எனக்கு அரசியல் பஞ்ச்சே வேண்டாம் சாமி: கதறும் நடிகர்

சென்னை: வெற்றி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த கலைக் குடும்ப வாரிசு நடிகர் ப்ரோவின் லீடர் படத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்துவிட்டு தான் நடிக்கும் படத்தில் உள்ள அரசியல் பஞ்ச் வசனங்களை நீக்குமாறு கூறியுள்ளாராம்.

வெற்றி படத்தின் மூலம் ஹீரோவாகி தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்துவிட்ட அந்த கலைக்குடும்ப வாரிசு தற்போது ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் பல அரசியல் பஞ்ச் வசனங்களை பேசும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். நடிகரும் பயங்கரமாக பஞ்ச் பேசியுள்ளார்.

அதன் பிறகு அரசியல் பஞ்ச் வசனங்களுக்காக ப்ரோவின் லீடர் படத்தின் டப்பா டான்ஸ் ஆடியதை பார்த்து வெற்றி நடிகர் ஆடிப் போய்விட்டாராம். உடனே இயக்குனரை அணுகி ஐயா சாமி தயவு செய்து நம் படத்தில் உள்ள அரசியல் பஞ்ச் வசனங்களை எல்லாம் நீக்கிவிடுங்கள். உங்களுக்கு ஒன்றுமில்லை என்னைத் தான் போட்டு பொடையா, பொடைப்பார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறாராம்.

ப்ரோ பட்ட பாட்டைப் பார்த்து பிற நடிகர் சற்று கலங்கித் தான் போயுள்ளனர்.

 

பைக் நடிகர் படத்தின் காட்சி கசிந்ததா, கசியவிடப்பட்டதா?

சென்னை: பைக் பிரியர் நடிகர் நடித்து முடித்துள்ள படத்தின் ஒரு காட்சி இணையதளத்தில் கசியவிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

பைக் பிரியர் நடிகர் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் பல ரிஸ்க் எடுத்து நடித்ததாக கூறப்படுகிறது. நடிகருக்கு சண்டை காட்சியின்போது காலில் காயம் ஏற்பட்டது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அண்மையில் அந்த படத்தில் இருந்து ஒரு காட்சி மட்டும் இணையதளத்தில் கசிந்தது. இதை பார்த்து அவரது ரசிகர்கள் கொதித்துவிட்டனர். படக்குழுவினரோ காட்சிகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களை குடைந்துவிட்டார்களாம். அதற்கு அவர்களோ, பரபரப்பை ஏற்படுத்த இவர்களே ஒரு காட்சியை கசிய விட்டுவிட்டு நம்மை போட்டு இந்த பாடு படுத்துகிறார்களே என்று புலம்புகிறார்களாம்.

இந்த காட்சியை இணையதளத்தில் பார்த்த ப்ரோ ரசிகர்கள் ஆமா, இவர்கள் வேண்டும் என்றே வெளியிட்டிருப்பார்கள் என்று கமெண்ட் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'ஜில்லா'வில் விஜய் ரொம்பவே ஹேன்ட்சமாக வருகிறாராம்

'ஜில்லா'வில் விஜய் ரொம்பவே ஹேன்ட்சமாக வருகிறாராம்

சென்னை: ஜில்லா படத்தில் விஜய் மிகவும் அழகாக இருப்பாராம்.

ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் ஜில்லா. தலைவா பிரச்சனைகளால் கவலையில் இருந்த விஜய் தற்போது தான் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.

இந்நிலையில் ஜில்லா படம் வெற்றியடைய நடிகர் ஜீவா பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார். ஜில்லாவில் விஜய் நீங்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு மிகவும் அழகாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

மதுரைக்காரனாக கெத்தாக வரும் விஜய்யின் ஜில்லா தற்போதே அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் நீக்கிவிட்டார். மேலும் தன் படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களோ, யாரையாவது தாக்கிப் பேசும் வசனங்களோ இருக்கவே கூடாது என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கையை ஒடித்துக் கொண்ட ஜெயம் ரவி: ஷூட்டிங் பாதிப்பு

கையை ஒடித்துக் கொண்ட ஜெயம் ரவி: ஷூட்டிங் பாதிப்பு

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் கை ஒடிந்துவிட்டது. இதனால் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெயம் ரவி பூலோகம் மற்றும் நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும்போது அவரது கை எலும்பு முறிந்துவிட்டது. இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று அவர் வருத்தத்தில் உள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,

கையை ஒடித்துக் கொண்டேன். படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கவலையில் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அவரின் ட்வீட்டைப் பார்த்து தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். தான் குணமடைய வாழ்த்தியவர்களுக்கு ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

 

9ம் தேதி கோச்சடையான் டீஸர் ரிலீஸ்: சௌந்தர்யா அறிவிப்பு

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் டீஸர் வரும் 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து சௌந்தர்யா அஸ்வின் எடுத்துள்ள படம் கோச்சடையான். தெலுங்கில் விக்ரமசிம்ஹாவாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும் இசை வெளியீடு குறித்தோ, ரிலீஸ் குறித்தோ எந்தவித அறிவிப்பும் இல்லை. இதனால் படம் ரிலீஸாகாது என்ற வதந்தி பரவியது.

9ம் தேதி கோச்சடையான் டீஸர் ரிலீஸ்: சௌந்தர்யா அறிவிப்பு  

இந்நிலையில் சௌந்தர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கோச்சடையான் படத்தின் டீஸர் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.