணிரத்னம். இதனையடுத்து இந்தி ரீமேக்கையும் மணிரத்னம் இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. இதனைய அஜய் தேவகன் முழுமையாக மறுத்துள்ளார். படத்தை ரோஹித் செட்டி இயக்குகிறார்.



 

"டர்ட்டி பிக்சர்" சில்க் கதை இல்லை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை, 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் படமாக எடுத்துள்ளனர். இதற்காக சில்க் ஸ்மிதாவின் படங்களைப் பார்த்தும் அவரிடம் நெருங்கி பழகியவர்களிடம் பல தகவல்களை சேகரித்து அதை படமாக்கியுள்ளனர். இதில் சில்க் ஸ்மிதாவாக, இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சில்க் ஸ்மிதாவின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் வித்யா பாலன், திடீரென பல்டி அடித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகையை பற்றிய கதைதான் இது. ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை அல்ல. சில்க் என்ற பெயரில் நடனக் கலைஞராக நான் நடிக்கிறேன். சூரியகாந்த் என்ற கேரக்டரில் நஸ்ரூதின் ஷா நடிக்கிறார். அவர் சீனியர் நடிகர். இருந்தாலும் அவருடன் நடிக்கும்போது அந்த கேரக்டரைத்தான் பார்த்தேன். எண்பதுகளில் நடப்பது போல் படத்தின் கதை செல்வதால் அந்த காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் எந்த மாதிரியான உடை அணிந்தார்களோ அது படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் முழுவதுமாக, நூறு உடைகள் அணிந்து நடித்துள்ளேன். படத்தில் மெசேஜ் என்று எதுவும் இல்லை. என்டர்டெயின்ட்மென்ட்டாக இருக்கும். இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


 

தெலுங்கிற்கு செல்லும் தபாங் படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியில் சல்மான் கான் நடித்த 'தபாங்' சூப்பர் ஹிட்டானதுடன், வசூல் சாதனையும் புரிந்தது. இந்நிலையில் 'தபாங்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஒஸ்தி'-யில் சிம்பு நடித்துள்ளார். தரணி இயக்கியுள்ளார். டிசம்பர் 8ந் தேதி 'ஒஸ்தி' வெளியாகிறது. இதனையடுத்து இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்கிறார். சோனாக்‌சி சின்காவின் வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.



 

இந்திக்கு செல்கிறார் ரிச்சா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மயக்கம் என்ன, ஒஸ்தி என தமிழில் தன் கேரியரை ஓப்பனிங் செய்திருக்கும் ரிச்சாவிற்கு அதற்குள் பாலிவுட் வாய்ப்புகள் வந்துள்ளன. அதுவும் தமிழ் இயக்குனர் இயக்கத்தில். யார் அந்த இயக்குனர் தெரியுமா?... நம்ம சுசி கணேசன். கந்தசாமி படத்திற்கு பிறகு, தமிழில் அடுத்த பட வாய்ப்புகள் வராததால், தனது முந்தைய படமான 'திருட்டுப்பயலே' படத்தை இந்தியில் எடுக்க திட்டமிட்டார் சுசி. படத்தின் சோனியா அகர்வால் கதாபாத்திரத்துக்கு தமிழில் ரிச்சாவிடம் சுசி கேட்டுள்ளதாக தெரிகிறது.


 

பிரசாந்த் எதிர்பார்த்த பிரேக் மம்பாட்டியான் படத்தில் கிடைக்கும் : தியாகராஜன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தியாகராஜன் நடிப்பில் 28 வருடங்களுக்கு முன் வெளியான மலையூர் மம்பட்டியானைதான் மம்பட்டியா‌ன் என்ற பெய‌ரில் பிரசாந்தை வைத்து ‌ரீமேக் செய்திருக்கிறார் தியாகராஜன். தயா‌ரிப்பும், இயக்கமும் தியாகராஜன். இந்த‌க்கால இளைஞர்களுக்குப் பிடிக்கும் வகையில் படத்தை எடுத்திருக்கிறேன். பிரசாந்த் எதிர்பார்த்த பிரேக் இந்தப் படத்தில் அவருக்கு கிடைக்கும் எனவும் தியாகராஜன் நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார்.


 

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதுபடம் 'கோச்சடையான்'. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார்.  இதனையடுத்து படத்தின் ஹீரோயின் பற்றி புதுதகவல் வந்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. கோலிவுட் வேகமாக பரவி வரும் இந்த செய்திக்கு இதுவரை, படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே இந்த செய்தி வதந்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


 

நடிகையின் வாக்குமூலம் கற்பனை கதைதான்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒரு நடிகையின் வாக்குமூலம்' கற்பனை கதைதான் என்று சோனியா அகர்வால் கூறினார். 'புன்னகை பூ' கீதா தயாரிக்கும் படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'. சோனியா அகர்வால் நடிக்கும் இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு வெளியிட்டனர். பின்னர் சோனியா அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்கிறேன். ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பது போல், நடிகையின் வாழ்க்கையிலும் இருக்கும். என் வாழ்க்கையிலும் இருக்கிறது. கண்டிப்பாக அதை சொல்ல மாட்டேன். இந்தப் படத்தின் கதைக்கும், என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. இது கற்பனைக் கதை. இந்தியில் 'டர்ட்டி பிக்சர்' ரிலீசாகிறது. தமிழில் இப்படம் உருவாகி, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் இதுபோன்ற கதையுடன் படம் வந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்த விஷயம்தான். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ராஜ்கபூர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமலன் தொகுத்து வழங்கினார். இறுதியில் ராஜ்கிருஷ்ணா நன்றி கூறினார்.


 

இலியானா வேண்டாம் தெலுங்கு ஹீரோ பிடிவாதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு ஹீரோ ஜுனியர் என்டிஆரோடு இலியானா நடித்த படம், 'சக்தி'. இது தமிழிலும் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடித்தபோது பலவிதமான பிரச்னைகளை சந்தித்ததாகப் புகார் கூறினார் இலியானா. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 'சொன்ன கதை ஒன்று எடுத்த கதை ஒன்று' என்று இயக்குனரையும் ஜூனியர் என்டிஆரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், சீனு வைட்லா இயக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக, இலியானாவிடம் கேட்கலாம் என்று இயக்குனர் கூறினார். கடுப்பான ஹீரோ, 'தயவு செய்து இலியானா வேண்டாம். வேறு யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாகப் போட்டுக்கொள்ளுங்கள்'என்றாராம். தெலுங்கு பட உலகில் இச்செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'இலியானாவும் ஜூனியர் என்டிஆரும் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளனர். அவர்களுக்குள் பிரச்னை ஏதும் இல்லை. இந்தப் படத்தில் கண்டிப்பாக இணைவார்கள்' என்கிறது இலியானா தரப்பு.


 

காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடினார் திவ்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதலருடன் தனது பிறந்த நாளை கேரளாவில் நேற்று கொண்டாடினார் திவ்யா. திவ்யாவுக்கு நேற்று 29வது பிறந்த நாள். இதை தனது காதலர் ரபேலுடன் கொண்டாட விரும்பினார் திவ்யா. இதையடுத்து கடவுளின் தேசமான கேரளாவுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.  அவர் கூறியதாவது: கோவாவை விட கேரளாதான் மிகவும் அழகானது. அதனால் எனது இந்த பிறந்த நாளை அங்கு கொண்டாட முடிவு செய்தேன். இன்னும் சில நாட்கள் கேரளாவில் ஓய்வெடுக்க இருக்கிறேன். இப்போது கன்னடத்தி உபேந்திராவுடன் 'கடரி வீரா' என்ற படத்தில் நடிக்கிறேன். 2டி மற்றும் 3டியில் இந்தப் படம் உருவாகிறது. ஒவ்வொரு ஷாட்டும் இரண்டு முறை எடுக்கப்படும். இதில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இதில் இந்திரக் கடவுளின் மகளாக நான் நடிக்கிறேன். இதற்கான மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்கு பல மணிநேரங்கள் ஆகும். இதில் எமனாக அம்ப்ரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு படமும் கன்னடத்தில் சில படங்களும் நடிக்கிறேன்.


 

மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி நடிக்கும் புதுப்படத்துக்கு ''கோச்சடையான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ''கோச்சடையான்' இந்தியாவில் தயாராகும், நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3டி படமாகும். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாரான 'அவதார்', ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் உருவான 'டின் டின்' ஆகிய படங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் 'கோச்சடையான்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தர்யா அஸ்வின் இயக்குகிறார். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்குகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த படத்தில் பாண்டிய நாட்டு மன்னனாக நடிக்கிறார். கிபி.670 முதல் கிபி -710 ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பெயர் 'கோச்சடையான்'. கோ என்றால் அரசன், சடையான் என்றால் சிவன் பக்தர் என்று அர்த்தமாம் ஏற்கனவே தீவிர சிவன் பக்தனான சூப்பர் ஸ்டார், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என தனது முந்தைய படங்களில் சிவனை குறிப்படும் பெயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் தல!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கக்கூடும் என்கிறார்கள். பில்லா 2 ல் கவனம் செலுத்தி வரும் அ‌ஜீத், அடுத்து விஜயா புரோடக்ஷன் நாகரெட்டி சார்பில் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். ஹீரோயினாக அனுஷ்கா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



 

அம்மா ஆனார் அனிதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'தாய்வீடு', படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை அனிதா ராஜ். கமல்ஹாசன், சஞ்சய் தத், தர்மேந்திரா உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இதுபற்றி அனிதா ராஜ் கூறியதாவது: 1981ம் வருடம் 'பிரேம் கீத்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானேன். பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2007ம் ஆண்டு, 'தொடீ லைஃப் தொடா மேஜிக்' என்ற படத்தில் ரீ என்ட்ரி ஆனேன். அந்தப் படத்தை மக்கள் பார்க்கவில்லை. அதனால் நல்ல கேரக்டருக்காக காத்திருந்தேன். இப்போது சமீர் கார்னிக் இயக்கும் 'ஜார் தீன் கி சாந்தினி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். ஹீரோவுக்கு அம்மாவா என்பதை இப்போது நான் சொல்ல இயலாது. அதை இயக்குனர்தான் சொல்ல வேண்டும். படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு அனிதா ராஜ் கூறினார்.


 

கிசு கிசு - ஹீரோ மீது நடிகைகள் உர்ர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஜெயிக்கிற ஹீரோவோடு லவ்வுன்னு வந்த கிசுகிசுவை கேட்டு திக்கான அங்காடி ஹீரோயின், உடனே மறுத்தாரு. பதிலுக்கு ஹீரோவோ ஒரு படி மேல போயி, 'நான் நடிகையை மணக்க மாட்டேன்'னு சொன்னாரு... சொன்னாரு... இதனால சில ஹீரோயினுங்க கோபமாயிட்டாங்களாம். 'நடிகையின்னா மரியாதைக்குறைவா போச்சாÕன்னு கேட்கிறாங்களாம்... கேட்கிறாங்களாம்... இதை கேள்விப்பட்ட ஹீரோ, 'நடிகைகளை தப்பா சொல்லணும்னு இப்படி சொல்லல. வீட்ல பாக்குற பெண்ணைத்தான் கட்டிக்குவேனுங்கிற அர்த்தத்துலதான¢ அப்படி சொன்னேன்'னு புது விளக்கம் தர்றாராம்...தர்றாராம்...  

வெற்றியான இயக்கம், தன்னோட படத்துக்கு ஆண்ட ஹீரோயினை நடிக்க கேட்டாராம். அவரும் ஓகே சொல்லிட்டாராம். ஆனாலும் படத்துக்கு ஹீரோயினை தேடிட்டிருக்கேன்னு இயக்கம் சொல்றாராம். இது பற்றி கேட்டா, படத்துல ஆண்ட நடிகை செகண்ட் ஹீரோயின்தான்னு சொல்றாராம். இதை கேள்விப்பட்டு நடிகை ஷாக் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...

செல்வ இயக்கத்தோட தவுசண்ல ஒருத்தன் செகண்ட் பார்ட்ல பைய நடிகரு நடிக்கலையாம்... நடிக்கலையாம்... வேற யார்கிட்ட வருஷ கணக்குல கால்ஷீட் வாங்குறதுன்னு இயக்கம் யோசிச்சாராம். ஒரே சாய்ஸ் தன்னோட பிரதர் நடிகர்தான்னு முடிவு பண்ணிட்டாராம். இப்பவே பிரதர் நடிகர்கிட்ட ஸ்கிரிப்ட் பற்றி பேசி கால்ஷீட்டுக்கு பிராக்கெட் போட ஆரம்பிச்
சிட்டாராம்... ஆரம்பிச்சிட்டாராம்...