எனது இயக்குநர்களில் பெஸ்ட் வெங்கட் பிரபுதான்! - அஜீத்


என்னை இதுவரை இயக்கியவர்களில் பெஸ்ட் என்றால் வெங்கட் பிரபுதான். அவர் மிகச் சிறந்த தொழில்முறை இயக்குநர், என்று நடிகர் அஜீத் கூறியுள்ளார்.

தனது 50 வது படமான மங்காத்தா குறித்து அஜீத் முதல் முறையாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்தப் படம் குறித்தும் அதன் இயக்குநர் குறித்தும் பெரிதாக பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், "வெங்கட் பிரபு ஒரு தொழில்முறை இயக்குநர். மிகப் பக்குவமானவர். அவரோடு பணியாற்றிய நாட்கள் இனிமையானவை. அனைவரையும் அனுசரித்து வேலை வாங்குவதில் வெங்கட்டுக்கு நிகர் யாருமில்லை.

நான் இதுவரை வேலைபார்த்த இயக்குநர்களிலேயே பெஸ்ட் என்றால் வெங்கட்டைத்தான் சொல்வேன்.

இந்தப் படத்தில் நான் வினாயக் மாதவன் என்ற ரோலில் வருகிறேன். பணம் பணம் பணம் என்று பணத்தையே குறியாகக் கொண்ட கேரக்டர் அது. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு மோசமான கேரக்டர் அது. நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்," என்று கூறியுள்ளார்.

அஜீத்துக்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் போலீஸ்... மற்றவர், மேலே நீங்கள் படித்த கேரக்டர்தான்!
 

வேறு மொழியில் நடிக்க நேரமில்லை : தமன்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வேறு மொழியில் நடிக்க நேரமில்லை : தமன்னா

7/18/2011 4:26:33 PM

தமன்னா கூறியது: அஜய் தேவ்கன் நடிக்கும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நான் நடிக்கப்போவதாக செய்திகள் வருகிறது. அதில் அணு அளவுகூட உண்மை இல்லை. இது பற்றி என்னிடம் யாரும் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இப்படிப்பட்ட செய்திகளை காற்றுவாக்கில் கேள்விப்பட்டு சிலர் பரப்புகிறார்கள். இதனால் தென்னிந்திய பட வாய்ப்புகள் பாதிக்குமா எனத் தெரியாது.
தற்போது தெலுங்கில் நடித்து வரும் படங்களில் பிஸியாக இருப்பதால் வரும் 2012 மார்ச் வரை வேறு எந்த மொழிப்படத்திலும் நடிப்பதற்கு கால்ஷீட் இல்லை என்பதுதான் உண்மை. இதுதவிர வரும் ஆண்டில் பெரிய பேனர்கள் தயாரிக்கும் படங்களில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.




 

கிசு கிசு - ஹீரோ மார்க்கெட்டல் இயக்குனர் ஏமாற்றம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ஹீரோ மார்க்கெட்டல் இயக்குனர் ஏமாற்றம்

7/18/2011 4:25:31 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஊர் பேர்ல படம் இயக்குற அரச இயக்கம், பரத ஹீரோ படத்தை முடிக்க முடியாம திணற¤ட்டிருக்காராம்... இருக்காராம்... ஹீரோவோட மார்க்கெட் எப்படியாவது உசரும், படத்தை வித்துடலாம்னு நினைச்சவருக்கு ஏமாற்றம்தான் மிச்சமாம்... மிச்சமாம்...

பிரகாச வில்லன் நடிகரை புக் பண்றதுக்கு இயக்குனருங்க ரொம்ப யோசிக்க¤றாங்களாம்... யோசிக்க¤றாங்களாம்... Ôஎல்லா படத்துலேயும் ஒரே பாணில வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் இருக்கு. கொஞ்சம்கூட மாத்த முடியல. பாக்க¤றவங்க போரா பீல் பண்றதால புது வில்லன்களை தேட ஆரம்பிச்சிருக்கோம்Õனு இயக்குனருங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்... இதனால பாலிவுட், சான்டல்வுட்ல நடிக்கிற வில்ல நடிகர்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருக்காம்... ஏற்பட்டிருக்காம்...

தல நடிகரு படத்துல நடிக்க விமல நடிகை முதல்ல ஓகே சொல்லியிருந்தாரு. திடீர்னு கால்ஷீட் இல்லேன்னு சொல்லி விலகிட்டாரு... விலகிட்டாரு... படத்துல புதுமுக நடிகைக்குதான் முக்கியத்துவம் இருக்காம்... இருக்காம்... இது தெரிஞ்சதாலதான் நடிகை விலகிட்டாராம்... விலகிட்டாராம்...




 

சொல்லாத காதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சொல்லாத காதல்

7/18/2011 12:37:51 PM

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமன் இயக்கும் படம், 'இளமை நாட்கள்'. படம் பற்றி அவர் கூறியதாவது: டைரக்டர் பூபதி பாண்டியனின் தம்பி அர்ஜுன் பிரபுவுடன் சேர்த்து, 8 இளைஞர்கள் இதில் அறிமுகமாகிறார்கள். 3 இளைஞிகள். இதில், 'தேநீர் விடுதி' ரேஷ்மி ஒருவர். மற்றொருவர், எனது 'ப்ரியமான தோழி'யில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்வேதா. தவிர, இன்னொரு பெண் அறிமுகமாகிறார். மற்றபடி என் படத்தில் தெரிந்த முகங்கள் யாரும் இல்லை. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பால்ராஜ் இசை. நா.முத்துக்குமார், பா.விஜய், தமிழமுதன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதுவரை சொல்லாத காதலை, இதில் சொல்லியிருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 21 வருடங்களாகி விட்டது. இதற்குமுன் நான் இயக்கிய படங்களில், ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்யச் சொல்லி பலர் வற்புறுத்துகின்றனர். அதில் உடன்பாடு இல்லை. ஏற்கனவே செய்த விஷயத்தை மறுபடியும் செய்வதில் ஈடுபாடு இருக்காது. புதுப்புது கதையை இயக்கவே விரும்புகிறேன்.

 

"ஒரு நடிகையின் வாக்குமூலம்" எந்த ஹீரோயினின் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒரு நடிகையின் வாக்குமூலம்' எந்த ஹீரோயினின் கதை

7/18/2011 12:35:18 PM

செவன் சன் மூவி, எஸ்.எஸ்.ஏ மூவி நிறுவனங்கள் சார்பில் கே.பிரசாந்த் தயாரிக்கும் படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'. ஒளிப்பதிவு, நாக கிருஷ்ணன். இசை, ஆதிஷ், பாடல்கள், நா.முத்துக்குமார். ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதன் தொடக்க விழா சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. பிரபல நடிகை கேரக்டரில் நடிக்கும் சோனியா அகர்வால், நிருபர்களிடம் கூறியதாவது: மலையாளத்தில் ஒரு படம், தமிழில், 3 படங்கள் என மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளேன். சினிமாவில் நடிக்கும் ஹீரோயின், மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார். அதிக பணம் சம்பாதிக்கிறார். இதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்? எத்தனை சவால்களை சந்தித்து இருப்பார் என்பதை மாறுபட்ட திரைக்கதையுடன் இப்படம் சொல்கிறது. நான், பிரபல ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக எந்த நடிகையையும் இன்ஸ்பிரேஷனாக நினைக்கவில்லை. அப்படி யாரையாவது மனதில் நினைத்தால், நடிக்கும்போது அவருடைய ஸ்டைல் வந்து விடும் என்பதாலேயே தவிர்த்தேன்.

ஒரு நடிகையின் வாழ்க்கையிலுள்ள எல்லா பக்கங்களையும் இப்படம் சொல்கிறது. என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களுக்கும், இப்படத்தின் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். ரிலீசுக்குப் பிறகு இப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும். தனிப்பட்ட எந்த நடிகையைப் பற்றியும் சொல்லும் கதை அல்ல. எனது அம்மா வேடத்தில் மலையாள நடிகை ஊர்மிளா, ஹீரோவாக புதுமுகம் நடிக்கின்றனர். இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார். ராஜ்கிருஷ்ணா கூறுகையில், 'இப்படத்தின் கதை, பழம்பெரும் நடிகை காஞ்சனாவின் கதை என்பது சரியல்ல. இப்படத்தை பார்க்கும்போது, இது அந்த நடிகையின் கதையாக இருக்குமோ? இந்த நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும்' என்றார்.




 

தமிழில் வில்லன் இந்தியில் காமெடியன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் வில்லன் இந்தியில் காமெடியன்!

7/18/2011 12:26:53 PM

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 150 படங்களில் நடித்தவர் பெசன்ட் ரவி. இப்போது 'சிங்கம்' மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். அவர் கூறும்போது, ''தமிழ் 'சிங்கம்' படத்தில் அனுஷ்காவை கிண்டல் செய்து, சூர்யாவிடம் அடி வாங்கும் கேரக்டர். இதே கேரக்டரில் இந்தியில் நடிக்கிறேன். இதன் இயக்குனர் ரோஹித் ஷெட்டி, அடுத்து இயக்கும் 'போல் பச்சன்' படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்'' என்றார்.




 

சிலம்பம், களறி கற்கிறார் சரண்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிலம்பம், களறி கற்கிறார் சரண்யா

7/18/2011 12:31:49 PM

நடிகை சரண்யா நாக், கூறியதாவது: நான் நடித்துள்ள 'மழைக்காலம்' பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து 'யாத்தீ' என்ற படத்தில் நடிக்கிறேன். இதை யாசிக் இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. தெருக்கூத்தாடிகளுக்கும் கிராமத்தில் இருக்கும் சாதாரண பெண்ணுக்கும் ஏற்படும் நிகழ்வுகள், பிரச்னைகள் பற்றிய கதை. முழுக் கதையும் என்னைச் சுற்றி நிகழ்கிறது. இந்தப் படம் என் நடிப்பின் இன்னொரு பரிணாமத்தைக் காட்டும். 'பேராண்மை' படத்துக்காக பாண்டியன் மாஸ்டரிடம் தற்காப்பு கலைகளை கற்றேன். அதை அப்படியே விட்டுவிடாமல் தொடரலாம் என்று முடிவு செய்ததால், இப்போதும், 'சிலம்பம்' கற்று வருகிறேன். இதை முடித்துவிட்டு 'களறி' கற்க இருக்கிறேன். இவற்றை கற்பதன் மூலம், ஆக்ஷன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன். 




 

மார்க்கெட் இல்லாத நடிகர்களை யாரும் மதிப்பதில்லை:விவேக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மார்க்கெட் இல்லாத நடிகர்களை யாரும் மதிப்பதில்லை:விவேக்

7/18/2011 12:24:35 PM

24 பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் Ôதம்பி வெட்டோத்தி சுந்தரம்Õ. கரண், அஞ்சலி நடிக்கிறார்கள். வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். வித்யாசாகர் இசை. படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகர் விவேக் பேசியது: வெற்றி பெற்றால்தான் சினிமா உலகம் கை கொடுக்கும். மார்க்கெட் இல்லாத நடிகர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என விசாரிக்க கூட மாட்டார்கள். நடிகர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் என நினைக்கிறார்கள். அவ்வளவு சம்பளம் வாங்கும் நிலையை அடைய அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை. அவர்கள் வடித்த ரத்தகண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை. இவ்வாறு விவேக் பேசினார். விழாவில் இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், சுசீந்திரன், ராஜேஷ், சீனு ராமசாமி, பிரபுசாலமன், பேரரசு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தனஞ்செயன், சிவா, சிபு ஐசக், நடிகர்கள், சரவணன், நகுலன், நடிகை அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரண் வரவேற்றார். முடிவில் தயாரிப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

 

கும்கி மூலம் தமிழுக்கு வரும் 15 வயசு லட்சுமி மேனன்!!


மலையாள தேசத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் பட்டியல் நாளுக்கு நாள் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் முதல்நிலை நடிகைகள் எல்லாருமே மலையாள பார்ட்டிகள்தான்.

அந்த லிஸ்டில் புதிதாக இடம்பிடிக்கிறார் லட்சுமி மேனன். பிரபு சாலமன் தனது கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவரை அறிமுகப்படுத்துகிறார்.

15 வயதே நிரம்பியுள்ள லட்சுமி மேனன் கொச்சியைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அதற்கு மேல் எப்போதாவது நேரம் கிடைத்தால் படித்துக் கொள்ளலாம், இப்போதைக்கு கோடம்பாக்கத்துக்கு கலைச் சேவைதான் முக்கியம் என குடும்பத்தினர் முடிவெடுத்ததால், இங்கே வந்திருக்கிறார்.

இதற்கு முன் மலையாளத்தில் ஒரே ஒரு படம் நடித்துள்ளார். அந்தப் படத்தை இயக்கியவர் வினயன். ஆனால் சின்ன வேடம் என்பதால் லட்சுமி மேனன் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் அந்த ஒரே படம் தன்னை, தென்னகத்தின் சினிமா தலைநகரமான சென்னை வரை கொண்டு வந்துவிட்டதை நினைத்து வினயனுக்கு நன்றி சொல்கிறாராம் லட்சுமி.

தமிழுக்கு வந்துட்டீங்கல்ல, கவலையே வேண்டாம்... அடுத்து பாலிவுட்தான்!
 

மதுரை பெயரைக் கெடுக்கும் தமிழ்ப் படங்களால் பின்வாங்கும் ஐடி நிறுவனங்கள்!


மதுரை: மதுரை என்றாலே வன்முறை நிறைந்த நகரம் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் கோவில் நகரம் கொலை நகரமாகக் காட்டப்படுகிறது. இதனால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மதுரைக்கு வர அஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.

மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். விருந்தோம்பலில் மிரள வைப்பவர்கள் மதுரைக்காரர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று மதுரையைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மட்டும் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை வைத்துப் படம் எடுத்து கல்லாக் கட்டி பிழைத்து வரும் தமிழ் சினிமாக்கார்களின் செயலால் இன்று மதுரை நகரம் மிகப் பெரிய அவலத்தையும், பொருளாதார பின்னடவையும் சந்திக்க நேர்ந்துள்ளது என்றால் நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் உண்மையை அறிந்தால் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

முன்பு மதுரையை வைத்து நிறையப் படங்கள் வந்துள்ளன.அந்தப் படங்களில் மதுரை மண்ணின் பாசம், நேசம், உயிர்ப்பு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றையே பிரதானமாக காட்டுவார்கள். குறிப்பாக அந்தக் காலத்து சிவாஜி கணேசன் படங்கள், பின்னர் வந்த எஸ்.எஸ்.ஆர். படங்கள், பிற்காலத்தில் வந்த ராமராஜன் படங்களில் இதை அதிகம் காணலாம்.

ஆனால் தற்போது வெளிவரும் தமிழ் படங்களில் மதுரையில் ஏதோ கொலையை தொழில் போல செய்வதாக காட்டுகிறார்கள். காலையில் எழுந்துதம் பல்லை விளக்கி விட்டு, பத்து பேரைக் கொலை செய்து பின்னர்தான் டீ சாப்பிடுவார்கள் என்பது போலவும், மத்தியானத்திற்கு மண்டையை வெட்டி கறி சமைத்து சாப்பிடுவார்கள் என்பது போலவும், சாயந்திரம் நாலு பேரை சாய்த்து விட்டுத்தான், ராத்திரிக்குத் தூங்கப் போவார்கள் என்பது போலவும் காட்டுகிறார்கள்.

மதுரை என்றாலே ரத்த பூமி என்பது போலவும், அங்கு மனிதர்களே கிடையாது என்பது போலவும், மதுரையி்ல் தினசரி தவறாமல் கொலை செய்வது போலவும் காட்டி மதுரையின் மாண்பை சீர்குலைத்து, சீரழித்து வருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

குறிப்பாக சுப்பிரமணிய புரம் படம் வந்த பிறகுதான் மதுரை என்றாலே கொலை நகரம் என்ற அவப்பெயரை மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் திணித்து விட்டனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

மதுரை சம்பவம், ஆடுகளம் ஆகிய படங்களும் மதுரையில் எடுக்கப்பட்டவை. அனைத்திலும் வன்முறை தான் பிரதானம்.

இது சாதாரண சினிமாதானே என்று விட்டு விட முடியவில்லை. காரணம், மதுரையின் பொருளாதாரத்தையே பாதிப்பதாக அமைந்துள்ளன இந்த சினிமாப் படங்கள் என்ற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.

இப்படிப்பட்ட கேடு கெட்ட திரைப்படங்களைப் பார்த்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மதுரையில் கிளை அமைக்க அஞ்சும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போயுள்ளது.

இந்தியாவின் பெருநகரங்கள் தவிர்த்து 2ம் நிலை நகரங்களில் கிளை அமைக்கலாம் என நினைக்கும் பெரிய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைசியாகத்தான் மதுரையைப் பற்றி சிந்திக்கிறார்களாம். காரணம், திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான மதுரையை நினைத்து அஞ்சுவதால்.

இதில் விந்தை என்னவென்றால் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 25 சதவீதம் பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்தான்.

கடந்த ஆண்டு நடந்த பல்துறை வல்லுநர்கள் கூட்டத்தில் தான் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

மதுரையில் இலந்தைக்குளத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது ஐடி பூங்கா அமைக்கப்பட்டது. அதில் இதுவரை இதுவரை 3 நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் கிளைகளை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வடபழஞ்சியில் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட ஐடி பூங்கா இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.

தமிழ் சினிமாக்களில் மதுரையைப் பற்றி அவதூறாக, அசிங்கமாக, கோரமாக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் மதுரையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக அரசு இந்த விஷயத்தை சற்று சீரியஸாக கவனித்தால் மட்டுமே மதுரைக்கு மோட்சம் கிடைக்கும் - இந்த தமிழ் சினிமா வியாபாரிகளிடமிருந்து.
 

ரசிகர்களிடம் வரவேற்கத் தக்க மாற்றம்! - அனுஷ்கா


ரசிகர்களின் ரசனையில் நல்ல மாற்றம் ஏற்ப்டடுள்ளது. ஆக்ஷன், காதல் படங்களைத் தாண்டி, நல்ல கதை உள்ள பாசத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் நன்கு வரவேற்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது, என்கிறார் அனுஷ்கா.

விக்ரமுடன் அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகள் படம் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.இதில் அனுஷ்காவுக்கு ஜோடி கிடையாது.

ஆனாலும் அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு.

இது குறித்து அனுஷ்கா கூறுகையில், "தெய்வத் திருமகள் படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்தேன். ரொம்பவும் ரசித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தெலுங்கு நடிகருடன் என்னை இணைத்து கிசு கிசு கிசுக்கள் வருகின்றன. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்.

தமிழில் நடித்தாலும், தெலுங்குக்குதான் முன்னுரிமை. காரணம் என்னை வளர்த்தது தெலுங்குதான்.

இப்போது ரசிகர்ளின் மனநிலை மாறியிருக்கிறது. நல்ல படங்களை ரசிக்கிறார்கள். ஆக்ஷன், காதல் படங்கள்தான் ஓடும் என்றில்லை.இதனை தெய்வ திருமகள் மூலம் புரிந்து கொண்டேன். இது மகிழ்ச்சிக்குரிய மாற்றம்தான்," என்றார்.

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்
 

ஜூலை 22 முதல் தமிழகம் - கேரளாவில் இந்தி சிங்கம்!


தமிழில் சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிய சிங்கம் படம் இந்தியில் அதே பெயரில் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தின் ஹீரோ அஜய் தேவ்கன். ஹீரோயின் 'பாலிவுட் நடிகை' என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் காஜல் அகர்வால்.

ரிலையன்ஸ் மீடியா மற்றும் ஒடிஸ்ஸி மீடியா சார்பில் ஹயாத் ஷேக் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஜூலை 22-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் கேரளத்திலும் அதே தேதியில் இந்தப் படத்தை வெளியிடுகிறது ஒடிஸ்ஸி மீடியா.

'அஜய் தேவ்கனுடன் இணைவதில் ஒடிஸி மீடியா பெருமைப்படுகிறது. இந்தப் படம் அதன் ஒரிஜினல் பதிப்பைப் பார்த்த தமிழக மக்களை நிச்சயம் மகிழ்விக்கும்', என தெரிவித்துள்ளார் ஹயாத் ஷேக்.

ஹரியின் வேங்கை, ராகவா லாரன்ஸின் முனி -2 படங்களின் வெளியீட்டாளரும் ஹயாத் ஷேக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இமேஜை டேமேஜ் பண்றாங்களே...! - வருத்தத்தில் அனகா (எ) அமலா!


முறை தவறிய உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிந்து சமவெளி படத்தை மீண்டும் வெளியிட்டதன் மூலம் என் இமேஜை டேமேஜ் பண்ணுகிறார்களே என்று வருத்தப்படுகிறாராம் அமலா பால்.

மைனா, தெய்வத் திருமகள் என நல்ல படங்களில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்திருந்தாலும், அமலா பால் நடித்த ஆரம்பப் படமான சிந்து சமவெளி ஆபாசப்படம் என்ற பெயரைச் சம்பாதித்து விட்டது.

மாமனாரை காதலிக்கும் இளம் மனைவியாக அதில் நடித்திருந்தார் அமலா. குடும்ப உறவுகளைச் சீரழிப்பதாகக் கூறி இந்தப் படத்துக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின.

இந்தப் படத்தில் ஹீரோயின் அனகா. ஆபாசப் படத்தில் அறுவறுப்பாக நடித்தார் என்று கூறி இவரை சென்னைக்குள் வரவிடாமல் போராட்டமெல்லாம் நடத்தினர். கொஞ்ச நாள் கழித்து சிந்து சமவெளி படம் வந்ததே மக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மறந்துபோனது. அனகா அமலா பால் ஆகி மைனாவில் நடித்தார்.

அந்தப் படம் பிரபு சாலமன் இயக்கத்தாலும் உதயநிதி ஸ்டாலின் விளம்பர உத்தியாலும் பெரிய ஹிட்டாகிவிட, அமலா பாலை நோக்கி முன்னணி நட்சத்திரங்கள் வர ஆரம்பித்தனர்.

இப்போது விக்ரமுடன் நடித்துள்ள தெய்வத் திருமகள் வெளியாகியுள்ளது. அடுத்து ஆர்யாவுடன் நடித்துள்ள வேட்டை வெளிவருகிறது.

இந்த நேரம் பார்த்துதான், அமலா பாலின் ஆபாசப் படமான சிந்து சமவெளி நேற்று முன்தினம் திடீரென வெளியானது. அதுவும் 5 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சிந்து என்ற பெயரை பெரிதாகவும் சமவெளி என்ற வார்த்தையை மிகச் சிறியதாகவும் மாற்றி ஏதோ புதிய மலையாளப் படம் போல என்று கருதும் அளவுக்கு பட போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

சென்னை முழுக்க தெய்வத்திருமகள் போஸ்டர்களோடு சிந்துசமவெளி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன

இதனால் அமலாபால் அதிர்ச்சியடைந்துள்ளார். நல்ல படங்களில் நடித்து நல்ல இமேஜ் உள்ள நேரத்தில் என்னை இப்படி டேமேஜ் பண்ணலாமா, என கண்ணைக் கசக்குகிறாராம்!

'சிந்து'வில் நடித்தபோது, கதை என்னவென்று தெரியாமலா நடித்தார்... இப்போது கண்ணீர் 'சி்ந்தி' என்ன ஆகப் போகிறது!
 

அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றேன்... அதற்கு பலன் கிடைத்தது! - விஜய்


சேலம்: தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.

அதேபோல் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். அவரின் அந்த கருத்துக்கு ஆதரவாக சேலத்தில் என்னுடைய ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்.

இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நான் பார்க்காத தோல்விகளா…

இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடைக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்,” என்றார்.

 

வெள்ளித்திரையில் ஹீரோ; நிஜத்தில் வில்லன்! - ஷாரூக்குக்கு சிவசேனா கண்டனம்


மும்பை: தொடர் குண்டுவெடிப்புக்களால் மும்பை மாநகரம் துயரத்தில் மூழ்கி இருக்கும்போது, ஆடம்பர விருந்து அளித்த நடிகர் ஷாருக்கானுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த 13-ந் தேதி தீவிரவாதிகள் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இந்த நிலையில் நடிகை கேத்ரினா கைப்பின் 27-வது பிறந்தநாளையொட்டியும், அவரது படம் ‘ஜிந்தகி மிலேக்கி நா டோபரா’ வெளியாகியிருப்பதை முன்னிட்டும், நடிகர் ஷாருக்கான் அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடம்பர விருந்து ஒன்று அளித்துள்ளார்.

இந்த விருந்தில் கேத்ரினா கைப்புடன் இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், அர்ஜுன் ராம்பால், கரண் ஜோஹர், நடிகை கரிஷ்மா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

விருந்தில் கலந்துகொண்டவர்களுக்காக ‘ஜிந்தகி மிலேக்கி நா டோபரா’ படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

இந்த விவரமெல்லாம், பர்ஹான் அக்தர் மூலம் தெரிய வந்தது. அவர் இந்த விருந்துக்காக ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்து இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

நிஜ வில்லன் ஷாரூக்

இந்த விருந்து தொடர்பாக சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ‘சாம்னா’ பத்திரிகையில் கூறி இருப்பதாவது:

மும்பை குண்டுவெடிப்புகளை தொடர்ந்து பல பிரபலங்கள் தங்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டனர். குரு பூர்ணிமா கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டனர். குண்டுவெடிப்பு நாளில் பிரான்ஸ் நாட்டு அரசு அளித்த விருதைக்கூட நடிகை ஐஸ்வர்யாராய் ஏற்க மறுத்து விட்டார்.

ஆனால் ஷாருக்கானுக்கு அந்த விருந்தினை ரத்து செய்யும் உணர்வு இல்லை. வெள்ளித்திரையில் அவர் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு வில்லன்,” என்று குறிப்பிட்டுள்ளது.

 

நடிகர் விஜய் ரூ 8 லட்சம் நலத்திட்ட உதவி: கூட்டம் குவிந்ததால் போலீஸ் தடியடி!


சேலம்: சேலத்தில் ஏழைகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

ஏராளமான ரசிகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், ஒரு கட்டத்தில் மேடையை நோக்கி ரசிகர்கள் திடீரென முண்டியடித்துக்கொண்டு சென்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினார்கள்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் தொடங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்றத்தின் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. சேலம் 3 ரோடு ஜவகர் மில் திடலில் நடந்த இந்த விழாவுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார்.

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், அரசு மருத்துவமனைக்கு சக்கரநாற்காலிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு உதவிகள் உள்பட ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

போலீஸ் தடியடி

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வர ஆரம்பித்தது. அதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.

அதைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மேடையை நோக்கி வந்த ரசிகர்கள் கூட்டத்தின் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மேலும் கூட்டத்தின் நடுவே இருந்த சில ரசிகர்கள் விஜய்யை நெருக்கமாக சென்று பார்க்க முடியாத ஆத்திரத்தில் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ரஜினியின் தேதிக்காக காத்திருக்கும் ஒரு கல்யாணம்!


சென்னை: ரஜினியின் தேதிக்காக ஒரு கல்யாணம் காத்திருக்கிறது. அது ஒரு பெண் ரசிகையின் மகள் திருமணம். ரஜினி தேதி கொடுத்து, அவர் முன்னிலையில்தான் அந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அந்தத் தாயும் மகளும்.

ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று கேள்விப்பட்டதிலிருந்து அவர் குணமடையவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் பேர் கோவில்களில் பிரார்த்தனை செய்தனர்.

சென்னையை சேர்ந்த ஒரு ரசிகை, ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்தால், வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுகிறேன் என்று வேண்டுதல் வைத்தார்.

அந்த பெண்ணின் பெயர் கவுரி (வயது 40). சென்னை சாலிகிராமம், விஜயராகவபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கையில், ‘ரஜினிகாந்த் கடவுள்’ என்று பச்சை குத்தியுள்ளார்.

இவர், ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்ததையொட்டி, தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை காலை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு தனது நீளமான கூந்தல் முடியை இழந்து, மொட்டை போட்டுக்கொண்டார்.

கவுரியுடன் சேர்ந்து, அவரது மகன் கோபிராஜ் (19), கொடுங்கையூரைச் சேர்ந்த அமுதா (39), மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஹேமராஜ் (10), குடியாத்தத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் (78) ஆகியோரும் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ரஜினியை கடவுளாகவே பார்க்கிறேன்….

இதுகுறித்து கவுரி கூறுகையில், “நான், சினிமா ‘டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ ஆக பணியாற்றி வருகிறேன். 8 வயதில் இருந்தே நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ஏழை பெண்களுக்கு புடவை வாங்கிக்கொடுத்து, அன்னதானமும் செய்வேன்.

ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்துள்ளேன். அப்போது அவர் ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது என்று சொல்லுவார். ரஜினிகாந்தை நான் கடவுளாகவே பார்க்கிறேன். அப்படிப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் பூரண குணம் அடைந்தால் வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுவதாக வேண்டினேன்.

ரஜினி தேதிக்காக காத்திருக்கும் திருமணம்

ரஜினிகாந்த் குணமடைந்துவிட்டதால், இப்போது மொட்டை போட்டு நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளேன். அவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். எனது மகள் லாவண்யாவுக்கும், ராஜசேகருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தலைமையில்தான் எனது மகள் திருமணம் நடைபெற வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறேன். அவர் தேதி கொடுக்கும்வரை காத்திருப்போம்,” என்றார்.

 

குற்றாலத்தில் 70வது பிறந்த நாள் கொண்டாடிய பாரதிராஜா


குற்றாலம்: இயக்குநர் பாரதிராஜா தனது 70-வது பிறந்த நாளை குற்றாலத்தில் கொண்டாடினார்.

குற்றாலம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இலஞ்சியுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இவ் விழாவில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,

வாழ்க்கையில் மனிதன் கண்டிப்பாக சேவை செய்ய வேண்டும். வாழும் காலத்தில் தானம் கொடுத்து பழகிவிட்டால் அதை விட சுகமானது வேறொன்றும் இல்லை. அற்புதமான சுகம் தர்ம செயல்கள் செய்யும்போது கிடைக்கும். ஒரு ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பை போல் பொது சேவையாற்றும் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் கடமை உள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு நீர்த்தேக்க பிரச்சனை, இனப்படுகொலை, இனஅழிப்பு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பு நிகழ்வுக்கெல்லாம் பொது நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.

நாற்கலி கனவுகளில் இருந்து விலகி இருக்கும் சமூக சேவை இயக்குநர்கள் குரல் கொடுக்க தொடங்கினால் நாடெங்கும் அக்குரல் எதிரொலிக்கும். மொழி, இனம் என அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறோம். தாயை இழப்பதும், மொழியை இழப்பதும் ஒன்று தான். நாட்டில் போலியோவை ஒழி்த்த உங்கள் இயக்கம் லஞ்சம், ஊழலையும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

நாம் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு ஏன் லஞ்சமாகத் தர வேண்டும். லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்துவதை விட கேவலமானது எதுமில்லை. மடங்களிலும், சாமியார் வீடுகளிலும், கோடி கோடியாய் பணம் கிடைக்கிறது. ஆனால் எந்த துறையாவது விசாரணை நடத்துகிறார்களா, எங்களை போல் உழைப்பவர்களிடம் தான் வருமான வரி சோதனை செய்கிறார்கள்.

ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது சேவை அமைப்புகள் பொது மக்களின் பிரச்சனைகளுக்காகவும், களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். மனிதன் இதயத்தை சுத்தமாக்கினால் அவனை அனைத்தும் தேடி வரும். ஒவ்வொருவரும் தன்னை பெற்ற தாயை மதிக்க கற்றுக் கொண்டால் சமுதாயத்தில் மரியாதை தானாகவே உயர்ந்து தலை நிமிர முடியும் என்றார்.

பின்னர் இரவு 9.30 மணி அளவில் ரோட்டரி பிரமுகர்களுடன் கேக் வெட்டி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜ் பேசும்போது, ஒரு அரசால் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியாது. ஆனால் இதுபோன்ற சங்கங்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என்றார்.