கவர்னர் தொடங்கி வைத்த புதுப் படம்.. இளமைப் பயணம்!

இளமைப் பயணம் என்ற படத்தினை தொடங்கி வைத்து வாழ்த்தினார் தமிழக கவர்னர் ரோசய்யா.

மேஜிக் அண்டு லாஜிக் புரோடக்சன் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சித்ரா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் இளமை பயணம். இப்படத்தை பாரதி கணேஷ் இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆர். ரேஹானா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரோசன், மனாஷ், வினோத், ப்ரீத்தி, ஸ்வீட்டி ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் சேகர், ராதாரவி, அம்பிகா, கோவை சரளா. தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கவர்னர் தொடங்கி வைத்த புதுப் படம்.. இளமைப் பயணம்!

இந்த படத்தின் பூஜை நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் ராதாரவி, இயக்குனர் மாதேஷ், விக்ரமன், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழக கவர்னர் ரோசய்யா படபூஜையை துவங்கி வைத்ததார்.

அப்போது அவர் ''எனக்கு சினிமா பற்றி அவ்வளவாக தெரியாது. இருந்தாலும் படத்தில் நடிக்கும் அனைவரையும் வாழ்த்துகிறேன்,'' என்றார்.

மூன்று ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்களை கொண்ட ஒரு காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்குதாக படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் தெரிவித்தார்.

 

‘சத்யாகிரஹ்’ மூலம் ‘கரீனா கபூர் கான்’ ஆக அறிமுகம் ஆகும் கரீனா

‘சத்யாகிரஹ்’ மூலம் ‘கரீனா கபூர் கான்’ ஆக அறிமுகம் ஆகும் கரீனா  

மும்பை: பிரபல ஹிந்தி நடிகை கரீனா கபூர் தனது பெயரை கரீனா கபூர் கான் என மாற்றிக் கொண்டுள்ளார்.

தலாஷ் படம் ரிலீசான போது கூட தனது பெயரை கரீனா கபூர் என்றே போடச் சொன்னவர் தற்போது சத்யாகிரஹா திரைப்படத்தில் தனது பெயரை கரீனா கபூர் கான் என மாற்றியுள்ளாராம்.

தனது கணவரின் பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் கரீனா, இதன் மூலம் தான் திருமணமானவர் என வெளிப்படுத்த விருப்படுகிறாராம்.

நேற்று மாலை நடந்த சத்யாகிரஹ் படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் போது, கரீனா இனி கரீனா கபூர் கான் என அறிமுகப்படுத்தப் படுகிறார் என ஒளிர்ந்ததைக் கண்டு அனைவரும் சில நிமிடங்கள் திகைத்தனர்.

இதன் மூலம், கான் கிளப்பிற்கு ஒரு கிளாமர் ஸ்டார் கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாரதிராஜாவின் அன்னக்கொடி இன்று வெளியாகிறது!

பாரதிராஜாவின் அன்னக்கொடி இன்று ரிலீஸ்!

பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் இன்று தமிழகமெங்கும் வெளியாகிறது.

பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளி வரும் படம் அன்னக்கொடி. ஆரம்பத்தில் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் அமீர், இனியா, புதுமுகம் லட்சுமணன் மற்றும் கார்த்திகா நடிக்கவிருந்தனர். இவர்களை வைத்து தேனி அல்லி நகரத்தில் பெரிய அளவில் பூஜையும் போடப்பட்டது.

ஆனால் பின்னர் அமீரும் இனியாவும் இப்படத்திலிருந்து விலக்கப்பட்டனர். லட்சுமணனும் கார்த்திகாவும் மட்டும் நடித்துள்ளனர். அமீர் நடிக்கவிருந்த பாத்திரத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு அன்னக்கொடி படத்தை வெளியிடுகிறார் பாரதிராஜா.

இந்தப் படம் கலப்புத் திருமணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதாக செய்திகள் கசிந்ததால், அதன் அடிப்படையில் படத்தை தடை செய்யக் கோரி மதுரை தேவர் பாசறையின் இயக்கத் தலைவர் ஏ.கே.ரகுபதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தடை எதையும் விதிக்காமல் வழக்கைத் தள்ளி வைத்தனர்.

எனவே திட்டமிட்டபடி இன்று அன்னக்கொடி படம் வெளியாகிறது. முழுக்க முழுக்க கிராமத்துப் படமாக வந்துள்ள அன்னக்கொடி, பாரதிராஜாவுக்கும் ரசிகர்களுக்கும் இன்னொரு மண்வாசனையாக அமையுமா... பார்க்கலாம்!

 

நடுக்கடலில் டால்பின்களுடன் ரஜினி நீச்சல்... மிருகங்களுடன் பைட் - கோச்சடையான் அப்டேட்

கோச்சடையான் படத்தில் நடுக்கடலில் ரஜினி டால்பின்களுடன் நீந்துவது போலவும், கொடிய மிருகங்களுடன் சண்டையிடுவதுபோலவும் காட்சிகள் அமைத்துள்ளார்களாம்.

ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படம், அதிகபட்ச கிராபிக்ஸ் மற்றும் அதை 3 டிக்கு மாற்றும் பணிகள் காரணமாக தாமதமாகி வருகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது.

நடுக்கடலில் டால்பின்களுடன் ரஜினி நீச்சல்... மிருகங்களுடன் பைட்- கோச்சடையான் அப்டேட்

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் காட்சிகள் குறித்து கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தில் ராட்சத சுறா மீன்களுடன் ரஜினி சண்டையிடுவது போல கிராபிக்ஸ் காட்சி வடிவமைக்கப்பட்டதாக முதலில் செய்தி வெளியானது.

இப்போது அதற்கு விளக்கமளித்துள்ள படத்தின் இயக்குநர் சௌந்தர்யா, "கோச்சடையானில் ரஜினி சுறாவுடன் சண்டை போடுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. ஆனால் அவர் டால்ஃபின்களுடன் நீந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் கொடிய மிருகங்களுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் இருக்கின்றன. முதலில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துவிட்டுத்தான் டிரெய்லர், இசை வெளியிடுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்," என்று கூறியிருக்கிறார்.

 

'உ' பட இசைத் தகடு... இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார்

சென்னை: விஷுவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள் உருவாக்கிய 'உ' என்ற தமிழ் படத்தின் இசையை பிரபல இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார். தயாரிப்பாளர் தேனப்பன் பெற்றுக் கொண்டார்.

இந்த இசை வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனியில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனப்பன், இயக்குனர் விக்ரமன், யூ.டிவி, தனஞ்செயன், எஸ்.எஸ். குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் கதை நாயகனாக தம்பி ராமையா வருகிறார். இவருடன் 4 இளைஞர்கள் நடிக்கிறார்கள்.

'உ' பட இசைத் தகடு... இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார்  

இப்படத்தை பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஆஷிக் இயக்குகிறார். இவர் எஸ்எஸ் குமரனிடம் பணியாற்றியவர். இப்படத்தில் 25-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கும் வருகிறது. பத்திரிகையாளர் முருகன் மந்திரம் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார்.

விழாவில் பேசிய தம்பி ராமையா, "சரி...கேட்டுத்தான் பார்ப்போமே என்றுதான் கதை கேட்க ஆரம்பித்தேன்...சும்மா சொல்லக்கூடாது பயல்கள் மிரட்டியிருக்கிறார்கள்... என்னைப் பாடவைத்து ஆடவைத்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள்," என்றார்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசுகையில், "பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னைக்கு வந்து... குடும்பம் குட்டி என்று ஆகி வாழ்வாதாரத்திற்கே ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்... சினிமா பத்திரிக்கையாளராகவே எனது பயணம் இருந்ததால் சினிமாவுக்குள்ளேயே இருக்கமுடிந்தது... இன்று பாடலாசிரியராக இந்த மேடையில் நிற்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது... அதுவும் எனது பாடல்களைப் பாடி தேசிய விருது பெற்ற தம்பிராமையாவும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித்தும் திரைப்படப் பாடகர்களாக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் எனக்கு பெருமையாக உள்ளது," என்றார்.

 

நடிகை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடுவராகும் ‘டான்ஸ் தம்பி’

சென்னை: தற்போது தொகுத்து வழங்கி வரும் ஜாக்கெட் புகழ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ரன் நடிகை.

அந்நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பிரபலமான நடுவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என கருதிய தயாரிப்புக் குழுவினர், நடிகையின் உதவியைக் கேட்க, டக்கென்று நடிகையின் மனக்கண்ணில் தோன்றியது ஒல்லிக்குச்சி நண்பர் தானாம்.

முன்பொரு காலத்தில் தனக்கு ‘ஐ லவ் யூ' சொன்னவர் என்ற உரிமையில் நடிகை கேட்க, ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணே' என உருகினாராம் நடிகர். ஆனால், நான் நடுவராகக் கேட்டது உன் தம்பியை என ரன் விளக்கவும், ஒடி வந்துவிட்டாராம் டான்சின் தம்பி நடிகர்.

தம்பி தற்போது ஹிந்தி படம் இயக்குவதில் பிசியோ பிசி என்பது கொசுறு செய்தி.

 

இனி நான் குடும்பப்பாங்கினி- அஞ்சலியின் புது முடிவு

கவர்ச்சிக்கு முற்றாக 'பை' சொல்லும் மூடுக்கு வந்துவிட்டார் நடிகை அஞ்சலி.

காரணங்கள் இரண்டு:

தான் கவர்ச்சியாக நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை..

கவர்ச்சிக்கு 'பை' 'பை'.. இனி நான் குடும்பப்பாங்கினி- அஞ்சலியின் புது முடிவு

அடுத்து கவர்ச்சி காட்டும் அளவுக்கு வாகாக அவர் உடலும் அமையவில்லை. இடுப்பு பெருத்து, பார்க்க சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.

இந்த காரணங்களை வைத்து, இனி தம்மாத்தூண்டு உடையுடன் வரும் இயக்குநர்களைப் பார்த்தாலே காத தூரத்துக்கு ஓடுகிறாராம் அஞ்சலி.

இனி தனக்கு அங்காடித் தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள்தான் வேண்டும் என்றும், இந்த மாதிரி கதைகள் கிடைத்தால் பாதிச் சம்பளமே கூடப் போதும் என்றும் கறாராகச் சொல்கிறாராம் அஞ்சலி.

ஆனால் அம்மணியின் கண்டிஷன் எல்லாம் தமிழுக்குதான். தெலுங்கிலோ, மேடையிலேயே கிட்டத்தட்ட டூ பீஸ் உடையில் வந்து கதி கலங்க வைக்கிறார் அஞ்சலி.

இங்கே நீங்கள் பார்ப்பது, சமீபத்தில் நடந்த தெலுங்கு டிவி சினிமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அஞ்சலியின் 'குடும்பப் பாங்கான' தோற்றம்தான்!

 

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமண வரவேற்பு: ஏ ஆர் ரஹ்மான், லதா ரஜினி, விஜய் வாழ்த்து

சென்னை: ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமண வரவேற்பில் தமிழ் சினிமா உலக பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம் நேற்று சென்னை ராமநாதன் செட்டியார் ஹாலில் நடந்தது. மாலையில் அதே மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். ரஜினி சார்பில் அவர் மனைவி லதா ரஜினி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். ஜிவி பிரகாஷின் தாய்மாமாவாகிய ஏ ஆர் ரஹ்மானும் வரவேற்புக்கு வந்து வாழ்த்தினார்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமண வரவேற்பு: ஏ ஆர் ரஹ்மான், லதா ரஜினி, விஜய் வாழ்த்து  

திமுக பொருளாளர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

நடிகர்கள் விஜய், தனுஷ், பார்த்திபன், ஆர்யா, ஷாலினி அஜீத், அதர்வா, இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பாரதிராஜா, ஷங்கர், அமீர், லிங்குசாமி, வெற்றிமாறன், வசந்த பாலன், சிம்பு தேவன், இசையமைப்பாளர்கள் டி இமான், விஜய் ஆன்டனி, பரத்வாஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தயாநிதி அழகிரி, எல்ரெட் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.