என் வீட்டை அபகரித்துக் கொண்டார்: சித்தி பாரதி தேவி மீது நடிகை அஞ்சலி வழக்கு

சென்னை: சென்னையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை தனது சித்தி பாரதி தேவி அபகரித்துக் கொண்டதாக நடிகை அஞ்சலி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இயக்குனர் சற்குணம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகை அஞ்சலிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் அஞ்சலி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

என் வீட்டை அபகரித்துக் கொண்டார்: சித்தி பாரதி தேவி மீது நடிகை அஞ்சலி வழக்கு

சென்னை வளரசவாக்கத்தில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டை எனது சித்தி பாரதி தேவி மற்றும் சூரியபாபு ஆகியோர் அபகரித்துக் கொண்டனர். அந்த வீட்டுக்கு என்னால் போக முடியவில்லை. எனது வீட்டை அபகரித்த பாரதி தேவி உள்ளிட்டோர் மீது வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே என் புகார் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் போலீசுக்கு நீதிமன்றம் உத்தர விட வேண்டும். எனது வீட்டை அபகரித்துள்ள பாரதி தேவியையும், சூரிய பாபுவையும் வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் இது குறித்து பதில் அளிக்குமாறு வளவரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

சிவாஜி சிலையை அகற்றக் கூடாது- கமிஷனரிடம் இயக்குநர்கள் மனு

சிவாஜி சிலையை அகற்றக் கூடாது- கமிஷனரிடம் இயக்குநர்கள் மனு

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் நடிகர் சிவாஜி சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் விசாரித்து, சிவாஜி சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பதில் அளிக்குமாறு சென்னை போக்குவரத்துப் பிரிவு போலீஸôருக்கு உத்தரவிட்டு வழக்கை புதன்கிழமைக்கு (நவ.13) ஒத்தி வைத்தனர்.

இயக்குநர்கள் சந்திப்பு...

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் விக்ரமன், பிரபல இயக்குநர்கள் பி.வாசு,கே.எஸ்.ரவிக்குமார்,பேரரசு,ரமேஷ் கண்ணா,ரவி மரியா ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை செவ்வாய்க் கிழமை மாலை சந்தித்து நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என மனு அளித்தனர். அந்த மனுவில் 50 திரைப்பட இயக்குநர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

பின்னர் இயக்குநர் பி.வாசு செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கெல்லாம், நடிப்பை கற்றுக் கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி. காமராஜர் சாலையில் உள்ள அவர் சிலையை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பது எங்களுக்கு வருத்ததை தருகிறது. அந்த சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்களது உணர்வுகளை தெரிவிக்கும் வகையிலேயே ஆணையரை சந்தித்து மனு அளித்தோம்," என்றார்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

சென்னை: வீரம் படத்தை ஹிட்டாக்க படக்குழு புதிய திட்டம் தீட்டியுள்ளது.

அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளி அன்று ரிலீஸாகாமல் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. படமும் தமிழகம் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசூலில் ஒரு கை பார்த்துள்ளது. இதனால் ஆரம்பம் படக்குழுவினர் குஷியாகியுள்ளனர்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

இந்நிலையில் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் படம் வருகிறது. இந்த படத்தை ஹிட்டாக்க படக்குழுவினர் தீயாக வேலை செய்கிறார்கள். படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யாமல் 5 நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அப்படி செய்தால் நல்ல வசூல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

மேலும் விஜய்யின் ஜில்லாவும் பொங்கலுக்கு வருவதால் வசூலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த திட்டமாம்.

க்ரிஷ் 3.... பத்துநாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

பாலிவுட் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது ஹ்ரித்திக் ரோஷனின் புதிய படமான க்ரிஷ் 3-ன் வசூல்.

ஜஸ்ட் பத்தே நாட்களில் 206 கோடியைக் குவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதன் மூலம் இந்திய திரைப்பட வரலாற்றில் உள்நாட்டு பாக்ஸ் ஆபீசில் இரண்டாவது வார வசூலில் 200கோடியைத் தாண்டிய மூன்றாவது படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்ற்றுள்ளது.

க்ரிஷ் 3.... பத்துநாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

இதற்கு முன் 3 இடியட்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்கள் இந்த சாதனையை எட்டின.

கடந்த திங்கட்கிழமை மட்டும் இப்படத்தின் ஒரு நாள் வசூல் ரூ 35.91 கோடி. வார நாளில் இவ்வளவு வசூல் செய்திருப்பது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

க்ரிஷ் வரிசையின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது அந்தப் படங்களில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஜாதூ கதாபாத்திரத்தை இதில் இயக்குநர் ராகேஷ் ரோஷன் (ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை) சேர்க்கவில்லை. ஆயினும், இந்தப் படம் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாராட்டப்பட்டு வருகிறது.

க்ரிஷ் வரிசைப் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் குழந்தைகளே. அவர்கள்தான் தங்கள் பெற்றோர்களை வற்புறுத்தி தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

விழாக்காலம், பரீட்சைகள் இல்லாத நேரம் என்பதால், குடும்பத்தோடு அவுட்டிங் செல்பவர்களின் முதல் தேர்வாக க்ரிஷ் 3 அமைந்துள்ளது.

இந்த வேகத்தில் வசூலைக் குவித்தால், இந்தியாவின் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமைக்குரிய ரஜினியின் எந்திரனை நெருங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

'செல்வராகவன், ஏன் இப்படி நீங்களும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறீங்க?'

கஷ்டப்பட்டால்தான் எந்தப் படமாக இருந்தாலும் பலன் கிடைக்கும், என்று இயக்குநர் செல்வராகவன் கூறினார்.

இரண்டாம் உலகம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்வராகவனிடம், "நீங்கள் இயக்கும் எல்லா படங்களிலும் நீங்களும் கஷ்டப்பட்டு, நடிகர்-நடிகைகளையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று புகார்கள் கிளம்புவது வழக்கமாகிவிட்டது. இது தேவைதானா?" என்று கேட்கப்பட்டது.

'செல்வராகவன், ஏன் இப்படி நீங்களும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறீங்க?'

அதற்கு பதில் அளித்த செல்வராகவன், "எந்தப் படமாக இருந்தாலும், கஷ்டப்பட்டால்தான் அதற்கான பலன் கிடைக்கும். அது எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி, நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி, கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்.

இந்த அறைக்குள்ளேயே முழு படத்தையும் எடுத்தால் கூட, நடிகர்-நடிகைகள் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.

எந்த ஒரு வேலையையும் கஷ்டம் என்று நினைக்கக் கூடாது. நான் இயக்குகிற படங்கள் புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் உழைக்கிறேன். 2000-ல் நான் டைரக்டராக வந்தேன். இந்த பதிமூன்று வருடங்களில், எல்லாமே மாறிப்போச்சு. ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கே தாக்குப் பிடிக்கவே முடியாது..," என்றார்.

தன்னை வைத்து படமெடுக்காவிட்டாலும், தயாரிப்பாளரைப் பாராட்டிய பீட்சா இயக்குநர்!

பொதுவாக முதல் படம் பண்ண இயக்குநருக்கும் அதன் தயாரிப்பாளருக்கும் படம் வெளியான பிறகு, நல்ல உறவு நிலைப்பது சினிமாவில் ரொம்ப கஷ்டம்...

அதுவும், முதல் படத்தை தன்னை வைத்து எடுத்துவிட்டு, அடுத்து அதே தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகத்தை வேறு இயக்குநரை வைத்து ஒரு தயாரிப்பாளர் எடுத்தால்...

தன்னை வைத்து படமெடுக்காவிட்டாலும், தயாரிப்பாளரைப் பாராட்டிய பீட்சா இயக்குநர்!

ஆனால் அந்த கோபமோ வருத்தமோ எதுவும் இல்லை பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கு.

விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த ‘பீட்சா'வை இயக்கியவர். இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ‘பீட்சா' படத்தின் இரண்டாம் பாகத்தை ‘பீட்சா-2 தி வில்லா' என்ற பெயரில் படமாக்கி வருகிறது. இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தீபன் சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

படம் வெளியாவதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு கார்த்திக் சுபாராஜ் தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் சி.வி.குமாரின் தயாரிப்பில் வெ ளிவரவிருக்கும் ‘பீட்சா-2 தி வில்லா' படம் ‘பீட்சா' படத்தை போல் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுபாராஜ் தற்போது சித்தார்த்-லட்சுமிமேனன் நடிப்பில் ‘ஜிகர்தண்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

சென்னை: அஜீத் குமாரின் ஆரம்பம் படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆரம்பம் உலகம் முழுவதும் ரூ.91.63 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்பம் படம் தெலுங்கில் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை ரூ.6 கோடிக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு தயாரிப்பாளர்களுக்காக தனி சங்கம்: இயக்குநர் விக்ரமன் அழைப்பு... உடைகிறதா தயாரிப்பாளர் சங்கம்?

சென்னை: சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இப்போது பாதுகாப்பற்ற நிலை... அவர்களின் படங்களை வெளியிடக்கூட முடியாத சூழ்நிலை உள்ளதால், சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் தனி சங்கம் அமைக்கப் போவதாக இயக்குநர் விக்ரமன் அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் உடையுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மெய்யழகி என்ற படத்தின் ட்ரைலர வெளியீட்டு விழா இன்று ஏவிஎம் ஏசி அரங்கில் நடந்தது. பாலாஜி- ஜெய்குவேதனி நடித்துள்ள இந்தப் படத்தை ஆர்டி ஜெயவேல் இயக்கியுள்ளார்.

சிறு தயாரிப்பாளர்களுக்காக தனி சங்கம்: இயக்குநர் விக்ரமன் அழைப்பு... உடைகிறதா தயாரிப்பாளர் சங்கம்?

விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, இயக்குநர் பேரரசு, நடிகைகள் தேவயானி, சோனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விக்ரமன், "இப்போதெல்லாம் சிறிய படங்களுக்கு பாதுகாப்பே இல்லை. நானெல்லாம் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்துவைத்துக் கொண்டு ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கிறேன்.

தொன்னூறுகளில் சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட தெளிவான நடைமுறையை தயாரிப்பாளர் சங்கம் வைத்திருந்தது. இப்போது அப்படி இல்லை. ஒரு கோடி ரூபாய்க்குப் படமெடுத்துவிட்டு, மேலே பப்ளிசிட்டிக்காக மட்டுமே ஒன்றரைக் கோடி ரூபாய் இருந்தால்தான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற நிலை.

விளம்பரத்துக்காக ஒன்றரைக் கோடி என்பது சரிதானா?

தொன்னூறுகளில் ஒரு முன்னணி பத்திரிகையுடன் பிரச்சினை வந்தது. எனவே விளம்பரங்களை அந்தப் பத்திரிகையைவிட சர்க்குலேஷனில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் மிக்க இன்னொரு பத்திரிகைக்கு தரச் சொன்னார்கள். நாங்களும் தந்தோம். விளம்பரக் கட்டணம் குறைந்தது, படங்களையும் வெளியிட்டோம். இன்று அப்படியில்லை.

அப்படியானால் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் இங்கே இருக்கவே கூடாதா... இருக்கும் நிலையைப் பார்த்தால் நானே சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை ஆரம்பித்துவிடப் போகிறேன்," என்றார்.

உடனே விழாவின் பிஆர்ஓவான பிடி செல்வகுமார், விக்ரமனின் முடிவை வரவேற்றதோடு, விக்ரமன் இந்த சங்கத்தை ஆரம்பித்தால் தாமே நூறு தயாரிப்பாளர்களை அவர் பக்கம் அழைத்து வருவதாக மேடையில் அறிவித்தார்.

தீபிகா நடித்த 'ராம் லீலா' படத்தை ரிலீஸ் செய்ய தடை: டெல்லி கோர்ட் அதிரடி

டெல்லி: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள ராம் லீலா படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிரபு சமாஜ் தர்மிக் ராம் லீலா குழு உள்பட 6 பேர் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

ராம் லீலா படம் இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் உள்ளது. ஏனென்றால் அதில் செக்ஸ், வன்முறை மற்றும் ஆபாசம் உள்ளது. ராம் லீலா என்பது கடவுள் ராமரின் பெயரோடு தொடர்புடையது. இதனால் மக்கள் ராமரின் வாழ்க்கை பற்றிய படம் என்று நினைத்து தியேட்டருக்கு செல்வார்கள். அப்படி சென்று படம் பார்த்தால் அது அவர்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும். அதனால் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.

தீபிகா நடித்த 'ராம் லீலா' படத்தை ரிலீஸ் செய்ய தடை: டெல்லி கோர்ட் அதிரடி

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ராம் லீலா படம் நாளை மறுநாள் அதாவது 15ம் தேதி ரிலீஸாகவிருந்தது. இந்நிலையில் தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படத்திற்கு தடை கோரி என்.ஜி.ஓ. ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததுடன், என்.ஜி.ஓ.வுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் சீரியல்…. பின்னணி தகவல் தெரியுமா?

சூரிய டிவியில் சனிக்கிழமையன்றும் சீரியல் ஒளிபரப்புவதற்கான பின்னணியைப் பற்றி ஊடக உலகில் பலரும் பலவிதமாக பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். காது கொடுத்து கேட்ட போது கிடைத்த விசயம் சுவாரஸ்யமானதாகத்தான் இருந்தது.

குடும்ப கட்சி ஆட்சியில் இருந்த போது ஒரு படம் விடாமல் வாங்கி குவித்தது சூரிய டிவி. படத்தயாரிப்பு, விநியோகம் என அடித்து பிடித்து வாங்கி நிறைய பேரின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது.

சேனலுக்கு எதிராக குடும்ப கட்சி கடைவிரித்த உடன் போட்டி கிளம்பியது. இளந்தலைமுறை சேனலின் மூலமாகவும் போட்டி தொடங்கியது. அதோடு மட்டுமல்லாது ஆட்சி மாறிய உடன் காட்சியும் மாறியது.

விநியோக உரிமை, படத்தயாரிப்பு என அனைத்திலும் முன்பைப் போல ஈடுபடமுடியவில்லை சூரியடிவியினால். அதோடு நில்லாமல் திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமத்திலும் இப்போது சிக்கல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மணிக்கு பலமுறை

சூரிய டிவி ஒரு படத்தை விநியோகம் செய்தால் மணிக்கு பலமுறை முன்னோட்டம் போட்டு மக்களை தியேட்டருக்கு வரவழைப்பார்கள். இதனால் பல பட்ஜெட் படங்கள் வசூலை குவித்தன.

டிவியை நம்பி சினிமா

போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தவர்கள் பலரும் இதே முறையை பின்பற்றி டிவியில் விளம்பரம் செய்வதற்கென்றே பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவேண்டியதாகிவிட்டது.

நூறு தியேட்டர்கள்

தமிழ்நாடு முழுக்க 100 தியேட்டர்களை வாங்க நினைத்த சூரிய டிவி அதிக அளவில் படங்களை தயாரிக்கவும் திட்டமிருந்தது. ஆட்சி மாறிய உடன் சட்டென காட்சிகளும் மாறிவிட்டன. குழுமத்தின் திரைப்பட குழுவில் இருந்தவர்கள் கம்பி எண்ணி கடைசியில் காணாமல் போனார்கள்.

முன்போல இனி

பட விநியோக உரிமை, சேட்டிலைட் ரைட்ஸ் என முன்போல முட்டி மோத முடியாது என அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டது சூரிய டிவி. தலைவா படத்தின் உரிமையை வாங்கிய போதே அதை முற்றிலும் உணரத் தொடங்கிவிட்டது.

சீரியலைப் போடு

டிவியில் போட்ட படங்களையே போட்டு ரசிகர்களை வெறுப்பேற்ற வேண்டாம். புதுப்புது நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆட்களைத் தேடிவேண்டிய நிலையில் இல்லை. இருக்கவே இருக்கு சீரியல் அப்புறம் எதற்குக் கவலை என்று சனிக்கிழமையும் சீரியலை ஒளிபரப்ப கட்டளையிட்டு விட்டது நிர்வாகம்.

'கெட்டவனா நடிச்சது போதும்... இனி நல்லவனா நடிங்க'- ஷாலினி அட்வைஸால் மாறிய அஜீத்

'கெட்டவனா நடிச்சது போதும்... இனி நல்லவனா நடிங்க'-  ஷாலினி அட்வைஸால் மாறிய அஜீத்

சென்னை: தொடர்ந்து கெட்டவனாகவே நடித்தது போதும்... இனி நல்லவர் வேடங்களில் நடிங்க என்று மனைவி ஷாலினி சொன்னதைக் கேட்டுத்தான் அஜீத், வீரம் படத்தில் நல்ல ஹீரோ வேடத்தில் நடித்துள்ளாராம்.

‘பில்லா', 'அசல்', ‘பில்லா-2', ‘மங்காத்தா', ‘ஆரம்பம்' என தொடர்ந்து வில்லத்தனம் கலந்த ஹீரோவாகவே நடித்து வருகிறார் அஜீத்.

வில்லத்தனம் கலந்த ஹீரோ என்றால் பல விதங்களிலும் வசதி என நினைத்துதான் அந்த மாதிரி வேடங்களைக் கேட்டு நடித்தாராம்.

ஆனால் இப்போது அஜீத் என்றால் கெட்டவர் என்பதுபோன்ற இமேஜ் வருவதை அஜீத் மனைவி ஷாலினி சுத்தமாக விரும்பவே இல்லையாம்.

அதனால்தான் ‘சிறுத்தை' சிவா இயக்கும் ‘வீரம்' படத்தில் நல்ல ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டாராம். ‘வீரம்' படத்தில் அஜீத் வேஷ்டி-சட்டை அணிந்து, பாசமிகு அண்ணனாகவும் அநியாயத்துக்கு எதிராக போராடுபவராகவும் வருகிறாராம்.

இந்தப் படத்துக்கான கதை விவாதத்தின்போது, தன் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சிவா வர்ணித்ததை ரசித்த அஜீத் உடனே ஒப்புக் கொண்டாராம்.

இதற்கு முக்கிய காரணமே, ஷாலினியின் வேண்டுகோள்தானாம். தொடர்ந்து வில்லனாக நடிக்க வேண்டாம். இனி நல்ல ஹீரோவாக நடியுங்கள் என ஆரம்பம் படப்பிடிப்பின்போதிருந்தே சொல்லிக் கொண்டு வந்தாராம்.

மீண்டும் வெங்கட் பிரபுவுக்கு கால்ஷீட் தருகிறார் அஜீத்!

மீண்டும் தன்னை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குத் தருகிறார் அஜீத்.

பில்லாவுக்குப் பிறகு அஜீத்துக்கு சொல்லிக் கொள்ளும்படியான படம் என்றால் அது மங்காத்தாதான். அந்தப் படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு.

அஜீத் இப்போது நரைத்த தலை, தாடியுடன் தைரியமாக படங்களில் நடிக்கக் காரணம் வெங்கட் பிரபு அந்த தோற்றத்தை சுவாரஸ்யமாக மாற்றியதுதான்.

மீண்டும் வெங்கட் பிரபுவுக்கு கால்ஷீட் தருகிறார் அஜீத்!

அந்த வெங்கட் பிரபுவின் பிறந்த நாளன்று, தன் பங்களாவுக்கு அழைத்து சமீபத்தில் விருந்து கொடுத்த அஜீத், கவுதம் மேனன் படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் படத்தை நீங்கள் இயக்கப் போகிறீர்கள். நல்ல கதை தயார் செய்யுங்கள் என வெங்கட் பிரபுவிடம் கூறினாராம்.

அதுமட்டுமல்ல, பிரியாணி படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் சின்ன பட்ஜெட் படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடித்துத் தரப் போவதாகவும் அஜீத் கூறியுள்ளாராம்.

அடுத்தடுத்து அஜீத் தந்த இந்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கும் வெங்கட் பிரபு, பிரியாணியை மறந்துவிட்டு, மற்ற இரு படங்களின் வேலைகளை மளமளவெனத் தொடங்கிவிட்டாராம்!

சுயநினைவை இழந்தார் நடிகர் குள்ளமணி.. கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

சுயநினைவை இழந்தார் நடிகர் குள்ளமணி.. கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

சென்னை: பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள நடிகர் குள்ளமணி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் சுய நினைவை இழந்துள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு குள்ளமணி வீட்டில் படுக்கப் போயுள்ளார். அதன் பிறகு 2 நாட்களாக எழுந்திருக்கவே இல்லையாம். இதையடுத்து அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுய நினைவை இழந்த நிலையில் உள்ள குள்ளமணிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குள்ளமணியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாப் நாற்காலி படம்தான் குள்ளமணியின் முதல் படமாகும். கரகாட்டக்காரன் படத்தில் இவர் வந்து போன காமெடி வேடம் இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல அபூர்வ சகோதரர்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

61 வயதாகும் குள்ள மணியின் இயற்பெயர் சுப்பிரமணி என்பதாகும். கே.கே.நகரில்தான் இவரது வீடு உள்ளது. எம்.ஜி.ஆர். முதல் தனுஷ் வரை சகல நடிகர்களுடனும் நடித்துள்ளார் குள்ளமணி என்பது குறிப்பிடத்தக்கது.