அர்ஜுனுடன் டூயட் பாடுவாரா கரீனா

மும்பை: பாலிவுட்டின் பியூட்டி கரீனா கபூர் இளம் ஹீரோ அர்ஜுன் கபூரை அடுத்தப் படத்தில் காதல் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 ஸ்டேட்ஸ் என்ற ஹிட் படத்தில் அழகு நடிகை ஆலியாவுடன் மிக நெருக்கமாக நடித்து நல்ல பெயரைப் பெற்ற அர்ஜுன் கபூர் இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

Kareena Kapoor to co-star Arjun Kapoor in R Balki’s next

பெயரிடப் படாத அந்த படத்தில் நடிகை கரீனா கபூரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கரீனா கைவசம் தற்போது சல்மானுடன் நடித்து வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தைத் தவிர வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை எனவே இந்தப் படத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

கரீனா தற்போது பஜ்ராங்கி பைஜான் படத்தின் இறுதிக் கட்ட படப் பிடிப்பு மற்றும் படத்தின் புரோமோஷன் வேளைகளில் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார்.இந்தப் படத்தின் ரிலீசிற்குப் பின்பு அவர் பால்கியின் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்கி இயக்கிய கடைசி படமான ஷமிதாப் படம் சரியாக போகவில்லை அதே நிலை தான் அர்ஜுனுக்கும் பையன் கடைசியாக நடித்த தீவார் காலை வாரிவிட்டது எனவே அடுத்த படம் வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் இருக்கிறார்கள்

ரொமாண்டிக் ப்ளஸ் காமெடி என்ற ரீதியில் படத்தை எடுக்க இருக்கிறார்கள் படத்தை அடுத்த வருடம் 2016 ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வரத்திட்டமாம்.

கரீனா அர்ஜுனுடன் டூயட் பாடுவாரா பார்க்கலாம்...

 

“எ பியூட்டிபுல் மைன்ட்” ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் ஜான் நாஷ் விபத்தில் மரணமடைந்தார்

லாஸ் ஏஞ்செல்ஸ்: எ பியூட்டிபுல் மைன்ட் (தமிழில் ஒரு அழகான மூளை என்றும் கூடச் சொல்லலாம் ) என்ற ஒரு அழகான நல்ல படத்தை எடுப்பதற்கு காரணமாக இருந்த கணித மற்றும் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜான் நாஷ் இரு தினங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார்.

அமெரிக்காவின் கணிதப் பேராசிரியர் ஜான் நாஷ்(86) மற்றும் அவரது மனைவி அலிசியா(82) இருவருமே இந்த விபத்தில் மரணமடைந்தனர்.இருவரும்சீட் பெல்ட் அணியாததே இதற்கு காரணம் என்று மீடியா துறையினர் கூறியுள்ளனர்.

'Beautiful Mind' mathematician John Nash killed in crash

1928 ம் வருடம் பிறந்த ஜான் நாஷ் தனது மனைவி அலிசியாவை முதல் முறை திருமணம் செய்து சிறிது வருடங்களிலே அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்தார்.

மிக நீண்ட வருடங்கள் சுமார் 37 வருடங்கள் கழித்து 2001 ம் ஆண்டு மீண்டும் தன் முதல் மனைவி அலிசியாவை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டவர்.

நோபல் பரிசு பெற்ற மிகச் சிறந்த கணித மேதையான இவரின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு எ பியூட்டிபுல் மைன்ட் என்ற பெயரில் எழுதப் பட்ட சுயசரிதையையை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் எடுக்கப்பட்ட படம் தான் எ பியூட்டிபுல் மைன்ட்.

2001 ம் ஆண்டு ரோன் ஹோவார்டால் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபி சிலும் நல்ல வெற்றியைப் பெற்றது 58 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இப் படம் 313 மில்லியன் வசூலித்து சாதனை புரிந்தது.இவ்வளவு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான இந்தக் கணித

மேதையின் மறைவு அவரை அறிந்த அனைவருக்கும் ஒரு பேரிழப்பாக தற்போது மாறியுள்ளது.

பல சாதனைகளை புரிந்த இந்தக் கணித மேதைக்கு இறப்பிலும் தன் மனைவியைப் பிரிய மனமில்லை போலும்...

 

கேன்ஸின் உயர்ந்த விருதை வென்ற முதல் ஈழத் தமிழர் படம் "தீபன்"

பாரிஸ்: கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் உயரிய விருதான தங்கப் பனை விருதை வென்றுள்ளது ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை எடுத்துக் கூறும் தீபன் திரைப்படம்.ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை முறையாக பதிவு செய்த முதல் ஐரோப்பியத் திரைப்படம் இது.

இயக்கியிருப்பவர் ஈழத் தமிழர் அல்ல மாறாக பிரான்சின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜக்குவாஸ் ஓடியேட். ஈழத்தமிழரின் அவல வாழ்வியலைக் கூறும் திரைப்படம் ஒன்று உலகின் மிகப்பெரிய விருதுக்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Cannes 2015: Jacques Audiard's Dheepan surprise winner of Palme d'Or

படத்தில் நாயகனாக ஜேசுதாசன் அந்தோணிதாசன், கதையின் நாயகியாக காளிஸ்வரி சீறிநிவாசன், சிறுமியின் வேடத்தில் கிளாடின் விநாசித்தம்பி நடித்திருந்த இந்தப் படம் பிரான்ஸ் நாட்டிற்கு அகதியாக தஞ்சம் கோரி செல்லும் மூன்று தனித் தனி ஈழத்

தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக படம் காட்சிபடுத்தப் பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் மூன்று பேரும்( நாயகன், நாயகி ,மற்றும் சிறுமி ) தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள் அங்கு அவர்கள் படும் அவலங்கள் மற்றும் துயரங்களை வலியுடன் எடுத்துக் கூறுகிறதுதீபன்.இலங்கைத் தமிழர்களை பற்றி துணிச்சலாக ஒரு படம் எடுத்து அவர்களின் உண்மை வலிகளை பதிவு செய்ததற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ்..

பிற நாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் மனநிலை அவர்களின் வாழ்க்கை முறை பற்றி விரிவாக எடுத்துக் கூறிய இந்தப் படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பல முன்னணி விமர்சனகர்கள் படத்தைப் பார்த்து விட்டு அதில் நடித்தவர்களையும் படத்தையும் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத் தக்கது.

தீபனுக்கு கிடைத்த விருது பல நல்ல படங்களை உலக சினிமாவிற்கு கொண்டுவர வழிவகுக்கட்டும்..

 

வெங்கடேஷ் அப்பா........... மகள்................... சமந்தா

ஹைதராபாத்: இந்தியில் வெளிவந்து மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற பிகு படம் தற்போது தெலுங்கு பேச இருக்கிறது.இந்தியில் அப்பா மகளாக அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா நடித்திருந்தனர். தெலுங்கில் நடிக்கப் போவது யார் தெரியுமா அப்பா

வேடத்தில் வெங்கடேஷும் மகளாக சமந்தாவும் நடிக்க இருக்கிறார்கள்.

Venkatesh And Samantha To Act Piku Remake in Telugu

வரவர தெலுங்கு சினிமா முன்னேறிக் கொண்டே செல்கிறது ஆமாம் கமர்சியல் அல்லாத ஒரு படத்தை துணிந்து கையில் எடுத்திருக்கிறார்கள்.அதோடு மற்றொரு ஆச்சரியம் இதில் அப்பா வேடத்தில் வெங்கடேஷ் நடிக்க இருப்பது.

குடும்பங்களையும் குழந்தைகளையும் அதிகம் கவர்ந்த இந்தப் படம் வசூலிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை, இந்தியைப் போலவே தெலுங்கிலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறுகிறார்கள்.

சமந்தாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மனம் திரைப்படத்தில் ஏற்கனவே தன் வயதுக்கு மீறி நடிகர் நாகார்ஜுனின் அம்மாவாக நடித்திருந்தார்.இந்தப் படத்தில் இர்பான் கான் வேடத்தில் நடிப்பது யார் என்பது இன்னும்

முடிவாகவில்லை.விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்க்கலாம் நடிப்பில் அமிதாப்பையும் தீபிகாவையும் மிஞ்சுகிறார்களா இல்லை அதைவிடவும் சிறப்பாக செய்கிறார்களா என்று..

 

சீனு ராமசாமியின் அடுத்த ஹீரோ பரதேசி " அதர்வா"

சென்னை: இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் அதரவா முரளி.இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோ விஜய் சேதுபதியை தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியவர் சீனு ராமசாமி.

தென்மேற்கு பருவக் காற்று பல தேசிய விருதுகளை தமிழுக்கு கொண்டுவந்து சேர்த்தது.தற்போது விஷ்ணு மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கிக் கொண்டிருக்கும் இடம், பொருள், ஏவல் திரைபடத்தை தொடர்ந்து அதர்வாவை இயக்க இருக்கிறார் சீனு ராமசாமி.

Director Seenu Ramasamy's  Next  Movie Hero Atharva Murali

பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வ தொடர்ந்து நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக் குதிரை உள்ளிட்ட நான்கு படங்களுமே வியாபார ரீதியாக தோல்வியை அடைந்தது.

இதில் பரதேசி படம் அதர்வாவுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.தற்போது ஈட்டி, கணிதன் மற்றும் மற்றொரு தேசிய விருது இயக்குனர் சற்குணம் இயக்கம் சண்டி வீரன் போன்ற படங்களில் நடித்து வரும் அதர்வா மூன்று படங்களையும் முடித்து விட்டுசீனு ராமசாமியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதர்வா வாங்குவாரா தேசிய விருது.....

 

ராக்கி கபூர் டாண்டன் – ஐபிஎல் அரங்கத்தை அசரடித்த அழகுப் பெண்மணி இவர்தான்!

டெல்லி: ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை ஜெயித்ததோ, சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதோ டுவிட்டர் வாசிகளுக்கு பெரிதாக தெரியவில்லை.

ஏனெனில், ஒட்டுமொத்த டுவிட்டர் வாசிகளையும் ஒரே புன்னைகையால் அந்த ஸ்டேடியத்தில் கட்டிப் போட்டுவிட்டார் ராக்கி கபூர் டாண்டன்.

அந்தப் பெண்ணை பெரிய, பெரிய திரைகளில் பார்த்ததும் அப்படியே உறைந்து விட்டார்கள் டுவிட்டர் வாசிகள். அவ்வளவு குழந்தைத்தனமான அழகு அவரிடம்.

Rakhee Kapoor Tandon - She Rules Twitter in IPL

அதிகாரம் படைத்த அழகுப் புயல்:

ஆனால், இந்தியாவின் அதிகாரம் படைத்த பெண்மணிகளில் அவரும் ஒருவர் என்பதை யாராலும் நம்பத்தான் முடியவில்லை. 25 இந்திய அதிகாரப் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் அவர்.

ஹாட் டாபிக் ராக்கி கபூர்:

இரண்டாவது இன்னிங்ஸின் போது அவர் உருவம் திரையில் காட்டப்பட்டதுதான் தாமதம் அடுத்த நொடி ஐபிஎல் மைதானத்தின் ஹாட் டாபிக்காக மாறிப்போனார் அவர்.

புகழ்ச்சி மழையில் நனைந்த டுவிட்டர்:

"என் எதிர்கால மனைவி இவர்தான்... இவரால்தான் ஐபிஎல் மேடையே அழகானது... இன்றைய மேட்சின் ஒரே அருமையான விஷயம் ராக்கிதான்... என்று புகழ்ந்து தள்ளிவிட்டனர் டுவிட்டிகள்.

அடித்து தூள்கிளப்பிய டிரெண்டிங்:

டிரெண்டிங்கில் இரண்டாம் இடத்தையே பிடித்துவிட்டார். பேஸ்புக்கிலும் பெண்ணுக்கு ஏராளமான ஃபேன் பக்கங்கள் ரெடி.

ராணா கபூரின் மகள்:

அப்படி யார்தான் அந்த அழகுப் பெண் ராக்கி கபூர் என்று கேட்கிறீர்களா? யெஸ் பேங்கின் எம்.டி மற்றும் சி.இ.ஓவான ராணா கபூரின் சீமந்த புத்திரிதான் இவர்.

கல்யாணம் ஆய்டுச்சுப்பா:

27 வயதான க்யூட் பெண் ராக்கி கபூர் டாண்டன். டுவிட்டரில் ராக்கியின் ரசிகர்கள் மனதை உடைக்கும் மற்றொரு சோகமான விஷயம் அவர் மிஸ் இல்லை மிசஸ்.

தொழிலதிபர் கணவர்:

டெல்லி மற்றும் துபாய் சார்ந்த தொழிலதிபரான அல்கேஷ் டாண்டனின் அழகு மனைவி இவர். பென்சுல்வேனியாவில் எம்பிஏ முடித்தவர் ராக்கி. ராஸ் ஹவுசிங் அண்ட் பைனாஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி.

பவர்புல் பெண்மணி:

இந்தியா டுடே மேகசினின் சர்வேயின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள 25 அதிகாரம் படைத்த பெண்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்தவர் ராக்கி. கொஞ்சம் கேர்புல்ப்பா!

 

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- நடிகர் கவுண்டமணி

சென்னை: எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் நடித்து வருகிறார் காமெடி அரசர் கவுண்டமணி.ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பரந்த நடிகர் கவுண்டமணி சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் முழுமுதல் காமெடியனாக களத்தில் குதித்திருக்கிறார்.

Goundamani does not have branches anywhere

இன்றுவரை தமிழ் சினிமாவின் பல எவர் கிரீன் வசங்களுக்கு சொந்தக் காரரான கவுண்டரின் இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த பாலமுருகன் இயக்குகிறார்.

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற புகழ் பெற்ற வசனத்தையே தலைப்பாக வைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக் கொண்டே செல்கிறது கோடம்பாக்கத்தில்.மீண்டும் கவுண்டரின் நடிப்பு பிரவேசத்தால் கவுண்டரின்ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.

கவுண்டர் அண்ணா மீண்டும் வாங்கண்ணா தமிழ் சினிமாவில ஒரு ரவுண்டு...

 

தூங்கா வனம் மற்றொரு சிவப்பு ரோஜாக்களாக மாறுமா?

சென்னை: உத்தம வில்லனைத் தொடர்ந்து கமல் நடிக்கும் புதிய படம் தூங்கா வனம். கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தில் முதன் முறையாக கமலுடன் ஜோடி போடுகிறார் நடிகை த்ரிஷா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப் பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.நேற்று இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் கமல்.

Kamal  turns  as  a  psycho killer again ?

ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை படத்தின் போஸ்டர்கள் பெற்றுள்ளன.ஒரு பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ரசிகர்கள் போஸ்டர்கள் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.

கமல் மிகவும் இளமையாக தோன்றும் இந்த போஸ்டரில் ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மற்றொரு துப்பாக்கியை இடுப்பில் சொருகிக் கொண்டு வருகிறார்.

மற்றொரு போஸ்டரில் ஒரு பெண்ணை கட்டிப் பிடித்துக் கொண்டு ஒரு கையால் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுடுவது போன்றும் உள்ளது.இவற்றைப் பார்க்கும் போது மீண்டும் ஒரு சிகப்பு ரோஜாகளாக இந்தப் படம் மலருமா என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் கமல் இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.போலீசாக வருகிறாரா இல்லை, கொலைகாரனாக வரப் போகிறாரா அல்லது இரண்டு வேடங்களில் தோன்றப் போகிறாரா என்பது தெரியவில்லை.

கதை என்ன என்று தெரியும்வரை காத்திருக்க வேண்டியதுதான்..

 

மூன்றே நாளில் 38 கோடியை அள்ளியது தனு வெட்ஸ் மனு

மும்பை: கடந்த வெள்ளிகிழமை அன்று வெளிவந்த தனு வெட்ஸ் மனு திரைப்படம் மூன்றே நாட்களில் சுமார் 38.10 கோடியை வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது.

மாதவன், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில் குத்துப் பாடல்களோ, பன்ச் டயலாக்குகளோ எதுவும் கிடையாது.அதிரடி சண்டைக் காட்சிகள் மருந்துக்குக் கூட இல்லை.

கமர்சியல் ரீதியான எந்த விசயங்களும் இல்லாமல் குடும்ப செண்டிமெண்டை சொல்லும் இந்தப் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது படத்தின் வசூல் மூலம் தெரிகிறது.

‘Tanu Weds Manu Returns’ Races Ahead With Rs 38.10 cr in Three Days

முதல் நாளில் 8.85 கோடியும், இரண்டாம் நாளில் 13.20 கோடியும், மூன்றாவது நாளில் 16.10 கோடி ஆக மொத்தம் 38.10 கோடியை வசூலித்திருக்கிறது.இதே மாதிரி வசூல் தொடர்ந்தால் இந்த வருடத்தின் முதல் 100 கோடியை வசூலித்த படம் என்ற பெருமையை இப்படம் தட்டி செல்லும்.

நல்ல படங்களுக்கான வரவேற்பு மக்களிடம் என்றும் குறைவதில்லை...

 

பிரபாஸுடன் ரொமான்ஸ் பண்ணுவாரா அலியா?

ஹைதராபாத்: பாகுபலி பட புகழ் ஹீரோ பிரபாஸுடன் டூயட் பாடுவாரா அலியா பட். இந்தி சினிமாவில் உள்ள அனைவரும் மிக ஆவலுடன் இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இது என்ன பிரமாதம் பணம் கொடுத்தா பொண்ணு நடிக்கும்னு யாரும் தப்புக் கணக்கு போட்டுடாதிங்க. .ஏற்கனவே தமிழில் தனுஷின் நாயகியாக நடிக்க வைக்க எடுக்கப் பட்ட முயற்சிகள் நீர்க்குமிழி போல் ஆகிவிட்டது.

Baahubali Prabhas To Romance Bollywood Babe Alia Bhatt

மணிரத்னம் தனது படத்தில் வாம்மா வந்து நடிச்சுட்டுப் போ என்று வருந்தி வருந்தி கூப்பிட்டுப் பார்த்தார் பொண்ணு மாட்டேன் என்று விட்டது.

தெலுங்குலகில் இன்னும் ஒருபடி மேலே போய் நாகார்ஜுன் அமலா தம்பதியின் இளைய மகன் அகிலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். தென்னிந்தியப் படங்களில் நான் நடிக்க மாட்டேன் ஒன்லி இந்திப் படங்கள் மட்டுமே என்று சொல்லிவிட்டார்.

ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் அலியாவை திரையுலகில் அறிமுகபடுத்திய கிரண், பாகுபாலி படத்தின் ஹிந்தி உரிமையை கைப்பற்றி இருக்கிறார். இவரின் உதவியோடு அலியாவை பிரபாஸுடன் ரொமான்ஸ் பண்ண வைக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றன.

 

வள வள பேச்சு.. சல சல பேச்சு... ஸாரி ஸாரி பாஸு....!

நட்சத்திர டிவி சேனலின் விருது விழாவை தொகுத்து வழங்கிய அந்த தொகுப்பாளினியின் வளவளா பேச்சுக்கு கமெண்டுகளும் கண்டனங்களும் அள்ளித் தெளிக்கவே டிவி சேனல் நிர்வாகம் கொஞ்சமே கொஞ்சம் தட்டி வைத்தது. காபி குடிக்கவும் கன்டிசன் போட்டுவிட்டதால் நிகழ்ச்சியை எதுவும் தற்போது நடத்துவதில்லையாம்.

ஏன் இப்படி ஒரேடியாக பேசி பேசி போரடிக்க வேண்டும் என்று எல்லோரும் கேட்டு வைக்கவே ஒருவழியாக முகநூல் மூலம் மன்னிப்பு கேட்டாராம் அந்த தொகுப்பாளினி.

ரசிகர்களிடம் மட்டுமல்ல டிவி சேனல் நிர்வாகத்திற்கும் இதன்மூலம் தனது மன்னிப்பை தெரிவித்துவிட்டாராம் அந்த தொகுப்பாளினி. இவரது மன்னிப்பு டிவி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதா என்பதை தொகுப்பாளினிதான் தெரிவிக்கவேண்டும்.

எதுக்குப் பேசனும். எதுக்கு ஸாரி கேக்கனும்.. வாயை அடக்கியிருக்கலாம்ல...!