'பிக் பாஸ்' ஷோவில் பூனம் பாண்டே நிர்வான தரிசனம்?


பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது பரபரப்பு மாடல் பூனம் பாண்டே முழு நிர்வாண தரிசனம் தரப் போவதாக செய்திகள் பரவியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நான் நிர்வாணமாக காட்சி தருவேன் என்ற ஒற்றை வரி மூலம் ஓவர்நைட்டில் பிரபலமானவர் பூனம் பாண்டே. ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. மாறாக அரைகுறை நிர்வாண படங்களை மட்டுமே அவர் தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் முழு நீள நிர்வாண தரிசனம் தரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது 2 நாட்கள் அந்த பிக் பாஸ் வீட்டில் கழிக்கவுள்ளார் பூனம் பாண்டே. அப்போது அவர் முழு நீள நிர்வாணமாகி தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை அவர் நிர்வாண கோலத்தில் இருப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. என்ன செய்யப் போகிறார் பூனம் என்ற எதிர்பார்ப்பு மறுபடியும் எழுந்துள்ளது.
 

பிரியங்கா, ஷாஹித் பிரிய ஷாருக் தான் காரணமா?


நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் பிரிவதற்கு ஷாருக் கான் தான் காரணம் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த முறை அவர்கள் பிரிந்ததற்கு ஷாருக்கான் தான் காரணமாம். ஷாருக்கானும், பிரியங்கா சோப்ராவும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இதனால் ஷாருக் வீட்டில் ஒரே புகைச்சல்.

கௌரிக்கும், ஷாருக்கிற்கும் அடிக்கடி தகராறு வருகிறது. அவர்கள் சண்டைபோட்டாலே அதற்கு காரணம் பிரியங்கா சோப்ராவாகத் தான் இருக்கிறதாம். ஏனென்றால் ஷாருக்கும், பிரியங்காவும் எப்பொழுது பார்த்தாலும் ஒட்டி, உறவாடுகிறார்களாம். அப்ப பொண்டாட்டிக்கு கோபம் வரத் தானே செய்யும்.

ஷாஹித் கபூரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாராம். என்னடா காதலன்னு நான் ஒருத்தன் இங்க இருக்கேன். என்ன மதிக்காம பிரியங்கா எப்ப பார்த்தாலும் ஷாருக்குடன் ஊர் சுற்றுகிறாரே என்று கடுப்பான ஷாஹித் உனக்கும், உன் காதலுக்கும் ஒரு பெரிய கும்பிடு என்று சொல்லிவி்ட்டு இடத்தை காலிபண்ணிவிட்டாராம்.

ஷாருக் பெயரைச் சொல்லும்போதெல்லாம் பிரியங்கா வெட்கச் சிரிப்பு சிரித்து ஷாஹித்துக்கு கடுப்பேற்றியுள்ளார். எத்தனை நாட்கள் தாங்குவார் அவரும்.

இப்பொழுது பிரியங்கா ஷாருக்குடன் இருக்கிறார். ஆனால் ஷாஹித் ஆள் கிடைக்காமல் தனியே, தன்னந்தனியே இருக்கிறார். கரீனாவால் புண்பட்ட ஷாஹித் மனதை பிரியங்கா ஆற்றினார். இப்போது மறுபடியும் 'ஆற்றப்' போவது யாரோ...?
 

சென்னையில் ஷாருக் கான்- ரஜினியை சந்திக்கிறார்


சென்னை: சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்க்க இந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் சென்னை வந்தார். ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்தையும் தான் பார்க்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியைப் பார்ப்பதற்காக ஷாருக் கான் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் சென்னை விஜயம் குறித்துக் கேட்டபோது, சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைப் பார்க்க வந்துள்ளேன்.

ரா ஒன் தமிழ்ப் பதிப்பின் டிரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. அதிலும் பங்கேற்கவுள்ளேன் என்றார்.

ரஜினிகாந்த்தைப் பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு ரஜினியையும் சந்திப்பேன் என்றார் ஷாருக்.
 

இப்படி பொலம்ப வச்சுட்டாங்களே, 'குத்து' ரம்யா விசனம்!


சினிமாவில் இருந்து அரசியலுக்குத் தாவிய நடிகை ரம்யா ஒரே பொலம்பலாம். எல்லாம் அரசியலில் புகுந்ததால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் காரணமாம்.

குத்து படம் புகழ் நடிகை ரம்யா தமிழில் அவ்வப்போது வந்து தலையைக் காட்டிவிட்டு போனாலும் கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட். அதனால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க முன்னணி கன்னட ஹீரோக்கள் முண்டியடிக்கின்றனர்.

இந்த நிலையில் திடீரென குத்து ரம்யா அரசியலில் குதித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது கொண்ட அபிமானத்தால் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். சேர்ந்தவுடனேயே வளர்ச்சி ஏணியின் உச்சானி கொம்பிற்கு செல்லப் பார்த்தார். அதாவது கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார்.

'கத்து'க் குட்டியாக இருந்து கொண்டு 'குத்து' ரம்யா மூத்த காங்கிரஸ் தலைவர் போல செயல்படுகிறாரே என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமுறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரம்யாவின் அறிவிப்பு அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது. உடனே தலைமைக்கு புகார் பறந்தது. தன் இஷ்டத்திற்கு அவர் பேசி வருகிறார் என்று புகார் கூறினர்.

இதையடுத்து ரம்யாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடடா, இந்த அரசியல் மகா ஷாக்கான விஷயம் போலிருக்கே என்று பயந்து போன குத்து ரம்யா, தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இப்போது, ஆசைப்பட்டு அரசியலுக்குப் போனேனே இப்படி என்னை ஓரங்கட்டுகிறார்களே என்று நெருங்கியவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
 

இன்டர்நெட்டில் கசிந்தது மடோனாவின் டாப்லெஸ் படங்கள்


பாப் பேரழகி மடோனாவின் டாப்லெஸ் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் கசிந்துள்ளது. இந்தப் படங்களை அவரது முன்னாள் காதலரான ஜீஸஸ் லஸ் லீக் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாப் உலகின் தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மடோனா. இவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் 3 வருடங்களுக்கு முன்பு டபிள்யூ என்ற இதழுக்காக புகைப்பட ஷூட்டிங் நடந்தபோது எடுக்கப்பட்ட சில டாப்லெஸ் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்பட ஷூட்டிங்குக்குத் தயாராகிக் கொண்டிருந்த மடோனாவின் படங்கள் இவை. இதில் மேக்கப் இல்லாமல் காட்சி தருகிறார் மடோனா. அங்கங்கள் தெரியும்படியான பிரா, தலையில் விக் உள்ளிட்டவற்றுடன் காணப்படுகிறார் மடோனா. மேலும் பேன்டீஸ் அணிந்தபடி இருக்கையில் அமர்ந்திருக்கும் மடோனா, ஒரு படத்தில், கண்ணாடியின் பக்கம் திரும்பி உடை மாற்றுவது போல உள்ளது.

பிரேசிலில் உள்ள ஹோட்டல் ரூமில் வைத்து இந்தப் படங்களை ஜீஸஸ் லஸ் எடுத்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் படங்களை அவர்தான் கசிய விட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

50 வயதாகும் மடோனாவின் வயதில் பாதி வயதுடையவர்தான் ஜீஸஸ். இவரும், மடோனாவும் தீவிரமாக காதலித்து வந்தனர். பின்னர் பிரிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
 

கொச்சியில் ரூ. 90 லட்சத்துக்கு வீடுவாங்கிய பூர்ணா


நடிகை பூர்ணா கொச்சியில் ரூ. 90 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளாராம்.

மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது நந்தாவுடன் வேலூர் மாவட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

தெலுங்கிலும் நடித்துள்ளார் பூர்ணா. தமிழில் அடக்கமாக வந்து போகும் பூர்ணா, தெலுங்கில் மட்டும் பூரணமான கவர்ச்சி காட்டத் துணிந்துள்ளதால் அம்மணிக்கு டோலிவிட்டில் வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். தமிழில் மட்டும் கவர்ச்சிக்கு லிமிட் வைத்துள்ளார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. பெரும்பாலான நடிகைகள் தமிழில் ஒரு மாதிரி, தெலுங்கில் ஒரு மாதிரி தானே நடிக்கின்றனர். பூர்ணா மட்டும் விதிவிலக்கா என்ன?

கை நிறையப் படங்கள் வைத்துள்ளதாக பூர்ணா கூறிக் கொள்கிறார். ஆனால் தமிழில் அவரை அதிகம் காண முடியவில்லை. இந்த நிலையில், சேச்சி கொச்சியில் ரூ. 90 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளாராம்.

இன்னும் பெரிய ஸ்டாராகாத நிலையிலேயே இவ்ளோ பெரிய வீடு என்றால், பெரிய ஸ்டாராகி விட்டால் எவ்ளோ பெரிசா வாங்குவோரா?
 

கோடி கொடுத்தாலும் மசியாத ரஜினி, கமல்


கோடி, கோடியாய் பணம் கொடுக்க விளம்பர நிறுவனங்கள் தயாராக இருந்தும் விளம்பரஙகளில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் விளம்பரப் படங்களில் மாடல்கள் தான் நடிப்பார்கள். அந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது திரை நட்சத்திரங்கள் தான் விளம்பர உலகை ஆண்டு வருகின்றனர். பிரபலமான திரை நடச்த்திரங்களை வைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தினால் அது மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.

அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமீர் கான், நம்ம விஜய், தல அஜீத், சூர்யா, கார்த்தி, அனுஷ்கா, ஸ்னேகா, தமன்னா, த்ரிஷா, மாதவன், மனோரமா ஆச்சி, சுகன்யா, சுஹாசினி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே விளம்பரப் படங்களில் நடித்து வருகிறது. திரையுலகில் அதுவும் ரசிகர்களின் மனதில் எப்பொழுதும் உயர்வான இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்.

அவர்கள் இருவரையும் எப்படியாவது விளம்பரப் படங்களில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்துள்ளனர். கோடி, கோடியாய் தருகிறோம் என்றெல்லாம் கூறினார்கள். இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்களா அவர்கள். என்ன தான் குட்டிகர்ணம் போட்டாலும் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டோமே என்று உறுதியாக இருக்கிறார்கள்.

என்ன சொன்னாலும் மசிய மாட்டேன் என்கிறார்களே என்று விளம்பரதாரர்கள் கையைப் பிசைகிறார்களாம்!
 

மருமகளுக்கு ரூ. 50 லட்சம் காரை பரிசளித்த ரம்பாவின் அண்ணன்!


நடிகை ரம்பாவின் மகள் லான்யாவுக்கு அவரது அண்ணன் வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம். ரம்பாவுக்கு என்ன அவ்வளவு பெரிய புள்ளையா இருக்கு என்று நினைக்க வேண்டாம். லான்யா 8 மாதக் குழந்தை.

ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் லான்யா என்றால் தேவதை என்று பொருளாம்.

குழந்தை நல்லபடியாக பிறந்தால் திருப்பதி கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொண்ட ரம்பா, லான்யாவுடன் இந்தியாவுக்கு வந்தார். திருப்பதி உள்பட பல கோவில்களுக்கு சென்று குட்டி தேவதையைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

ஏற்கனவே குளிருக்குப் பெயர்போன கனடாவில் குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். அவரது கொலுக், மொலுக் மகளைப் பார்க்க பல திரை நட்சத்திரங்கள் ரம்பா வீட்டுக்கு வந்து செல்கிறார்களாம்.

இந்நிலையில் ரம்பாவின் அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு பரிசாகக் கொடுத்துள்ளாராம்.
 

பி.காம். பட்டதாரியை மணக்கும் இயக்குனர் பி. வாசு மகன் ஷக்தி


சென்னை: பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் ஷக்தி தன் நீண்ட நாள் காதலியான ஸ்மிருதியை வரும் 31-ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

இயக்குனர் பி. வாசுவின் மகன் பிரஷாந்த்(எ) ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரபு நாடே அசந்துபோகும் அழகியா நீ என்ற அவருடைய பாடல் மிகவும் பிரபலமாகும்.

ஷக்தி சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த முரளி-துஷிதா தம்பதியின் மகளான ஸ்மிருதியை காதலித்து வந்தார். இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. வழக்கமான பெற்றோர்கள் போன்று விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல் வாசுவும், முரளியும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டிவிட்டனர். முரளி பி. வாசுவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மதம் தான் கிடைத்தாகிவிட்டதே அடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 31-ம் தேதி காலை 9 மணிக்கு இவர்கள் திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கிறது.

முன்னதாக வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், 31-ம் தேதி காலை 6 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
 

தயாரிப்பாளர் சங்கதேர்தல்-எஸ்.ஏ.சி-கே.ஆருக்கு 'கடும் போட்டி' தரும் 'பவர் ஸ்டார்'!


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை பெரும் பரபரப்புக்கு மத்தியில் தொடங்கியது.

கடந்த திமுக ஆட்சியின்போது தயாரிப்பாலர் சங்க தலைவராக இருந்த ராம.நாராயணன் மற்றும் அவரது குழுவினர் அதிமுகஆட்சிக்கு வந்ததும விலகிக் கொண்டனர். இதையடுத்து தற்போது புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.

இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், கே.ஆர் தலைமையில் இன்னொரு அணியும் மோதுகின்றன.

தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 770 பேர் வாக்களிக்கவுள்ளனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். அதன் பின்னர் வாக்ககுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

களத்தில் குதித்த 'பவர் ஸ்டார்'!!

இந்தத் தேர்தலில் ஒரு முக்கியத் 'திருப்பமாக' திடீரென தலைவர் பதவிக்கு டாக்டர் எஸ்.சீனிவாசன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தமிழ்த் திரையுலகில் மிகவும் 'முக்கியமான' ஒரு புள்ளியாக உருவெடுத்திருப்பவர்.

தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்த படங்களுக்கே சவால் விடும் வகையில் இவர் நடித்த லத்திகா என்ற படம் 200 நாட்களைக் கடந்து அதிரிபுதிரியாக 'ஓடிக்' கொண்டிருக்கிறது (தியேட்டர்களில்தான்!!!!)

தனக்குத் தானே 'பவர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்டு கண்களைக் 'கூச' வைக்கும் கூலிங் கிளாஸுடன், 'தக்காளி' கலருடன் காணப்படும் இவரை, தமிழ்த் திரையுலகைக் காக்க வந்த 'தெய்வத்திருமகனாக ரசிகர்கள்' கொண்டாடுகின்றனர்.

இப்படிப்பட்ட 'பவர்புல் பேக்கிரவுண்டு'டன் கூடிய சீனிவாசன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு 'தனிப்பெருமையே' கிடைத்துள்ளது.

'பவர் ஸ்டார்' அசத்துவாரா, மற்ற 'சூப்பர் பவர்'களை காலி செய்வாரா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர் தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர்கள்!!!!
 

ராம.நாராயணன் மீது போலீஸில் பண மோசடிப் புகார் எதிரொலி- கைதாவாரா?


சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 திரைப்படத் தயாரிப்பாளர்கள், முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் மீது பண மோசடிப் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து ராம.நாராயணன் கைதாவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து குட்வில் மூவீஸ் உரிமையாளர் கே.வி.குணசேகரன், எம்.ஆர்.மூவீஸ் நிறுவன உரிமையாளர் ராஜசிம்மன், பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ் உரிமையாளர் ஜி.பாபுகணேஷ் ஆகியோர் கொடுத்துள்ள புகாரில்,

சினிமா துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அப்போதைய தலைவர் ராம.நாராயணன் அளித்திருந்தார்.

இதற்கான சந்தாவாக ரூ.2,500 தொகையை வழங்கினோம். சங்க உறுப்பினர்களிடமும் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ரசீதை யாருக்கும் அவர் வழங்கவில்லை. இந்த திட்டம் எந்த அளவுக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று கேட்டதற்கு ராம.நாராயணன் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியை சங்கத்தின் சார்பில் அவர் நடத்தினார். இந்த நிகழ்ச்சியை வெளியிடுவதற்கான உரிமையை சங்கத்தை கலந்தாலோசிக்காமல் தனியார் டி.வி. ஒன்றுக்கு ராம.நாராயணன் கொடுத்துள்ளார்.

இதுபோன்ற பல நிகழ்வுகளில் அதிக அளவில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர் ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.

எனவே ராம.நாராயணன் மற்றும் சங்க ஊழியர்கள் ரபி, குரு, மூர்த்தி ஆகியோரை பிடித்து, ஆவணங்களை கைப்பற்றினால் பல மோசடி விவரங்கள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமநாராயணன் உள்ளிட்டோரைப் பிடித்து கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.