முகமூடி - சினிமா விமர்சனம்

Mugamoodi Review   

Movie Rating:
2.5/5

தமிழில் வரும் முதல் சூப்பர் ஹீரோ கதை என்ற அறிமுகத்தோடு வந்திருக்கிறது மிஷ்கினின் முகமூடி.

கதை என்று பார்த்தால்... காலம் காலமாக நாம் பார்த்த அதே கொள்ளை- சாதாரண இளைஞன் துப்பறிதல்தான் இந்தப் படமும். பல எம்ஜிஆர் படங்களின் வெளிப்படையான தழுவல் என்றாலும் மிகையல்ல. அதை மிஷ்கின் தன் பாணியில் நீள நீளமான ஷாட்களில் எடுத்து முகமூடியாகத் தந்திருக்கிறார்.

வீட்டில் தண்டச்சோறு பட்டத்துடன் ஊரைச் சுற்றி வரும் சாதாரண இளைஞன் ஆனந்த் என்கிற லீ (ஜீவா) குங்பூ கற்று, தன்னை ப்ரூஸ் லீயாக உருவகப்படுத்திக் கொண்டு வலம் வருகிறான். நகரில் அடுத்தடுத்து பல கொள்ளைகள், கொலைகள் நடக்கின்றன. இதன் பின்னணி தெரியாமல் போலீஸ் திணறுகிறது.

ஒரு முறை தன் காதலிக்காக பேட்மேன் வேஷத்தில் போகும் லீ, எதேச்சையாக ஒரு திருடனைப் பிடித்து போலீசில் ஒப்படைக்கிறான். அதைத் தொடர்ந்து முகமூடி கேரக்டர் பிரபலமாகிறது. ஒரு கட்டத்தில் போலீசே முகமூடி உதவியை எதிர்ப்பார்க்க, கொள்ளையர்களை எப்படி பிடிக்கிறான் லீ என்பது க்ளைமாக்ஸ்.

நல்ல ஸ்டைலிஷாக ஒரு சூப்பர் ஹீரோ கதை கொடுக்க வேண்டும் என்பது மிஷ்கினின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதை நிரூபிப்பது போலத்தான் படத்தின் முதல் பாதி ஹாஸ்யமும் ஆக்ஷனுமாகப் போகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் படம் அங்கங்கே முட்டிக் கொண்டு நிற்கிறது. லாஜிக்கும் இல்லை... அதை மறக்கடிக்கும்படியான விறுவிறுப்பும் இல்லை.

கதாநாயகன் ஜீவா கடுமையாக உழைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் குங்பூவை அவர் பயன்படுத்துவதில் அத்தனை நேர்த்தி.

பூஜாவுடன் அவர் மோதிக் கொள்ளும் இடங்களில் குறும்புத்தனம்.

பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். எண்ணி ஆறு காட்சிகளில் வருகிறார். முதல் காட்சியில் பரவாயில்லை. மற்ற காட்சிகளில் இவர் ஒரு பொம்மை மாதிரி வந்து நிற்கிறார். இவருக்கும் ஜீவாவுக்கும் காதல் வர காரணமாகக் காட்டப்படும் காட்சிகள் படு அபத்தம்!

நாசர் நிறைய காட்சிகளில் வந்தாலும், ஏதோ ஒரு வறட்டுத்தனம் தெரிகிறது அந்தப் பாத்திரத்தில்.

கிரீஷ் கர்னாட் போன்றவர்களை சின்னச் சின்ன பாத்திரங்களில் வீணடித்திருக்கிறார் இயக்குநர்.

குங்பூ மாஸ்டராக வரும் செல்வா அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் பெரிதாக ஊதிக் காட்டப்பட்ட நரேன், பொசுக்கென்று போய்விடுகிறார். அதிலும் க்ளைமாக்ஸில் அவரது நடிப்பு காமெடி இல்லாத குறையைத் தீர்க்கிறது.

நீண்ட ஷாட்கள் என்பது மிஷ்கினின் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் சில காட்சிகளில் லேசாக கணணசந்துவிடும் அளவுக்கு அவற்றின் நீளம் இருப்பதை இயக்குநர் கவனிக்கக் கூடாதா!

படத்தின் உருப்படியான விஷயங்களில் ஒன்று கேயின் இசை. படத்தின் பெரும்பகுதியை இரவிலேயே எடுத்திருக்கிறார்கள்.

மிஷ்கின் அடிக்கடி சொன்னது, இந்தப் படம் சாதாரணமான படம். எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வாங்க.. என்று.

இந்த விஷயத்தில் அவர் 100 சதவீதம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்!!

-எஸ். ஷங்கர்

 

கரீனா தனது பிறந்தநாளை எங்கே கொண்டாடுகிறார் தெரியுமா?

Guess Where Kareena Kapoor Is Celeb   

மும்பை: பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தனது காதலி கரீனா கபூரின் பிறந்தநாளைக் கொண்டாட அவரை கோவா அழைத்துச் செல்கிறார்.

பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று சைபின் தாயார் ஷர்மிளா தாகூர் அண்மையில் தெரிவி்த்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் இதை உறுதி செய்யவி்ல்லை. இந்நிலையில் கரீனா கபூர் தனது ஹீரோயின் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.

அந்த படம் வரும் 21ம் தேதி அதாவது கரீனாவின் 31வது பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகிறது. எப்பொழுது பார்த்தாலும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் கரீனாவை அவரது பிறந்தநாள் இரவு கோவாவுக்கு அழைத்துச் செல்ல சைப் திட்டமிட்டுள்ளார். அவ்வாறு சென்று வருவது கரீனாவுக்கு ரிலாக்ஸாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார்.

இது குறித்து கரீனாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில்,

கரீனா இந்த மாதம் ஹீரோயின் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். இது அவருக்கு முக்கியமான படம் என்றனர்.

பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எல்லாம் இருக்கட்டும், திருமணம் பற்றி எப்பொழுது அறிவிப்பார்களாம்...

 

ஷாருக்கானை வி்ட்டுவிட்டு சல்மானிடம் தாவிய பிரியங்கா சோப்ரா

Is Salman Dating Priyanka Chopra

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஷாருக்கானை வி்ட்டுவி்ட்டு அவரது எதிரியான சல்மான் கான் பக்கம் சாய்ந்துவி்ட்டார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், ஷாருக்கானுக்கும் இருந்த நெருங்கிய நட்பு அனைவருக்கும் தெரியும். இதனால் ஷாருக் வீட்டில் பூகம்பமே வெடித்துச் சிதறியது. இந்நிலையில் பிரியங்கா இந்த பழம் புளிக்குது என்ற கதையாக ஷாருக்கை விட்டுவிட்டு அவரது பரம எதிரியான சல்மானிடம் சென்றுவிட்டார்.

ஏக் தா டைகர் இயக்குனர் கபீர் கான் தனது மகளின் பிறந்தநாள் மற்றும் படத்தின் வெற்றியைக் கொண்டாட கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு நாயகி கத்ரீனா கைப் உள்ளிட்ட ஏக் தா டைகர் படக்குழுவினர் வந்திருந்தனர். ஆனால் முக்கியமான ஆளான ஏக் தா டைகர் நாயகன் சல்மானைக் காணவில்லை. இந்நிலையில் அந்த இரவு பந்த்ரா பகுதியில் உள்ள சல்மானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்ஸுக்கு முன்பு பிரியங்கா சோப்ராவின் எஸ் கிளாஸ் மெர்சிடீஸ் பென்ஸ் கார் நின்று கொண்டிருந்தது. விடிய, விடிய சல்லுவுடன் பொழுதைக் கழித்த பிரியங்கா அதிகாலை 4.47 மணிக்கு வீட்டுக்கு கிளம்பினார். அவரை வழியனுப்ப சல்மான் கார் வரை வந்தார்.

சல்மான் ஷாருக்கின் தோழியுடன் பொழுதைக் கழிக்கிறார். அங்கு என்னவென்றால் ஷாருக்கான் தனது புதுபடத்தின் நாயகியான கத்ரீனா கைபின் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகும் தான் இருக்கும் வரை அவரை தனது அறைக்கு அடுத்த அறையில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா ஒரு இரவை சல்லுவுடன் கழித்தது தெரிந்தால் ஷாருக் என்ன செய்வாரோ?

 

பில்லா-2 ரெக்கார்டை பீட் செய்தது 'நீதானே என் பொன்வசந்தம்' டிரெய்லர்

சென்னை: தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம் "நீதானே என் பொன்வசந்தம்" என்பது நிரூபணமாகியிருக்கிறது.

neethaane en ponvasantham beats    | இசை வெளியீடு  
Close
 
கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட 2 நாட்களில் அதனை பார்வையிட்டோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் வெயிட்...

அஜித்தின் பில்லா-2 படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் 2 நாட்களில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 5.15 லட்சம். இதுதான் அப்போதைய ரெக்கார்ட்!

இந்த ரெக்கார்டை கடந்த 48 மணி நேரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது "நீதானே என் பொன்வசந்தம்"! எத்தனை லட்சமா? வெயிட்...

2.26 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லரில் ஜீவா, சமந்தா, சந்தானம் ஆகியோர் தோன்றுகின்றனர்.


இப்ப கணக்கைச் சொல்றோம்..

"நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் டிரெய்லரை 48 மணி நேரத்தில் பார்வையிட்டோரின் எண்ணிக்கை 7,03,659! அப்படிப் போடுங்க என்கிறீர்களா?

நீ தானே என் பொன்வசந்தம்- டிரெய்லர்

 

அபிஷேக்குடன் மட்டும்தான் நடிப்பேனா? ஐஸ்வர்யா மறுப்பு

Untrue Aishwarya Rai Bachchan Will   

மும்பை: கணவர் அபிஷேக் பச்சனுடன் உடன் மட்டும்தான் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று வெளியாகியுள்ள தகவலுக்கு ஐஸ்வர்யா ராய் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையில்லை என்று கூறியுள்ள அவர்கள் சரியான கதாபாத்திரம் அமைந்தால் பிற நடிகர்களுடன் ஐஸ்வர்யா நடிப்பார் என்றும் கூறியுள்ளனர்.

அபிசேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னர் விளம்பரம், திரைப்படங்களில் பல நடிகர்களுடன் நடித்து வந்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறந்த பின்னர் நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ள ஐஸ்வர்யா திரைப்பட விழாக்களில் பங்கெடுத்துக் கொண்டார். இதனிடையே முதன் முதலாக நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த நிலையில் இனிமேல் ஐஸ்வர்யா ராய் கணவருடன் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு ஐஸ்வர்யாவின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் இமேஜை குலைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதாக தொலைக்காட்சி ஒன்றிர்க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் குழந்தை பிறந்த பின்னர் ஐஸ்வர்யாராய் மீண்டும் புதுப்பொலிவுடன் மாறிவருவதாகவும், அவர் கண்டிப்பாக சிறந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ஐஸ்வர்யாவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராய் கடைசியாக 2010 ஆம் ஆண்டு குஷாரிஷ் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலிவுட்டில் ஜோடி தேடும் விஜய்?

Vijay Starts Heroine Hunt Bollywood   

தனது அடுத்த படத்துக்கு ஜோடியாக பாலிவுட்டிலிருந்து நடிகை ஒருவரை இறக்குமதி செய்யும் முடிவிலிருக்கிறார் நடிகர் விஜய்.

துப்பாக்கி படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய்யுடன் கைகோர்க்கிறார் நடிகர் விஜய்.

இந்தப் படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரை ஹீரோயினாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விஜய். இதற்காக தனது குரு ப்ரியதர்ஷன் உதவியை நாடியுள்ளார் அவர்.

தமிழில் தன் படம் மூலம் அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாகத் திகழும் ப்ரியங்கா சோப்ராவை அணுகுமாறு இயக்குநர் விஜய்க்கு நடிகர் விஜய் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது.

அவர் கிடைக்காதபட்சத்தில், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் பேசவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கக் கூடும் என்றும், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்வார் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

'3' முடிஞ்சது... அடுத்து '4' வரப்போகுது!

New Movie Titled 4

புதிதாக தயாராகும் ஒரு படத்துக்கு '4' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படமும் மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான்.

தனுஷ் நடிக்க, அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் 3. படத்தின் தலைப்பு மிக வித்தியாசமாக அமைந்து, சீக்கிரமே பாப்புலரானது.

அடுத்து இதே பாணியில் புதிய படம் ஒன்றிற்கு '4' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தப் படத்தின் கதை: ப்ளஸ்டூவில் பெயிலாகிவிடும் நான்கு மாணவர்கள், வீட்டுக்கு பயந்து ஓடிப் போகிறார்கள். அதன் பிறகு அவர்கள் படித்த பள்ளியில் அடுத்தடுத்து கொலைகள் விழ, அதற்கும் ஓடிப்போன மாணவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது...

பகவதி பாலா இயக்கும் இந்தப் படத்தில் பாலாஜி, வித்யா, ஆத்தூர் பால்வெங்கடேஷ், தேனிப்ரியா, அக்ஷயா உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.

சுதந்திரதாஸ் பாடல்களுக்கு குட்லக் ரவி இசையமைக்கிறார்.

தமிழகம் மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது படம்.

 

நான் தங்கம்ய்யா, சொக்கத் தங்கம்... தயாரிப்பாளரை உலுக்கிய கிரண்!

Kiran S Re Entry With Puduvai Maana   

மம்முட்டி நடித்த ஒரு மலையாளப் படத்தை லைட்டா பட்டி பார்த்து டிங்கரிங் செய்து தமிழுக்கு கொண்டு வருகிறார்கள். இதில் பெரிய தொகையைக் கொடுத்து பழைய கிரணை புதுமையான ஒரு குத்தாட்டத்தில் ஆட வைத்துள்ளனராம்.

கிரணை இந்தப் படத்திற்காக ஆட வேண்டும் என்று தயாரிப்பாளர் அன்புக் கோரிக்கை வைத்தபோது தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறையாக பெரிய சம்பளத்தைக் கேட்டாராம் கிரண்.

என்னங்க இது, இப்படிக் கேட்குறீங்களே, உங்களுக்கு தமிழில் பெரிய பிரேக்கும், ரீ என்ட்ரியும் இந்தப் பாட்டு மூலம் கிடைக்குமே, அதை தவற விடலாமோ என்று கேட்டாராம் தயாரிப்பாளர்.

அதைக் கேட்ட கிரண் சற்றும் மனம் தளராம், எல்லாம் சரிதான். தங்கத்திற்கு என்றைக்காவது மதிப்பு குறையுமா.. கழுத்தில் கிடந்தாலும் சரி, இல்லை பீரோவில் வைத்துப் பூட்டியிருந்தாலும் சரி தங்கம் தங்கம்தானே. நானும் அப்படித்தானே என்று கொஞ்சலாகவும், லாஜிக்காகவும், மேஜிக்காகவும் பேச, தயாரிப்பாளர் அப்படியே ஸ்வீட் ஷாக்காகி விட்டாராம். பிறகென்ன கிரண் கேட்டதைத் தூக்கிக் கொடுக்க, அட்டகாசமாக வந்து அமர்க்களாக ஆடிக் கொடுத்தாராம் கிரண்.

சரி அதை விடுங்க, படத்தைப் பற்றிப் பார்ப்போம்... அதாவது மம்முட்டி, டாப்ஸி, நதியா போன்றோர் நடித்த படம்தான் டிவின்ஸ். படத்தில் தமிழ்நாட்டுக்கு அறிமுகமான பலரும் இருந்ததால் லேசாக சில காட்சிகளை மட்டும் மாற்றி எடுத்து இப்போது புதுவை மாநகரம் என்ற பெயரில் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளனர். அதுதான் இந்தப் படம். இதில் கிரண் ஆட்டம் போட்டிருக்கிறாராம்....

'தங்கம்மா' கிரண்...ஆட்டமும் ஜொலிக்கும்ல...?

 

ரசிகர்களுக்கு முகத்தை காட்டாமல் ஏர்போர்ட்டில் இருந்து ஓடிய பிரீத்தி ஜிந்தா

What Was Preity Zinta Hiding   

மும்பை: பிராக்கில் இருந்து மும்பை திரும்பிய பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விமான நிலையத்தில் தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்துக் கொண்டே சென்று காரில் ஏறினார்.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பிராக்கில் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். மேலும் செய்தியாளர்களும் அங்கு கூடியிருந்தனர். வழக்கமாக சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ரசிகர்களைப் பார்த்து கை ஆட்டிவி்ட்டுப் போகும் அவர் இம்முறை யாருக்குமே முகத்தை காட்டவில்லை.

தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிரீத்திக்கு என்னாச்சு, இப்படி முகத்தை மறைத்துக் கொண்டே போய்விட்டார் என்று முணுமுணுத்தனர். அவரது தாடை வீங்கியிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்ததுவிட்டனர். அது கீழே விழுந்து அடிபட்டதா அல்லது ஏதாவது லடாயா என்று தெரியவில்லை.

அவர் முகத்தை மறைத்தாலும் புகைப்படக்காரர்கள் அதையும் விடாமல் போட்டோ எடுத்துத் தள்ளினர். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரீத்திக்கு என்னாச்சு என்பது தான் அனைவரின் கேள்வியும்.

 

அண்ணனுக்காக பெங்களூரில் திருமண மண்டபம் கட்டுகிறார் ரஜினி?

Rajini Build Marriage Hall His Brother

சென்னை: தன் அண்ணன் சத்யநாராயணாவுக்காக பெங்களூரில் திருமண மண்டபம் கட்டித் தரப் போகிறார் ரஜினி என்ற செய்தி மீடியாவில் உலாவர ஆரம்பித்துள்ளது.

ரஜினிக்கு சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை முதலில் தன் பெயரில் கட்டியவர், பின்னர் அதை தமிழக மக்களுக்கு எழுதி வைத்ததாக அறிவித்தார். அதற்கான உயிலையும் பொதுமக்கள் மத்தியில் காட்டினார்.

இப்போது ஒரு அறக்கட்டளை மூலம் இந்த மண்டபம் நிர்வகிக்கப்படுகிறது.

அடுத்து இதேபோல, ரஜினியின் பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்திலும் அமைக்கவிருக்கிறார். நூலகம் போன்றவற்றையும் அமைக்கப் போகிறார்.

இந்த நிலையில், தன்னை வளர்த்து ஆளாக்கிய, தான் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும் அண்ணன் சத்யநாராயணாவுக்காக பெங்களூரில் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப் போவதாகக் கூறப்படுகிறது. தனது தாய்-தந்தை பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளை மூலம் இந்த மண்டபத்தை அவர் கட்டவிருக்கிறாராம்.

அதற்காக பெங்களூரில் ஓர் இடத்தை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தனர், ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள்.

 

தீவிர போலீஸ் கண்காணிப்பு... சென்னையிலிருந்து சினிமா அலுவலகத்தை மதுரைக்கு மாற்றிய துரை தயாநிதி!

Durai Dayanidhi Shifts His Office Madurai

சென்னை: மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனது படத்தயாரிப்பு நிறுவனமான க்ளவுட் நைனின் அலுவலகத்தை சென்னையிலிருந்து மதுரைக்கே மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்டது இந்த க்ளவுட் நைன். தயாரிப்பு, விநியோகம் என படு பிஸியாக இருந்தது இந்த நிறுவனம். கடைசியாக மங்காத்தாவை தயாரித்து வெளியிட்டது.

இதற்கிடையே ஆட்சி மாறிய பிறகு, க்ளவுட் நைன் சட்டென்று அமைதி காட்டியது. இப்போது புதிய படம் ஒன்றைத் தயாரித்து வரும் நிலையில், நிறுவன உரிமையாளர் தயாநிதிக்கு கிரானைட் விவகாரத்தில் பெரும் சிக்கல் எழுந்தது.

அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட, துரை தயாநிதி தலைமறைவாக இருந்தபடி முன்ஜாமீனுக்கு முயன்று வருகிறார்.

அவரது நடமாட்டத்தை போலீசார் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். க்ளவுட் நைன் அலுவலகத்தை தொடர்ந்து நோட்டமிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னையில், பாரதிராஜாவின் பழைய வீட்டில் இயங்கி வந்த தனது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்த பொருட்களை மதுரைக்கே கொண்டுபோய்விட்டதாகக் கூறப்படுகிறது.

 

அம்மா அப்பா மாதிரி ராஜாவின் இசையும் மாறாதது! - சொல்கிறார் சூர்யா

Ilayaraaja S Music Is Unchanged Like Appa Amma   

தாய்- தந்தைக்கு அடுத்து இளையராஜாவின் இசைதான் மாறாதது என்றார் நடிகர் சூர்யா.

இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில், சிடியை கே பாலச்சந்தர் வெளியிட, சூர்யா பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, படத்தின் இரண்டாவது பாடலான காற்றைக் கொஞ்சம்.. பாடலை சூர்யா அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், "இளையராஜா பாடல்கள் ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அழகுபடுத்தி இருக்கும். இளமை காதலி, அழகான விஷயங்கள் எல்லாவற்றிலும் அவர் பாடல்கள் இருக்கும்.

சிறு வயதில் இருந்தே அவர் பாடல்களோடுதான் நான் வளர்ந்தேன். அழகான உலகத்தை பார்க்க வைத்தது.

அப்பா, அம்மா மாதிரி இளையராஜா பாடல்கள் என்றும் மாறாதவை. சிறு வயதில் ரீ-ரிக்கார்டிங் பார்த்துள்ளேன். பாடல்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிந்தேன். கேட்க கேட்க சலிப்பே வராத பாடல்களை இளையராஜா கொடுத்துள்ளார்", என்றார்.

 

சில்க் ஸ்மிதாவாக நடிப்பது பெருமை - சனா கான்

Silk Smitha Is Not An Item Dancer    | சில்க் ஸ்மிதா  

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன். காரணம் அவர் வெறும் கவர்ச்சி நடிகை இல்லை என்று கூறியுள்ளார் நடிகை சனா கான்.

15 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து இறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்ஸ்‘ என்ற பெயரில் இந்தியில் படமானது. சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தது.

இதையடுத்து மலையாளத்திலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குகின்றனர். ஆனால் இது டர்ட்டி பிக்சர் ரீமேக் அல்ல. சில்கை அறிமுகப்படுத்திய இயக்குநர் தயாரிக்கும் படம் இது.

இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சில்க் ஸ்மிதா மிகச் சிறந்த நடிகை. அவரை வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும் பார்க்ககூடாது.

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். சில்க் பற்றிய கதை என்பதால் கவர்ச்சியை எதிர்ப்பார்த்துவிட வேண்டாம். இதில் கவர்ச்சி இல்லை. அதைத் தாண்டி நல்ல கதை இருக்கிறது," என்றார்.

 

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. ரஜினியுடன் அஜீத் கலந்து கொள்கிறார்?

Ajith Attend Kochadaiyaan Audio Launch

ஜப்பானில் நடக்கவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் அஜீத்.

ஜப்பானில் முதல் முறையாக நடக்கும் இசை வெளியீட்டு விழா ரஜினியின் கோச்சடையான்தான். இந்த விழாவில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் என படத்தின் நட்சத்திரங்கள் அத்தனைபேரும் பங்கேற்கின்றனர்.

படத்தில் நடித்தவர்கள் மட்டுமின்றி, முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குநர்களும் விழாவில் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.

அப்படி பங்கேற்பவர்களில் முக்கியமானவர் அஜீத்குமார்!

இதற்கிடையே, கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் 3 டி தொழில்நுட்பப் பணிகளை கவனிக்க 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் மூன்றுபேர் சென்னை வந்துள்ளனர். இரவு பகலாக வேலை நடக்கிறதாம்.

இதே போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் லண்டன் மற்றும் ஹாங்காங்கிலும் நடந்து வருகின்றன.

டிசம்பருக்குள் ரெடியாகிடுமா என்பது ரசிகர்கள் கேள்வி!

 

ஆண் பெண் நட்பு பற்றிய புரிதல் வேண்டும்!

Sathiyam Tv Show Ullathu Ullapadi

இன்றைக்கு ஆண் பெண் நட்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவருகிறது. ஆணும் பெண்ணும் பேசினாலே கடைசியில் அது உடல்ரீதியான தொடர்பில்தான் முடியும் என்று சமூகத்தில் பலரும் பேசி வருகின்றனர். இது தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்று சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

‘உள்ளது உள்ளபடி' என்ற விவாத நிகழ்ச்சி காலை நேரத்தில் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் அன்னா ஹசாரேவின் அரசியல் பிரவேசம் தொடங்கி, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, ஆண் பெண் நட்பு வரை அலசப்படுகிறது. சிறப்பு அழைப்பாளர்களுடன் நேயர்களும் தொலைபேசி மூலம் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இன்றைய 'உள்ளது உள்ளபடி' நிகழ்ச்சியில் ஆண், பெண் நட்பு குறித்த சமூகத்தின் பார்வை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளருடன் காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர் மனநல மருத்துவர், சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான நட்பு மதிப்பிற்குரியதாக இருக்க வேண்டுமெனில் எந்த வித எதிர்பார்ப்பும் அற்றதாக விரசம் அற்றதாக இருக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார். யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால்தான் இந்த சமூகம் ஆண் பெண் நட்பென்றாலே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய நேயர்களும் ஆண், பெண் நட்பு என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அம்சம் என்பது போலவே பேசினார்கள். அது தேவையற்றது என்றும், திருமணத்திற்கு பின்னர் சிக்கலை ஏற்படுத்தக்கூடியது என்றும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து வேலை பார்க்கும் அலுவலகம் வரை எதிர்பாலினத்தவருடன் நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆண் பெண் நட்பு குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். எதையும் தடுக்க தடுக்கத்தான் அது திமிறிக்கொண்டு செல்லும். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே இதை கற்றுக்கொடுத்தால் அவர்கள் தங்களின் நட்பை தேர்ந்தெடுப்பதில் கவனமாய் இருப்பார்கள் என்றனர் சிறப்பு அழைப்பாளர்கள்.

குழந்தைகளின் நட்பு பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் கணவரின் தோழிகள் குறித்தோ, மனைவியின் நட்பு குறித்தோ கணவருக்கு தெரிந்திருப்பது அவசியம். மறைக்கும் போதுதான் சிக்கல்கள் எழும் எனவே அடிப்படை ஒழுக்கம் இருந்தால் எந்த நேரத்திலும் தடுமாற்றம் இருக்காது என்று ஆண், பெண் நட்பு குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர் சமூக ஆர்வலர்கள். இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளை பார்க்கும் போது சமூகத்தில் உள்ளவர்களின் கண்ணோட்டத்தையும், அவர்களின் கருத்துக்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

மோசடி செய்த பணத்தில் மகனை சினிமாவில் நடிக்க வைத்த சிறுசேமிப்பு பெண் ஏஜெண்ட்!

Small Savings Lady Agent Paid Hefty

சென்னை: தபால் நிலையத்தில் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டியவர்களை ஏமாற்றி மோசடி செய்த பணத்தில் மகனை சினிமாவில் நடிக்க வைத்ததாக பெண் ஏஜெண்ட் அமிர்தம்மாள் வாக்குமூலம் தந்துள்ளார்.

திருவொற்றியூர் தபால் நிலையத்தில் சிறுசேமிப்பு துறை ஏஜெண்டாக பணியாற்றியவர் அமிர்தம்மாள்(வயது 55). இவர் மூலமாக தபால் நிலைய சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர் மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சுப்பிரமணி (55). தனது பாஸ் புத்தகத்தை அமிர்தம்மாள் திருத்தி ரூ.7 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அமிர்தம்மாளை கைது செய்து போலீஸ் விசாரித்த போது, அவர் இதே போன்று 200-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி ரூ1.5 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது அம்பலமானது.

தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டத்தில் பணத்தை போட்டால் வருமானவரி கிடையாது என்பதால் ஓய்வு பெற்ற தாசில்தார், அரசு டாக்டர், வங்கி ஊழியர்கள், என ஏராளமானோர் ரூ.10 லட்சம் வரை அமிர்தம்மாள் மூலம் தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்துள்ளனர். அவர்களிடம் நைஸாகப் நம்பிக்கை ஏற்பட வைத்து அவர்களின் பாஸ் புத்தகத்தை திருத்தி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

சிறையில் அடைக்கப்பட்ட அமிர்தம்மாளை கடந்த வெள்ளிக்கிழமை 3 நாள் காவலில் எடுத்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர்.

'மகனை நடிக்க வைக்கவே மோசடி செய்தேன்'

போலீசாரிடம் அமிர்தம்மாள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்; மோசடி செய்த பணத்தில் தனது மகன் ரமேசுக்கு ஒரு வீடும், காரும் வாங்கி கொடுத்ததாகவும், ரமேஷ் `துள்ளுவதோ இளமை', 'எதிரி' ஆகிய படங்களில் துணை நடிகராக நடிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

துள்ளுவதோ இளமை தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா தயாரித்து இயக்கிய படம். எதிரி கேஎஸ் ரவிக்குமார் படம்.

மேலும் பல இடங்களில் வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும் அதையும் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

3 நாள் போலீஸ் காவலுக்கு பின் நேற்று அவரை போலீசார் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அமிர்தம்மாளிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள அமிர்தம்மாளின் மகன் ரமேஷ், நாராயணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

இசைஞானி இசையில் இயக்குநர்கள் விருப்பம்...!

Best Ilayaraja Directors Choice   

இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டு விழாவை ஒரே செய்தியில் அடக்க முடியுமா என்று தெரியவில்லை. அத்தனை சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் நடந்து, ரசிகனின் மனதில் நிரந்தர இடம் பிடித்துவிட்டது அந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட், ராஜாவுடன் பணியாற்றிய பெரும்பாலான இயக்குநர்கள் பங்கேற்று, ராஜாவுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுதான்!

முதலில் இந்த நிகழ்ச்சி எப்படி டிசைன் பண்ணப்பட்டிருந்தது என்பதைச் சொல்லிவிட்டால், நிகழ்ச்சி பற்றிய செய்திகளை புரிந்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஹங்கேரியிலிருந்து வந்திருந்த 65 இசைக் கலைஞர்கள், ராஜாவின் பிரபலமான பாடல்களை இசையாக வாசித்து, ரசிகர்களுக்கு ஒரு தெவிட்டாத இசை விருந்தை அளித்தனர்.

அடுத்து கவுதம் மேனன் மேடைக்கு வந்தார். இசைஞானி வருவதற்குள், உறவுகள் தொடர்கதை.. பாடலை ஒரு புரொபஷனல் பாடகர் ரேஞ்சுக்குப் பாடி அசத்தினார். அப்புறம் ராஜா வர, ஒரு சின்ன இசைப் பேட்டி மேடையில் அரங்கேறியது.

அதன் பிறகு, ஒவ்வொரு பாடலாக விஐபிகள் அறிமுகப்படுத்த, அதை மேடையில் லைவாக பாடி இசைத்தனர் இசைக்குழுவினர்.

நான்கு பாடல்கள் முடிந்ததும் ஒரு இடைவெளி. அதில், ராஜாவுடன் பணியாற்றிய பிரபல சாதனை இயக்குநர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தனர்.

ராஜாவுடன் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அப்படியே தங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றை அவர்கள் குறிப்பிட, அதை பாடகர் கார்த்திக், கிடாரிஸ்ட் கார்த்திக்குடன் இணைந்து பாடிக் காட்ட அது ஒரு தனி அனுபவமாக அமைந்தது.

அப்படி இயக்குநர்கள் தங்கள் விருப்பமாகக் குறிப்பிட்ட பாடல்களின் பட்டியல்:

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாரதிராஜா
தும்பி வா... - பாலு மகேந்திரா
பூங்காற்று திரும்புமா.... கே பாலச்சந்தர்
ஒரே நாள்... - பி வாசு
பச்ச மல பூவு - ஆர்வி உதயகுமார்
அம்மா என்றழைக்காத - ஆர் சுந்தர்ராஜன்
வளையோசை... - சுரேஷ் கிருஷ்ணா
ஆசை நூறு வகை... - எஸ் பி முத்துராமன்
ஆட்டமா தேரோட்டமா - ஆர்கே செல்வமணி

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற 4 பாடல்கள் இசைக்கப்பட்டன.

 

ஷாப்பிங்கின்போது சங்கடம்... 'கிளீவேஜை' மறைக்கப் போராடிய கிம் கர்தஷியான்!

Kim Kardashian Grapples With Her Cleavage Baring Dress   

நியூயார்க்: நியூயார்க்கில் தனது காதலர் கென்யே வெஸ்ட்டோடு ஷாப்பிங் போன கிம் கர்தஷியான் தான் போட்டிருந்த டைட்டான உடை காரணமாக, தனது மார்பகம் முழுமையாக வெளியே தெரியாமல் மறைக்க கடுமையாகப் போராட வேண்டியதாகி விட்டது.

முன்னழகை எப்படியெல்லாம் வெளியே காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டும் வகையிலான உடை அணிவதில் கில்லாடி கிம். ஆனால் அப்படிப்பட்ட அவரே தனது முன்னழகு முழுசாக வெளியே தெரிந்து விடாத வகையில் உடையை சரி செய்யப் போராடிய காட்சியை நியூயார்க்கில் பார்க்க நேர்ந்தது.

அங்குள்ள ஜெப்ரி என்ற டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு காதலர் கென்யே வெஸ்ட்டுடன் வந்தார் கிம். அப்போது வழக்கம் போல படு க்யூட்டான டிரஸ்ஸை அணிந்திருந்தார். கருப்பு நிறத்திலான அந்த டிரஸ்ஸில் அவரது முன்னழகு பளிச்சென தெரிந்தது.

மிகவும் டைட்டான உடை என்பதால் அவரது முன்னழகு கிட்டத்தட்ட முழுமையாக தெரியும் அளவுக்கு காணப்பட்டது. இதைப் பலரும் வேடிக்கை பார்த்தனர். ஆனால் கிம்முக்குத்தான் என்றும் இல்லாத அளவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்று விட்டது. இதனால் தனது உடையை சரி செய்து கிளீவேஜ் வெளியே தெரியாத வகையில் பார்த்துக் கொண்டார். அவ்வப்போது தனது உடையை சரி செய்வதிலேயே அவருக்கு நேரம் போய் விட்டது. அடிக்கடி மேலாடையை இழுத்து விட்டபடியும், அவ்வப்போது சரியாக இருக்கிறதா என்று பார்த்தபடியும் அவர் ஷாப்பிங் செய்தார்.

இந்த பரபரப்பில் கிம் போட்டிருந்த அட்டகாசமான ஷூவை பலரும் பார்க்கத் தவறினர். சமீபத்தில்தான் டிசைனர் ஷூக்கள் 100 ஜோடியை வாங்கியிருந்தார் கிம். அத்தனையும் விலை உயர்ந்தவை, பேகி பேன்ட் போன்ற வடிவிலான ஷூ அவை. அருமையான டிசைன் கொண்டவை. அதில் ஒன்றைத்தான் அன்று போட்டிருந்தார் கிம்.

ஆனால் ஷூவை யார் பார்த்தார்கள்...!

 

இதுவும் சமூக சேவைதான்! ராம்ப் வாக்கில் அசத்திய பிரபுதேவா!

Prabhu Deva Walk The Ramp Shabana

சபனா அஸ்மியின் சமூகசேவை நிறுவனத்திற்காக பாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து பிரபுதேவா ராம்ப் வாக் செய்தார்.

மிஜ்வான் சாரிட்டி எனப்படும் சமூக சேவை நிறுவனத்தை பாலிவுட் நடிகையும், சமூக ஆர்வலருமான சபனா அஸ்மி நடத்தி வருகிறார். இது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் திரட்டப்படும் பணத்தைக் கொண்டு பல சேவைகளை செய்து வருகிறது.

இந்த சமூக சேவை நிறுவனம் திங்களன்று பாலிவுட் பிரபலங்களைக் கொண்டு ராம்ப் வாக் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் என்ஜிஓவில் உள்ள பெண்கள் தயாரித்த ஆடைகளை அணிந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்கள் வலம் வந்தனர்.

நம் ஊர் பிரபுதேவா இந்தியில் வாண்டட், ரவுடிரத்தோர் படத்தின் மூலம் பிரபல இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரும் இந்த ராம்ப் வாக்கில் பங்கேற்று தீபிகா படுகோனே, கரண்ஜோகர், இம்ரான் கான் ஆகியோருடன் அழகாக நடந்து வந்தார்.

இது தொடர்பாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள பிரபுதேவா, ஏழை குழந்தைகளுக்காக என்னாலான சிறிய உதவியை செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ராம்ப் வாக்கில் பரினீதி சோப்ரா, மல்லிகா அரோரா, சமீரா ரெட்டி போன்ற பிரபலங்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆபாசத்தின் உச்சத்திற்குப் போனார் ஷெர்லின்... சுய இன்பப் படத்தை வெளியிட்டார்!

Sherlyn Chopra Sets Twitter On Fire Posts

மும்பை: ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே போன்றோருக்கு அரசு உடனடியாக கடிவாளம் போட்டால் நல்லது. காரணம் இருவருமே எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில், ஷெர்லின் சோப்ரா, மிக மிக மோசமான முறையில் தான் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்து அதை பெரும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. அத்தோடு நில்லாமல், ஒரு காலத்தில் தான் காசுக்காக பல ஆண்களுடன் இன்பம் அனுபவித்ததாகவும் சமீபத்தில் பெருமையுடன் கூறியிருந்தார். மேலும் சமீப காலமாக டிவிட்டரில் தனது ஆபாசப் படங்களையும் போட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மேலும் உச்சகட்ட ஆபாசமாக, தான் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் சுய இன்பம் அனுபவிப்பதை, மிக மிக நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். அதை அவர் எடுத்தாரா அல்லது யாரையாவது விட்டு எடுத்தாரா என்பது தெரியவில்லை.

மிகவும் மோசமான ஆபாசப் படமாக இது காட்சி தருகிறது. அத்தோடு ஆபாசமான கமெண்ட்டையும் வேறு போட்டுள்ளார் ஷெர்லின். அதில், ஆபாசம் என்பது கெட்டது அல்ல. அனைத்து கெட்டதுமே மனிதகுலத்தின் இருளான பகுதியிலிருந்துதான் வருகின்றன. பலரும் பல விஷயங்களை கெட்டது, தவறு என்று நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ள ஷெர்லின், மேலும் சில பிரசுரிக்க முடியாத வார்த்தைகளையும் கூடச் சேர்த்து எழுதியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனது பிரைவேட் பங்ஷன் குறித்த படத்தைப் போட்டுள்ளேன். இதற்கு உடைகள் இடையூறாக இருக்கிறது என்பதால் அதை முழுமையாக தூக்கிப் போட்டு விட்டேன் என்றும் தனது ஆபாசப் படத்தை நியாயப்படுத்தியுள்ளார் ஷெர்லின்.

தனது சுய இன்பப் படத்தால் யாரும் கோபப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள ஷெர்லின், உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான் இது. இது ஒரு சாதாரண ஆபாசப் படம்தான். இது பிடிக்காவிட்டால் தயவு செய்து யாரும் பின்பற்ற வேண்டாம், பிடித்திருந்தால் கடைப்பிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.

ஷெர்லினைப் பார்த்து பூனம் பாண்டே என்ன படத்தைப் போடப் போகிறாரோ...!