'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை இலியானா, அந்த படம் தோதல்வியடைந்த பிறகு தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். பின்பு தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் இந்த இலியானாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் தமிழ் படங்களை நடிக்க மறுத்தார் இலியானா. தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டாராம் இலியானா. இதனையடுத்து நண்பன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இலியானா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டு மேடையில் ஏற அம்மணிக்கு தயக்கம்தான். பலரும் நினைத்தது போல நண்பன் ஆடியோ விழாவுக்கு இலியானா வரவில்லை. அதற்கான காரணத்தை தனது பிஆர்ஓ மூலம் விளக்கியிருக்கிறார். ராத்திரி பகலாக நடித்ததில் இலியானாவுக்கு காய்ச்சலாம். அதனால்தான் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.