அப்பா கமல் ஜோடியாக நடித்தவரின் மகனை காதலிக்கும் அக்ஷரா ஹாஸன்

மும்பை: கமலின் இளைய மகள் அக்ஷரா நடிகை ரதியின் மகன் தனுஜ் விர்வானியை காதலிக்கிறாராம்.

கமலுடன் உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரதி. பஞ்சாபி பெண்ணான ரதி தமிழ் தவிர இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். பின்னர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து கொண்டு தனுஜ் என்ற மகனுக்கு தாயானார். இந்நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தனுஜை காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

அப்பா கமல் ஜோடியாக நடித்தவரின் மகனை காதலிக்கும் அக்ஷரா ஹாஸன்

தனுஜ் லவ் யூ சோனியோ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கும் அக்ஷரா முன்னதாக பிரபல இந்தி நடிகர் நசீருத்தின் ஷாவின் மகன் விவான் ஷாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பல இடங்களுக்கு அவர்கள் ஜோடியாக சென்று வந்தனர்.

அக்ஷரா தற்போது ஆர். பால்கியின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கசங்கி கண்ணீர் விட்ட நடிகை

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கசங்கி கண்ணீர் விட்ட நடிகை  

பின்னர் அவரது பாதுகாவலர்கள் ஒரு வழியாக ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து கரீனாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

முன்னதாக பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே ஆகியோர் அண்மையில் ரசிகர்களிடம் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

போங்கடீ நீங்களும் உங்க காதலும்... அட, இது ஒரு படத்தோட பேருங்க...!

படத்துக்குத் தலைப்பு போங்கடீ நீங்களும் உங்க காதலும் என்று வைத்திருந்தாலும், இது பெண்களுக்கு எதிரான தலைப்பு இல்லை என்று நடிகரும் அப்படத்தின் இயக்குநருமான ராமகிருஷ்ணன் கூறினார்.

கோரிப்பாளையம், குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் ஆகிய படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன்.

இவர் முதல் முறையாக நடித்து இயக்கியுள்ள படம் போங்கடீ நீங்களும் உங்க காதலும். இந்தப் படத்தில் அவருடன் ஆத்மியா, காருண்யா மற்றும் ஜெயப்ரகாஷ் நடித்துள்ளனர். தமிழ்ப் படம் கண்ணன் இசையமைத்துள்ளார்.

போங்கடீ நீங்களும் உங்க காதலும்... அட, இது ஒரு படத்தோட பேருங்க...!

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ், மிஷ்கின், சேரன், கரு பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று வெளியிட்டனர்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நாயகனும் இயக்குநருமான ராமகிருஷ்ணன் பேசுகையில், "தலைப்பு இப்படி வைத்திருந்தாலும் இது பெண்களுக்கு எதிரான படமல்ல. இன்னும் சொல்லப் போனால் பெண்களை அக்கறையோடு எச்சரிக்கும் வகையில் இந்தத் தலைப்பு அமைந்துள்ளது.

போங்கடீ நீங்களும் உங்க காதலும்... அட, இது ஒரு படத்தோட பேருங்க...!

பெண்கள் தொடர்ந்து தவறான நபர்களை நம்பி மட்டுமே தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கின்றனர். ஒருமுறை அனுபவப்பட்ட பிறகும்கூட மீண்டும் அதே தவறைச் செய்கின்றனர். அதை ஒரு பெற்றோரின் பார்வையில் சொல்லும் படம்தான் இந்த போங்கடீ நீங்களும் உங்க காதலும்.

இந்தப் படத்தின் காட்சிகள் எதிலும் பெண்களை இழிவுபடுத்தவில்லை. உயர்வாகவே சித்தரித்துள்ளேன். ஆண்களைத்தான் திட்டியுள்ளேன்.

இந்த சமூகத்தில் பெண்கள் இல்லாமல் எதுவுமே இல்லை. ஆனால் அவர்களைத்தான் தொடர்ந்து அவமதிக்கிறார்கள். ஒரு கணவன் தன் மனைவியைப் புகழக் கூட தயங்குகிறான். எதுவுமே அருகிலிருக்கும்போது அதன் அருமை புரிவதில்லை," என்றார்.

 

சம்பளத்தில் கைவைப்பதாகச் சொன்னதும் அத்தனை நிகழ்வுகளுக்கும் தவறாமல் ஆஜராகும் ஹீரோயின்கள்!

சென்னை: சமீப நாட்களாக கோடம்பாக்கத்தில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகின்றனர் சம்பந்தப்பட்ட படங்களின் நாயகிகள்.

காரணம் தயாரிப்பாளர்கள் எடுத்த 'சம்பள கட்' ஆயுதம்.

சில மாதங்களுக்கு முன்பு வரைகூட ஹீரோயின்கள் வராதது குறித்து தயாரிப்பாளர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் ஹீரோயின்கள் வந்தால்தான் மீடியாக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு படங்களை எடுப்பார்கள்... பக்கம் பக்கமாக பப்ளிஷ் பண்ணுவார்கள் என்றெல்லாம் தயாரிப்பாளர்களுக்கு சிலர் ஏத்திவிட, அவர்கள் ஹீரோயின் வந்தால்தான் ஆச்சு என அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சம்பளத்தில் கைவைப்பதாகச் சொன்னதும் அத்தனை நிகழ்வுகளுக்கும் தவறாமல் ஆஜராகும் ஹீரோயின்கள்!

விஷயம் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனது. அவர்கள்தான், படத்தின் நிகழ்ச்சிகளுக்கு வராவிட்டால் 20 சதவீத சம்பளம் கட் என மிரட்ட, வேறு வழியின்றி அனைத்து விழாக்களுக்கும் தவறாமல் இப்போது வர ஆரம்பித்துள்ளனர் கதாநாயகிகள்.

தான் அறிமுகமான முதல் படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு தவிர வேறு படங்களின் நிகழ்ச்சிகளுக்கு வந்தேயிராத பூர்ணா, இப்போதுதான் மீண்டும் ஒரு விழாவுக்கு வந்தார். அதுதான் தகராறு படத்தின் அறிமுக விழா.

முன்னணி நடிகையான அனுஷ்கா பெரும்பாலான விழாக்களுக்கு வரவே மாட்டார். ஆனால் முதல் முறையாக இரண்டாம் உலகம் படத்தின் பிரஸ் மீட்டுக்கு ஹைதராபாதிலிருந்து வந்திருந்தார்.

என்றென்றும் புன்னகை படத்தின் இசை வெளியீட்டுக்கு அப்படத்தின் நாயகிகள் த்ரிஷா, ஆன்ட்ரியா இருவருமே வந்து ஆச்சர்யப்படுத்தினார்கள்.

தயாரிப்பாளர்களுக்கும் இப்போது சந்தோஷம்... புகைப்படக்காரர்களின் காமிராக்களுக்கோ பரம சந்தோஷம்!

 

வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு!

மும்பை: கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர்.

ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை.

வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு!

ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி.

இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட்டியடித்துவிட்டனர்.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கழுத்தை நெறிக்க முயன்றாராம்.

உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதே நேரம் பலமாகக் குரலெழுப்பி செக்யூரிட்டிகளை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்துள்ளனர்.

ஸ்ருதியின் மும்பை ஏஜென்ட் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா... ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து எதுவும் தெரியாது என அந்த ஏஜென்ட் தெரிவித்தார்.

ஆனால் தங்களுக்கு இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் செர்ரிங் டோர்ஜ் தெரிவித்தார்.

 

1200 அரங்குகளில்... வெளியாகுமா இரண்டாம் உலகம்?

சென்னை: செல்வராகவனின்1200 அரங்குகளில்... வெளியாகுமா இரண்டாம் உலகம்?  

தமிழில் இரண்டாம் உலகம் என்ற தலைப்பிலும், தெலுங்கில் வர்ணா என்ற தலைப்பிலும் இந்தப் படம் வெளியாகிறது.

இரு மொழிகளிலும் மொத்தம் 1200 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

ஆனால் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என மூன்று தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாகவே கொடுத்துள்ளனர்.

குறிப்பாக டி ராமாநாயுடு தனக்கு சேர வேண்டிய ரூ 6 கோடியை செல்வராகவன் கொடுக்கும்வரை படத்தின் பிரிண்டுகளைக் கொடுக்கக் கூடாது லேபுக்கு கடிதம் கொடுத்துவிட்டார்.

எனவே இந்தக் கடன்களை செல்வராகவன் அடைத்தாலோ அல்லது அவர்களை சமாதானப்படுத்தினாலோ மட்டுமே இரண்டாம் உலகம் வெளியாகும் என்கிறார்கள்.

 

சந்தானத்தைக் கைவிட்ட சிம்பு!

சந்தானத்துக்கு சினிமாவில் முக்கியத்துவம் கிடைக்கக் காரணமானவர்களில் ஒருவரான சிம்பு, தன் அடுத்த படத்தில் அவரைக் கழட்டிவிட்டது சந்தானத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதற்கும் முன்பே சிம்பு முதல் முதலாக ஹீரோவாக நடித்த காதல் அழிவதில்லை படத்திலிருந்தே சிம்புவுடன் தொடர்ந்து சந்தானம் நடித்து வருகிறார். சிம்புவின் மன்மதன் படம் மூலம்தான் சந்தானத்துக்கு பெரிய திரையில் பெரிய பிரேக் கிடைத்தது.

சந்தானத்தைக் கைவிட்ட சிம்பு!

ஆனால் இப்போது பாண்டிராஜ் சிம்புவை இயக்கும் படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. அவருக்கு பதில் சூரி நடித்திருக்கிறார்.

சந்தானம் காமெடி செய்த படங்கள்அடுத்தடுத்து சறுக்கிக் கொண்டதும், தொடர்ந்து இரட்டை அர்த்த வசனங்கள், சர்ச்சைக்குரிய காட்சிகளால் அவர் பெற்று வரும் கண்டனங்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

இதையெல்லாம் கவனித்த சந்தானம், சிம்புவிடமே நேரடியாக 'ஏன் நண்பா, ஏன்?' என கேட்க, இது என் முடிவல்ல என இயக்குநரைக் கைகாட்டிவிட்டு நழுவினாராம் சிம்பு.

 

சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒன்றேகால் கோடி சிங்கிள் பேமெண்ட்!

சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ஒன்றேகால் கோடி என்றும், அதையும் ஒரே தவணையில் கொடுக்க ஒப்புக் கொண்டதாலேயே அவர் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

பாண்டிராஜ் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக பாண்டிராஜ் அறிவித்ததிலிருந்து பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன.

சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒன்றேகால் கோடி சிங்கிள் பேமெண்ட்!

ஆனால் இந்தப் படத்தை நயன்தாரா ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம், குறைந்த தேதிகள் மற்றும் அதிகபட்ச சம்பளம். கூடவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கப் போகும் பரபரப்பு பப்ளிசிட்டி போன்றவைதானாம்.

இந்தப் படத்துக்கு அவர் குறைந்த நாட்கள் கால்ஷீட் தந்தாலே போதும் என்று பாண்டிராஜ் உறுதியளித்திருக்கிறார். காரணம் சிம்பு தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே ஷூட் செய்யப்பட்டுவிட்டன.

இதைத் தவிர, ஒன்றேகால் கோடி ரூபாயை ஒரே பேமெண்டாகத் தர தயாரிப்பாளரான சிம்புவும் ஒப்புக் கொண்டாராம்.

சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒன்றேகால் கோடி சிங்கிள் பேமெண்ட்!  

பிரஸ் மீட் வைக்கவில்லை, ஒரு விளம்பரம் வெளியிடவில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரம், இன்னும் பெயர் கூட வைக்கப்படாத இந்தப் படத்துக்குக் கிடைத்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் சிம்பு - நயன்தாரா ஜோடிதான். எனவே படத்துக்கு இது பெரிய பலம், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக பீல்டில் நிற்க உதவும் என்பதையெல்லாம் மனதில் வைத்தே இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறாராம்.