மும்பை: மும்பையில் நடந்த மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ரா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா நடிகை ராணி முகர்ஜியின் ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டார்.
மும்பையில் அண்மையில் மறைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ராவின் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் யாஷ் சோப்ராவின் மனைவி பமீலா சோப்ரா, மகன் உதய் சோப்ரா உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். சிலையை பமீலா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ராணி முகர்ஜியும் கலந்து கொண்டார்.
ராணியும், யாஷ் சோப்ராவின் மூத்த மகனான ஆதித்யா சோப்ராவும் கடந்த ஆண்டே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கிசுகிசுக்கப்ப்டடு வருகிறது. இந்நிலையில் சிறை திறப்பு விழாவில் பேசிய பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா, பமீலா சோப்ரா, உதய், ராணி மற்றும் குடும்பத்தார்... ஆதித்யாவின் பெயரை விட்டுவிட்டேன் என்று என் மனைவி கூறுகிறார். ராணி சோப்ராவின் பெயரை சொன்னால் அது ஆதித்யாவை குறிக்கும் என்றார்.
இதைக் கேட்ட ராணி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார். எல்லோரும் கிசுகிசுத்துக் கொண்டிருக்கையில் சத்ருகன் சின்ஹா இப்படி ராணி சோப்ரா என்ற பொது இடத்தில் கூறியது அவர்களின் ரகசிய திருமணத்தை உறுதி செய்வது போல் உள்ளது.