ரீமா சென் கர்ப்பம்... மார்ச்சில் குவா குவா!

Reema Sen Is Expecting First Baby

நடிகை ரீமா சென் கர்ப்பமாகியுள்ளார். மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ரீமாவுக்கும் அவரது காதலர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வந்துவிட்டார் ரீமா.

தமிழில் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறையில் நடித்து வந்தார். இந்தியில் அவர் நடித்த கேங்ஸ் ஆப் வஸீபூர் -2 பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர் வயிறும் வளர்ந்துவிட்டது.

எனவே ஷூட்டிங்குகளுக்கு இனி வரமாட்டேன் என்று கூறிவிட்ட ரீமா, மருத்துவ பரிசோதனை செய்தபோது, வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

வீங்கிய.. கறுப்பு நீல நிறக் கண்ணோடு காரில் வலம் வந்த பியர்ஸ் பிரோஸ்னன்

What Happened Your Goldeneye Pierce Brosnan Is Spotted

மல்லோர்கா: ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிரோன்ஸன் அண்மையில் ஸ்பெயினின் மல்லோர்கா சென்ற போது ரசிகர்களை கொஞ்சம் அதிரவே செய்துவிட்டார். அவரது இடது கண் கறுப்பாக, நீல நிறமாக சற்று வீங்கியிருந்தது! அந்த வசீகரமான தங்க நிற கண்களுக்கு என்னாச்சோ! என்று ஆடிப் போய் ரசிகர்கள்!

அப்புறம்தான் விஷயமே தெரிய வந்தது! மல்லோர்க்காவில் பியர்ஸ் பிரோன்ஸன் நடித்து வரும் ஏ லாங் வே டெளன் என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் கடைசி நாள் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது போடப்பட்ட மேக்கப்பை படப்பிடிப்பு முடிந்த பின்னரும் கலைக்காமல் அப்படியே காரில் ஏறி போஸ் கொடுக்கப் போய்தான் இந்த களேபரமாம்!

 

24ம் தேதி முதல் தமிழில் இன்னொரு சேனல்.. ஜெய் டிவி!

Jai Tamil Channel Go On Air On Oct 24

புதிய சேட்டிலைட் சேனலான ஜெய் டிவி நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது.

ஜெய் டிவி என்ற புதிய தனியார் தொலைக்காட்சி சேனல், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே தனது சோதனை ஒளிபரப்பை துவக்கியுள்ளது. தற்பொழுது தனது சேனலின் முழுமையான சேவை செப்டம்பர் மாதம் 12முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒளிபரப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜயதசமியன்று அதாவது அக்டோபர் 24ம் தேதி ஜெய் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக தமிழ் தொலைக்காட்சி உலகில் ஏகப்பட்ட சானல்கள் புற்றீசல் போல பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருப்பது நேயர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதேசமயம், எல்லா சானலும் வித்தியாசமாக இருந்து, 'சீரியல் கொலை'களைச் செய்யாமல் இருந்தால் இன்னும் பெட்டராக இருக்கும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: பட அதிபர் கைது

சென்னை: ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா படத்தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த வசந்தகுமார்என்பவர், கியூ பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சூடாமணி என்பவர், ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச்சென்று, வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக அவர் ரூ.1.20 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து போகவில்லை. அதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பித்தரவில்லை என்று தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் கியூபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து ஞாயிறன்று போலீசார் சூடாமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான சூடாமணி இலங்கை தமிழர் ஆவார். வளசரவாக்கத்தில் சினிமா படக்கம்பெனி நடத்தி வந்தார். அகோரம் என்ற பெயரில் சினிமா படம் எடுத்துள்ளார் இவரது அண்ணன் ஈழ நேருவும், இதேபோல மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை வீட்டு நாய் காணாமப் போச்சுன்னா எவ்ளோ பெரிய பிரச்சினை...!

Pakistani Actress Meera Loses Her Sherdil

லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், பாலிவுட்டில் புகுந்துள்ளவருமான மீரா தனது நாயைக் காணவில்லை என்று லாகூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம். நாய் காணாமல் போவதாக மீரா புகார் கொடுப்பது இது முதல் முறையல்ல, 2வது முறையாகும்.

முதலில் தனது நாய் காணாமல் போய் விட்டதாக மும்பை போலீஸிடம் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தார். இப்போது தனது சொந்த ஊரான லாகூரில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ஷெர்டில் காணவில்லை என்று ஒரு புகார் கொடுத்துள்ளாராம். அவரது சார்பில் தம்பி அசன் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளாராம்.

லாகூரில் டிபன்ஸ் காலனி பகுதியில் மீரா வீடு உள்ளதாம். அங்கு புகுந்த சிலர் நாயைத் திருடிக் கொண்டு போய் விட்டதாக புகார் கூறுகிறது. சம்பவத்தின்போது நாயானது, வீட்டுக்கு வெளியே உலவிக் கொண்டிருந்ததாக அதை கடைசியாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணையை தொடங்கியுள்ளனராம்.

இந்த நாயின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 3 லட்சமாம். எனவே படு சீரியஸாக போலீஸார் நாயைத் தேட ஆரம்பித்துள்ளனராம். மோப்ப நாய்களையும் கூட இதில் பயன்படுத்தி வருகின்றனராம். எப்படியாவது பிடிச்சுடுவோம் என்றும் மீராவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாம்.

மீரா பாகிஸ்தான் டிவி சீரியல்களில் நடித்தவர். பாலிவுட்டில் நடிக்க ஆர்வமாக இருப்பவர். அடிக்கடி மும்பைக்கு வந்து போகிறார்.

மீரா நாயை மட்டுமல்ல பணத்தையும் கூட அடிக்கடி தொலைத்து விடுவாராம். கடந்த வாரம் கூட தனது பர்ஸில் வைத்திருந்த 10,000 டாலர் பணத்தை யாரோ அபேஸ் செய்து விட்டார்களாம். இப்போது நாயைத் தொலைத்து விட்டார்.

பார்த்து சூதானாமா இருக்க வேணாமா மீரா...!

 

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸுடன் சேர்ந்து பாடும் ஹரிகரன்!

Hariharan Sing Along With Super Singer Junior Singers

சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிச்சுற்றில் பங்கேற்று பாடும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த இன்றைய நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் ஹரிகரன் பங்கேற்றுப் பாடுகிறார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பைனல் நிகழ்ச்சியில் பாட இன்னும் சில தினங்களே இருப்பதால் போட்டியாளர்கள் 5 பேரும் ரசிகர்களை கவர தங்களின் செல்லக்குரலில் இனிமையாய் பாடி ஓட்டுக்கேட்டு வருகின்றனர்.

சுகன்யா, பிரகதி, கௌதம், ஆஜித், யாழினி ஆகிய 5 குழந்தைகள் இறுதிச்சுற்றில் பாட தகுதி பெற்றுள்ளனர். தினம் தினம் அவர்கள் தங்களுக்காக ஒட்டுக் கேட்டு பாடி வருகின்றனர். நடுவர்களாக வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பங்கேற்று குழந்தைகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஹரிகரன் பங்கேற்று குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறார். உயிரே உயிரே என உயிரை உருக்கும் பாடல் தொடங்கி பல பாடல்களை பாடுகின்றனர் சுட்டிக்குழந்தைகள். அவர்களுடன் பாடகர் ஹரிகரனும் தன் இனிய குரலில் பாடி போட்டியாளர்களையும், ரசிகர்களையும் உற்சாகப் படுத்துகிறார்.

நிகழ்ச்சியைப் பார்த்து நன்றாக பாடும் குழந்தையை தமிழகத்தின் செல்லக்குரலாக தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடுங்களேன்.

 

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடிக்கிறார் விஜய்

Vijay S Next With Super Good Films

துப்பாக்கி படத்திற்கு பின்னர் ஏ.எல். விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதனையடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கோலிவுட் பட உலகில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் பாதியை தயா‌ரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்‌ரி. சௌத்‌ரியும், விஜய்யும் சேர்ந்தால் சக்சஸ் என்று சொல்லும் அளவுக்கு வெற்றிக் கூட்டணி இது. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி என்று அனைத்தும் ஹிட் படங்கள்.

இந்த கூட்டணி அடுத்ததாக இணைய உள்ளது. இந்த படத்தை ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த நேசன் இயக்குவதாக கூறப்படுகிறது. வேலாயுதம் படத்தில் நடிக்கும் போதே விஜய்க்கு இந்த கதையை நேசன் கூறியுள்ளார். அந்த கதை பிடித்ததை அடுத்து திரைக்கதை அமைக்கும் பணியில் நேசன் ஈடுபட்டுள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பினை ஆர்.பி. சௌத்ரி வேளியிடுவார் என்று கூறப்படுகிறது.

 

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நாயகி சுபா திடீர் மரணம்!

சென்னை: மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்து வந்த நடிகை சுபா புத்தெலா திடீரென மரணமடைந்துள்ளார். சிறுநீரக கோளாறு இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

maalai pozhuthin mayakathile heroine subha dies
Close
 

சமீபத்தில் செம்பட்டை என்ற படத்தின் ஹீரோ திலீபன் அகால மரணமடைந்தார். இந்த நிலையில் இன்னொரு முக்கியப் படத்தின் நாயகி மரணமடைந்திருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.

மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று ஒரு படம் தயாராகி வந்தது. இதில் நாயகியாக நடித்திருந்தவர் சுபா புத்தெல்லா. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார்.

அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், அதனால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.