நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லண்டனில் நடைபெற்ற ''கோச்சடையான்'' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் 'கோச்சடையான்' படத்தை, ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்குகிறார். படத்தின் சில காட்சிகளை லண்டனில் ஷூட் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ரஜினிகாந்த், சவுந்தர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் கடந்த 17ம்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் சென்றனர். அப்போது தீபாவளிக்கு 'கோச்சடையான்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ரஜினி தெரிவித்தார்.

இந்நிலையில், லண்டன் படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்தது. இதையடுத்து, ரஜினி, சவுந்தர்யா உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.


 

நடிகை எம்.சரோஜா மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டணால் கே.ஏ.தங்கவேலு, கடந்த 94ம் ஆண்டு காலமா னார். அவருடைய மனைவி நடிகை எம்.சரோஜா (79). பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக, சகோதரியாக நடித்து மறைந்த எம்.லட்சுமி பிரபாவின் தங்கை இவர். சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த எம்.சரோஜா, நேற்று மாலை 4.30 மணியளவில், சென்னை தியாகராய நகர் மாசிலாமணி தெருவிலுள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவருக்கு சுமதி என்ற மகள் இருக்கிறார். தன் 14வது வயதில் நடிக்க வந்தவர், எம்.சரோ ஜா. இயக்குனர் கே.சுப்பிரமணியம் இவரை சினிமாவில் அறிமுகம் செய்தார். 'சர்வாதிகாரி' படத்தில் எம்.ஜி .ஆரின் முறைப்பெண்ணாக நடித்துள்ள எம்.சரோஜா, பிறகு 'மருதநாட்டு வீரன்', 'பூலோக ரம்பை', 'அரசிளங்குமரி', 'வண்ணக்கிளி' உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக் கிறார். தமிழக அரசு இவரது கலையுலக சேவையைப் பாராட்டி, கலைமாமணி விருது கொடுத்துள்ளது. எம்.சரோஜாவின் உடலுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி னர். இவரது உடல் இன்று பிற்பகல் கண்ணம்மாபே ட்டை சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.