இயக்குனர் விஜய்யுடன் காதலா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் விஜய்யுடன் காதல் இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்றார் அமலா பால். இது பற்றி அவர் கூறியதாவது: 'மைனா'வில் கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த நீங்கள் 'வேட்டை' படத்தில் கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்கிறார்கள். எனது வேடத்தை தேர்வு செய்தபிறகு அதற்கு ஏற்றவகையில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஓவர் கிளாமராக நடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. என்னுடைய மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்கிறேன். எனது கவர்ச்சியை பணம் தீர்மானிப்பதில்லை. வேடம்தான் தீர்மானிக்கிறது. கமர்ஷியல் வெற்றியும் முக்கியம் என்பதால் கவர்ச்சியாக நடிக்க வேண்டி உள்ளது. 'ஆர்யாவுடன் லவ்வா?' என்றார்கள். இப்போது இயக்குனர் விஜய்யுடன் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. திரையுலகில் எனது நெருங்கிய நண்பர் விஜய். தனுஷுடன் '3' படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வரும்போது நிச்சயம் ஏற்று நடிப்பேன்.


 

வாழ்த்துக்கு நன்றி : இஷா தியோல்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், தனது காதலரான பரத் தக்தனி என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். மும்பை தொழிலதிபர் பரத் தக்தனியும், இஷா தியோலும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். தற்போது இவர்களின் காதலுக்கு, இவர்களுடைய பெற்றோர்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் (12-02-12) அன்று மும்பையிலுள்ள ஹேமமாலினியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இவர்களுடன் பாலிவுட் பிரபலமான ஜெயா பச்சனும் கலந்து கொண்டார். இஷா தியோல் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழில் இயக்குநர் மணிரத்னம் படமான 'ஆய்த எழுத்து' படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் பிரபலமான தர்மேந்திரா-ஹேமமாலினியின் மகள். இதனையடுத்து தனது நிச்சயதார்த்தில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைவரும் இஷா தியோல் நன்றி தெரிவித்துள்ளார்.


 

சில்க் படங்கள் ரீமேக் ஆகிறது : வாய்ப்பை பிடிக்க நடிகைகள் போட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் இந்தியில் ஹிட்டானதை தொடர்ந்து அவர் நடித்த பழைய படங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அந்த படங்கள் ரீமேக் ஆக உள்ளதால், அதில் நடிக்க பிரபல நடிகைகள் போட்டி போடுகிறார்கள். புதிய கதைகள் தோல்வியால் பழைய படங்களை ரீமேக் செய்யும் பாணி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில்க்கு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற படம் உருவாகி வெற்றி பெற்றது.

அந்த மோகம் தற்போது மலையாள படவுலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா நடித்த பழைய மலையாள படங்களை தூசி தட்டத் தொடங்கி உள்ளனர். மலையாளத்தில் அவர் நடித்த 'இணையை தேடி' என்ற படம் ரீமேக் ஆகிறது. மேலும் கவர்ச்சி அலையில் ஹிட்டான 'சாட்டைக்காரி', 'நித்ரா' ஆகிய படங்களும் ரீமேக் ஆகிறது.

இந்த படங்கள் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளன. சில்க¢ கதையில் நடித்து அந்த ஒரே படத்தால் வித்யா பாலனின் மவுசு கூடியது. அதனால் ரீமேக் ஆகும் சில்க் படங்களில் நடிக்க நமீதா, லட்சுமி ராய், நிகிதா உள்பட பிரபல நடிகைகள் இடையே போட்டி நிலவுவதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவியுள்ளது.


 

என்னை அழகு என்று யாரும் சொன்னதில்லை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'யாரும் என்னை அழகு என்று சொன்னதில்லை' என்றார் இந்தி கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு. பாலிவுட் ஹீரோயின் பிபாஷா பாசு தலை தென்பட்டாலே போட்டோ பிளாஷ்கள் கண்ணை பறிக்கும். ஆனால் அவரது இளமை பருவம் அப்படி இல்லை என்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: சிறுமியாக இருந்தபோது நான் அழகாக இருப்பதாக யாரும் சொன்னதில்லை. குள்ளமாக, கறுப்பாக, குண்டாக இருப்பேன். என்னைப் பார்த்ததும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். மனதுக்குள் அழுவேன். நடிகை ஆவேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.

டாக்டர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தேன். உயிரியல் பரிசோதனை கூடத்தில் எலியை அறுத்து பாகங் களை குறிக்கச் சொன்னபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டேன். அத்துடன் எனது டாக்டர் லட்சியமும் முடிவுக்கு வந்தது. ஒரு சில தோழிகளின் வழிகாட்டுதல்படி பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டேன். அது எனக்கு ஆச்சர்யமான பலனை அளித்தது. 2001ம் ஆண்டு திரையுலகுக்கு வந்தேன்.

இப்போது என்னை அழகு என்று புகழாதவர்கள் கிடையாது. இளமையில் அழகில்லை என்று கேலி செய்யப்பட்ட நானா இப்படி இருக்கிறேன் என்று எனக்கே ஆச்சர்யம். அழகில்லை என்று யாரும் வருந்தாதீர்கள். ஒருநாள் இந்த உலகம் உங்களை அழகு என்று நிச்சயம் பாராட்டும். அதுவரை உங்கள் உழைப்பை நிறுத்தாதீர்கள்.


 

ஹனிமூன் செல்ல முடியாமல் தவிக்கும் ஜோடி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் சென்ற வாரம் நடந்து முடிந்தது. திருமணம் முடித்த ஜெனிலியா-ரிதேஷ் தேஷ்முக் ஜோடி ஹனிமூன் செல்ல முடியாமல் தவித்து வருகிறது. மேலும் ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறது இந்த புது மண ஜோடி.


 

சின்னத்திரைக்கு வரும் வில்லன்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
ஏற்கனவே வெள்ளித்திரையில் கலக்கிய வில்லன் நடிகர் மகாநிதி சங்கர் சன் டிவியில் ஒளிப்பராகும் 'நாதஸ்வரம்' தொடரில் கலக்கி வருகிறார். இவரை தொடர்ந்து இன்னொரு வில்லன் நடிகரும் சின்னத்திரைக்கு வர இருக்கிறார். வசந்த டிவியில் ஒளிபரப்பு ஆக உள்ள 'கன் பைட் கபாலி' என்ற காமெடித் தொடரில் பொன்னம்பலம் நடிக்கயிருக்கிறார்.



 

என்னை யாரும் சிறை வைக்கவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில், 'நாடோடிகள்', 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை அனன்யா. இவருக்கும் ஆஞ்சநேயன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஞ்சநேயன் கேரளாவில் தொழில் அதிபராக இருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், ஆஞ்சநேயன் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்திருப்பதாகவும் அதை மறைத்து மோசடியாக அனன்யாவை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டதாகவும் அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் போலீசில் புகார் அளித்ததாகவும் கேரளாவில் பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஆஞ்சநேயன் இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் அவரை மணமுடிக்க அனன்யா பிடிவாதமாக இருப்பதால் அவரை அவர் பெற்றோர் வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் பரபரப்பு பற்றி, தினகரன் நிருபரிடம் அனன்யா கூறியதாவது: இது முழுக்க முழுக்க கட்டுக் கதை. எனது திருமணத்தை பிடிக்காதவர்கள் யாரோ கிளப்பிவிட்ட புரளியாகத்தான் இது இருக்கும். என்னை யாரும் சிறை வைக்கவில்லை. எனது வீட்டில் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன். இதுகுறித்து வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஐந்து படங்களில் நடித்து முடிக்க வேண்டியிருக்கிறது. அதற்குபிறகு கண்டிப்பாக எங்கள் திருமணம் நடக்கும். இவ்வாறு அனன்யா கூறினார்.