நடிகர் - நடிகைகள் மேனேஜர் வைத்துக் கொள்ளக்கூடாது - கேரளவில் திடீர் கெடுபிடி

Kerala Cinema Bans Artist Managers

கொச்சி: இனி நடிகர் நடிகைகள் மேனேஜர் என தனியாக ஒருவரை வைத்துக் கொள்ள தடை விதித்துள்ளது மலையாள பட உலகம்.

இந்த மேனேஜர்களுக்கு சம்பளமாக நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் 15 சதவீதம் தரப்படுகிரது. இந்தப் பணத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்தே நடிகர் நடிகைகள் வாங்கிக் கொடுத்தார்கள்.

மேனேஜர்களுக்கு கமிஷன் கொடுக்காதவர்களின் படங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. படப்பிடிப்புக்கு போகாமல் வேண்டுமென்றே தாமதம் செய்தனர்.

சமீபத்தில் பத்மபிரியாவும் இதுபோல் தொந்தரவு கொடுத்தார். ‘நம்பர் 66 மதுரை பஸ்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் பத்மபிரியா, படத்தை முடித்துத் தர வேண்டும் என்றால் தனது மேனேஜருக்கு கொடுக்க கூடுதல் பர்சன்டேஜ் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தாக இயக்குநர் நிஷாந்த் புகார் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத்திலும் பத்மபிரியா மீது புகார் தரப்பட்டது.

இதுகுறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் இனி மேனேஜர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

சம்பள விஷயங்கள் குறித்து இனி நடிகர் - நடிகைகளிடம் நேரிலேயே பேசிக் கொள்ள தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

சிம்புவிடம் வாலாட்ட வரும் ஜெய்


Jai Act Simbu S Vaalu
சிம்புவின் வாலு படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறாராம் ஜெய்.

சிம்பு, ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடிக்கும் வாலு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் சிம்வுடன் சேர்ந்து சந்தானம் அடிக்கும் லூட்டியில் திரையரங்கம் குலுங்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே வானம் படத்தில் காமெடி செய்தனர்.

இந்நிலையில் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தமும் வாலு படத்தில் நடிக்கிறாராம். அப்போ காமெடி தூள் கிளப்பும் போல. இந்த படத்தில் ஜெய் கெஸ்ட் ரோலில் வந்து செல்கிறாராம்.

சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக ஜெய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் போடா போடி படத்தின் கிளைமாக்ஸ் பாட்டை படம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அது முடிந்தவுடன் சிம்பு சென்னை திரும்பி வாலு ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவாராம்.
 

மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

Ar Rahman Act A Malayalam Film

இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மானை மலையாளப் படம் ஒன்றில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

மலையாள இயக்குனர் ஷஜூன் கரியால் 5 நண்பர்களை மையமாக வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். இதில் பிஜு மேனன், லால், சுரேஷ் கிருஷ்ணா, சுகுமார் மற்றும் சுனில் பாபு ஆகியோர் 5 நண்பர்களாக நடிக்கின்றனர். படத்தை பிஜு மேனனும் சேர்ந்து தயாரிக்கிறார். படத்தில் பிஜு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ட்ரூப்பில் இருக்கிறார்.

தனது கதாபாத்திரம் தத்ரூபமாக இருக்க அவர் ரஹ்மானை கெஸ்ட் ரோலில் வந்து செல்லுமாறு கேட்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் சில காட்சிகள் சென்னையில் உள்ள ரஹ்மானின் ஸ்டுடியோவில் படமாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

ரஹ்மான் மணிரத்னத்தின் கடல், சங்கரின் ஐ மற்றும் தனுஷின் மரியான் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

 

நடிக்கத் தெரியாமல் வந்த என்னையும் நடிகனாக்கியவர் பாலச்சந்தர்: கமல்

Kamal Praises K Balachander

நடிப்பு பற்றி எதுவுமே தெரியாமல் வந்த என்னையும் ஒரு நடிகனாக்கியவர் இயக்குனர் கே. பாலச்சந்தர் என்று கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் சந்தோஷம் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் ஹாசன் தனது குருவுக்கு அந்த விருதை வழங்கினார்.

அதன் பிறகு அவர் பேசியாதவது,

நடிப்பு பற்றி எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே திரையுலகிற்கு வந்தேன். எங்களுக்குள் இருந்த திறமையைப் பார்த்து அவர் எங்களை ஊக்குவித்தார் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நாங்கள் திரையுலகிற்கு வந்தபோது நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. பாலச்சந்தர் தான் எங்களை எல்லாம் நடிகராக்கினார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என்பது திரை உலகிற்கே விருது வழங்குவது போன்றாகும் என்றார்.

 

'ஹ... அது.. 18 மாசம் முன்னாடி அடிச்ச கிஸ்.. !' - ஆன்ட்ரியா

Andrea Acknowledged Her Lip Lock With Anirudh

சென்னை: அனிருத்தும் நானும் கிஸ்ஸடித்துக் கொண்டது உண்மைதான். ஆனால் அது நடந்து 18 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை," என்கிறார் ஆன்ட்ரியா.

நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் 'இறுக்கி அணைச்சு உதட்டோடு உதடு அழுத்தமாக உம்ம தரும்' படங்கள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகின்றன.

அனிருத்துக்கு 20 வயசுக்குள்தான். கொலவெறி பாட்டுக்கு இசையமைக்கும்போது 18 வயசுதான் என அறிமுகப்படுத்தினார்கள்.

ஆன்ட்ரியாவுக்கோ 30 வயதைத் தாண்டுகிறது. தன்னைவிட 10 வயது மூத்த ஆன்ட்ரியாவுடன் அனிருத் லாக்காகிவிட்டது குறித்து ஏகப்பட்ட கருத்துகள்.. கிண்டல்கள் உலா வருகின்றன.

இதற்கிடையே இந்தக் காட்சிகளை கிராபிக்ஸ் என்று சொல்லப் போகிறார்கள் சம்பந்தப்பட்ட இருவரும் என்றே பலரும் கூறினர். ஆனால் நடந்தது உண்மைதான் என ஆன்ட்ரியா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "நானும் அனிருத்தும் முத்தமிட்டுக் கொண்டது உண்மைதான். ஆனால் அது நடந்து 18 மாதங்கள் ஆகின்றன.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை. நாங்கள் எடுத்த படங்கள்தான். ஆனால் இப்போது ஏன் அனிருத்தை சந்தித்தேன் என வருத்தப்படுகிறேன். அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன்.

அப்போது எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது. ஆனால் இப்போது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் பிரிந்துவிட்டோம்," என்றார்.

 

பில்லா 2 நாயகி ப்ரூனா அப்துல்லாவுக்கு திருமணம்

Bruna Abdulla Engaged With Bengali   

சென்னை: அஜீத்துடன் 'பில்லா-2' படத்தில் நடித்த பிரேசில் அழகி ப்ரூனா அப்துல்லாவுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது.

பிரேசிலைச் சேர்ந்த விளம்பர மாடலான ப்ரூனா, பில்லா 2-ல் அஜீத் ஜோடியாக அறிமுகமானவர். படத்தின் பிரதான நாயகி பார்வதி ஓமணக்குட்டனைவிட இவருக்கு ஏகப்பட்ட காட்சிகள். கிட்டத்த பாதி நிர்வாணத்தில்தான் படம் முழுக்க வந்திருப்பார். இவருக்கும் வங்காள இளைஞர் ஒருவருக்கும் காதல் என்று செய்தி பரவியது. 3 ஆண்டுகளாக அந்த இளைஞரை ப்ரூனா காதலிப்பதாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் 'பில்லா-2' படத்தை முடித்து விட்டு குடும்பத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்பிய ப்ரூனா அப்துல்லாவுடன் காதலரும் சென்றுள்ளாராம்.

இதபற்றி கேட்ட போதெல்லாம் ப்ரூனா கருத்து கூற மறுத்து வந்தார். தற்போது தனது மவுனத்தை கலைத்து, எனக்கும் வங்காள இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட உள்ளது என்று தெளிவுபடுத்திவிட்டார்.

விரைவில் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றனவாம்.

 

விஷால் - த்ரிஷா நடிக்கும் 'சமர்' படத்தின் தலைப்புக்கு தடை கோரி வழக்கு

Case Filed Against Using Samar Title   

சென்னை: விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்கும் சமர் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு முதலில் ‘சமரன்' என பெயரிட்டிருந்தனர். அந்த தலைப்பு பின்னற் ‘சமர்' என மாற்றப்பட்டது. திரு இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷாவை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை டைரக்டு செய்தவர்.

‘சமரன்' என்பதைவிட ‘சமர்' பெயர் எளிதாக மக்களை சென்றடையும் என்பதால் தலைப்பை மாற்றி உள்ளோம் என்று அவர் கூறினார். ஆனால் விஷால் படத்துக்கு ‘சமர்' தலைப்பை பயன்படுத்தக்கூடாது என அக்வஸ்ரே பட நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் மதுரை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "சமர்' தலைப்பை கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னை தயாரிப்பாளர் சங்க சில்டில் பதிவு செய்தோம். ‘சமர்' பெயரில் தற்போது புதுமுகங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். சக்திமோகன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் விஷால் படத்துக்கு ‘சமர்' தலைப்பு வைத்துள்ளதாக விளம்பரங்கள் வந்துள்ளன. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சமர் தலைப்பை விஷால் படத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்," என்றார்.

 

'கும்பலாக' வீடு கட்டக் களத்தில் குதிக்கும் சந்தானம்!

Santhanam Build Rented Apartments

காற்றுள்ளபோதே தூற்றிக்கோ... இந்தப் பழமொழி யாருக்குப் பொருத்தமாக இருக்கிறதோ, சினிமாக்காரர்களுக்குத்தான் செம பொருத்தம். மிகச் சரியாக இதைப் பயன்படுத்தி மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே வரும்படியும், முதலீடுகளிலும் படு கவனமாக இருப்பார்கள்.

திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக முதலீடுகளில் அக்கறை காட்டுவார்கள். அதில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று.

முன்பு கவுண்டமணி உச்சத்தில் இருந்தபோது ஏகப்பட்ட வீடுகளைக் கட்டினார். அதேபோல செந்திலும் போட்டி போட்டுக் கொண்டு வீடுகளைக் கட்டிக் குவித்தார். இவற்றை வாடகைக்கு விட்டனர். இன்று வரை வாடகை வருமானமே பெரிய அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது சந்தானமும் இணையவிருக்கிறார். இவர் சற்று வித்தியாசமாக சிந்தித்து மிகப் பிரமாண்டமான ஒரு ஐடியாவுடன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அதாவது ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளைக் கட்டப் போகிறாராம் சந்தானம். இந்த வீடுகளை அவர் விற்கப் போவதில்லையாம். மாறாக வாடகைக்கு விடப் போகிறாராம். மிகப் பெரிய அளவில் இதன் மூலம் நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் என்பது அவரின் திட்டம் என்கிறார்கள்.

இந்த பிளாட்கள் எங்கு வரப் போகின்றன என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இந்தப் பணிகளில் படு தீவிரமாக இறங்கி விட்டாராம் சந்தானம்...

 

கமலுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி?

How Kamal Gets Hollywood Offer

சென்னை: கமல் ஹாலிவுட் படத்தை இயக்கும் செய்தியெல்லாம் ரொம்பப் பழசு. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்த விதம்தான் புதுசு.

இந்தப் படம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது, அதன் ஸ்டில்களைப் பார்த்தே பிரமித்துப் போனாராம் ஹாலிவுட் தயாரிப்பாளரான பேரி ஹாஸ்போன். இதுவரை ஹாலிவுட் படங்களில் கூட இதுபோன்ற சுவாரஸ்யமான ஸ்டில்கள் இல்லை என்று சொல்லி, படம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினாராம்.

விவரங்கள் கிடைத்ததும், சென்னைக்கே வந்துவிட்டாராம் ஹாஸ்போன். கமலுடன் நான்கு முறை இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்.

முதலில் தான் மட்டும் பார்த்து ரசித்தாராம். அடுத்து அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ள ஒரு முறை பார்த்தவர், மூன்றாவது முறையும் பார்த்து சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

அதையெல்லாம் செய்த பிறகு, தன் குடும்பத்தையே சென்னைக்கு அழைத்து வந்து நான்காவது படம் பார்த்திருக்கிறார்.

அதற்குப் பிறகுதான், எனது அடுத்த தயாரிப்பு உங்க டைரக்ஷனில்தான்... இந்தாங்க அட்வான்ஸ் என நீட்டியிருக்கிறார். விஸ்வரூபம் யூனிட் ஆட்கள் எல்லோர் முன்னிலையிலும் இதை அவர் கூற, அத்தனை பேரும் ஆச்சர்யம் - மகிழ்ச்சியுடன் கைத்தட்டினார்களாம்.

அதுமட்டுமல்ல, இந்த காலகட்டத்தில், கமலின் மற்ற படங்கள், அவரது மெனக்கெடல், சினிமாவுக்கான அவரது அர்ப்பணிப்பு குறித்தெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறார். 'நாம சரியான ஆளைத்தான் பிடிச்சிருக்கோம்,' என்ற திருப்தி அவருக்கு வந்த பிறகே, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஹாஸ்போன்!

உலகின் மிகப் பெரிய சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவராகப் பார்க்கப்படுவர் பேரி ஆஸ்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜீ தமிழ் சேனலின் ‘ச ரி க ம ப சேலஞ்ச்’ 2012 குரல் தேர்வு

Sa Re Ga Ma Pa Challenge Audition Kovai

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ச ரி க ம ப சேலஞ்ச் 2012 ம் ஆண்டிற்கான குரல் தேர்வு ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது. நடுவர்களாக இசைக்கலைஞர் மோகன் வைத்யாவும், பாடகி பிரசாந்தியும் பங்கேற்ற கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 470க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது இசையில் ஆர்வமுடைய பலரும் பங்கேற்று தங்களின் இனிமையான குரல்களில் பாடல்களைப் பாடி நடுவர்களை அசத்தினர். இவர்களில் 102 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடல்களைப் பாட அனுமதிக்கப்பட்டனர். மனதை மயக்கும் மெலடி பாடல்கள், துள்ளவைக்கும் திரை இசைப்பாடல்கள் என நடுவர்களின் மனதைக் கவரும் வகையில் பாடிய போட்டியாளர்கள் 36 பேர் சென்னையின் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ச ரி க ம ப சேலஞ்ச் 2012 ரியாலிட்டி ஷோவுக்கான குரல் தேர்வு ஏற்கனவே மதுரை, திருச்சி யில் நடைபெற்றுள்ளது. ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது. இந்த ஷோவுக்கான அடுத்த கட்டத் தேர்வு ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

 

நீதானே என் பொன்வசந்தம் பாட்டு சாம்பிள் வந்துடுச்சி... - அசத்திவிட்டார் இசைஞானி

Ilayaraaja S Ennodu Vaa Vaa Song Goes Viral Online

இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன்.

எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.

'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள்.

"என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல் தொடங்க, உடன் மெல்லிய தென்றலாய் பயணிக்கிறது ராஜாவின் இசை.

இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தார்கள் நல்ல இசை விரும்பும் ரசிகர்கள்.

ஏற்கெனவே யுவன் குரலில் வெளியான 'சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போதும்...' பாடல் காதலர்களின் உதடுகளில் தவழ்ந்து கொண்டிருக்க, இப்போது இந்தப் பாடல் வந்திருக்கிறது.

இதைக் கேட்ட பிறகு, எப்போது வரும் செப்டம்பர் 1 என காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். அன்றுதானே இசை வசந்தம்... அதுவும் ராஜாவின் நேரடி கச்சேரியுடன் ஆரம்பிக்கிறது!!

 

கரீனா வாய்ப்பை தட்டிப்பறிக்க நினைக்கும் பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra Kareena Kapoor Are Rivals Again   

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கரீனா கபூரின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதிலேயே குறியாக உள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் நடிக்க கரீனா கபூர் ஒப்பந்தமானார். அதன் பிறகு கரீனாவுக்கு திருமணம் என்ற அறிவிப்பு வந்தவுடன் பன்சாலி வேறு கதாநாயகியைத் தேடினார். உடனே பிரியங்கா சோப்ரா அவரை அணுகி தான் நடிப்பதாக விருப்பம் தெரிவித்தார். அதற்குள் கரீனா திருமணத்தை தள்ளிவைத்ததால் அந்த வாய்ப்பு அவருக்கே மீண்டும் சென்றது.

இந்நிலையில் இயக்குனர் பிராகஷ் ஜா தான் எடுக்கவிருக்கும் சத்யாகிரஹா படத்திற்கு கரீனாவை கதாநாயகியாக்குவது என்று தீர்மானித்துவிட்டார். இருப்பினும் பிரியங்கா அவரை அணுகி தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது செக்ரடரியை அனுப்பி தான் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் வரை சத்யாகிரஹா கதாநாயகியை உறுதி செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

கரீனா தான் நடிக்க வேண்டும் என்று பிரகாஷ் முடிவு செய்த பிறகு அந்த வாய்ப்பை எப்படியாவது தட்டிப் பறிக்க நினைக்கிறார் பிரியங்கா.