ராஜா ராணி இசை வெளியீடு - ரஜினிக்கு நேரில் அழைப்பு வைத்த இயக்குநர்!

சென்னை: ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் அழைத்தார் இயக்குநர் அட்லீ.

புதிய இயக்குநரான அட்லீக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.

சமீப நாட்களாக ஏகப்பட்ட பப்ளிசிட்டி இந்தப் படத்துக்கு.

ராஜா ராணி இசை வெளியீடு - ரஜினிக்கு நேரில் அழைப்பு வைத்த இயக்குநர்!

படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று பரபரப்பு கிளப்பி, இருவரும் சர்ச்சில் திருமணக் கோலத்தில் இருப்போது போல படங்களையும் வெளியிட்டனர்.

அடுத்து படத்தின் சிங்கிள் ட்ராக், ட்ரைலர் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் பெரிய பப்ளிசிட்டி செய்தவர்கள், இப்போது நயன்தாரா- ஆர்யா திருமணக் கோல ஆல்பம் என்று கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இப்போது படத்தின் இசை வெளியீட்டு விழா. ஜீவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 23-ம் தேதி சென்னையில் பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார்கள்.

இதற்கான அழைப்பிதழை பழைய எல்பி ரிகார்டு வடிவில் அச்சடித்துள்ளனர் (ஏற்கெனவே சேரன் தனது மாயக்கண்ணாடி படத்துக்கு இப்படித்தான் அடித்தார்).

இந்த அழைப்பிதழை இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கொடுத்து ஆசி பெற்றார் இயக்குநர் அட்லீ. அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்தான் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.

 

மெட்ராஸ் கஃபேவை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும்: நாங்கள் ரிலீஸ் செய்வோம்- ஜான் ஆபிரகாம்

மும்பை: மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும் என்று ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இந்தி படமான மெட்ராஸ் கஃபேயில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளனர். இதையடுத்து படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெட்ராஸ் கஃபேவை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும்: நாங்கள் ரிலீஸ் செய்வோம்- ஜான் ஆபிரகாம்

இந்நிலையில் இது குறித்து ஜான் ஆபிரகாம் கூறுகையில்,

அனைவரின் கருத்தையும் மதிக்கிறேன். மிஸ்டர் வைகோ, மிஸ்டர் சீமான் ஆகியோரின் கருத்துகளையும் மதிக்கிறேன். ஆனால் அவர்கள் எங்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இது ஜனநாயக நாடு. சென்சார் போர்டுக்கு படத்தில் ஏதும் பிரச்சனை இல்லை என்றால், அதில் எதுவும் தவறாக இல்லை என்று தான் அர்த்தம். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கட்டும். ஆனால் நாங்கள் படத்தை கண்டிப்பாக ரசிகர்களிடையே கொண்டு செல்வோம் என்றார்.

 

சேச்சி போன்று பாலிவுட் கனவு காணும் நடிகை

சென்னை: சின் சேச்சி போன்று பாலிவுட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று மில்க் நடிகை விரும்புகிறாராம்.

மில்க் நடிகை நடித்த முதல் படம் சர்ச்சையாகிவிட்டாலும் பறவை பெயரில் வந்த படம் அவருக்கு கோலிவுட்டில் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து அவர் தமிழோடு சேர்த்து தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

லீடர் படம் பிரச்சனைகளைத் தாண்டி வெளியானதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். இந்நிலையில் அவர் நடித்த தெலுங்கு படம் ஒன்று சூப்பர் ஹிட்டானதில் அம்மணி குஷியாக இருக்கிறார். அந்த படத்தை தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். இந்தியில் வெளியாவதால் இதன் மூலம் பாலிவுட் போகிறோமே என்று நடிகைக்கு மகிழ்ச்சி.

சின் சேச்சி போன்று தானும் பாலிவுட்டில் நுழைய இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுகிறாரம். பாலிவுட்டில் இருந்து நல்ல பாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்கிறாராம் மில்க் நடிகை.

சின் சேச்சி பாலிவுட் போய் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகிறார். பாவம் அவர் முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் மில்க் வேறா?

 

கணவரை விவாகரத்து செய்தார் நடிகை மம்தா மோகன்தாஸ்

எர்ணாகுளம்: நடிகை மம்தா மோகன்தாஸ் அவரது கணவர் பிரஜித் பத்மநாபனை விவாகரத்து செய்தார். எர்ணாகுளம் நீதிமன்றம் நேற்று அவருக்கு விவாகரத்தினை அறிவித்தது.

மம்தா மோகன்தாஸ் கேரளாவை சேர்ந்தவர். நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழிலில் விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜய்யுடன் தடையற தாக்க படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் குசேலன் படத்தில் அவர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

கணவரை விவாகரத்து செய்தார் நடிகை மம்தா மோகன்தாஸ்

தெலுங்கில் ஏராளமான படங்களில் பின்னணி பாடியுள்ளார்.

மம்தா மோகன்தாசுக்கும் கேரள தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் கடந்த 2011 டிசம்பரில் திருமணம் நடந்தது. 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து விவாகரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தற்போது அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

மம்தா மோகன்தாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இனி முழு நேரமும் சினிமாதான் என்று அறிவித்துள்ளார்.

 

நடிகர் விஜய் உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரெய்டு!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் உறவினருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி கெரக்கோ தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜய் உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரெய்டு!

இந்நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னட்டல் கன்டெய்னர் பிரிக்ட் ஸ்டேஷன் மற்றும் சரக்குபெட்டக தளங்களிலும் ஒரேநேரத்தில் 25க்கும் மேற்ப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சேவியர்பிரிட்டோ நடிகர் விஜய்க்கு நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை, வரவிருக்கும் சும்மா நச்சுன்னு இருக்கு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இந்த சேவியர் பிரிட்டோ. இயக்குநர் சிநேகா பிரிட்டோ இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தாமினியை ஆஜர்படுத்தக் கோரிய சந்துரு தாயாரின் மனு தள்ளுபடி!

தாமினியை ஆஜர்படுத்தக் கோரிய சந்துரு தாயாரின் மனு தள்ளுபடி!

சென்னை: தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களுடன் அனுப்புமாறு சந்துருவின் தாயார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சந்துரு தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிமன்றம்.

நீதிபதிகளிடம் தான் தன் தந்தை சேரனுடன் போகவே விரும்புவதாகவும், காதலன் வேண்டாம் என்றும் தாமினி தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு தரப்பு, தாமினியை மனம் மாற்றிவிட்டார்கள் சினிமாக்காரர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான மனுவை பிற்பகலில் சமர்ப்பித்தது.

ஆனால் சேரன் மகள் பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையிலும் தந்தையுடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். இதனை வாக்குமூலமாகவும் அளித்தார்.

எனவே சந்துரு தாயாரின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

 

மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு

மதுரை: மெட்ராஸ் கபே படத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள மெட்ராஸ் கபே படத்தை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஸ்டாலின் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியுயிருந்ததாவது :

மெட்ராஸ் கபே' படத்துக்கு 2 தணிக்கை வாரியங்கள் சான்று அளித்துள்ளன. இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவம், இலங்கையில் அமைதிப் படை நடவடிக்கை, அவர்களை தமிழர்கள் அவமதித்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழர்கள் தேச விரோதிகள், பயங்கர வாதிகள் என்பது போன்றும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு

ஆகஸ்டு 5 ஆம் தேதி, சென்னையில் 'மெட்ராஸ் கபே' படத்தின் சிறப்புகாட்சி திரையிடப்பட்டது. இதில் படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் பங்கேற்றார். அப்போது போலீஸ் தடியடி நடந்தது. இந்த படம் வருகிற 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ள இந்த படத்தை பொது நன்மை கருதி தடை செய்ய வேண்டும். தணிக்கை வாரியம் அளித்த சான்றுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் மனுவை நேற்று விசாரித்தனர். பின்னர் மத்திய, மாநில திரைப்பட தணிக்கை வாரியம், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அது தொடர்பாக செப்டம்பர் 3ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதோடு மத்திய திரைப்பட தணிக்கை குழுவிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இலங்கையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போரை மையமாகக் கொண்டு 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தை ஷீகித் சர்க்கார் இயக்கி உள்ளார். இதில் பிரபாகரனை தீவிரவாதி போன்று சித்தரித்து இருப்பதாகவும், எனவே 'மெட்ராஸ் கபே' படத்தை திரையிடக்கூடாது என்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முடிந்தது வழக்கு... தந்தை சேரனுடன் சென்றார் தாமினி!

சென்னை: சந்துருவுடனான காதல் காரணமாக இயக்குநர் சேரனுக்கு எதிராகத் திரும்பிவிட்ட மகள் தாமினி, இன்று மீண்டும் சேரனிடமே திரும்பி வந்துவிட்டார்.

காதலன் வேண்டாம். பெற்றோர்தான் வேண்டும் என அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்ததால், சந்துரு தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்தது நீதிமன்றம்.

தந்தை சேரனுடன் சந்தோஷமாகப் போவதாக மகள் தாமினி தெரிவித்தார்.

இரண்டு வாரங்கள் தனது பழைய பிரின்சிபால் வீட்டில் தங்கியிருந்தார் தாமினி. அப்போது அவரை சேரனின் திரையுலக நண்பர்கள் சந்தித்தனர். மேலும் தாமினிக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது.

இறுதியில் தனக்கு இப்போது காதல் வேண்டாம் என்றும், தாய் தந்தையுடன் வாழ்வதே சிறந்தது என புரிந்து கொண்டதாகவும் தாமினி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் தன் முடிவை தாமினி தெரிவித்தார்.

இந்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு சேரனுடன் தாமினி செல்ல அனுமதித்தது. இதந் மூலம் தாமினி காதல் விவகாரம் முடித்து வைக்கப்பட்டது.

தன் தந்தையுடன் செல்வதாக தான் எடுத்த முடிவு தெளிவானது என்றும், எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றும் தாமினி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

 

தலைவா படத்தை ஓட்டின...: தியேட்டருக்கு கடிதம் மூலம் மிரட்டல்

தலைவா படத்தை ஓட்டின...: தியேட்டருக்கு கடிதம் மூலம் மிரட்டல்

சென்னை: சென்னையில் தலைவா படம் ஓடும் தியேட்டர் ஒன்றுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

விஜய்யின் தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் குண்டு வெடிக்கும் என்று தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

அதன் பிறகு விஜய்யும், படக்குழுவினரும் பல்வேறு முயற்சி செய்து ஒருவழியாக படத்தை நேற்று ரிலீஸ் செய்தனர். படமும் பல்வேறு தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தலைவா படம் ஓடும் தியேட்டர் ஒன்றுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தை பிரித்துப் படித்தால், தலைவா படத்தை திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து மிரட்டல் கடிதம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

தலைவா - இது நம்ம விமர்சனம்!

Rating:
2.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய், சத்யராஜ், அமலா பால், சந்தானம், மனோபாலா, பொன்வண்ணன்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
இசை: ஜிவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு: சந்திரபிரகாஷ் ஜெயின்
எழுத்து - இயக்கம்: விஜய்

தலைவாவுக்கு வந்த பிரச்சினைகள், தலைவாவுக்குள் உள்ள அரசியல், இந்தப் பிரச்சினைகளுக்குப் பிந்தைய அந்தப் படம் பற்றின இமேஜ்... அத்தனையையும் மூளையிலிருந்து துடைத்தெறிந்துவிட்டுப் படத்தைப் பார்க்க முயன்றேன். அப்படிப் பார்த்ததிலிருந்து....

மும்பை தமிழர்களுக்கு காட்பாதராகத் திகழும் அண்ணா சத்யராஜை, சூழ்ச்சியால் கைது செய்கிறது போலீஸ். காதலுக்கு பர்மிஷன் கேட்க ஆஸ்திரேலியாவிருந்து வந்த மகன் விஜய் கண்ணெதிரிலேயே அவரை குண்டுவைத்துக் கொல்கிறார்கள்.

தலைவா - இது நம்ம விமர்சனம்!

திரும்ப ஆஸ்திரேலியாவுக்கே போக அரை மனசோடு விமான நிலையம் கிளம்பும் விஜய்யை, மும்பை தமிழர்களுக்கு தலைவனாக அழைக்கிறார்கள். அவரும் அடுத்த சீனிலேயே டைட்டான சட்டை, எம்ஜிஆர் கண்ணாடி போட்டுக் கொண்டு முகத்துக்கு நேரே விரல்களை கோர்த்துக் கொண்டு... தலைவனாகி விடுகிறார். மும்பையில் எவ்வளவு பெரிய கலவரம் நடந்தாலும் ஒரு எஸ்யூவியில் அவரும் நான்கு அடியாட்களும் மட்டுமே போய் அடக்கி விடுகிறார்கள்.

வில்லன் சும்மா இருப்பானா... அண்ணாவைக் கொல்ல 17 ஆண்டுகள் ஜெயிலில் அண்ணா அண்ணா என நிஷ்டையில் இருந்தவன், அடுத்து விஜய்யைக் கொல்ல 'ம்ம்... விஷ்வா...' என அடித்தொண்டையில் உறுமியபடி யோகாவில் உட்கார்கிறான். பாங்கு அடித்து பங்காகி விழுந்து கிடக்கும் விஜய்யின் ஆட்களை முதலில் கொல்கிறான். அடுத்த காட்சியில் வில்லனைத் தேடி விஜய் போக, அங்கே விஜய்யைப் பின்னால் குத்துகிறது ஒரு கை... அது விஜய்யின் சித்தப்பா பொன்வண்ணன்!

தலைவா - இது நம்ம விமர்சனம்!

குத்தியவுடன் செத்துப் போனால் அப்புறம் எப்படி ஹீரோ? ரத்தம் வழிய வழிய, ஒற்றைக் கையை மடக்கியபடி புரட்டி எடுக்கிறார் வில்லன் கோஷ்டியை. கடைசியாக சைரன் ஒலிக்க அமலா போலீஸ் வருகிறார். செத்துப் போய் பிணமாகக் கிடக்கும் வில்லன் கோஷ்டி மீது ஒரு ரவுண்ட் புல்லட்டை இறக்கிவிட்டு... 'தப்பி ஓடப் பாத்தாங்க.. சுட்டுட்டேன். தூக்கிட்டு வாங்க' என்று சொல்லி, மறைந்து நிற்கும் காதலனைக் காப்பாற்றிவிட்டுப் போகிறார்.

அடுத்த சீனில் அப்பாவின் சிவப்பு சால்வையைப் போர்த்தியபடி விஜய் வர.. தலைவா!

இந்த மூன்று மணிநேரக் கதையையும் பார்த்து முடிக்கும்போது உங்களுக்கு நாயகன், பாட்ஷா, தளபதி, புதிய பறவை, அமீரின் ஆதிபகவன், தேவர் மகன், சர்க்கார்... என மாறி மாறி பல படங்கள் மண்டைக்குள் வந்து போனால்... அதற்கு இயக்குநர் விஜய் பொறுப்பல்ல... அந்தப் படங்களைப் பார்க்கும் உரிமைதான் உங்களுக்கு இருக்கிறது. இயக்குநர் என்ற முறையில் அந்தப் படக் காட்சிகளால் 'இன்ஸ்பையர்' (காப்பின்னு சொன்னா கத்தியத் தூக்குறாங்ணா!) ஆகும் உரிமை அவருக்கு இருக்கிறதல்லவா!!

சரி, எதோ.. ஒரு கலவைக் கதைன்னு வச்சிக்குவோம். இதில் ஒரு முக்கியமான கேள்வி... பொன்வண்ணன் வில்லனின் கையாளாச்சே... அப்புறம் எதுக்கு விஜய்யை இரண்டு மணி நேரத்துக்கு வில்லன் துரத்த வேண்டும். அடுத்த காட்சியிலேயே போட்டுத் தள்ளியிருக்க முடியுமே... போங்க டைரக்டர் சார்!

இவ்வளவு படங்களிலிருந்தும் சுடப்பட்ட காட்சிகளில், அதெல்லாம் தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நடிப்பது எத்தனை பெரிய கஷ்டம்! ஹீரோ விஜய் அந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

தலைவா - இது நம்ம விமர்சனம்!

நடனம்தான் விஜய்யின் ஸ்பெஷல். இத்தனைக்கும் இந்தப் படத்தில் அவர் டான்ஸ் ஸ்கூல் வேறு நடத்துகிறார். இருந்தும் அவரது சிறந்த நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அவரும் அமலா பாலும் ஒரு தீம் இசைக்கு ஆடுகிறார்கள். அப்போது பார்த்து நமக்கும் கமலும் ரேவதியும் புன்னகை மன்னனும் இளையராஜாவும் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள்!

படத்தில் காமெடியன் சந்தானம். ஒவ்வொரு வசனத்துக்கும் அவர் புரோ புரோ என்று விஜய்யை அழைக்க, பதிலுக்கு விஜய்யும் அதைத் திருப்பிச் சொல்ல... அக்கம்பக்கத்து சீட்டெல்லாம் கடுப்பில் 'பர்ர்ர்'!

ஆனால் சந்தானம் விட்ட குறையை காக்கி ட்ரஸ்ஸில் வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் அமலா பால்.

ஆ... மறந்தே போயிட்டோம்ல சத்யராஜை. அந்த மனுசன கிட்டத்தச்ச சுவத்துல தொங்க வச்ச படம் மாதிரி பயன்படுத்தியிருக்காங்க. ஆரம்பக் காட்சியிலிருந்து செத்துப் போகும் வரை, ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார் போலிருக்கிறது இயக்குநர். நீங்க பாட்டுக்கு நடிங்கன்னு சொல்லியிருந்தா கூட, ஆயிரம் எக்ஸ்பிரசன்ஸ் காட்டி அசரடிக்கிற நடிகரை வீணாக்கியிருக்காங்க!

மனோபாலா, சுப்பு, காலில்லாத இளைஞன், விஜய்யை கணக்குப் பண்ண முயற்சித்து பின்னர் காப்பாற்றி உயிர்விடும் இன்னொரு ஹீரோயின் (அமலா பாலை விட இவர் அம்சமாகத்தான் இருக்கிறார்!)... எல்லோருமே கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

தலைவா - இது நம்ம விமர்சனம்!

அந்த வில்லன்... ஒரு படத்தில் 'உன்னைப் பாத்தா வில்லன் பொன்னம்பலத்துக்கு காலரா வந்த மாதிரியே இருக்குடா' என்பார் விவேக், இந்த வில்லனைப் பார்க்கும்போதெல்லாம் அதுவே நினைவுக்கு வர, அவரை சிரித்துக் கொண்டே பார்க்க வேண்டியதாகிவிட்டது.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ஓகே. அமலா பாலின் மேக்கப்பை அம்பலமாக்கும் அளவுக்குப் போயிருப்பதாலோ என்னமோ நீரவ்ஷாவின் துல்லியம் உறுத்தலாகத்தான் இருக்கிறது!

ஜீவி பிரகாஷ்... இன்னும் வளரணும் தம்பி என்று சொல்வதைத் தவிர வேறொன்றுமில்லை. பாவம் அவரும் என்னதான் செய்வார்... ஏற்கெனவே பார்த்த பழைய சீன்களை இயக்குநர் விவரிக்க, இவரும் ஏற்கெனவே கேட்ட பழைய இசைத் துணுக்குகளை பாலீஷ் போடப் பார்த்திருக்கிறார்.

இயக்குநர் விஜய் அவர்களே... ஒரு கேள்வி.. ஒரே ஒரு கேள்வி... சொந்தமாக ஒரு காட்சியையாவது எப்போது உருவாக்கப் போகிறீர்கள்?

 

கரீனா கபூரை சுற்றி வளைத்து மொய்த்த துபாய் ரசிகர்கள்

துபாய்: பாலிவுட் நடிகை கரீனா கபூர் துபாய்க்கு படப்பிடிப்புக்காக வந்தபோது பெருமளவில் ரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்து விட்டனர். இதனால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுப் போனது.

சத்யாகிரஹா என்ற படத்தில் நடித்துள்ளார் கரீனா கபூர். அதில் அவருக்கு ஜோடி அஜய் தேவ்கன். படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக இருவரும் கரீனா கபூரை சுற்றி வளைத்து மொய்த்த துபாய் ரசிகர்கள்  

வந்த இடத்தில் ஒரு நகைக் கடை திறப்பிலும் கலந்து கொண்டார் கரீனா. கரீனாவை நேரில் பார்த்த ரசிகர்கள் அவரை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். கூட்டத்தினரிடம் சிக்கிய கரீனா திணறிப் போய் விட்டார்.

மேலும் அந்தப் பகுதியில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போனது. பின்னர் போலீஸார் தலையிட்டு ரசிகர்களை விலக்கி விட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

அவ்ளோ தானா என் ஹீரோயின் கனவு... கலங்கி, புலம்பும் நடிகை

தமிழில் எதுவும் வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமீபத்தில் ஹிந்தி படமொன்றில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார் நம்ம முத்தழகு. ஆனால், அதைக் கேள்விப்பட்ட படத்தயாரிப்பாளார்கள் எல்லா மொழிப்படங்களில் இருந்தும் நடிகைக்கு டான்ஸ் அழைப்பு விடுக்கிறார்களாம்.

கூப்பிட்டவர்கள் அனைவருமே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினால் போதும் என தெரிவிக்க, மனம் வெறுத்துப் போயுள்ளாராம் அம்மணி. இதனால், இனி ஹீரோயின் வேஷமே கிடைக்காதோ என அச்சத்தில் இருக்கிறாராம்.

ஏண்டா அந்தப் படத்துல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினோம் எதிர்படுபவர்களிடம் எல்லாம் புலம்பித் தீர்க்கிறாராம்.

 

தீபாவளிக்கு மோதும் அஜீத், கமல் படங்கள்?

சென்னை: வரும் தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பமும், கமலின் விஸ்வரூபம் 2 படமும் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு எப்படா தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்கள் பல மாதம் காத்திருந்த படம் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம். படத்தில் அஜீத் ஹேக்கராக வருகிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் ஆர்யா தான் ஹேக்கராம். இந்த படத்தில் அஜீத் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து காயம் அடைந்தார்.

தீபாவளிக்கு மோதும் அஜீத், கமல் படங்கள்?

ஆரம்பம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்நிலையில் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி என்றால் தீபாவளிக்கு அஜீத், கமல் படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கலாம்.

விஸ்வரூபம் படத்தை போன்று பிரச்சனை இல்லாமல் இருந்தால் இரண்டாம் பாகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். இல்லை என்றால் விஸ்வரூபம் படம் போல் பெரும் பஞ்சாயத்திற்கு பிறகு தான் ரிலீஸ் ஆகும்.